Showing posts with label Medicinal Properties. Show all posts
Showing posts with label Medicinal Properties. Show all posts

Saturday, 10 September 2016

புரதச் சுரங்கம் : பருப்பு

நீயென்ன பெரிய பருப்பா?‘ என்று உதிரியாகத் திரிபவர்கள், சிறுரவுடி களைப் பார்த்துச் சினிமாவில் கேட்பதைப் பார்த்திருக்கலாம். மனிதர்கள் எப்படியோ தெரியாது, நிச்சயமாகச் சாப்பிடப்படும் ‘பருப்பு’, பார்க்கச் சிறிதாக இருந்தாலும் பெரிதுதான். காரணம் அதில் இருக்கும் அபரிமிதச் சத்து, அதிலும் தசைகளையும் உடலையும் ஊட்டி வளர்க்கும் புரதச் சத்து. பருப்பு வகைத் தாவரங்களின் காய்களையும் விதைகளையும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகிறார்கள்.

Image & Article courtesy : The Hindu
குழந்தைக்குச் செரிமானத் திறன் மேம்பட்டவுடன், முதலில் தரப்படுவது சோறும் மசிக்கப்பட்ட பருப்பும் சேர்ந்த பருப்புச்சோறுதான் (கொங்கு பகுதி அரிசி பருப்பு சாதம் கதை தனி).
அதேபோலத் தமிழகத்தில் சாம்பார், கேரளத்தில் புட்டு மற்றும் ஆப்பத்துடன் வரும் கடலைக்கறி, வடஇந்தியாவில் சப்பாத்தியுடன் வரும் தால் எனப்படும் பருப்பு மசியல் எனப் பருப்பு இல்லாமல் இந்திய உணவைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது. பருப்பு வகைத் தாவரங்கள் நம் தினசரி உணவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

எளிமையின் உச்சம்
மாவுச் சத்து, புரதச் சத்து, (நல்ல) கொழுப்புச் சத்து, வைட்டமின், கனிமச்சத்து போன்றவை கலந்த சதவிகித உணவு ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படைத் தேவை. இதில் விலங்குப் புரதத்தைச் சாப்பிடாதவர்கள், தாவரப் புரதத்துக்குப் பருப்பு வகைகளையே நம்பியிருக் கிறார்கள். தமிழகத்திலும் இந்தியாவிலும் புரதச் சத்துத் தேவையைப் பெருமளவு நிறைவு செய்வது பருப்பு வகைகள்தான்.

பருப்பு வகைகளின் சிறப்புகளைச் சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், முக்கியமான சிறப்புகள்: இவற்றைச் சமைப்பது எளிது, அதேநேரம் உடலுக்குப் பெரிய தீங்கு செய்வதில்லை. வயலில் இவற்றை விளைவிப்பதும் மிகக் கஷ்டமானதோ அதிகப்படி தண்ணீரை உறிஞ்சுவதோ இல்லை.

எப்படி வருகிறது?
ஆங்கிலத்திலோ, லத்தீனிலோ லெக்யூம் (legume) என்று சொல்வது பருப்பு வகைத் தாவரங்களைக் குறிக்கிறது. Fabaceae அல்லது Leguminosae என்பது அவரை வகை தாவரக் குடும்பத்தின் தாவரவியல் பெயர். பருப்பு வகைத் தாவரங்கள் பல்வேறு வகைப்பட்டவை. பொதுவாக அவரை, துவரை, பயறு, மொச்சை, பட்டாணி வகைத் தாவரங்களின் விதை காய வைக்கப்பட்டு, மேல்தோல் நீக்கப்பட்ட பிறகு பருப்பு எனப்படுகிறது.

இந்தத் தாவரங்கள்தான் நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்றில் நிரம்பியிருக்கும் நைட்ரஜனை (78 %) சேகரித்து, மண்ணில் நிலைநிறுத்துகின்றன. அவரை இனத் தாவரங்களின் வேர்க்கணுக்களில் ரைசோபியா பாக்டீரியா இருக்கிறது.

இது, அந்தத் தாவரங்களுடன் ஒன்றி வாழ்ந்தபடி மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. இதனால் மண் வளம்மிக்கதாக மாறுகிறது. இதன் காரணமாகப் பயிற்சி சுழற்சி முறையில் வயலின் வளத்தை மேம்படுத்துவதற்குக் காலங்காலமாக இந்தப் பயிர்களைப் பயிரிடுவதை உழவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் இந்தச் செயல்பாட்டால் இந்தத் தாவரங்களின் விதைகள் புரதச் சத்து நிரம்பியவையாக உள்ளன.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
பருப்பு வகைத் தாவரங்களின் இலைகள் கூட்டிலைகள், சின்னச்சின்ன இரட்டை இலைகளாக, வரிசையாக இருக்கும். நீண்ட பச்சை நெற்று அல்லது உறையில் விதைகள் நிரம்பியதாக இவற்றின் காய் அமைந்திருக்கும். இந்தத் தாவரங்களின் விதைகள் காய வைக்கப்பட்டு மட்டுமல்லாமல், பச்சைக் காயாகவும் பயன்பாட்டில் உள்ளன. தாவர வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில், வகைகளில் அவரைக் குடும்பத் தாவரங்கள் சாப்பிடப்பட்டு வருகின்றன.

  • அவரை, பீன்ஸ், தட்டைப்பயற்றங்காய் (காராமணி) வகைத் தாவரங்கள் பச்சை காயாகவே சாப்பிடப்படுகின்றன. அவற்றின் விதைகள் மட்டுமில்லாமல், முற்றாத மேலுறையும் உண்ணப்படுகிறது.


  • அதேபோலக் காராமணி, பட்டாணி, மொச்சை போன்ற விதைகள் முதிர்ந்தவுடன் காய வைக்கப்படாமல் உண்ணப்படுகின்றன. இவற்றைச் சமைப்பது எளிது. அந்த நிலையில் வெளிப்புற உறை கடினப்பட்டிருப்பதால் சாப்பிடப்படுவதில்லை.


  • அதற்குப் பிறகு நன்கு முதிர்ந்த காய்கள் வெளிப்புற உறையுடன் காய வைக்கப்படுகின்றன. பிறகு வெளிப்புற உறை அகற்றப்பட்டு, காய்ந்த முழு விதைகள் உண்ணப்படுகின்றன. இவற்றை நீண்ட நேரம் வேக வேண்டும்.


  • காய வைக்கப்பட்ட முழு விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீரை வடித்து முளைக்க விடப்படுகிறது. இப்படி முளைவிட்ட விதைகள் சத்து மிகுந்தவை. பொதுவாக ஓர் இரவு முழுக்க ஊற வைக்கப்பட்டு, தண்ணீரை வடித்துத் துணியில் கட்டியோ அல்லது பாத்திரத்திலோ வைக்கலாம். முளைகட்டிய பச்சைப் பயற்றை அப்படியே சாப்பிடலாம். முடியாதவற்றை எளிதாக வேக வைத்துவிடலாம்.


  • காய வைக்கப்பட்ட பயற்றை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இப்படிக் கிடைக்கும் கடலை மாவு பலகாரங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சில மாவுகள் சூப்பில் சேர்க்கப்படுகின்றன.


இப்படிப் பச்சைக்காய், பச்சையான பயறு, முழு விதை, முளைகட்டிய பயறு, பருப்பு, மாவு எனப் பல வகைகளிலும் பருப்பு வகைத் தாவரங்கள் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதைகள் காய வைக்கப்பட்டு, இரண்டாக உடைக்கப்பட்டால் பருப்பு. இந்தப் பருப்பு வகைகள் நன்கு செரிமானம் ஆவதற்கும், வேக வைப்பதற்கும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சீரகம், மிளகு போன்ற தாளிப்புப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.

மருந்தாகும் பருப்பு
பண்டைய சித்த மருத்துவக் குறிப்புகளிலும், பருப்புகளைப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டுள்ளது. 'பயற்றங்காயை கறியாக உண்ணில் நன்மை உண்டாகும்' எனத் தேரையர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் பாடல்களிலும் பருப்பு வகைகளைப் பற்றி குறிப்புகள் உள்ளன. பருப்புகள் தரும் முக்கிய ஆரோக்கியப் பலன்கள்:

மசித்த பருப்புடன் நெய் சேர்த்துச் சாப்பிடுவது, மெலிந்த உடலைத் தேற்றுவதற்கான சிறந்த உணவு.

கர்ப்பக் காலத்தில் பனிக்குட நீர் அதிகரிப் பதற்குப் பருப்பில் உள்ள புரதம் அவசியம்.

பெரும்பாலான பயறு வகைகள் இனிப்புச் சுவையைக் கொண்டுள்ளன. இனிப்பு சுவை உடலுக்கு உடனடி ஆற்றலும் தசைகளுக்கு ஊட்டமும் தரக்கூடியது. குளிர்ச்சியுண்டாக்கும் செய்கையும் பயறு வகைகளுக்கு உண்டு. அதனால் குழந்தைகளுக்குப் பாலை மறக்கச் செய்வதற்கான நல்ல உணவாகப் பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

புரதக்குறைவால் உண்டாகும் கால் வீக்கம் (pedal odema) வராமல் தடுக்க, பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

தீப்புண்களுக்கு மருந்தாக சில பருப்பு வகைகள் பயன்படுகின்றன.

நன்றி : தி இந்து

Monday, 5 September 2016

மைதா.....உணவல்ல... விஷம்!

கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல  ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது.  இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தெரிந்து  கொண்டுதான் மைதாவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. 

Image & Article courtesy : Dinakaran
நீரிழிவு சிறப்பு மருத்துவரான  பரணீதரனிடம் மைதா உணவுகள் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் சொல்வது ஏன் என்று கேட்டோம்… ‘‘மைதா  மாவு நீரிழிவைத் தூண்டும் அபாயம் கொண்டது என்பதுதான் மருத்துவர்களின் எச்சரிக்கைக்கான முதல் காரணம். இதைக்  கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

எல்லா உணவிலும் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து என அடிப்படை யான மூன்று விஷயங்கள்  இருக்கின்றன. நாம் சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு குளுக்கோஸ் வெளியாகிறது, அதில் எந்த அளவு சக்தியாக  மாற்றப்படுகிறது என்பதை க்ளைசெமிக் இன்டெக்ஸ் என்று அளக்கிறோம். இந்த அளவு மைதாவில் மிகவும் அதிகமாக  இருக்கிறது. மைதா உணவினால் கிடைக்கும் அதீத குளுக்கோஸ் அளவை சமன்படுத்தும் அளவு உடலுக்கு இன்சுலின்  உற்பத்தித்திறன் இருக்காது.

 ஆரம்பகட்டத்தில் தன் சக்திக்கு மீறி அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கணையம் போராடினாலும்,  நாளடைவில் சோர்ந்து போய்விடும். Insulin resistance என்கிற இந்த நிலை ஏற்படுவது கிட்டத்தட்ட  கணையம் பழுதாகிவிட்ட நிலைக்குச் சமம்தான். மைதா உணவுகளை தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு நீரிழிவு  ஏற்படுவதற்கு அடிப்படையான காரணம் இதுதான்’’ என்கிற பரணீதரன், மைதாவினால் கணையத்தின் பீட்டா செல்கள்  அழிக்கப்படும் விதம் பற்றித் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘நம் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்து செல்களுக்குச் செல்ல  வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆற்றல் கிடைக்கும். கணையத்தில் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும்  இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை இதுபோல செல்களுக்குக் கொண்டு செல்கிறது. ஆக்சிடேசன் என்கிற  இந்த செயலி்னால் கிடைக்கும் ஆற்றலின் அளவுக்கு நம் உடல் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை  அளவு இயல்பான நிலையில் பராமரிக்கப்படும். இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபட்சத்தில் குளுக்கோஸ்  செல்களுக்குச் செல்லாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும். இதுதான் நீரிழிவு நோய்.

இத்துடன் மைதா மாவில் பல ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள். முக்கியமாக, மைதா மாவில் அலொக்ஸான் என்கிற  ரசாயனம் சேர்க்கிறார்கள். இந்த ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும்,  சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள்  ஏற்படும். அதேபோல பென்சாயில் பெராக்ஸைடு என்ற ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள்.  இந்த ரசாயனம் ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது  என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்’’ என்கிறார்.

ஒரு மருத்துவராக மைதாவின் சுவைக்கு மாற்றாக என்ன உணவுகளைப் பரிந்துரைப்பீர்கள் என்று கேட்டதும், ‘நாம்  சுவையைத் தேடித்தான் போகிறோம். அது என்ன உணவுப்பொருள், எப்படி தயாரிக்கிறார்கள், அதனால் கெடுதல் வருமா  போன்ற விஷயங்களை கவனிப்பதில்லை’ என்கிறார்.

‘‘இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்க வேண்டுமானால், சில  கட்டுப்பாடுகளை பின்பற்றித்தான் ஆக வேண்டும். பிற்காலத்தில் அவதிப்படுவதை விட முன்னரே எச்சரிக்கையாக  இருப்பது நல்லது.மைதா பிரெட்டுக்குப் பதிலாக கோதுமை பிரெட் சாப்பிடலாம். பீட்சாவுக்குப் பதிலாகக் காய்கறிகள்  நிறைந்த சாண்ட்விச் சாப்பிடலாம். சுண்டல், வேர்க்கடலை என நம்முடைய இயற்கையான, பாரம்பரிய உணவுகள்  எக்கச்சக்கமாக இருக்கின்றன. இவை எப்போதும் பாதுகாப்பானவை.

மேற்கத்திய நாடுகள் அறிமுகப்படுத்திய மைதா உணவுகளின் சுவைக்கும் மேலாக நம் பாரம்பரிய உணவுகளை  சுவையாக செய்து சாப்பிட முடியும். கொஞ்சம் முயற்சி எடுத்து நம் பாரம்பரிய உணவுகளை வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிட முயற்சிக்க வேண்டும்.ஏற்கெனவே, அரிசி உணவின் பயன்பாடு நம் நாட்டில் அதிகம்  இருக்கிறது. இதனுடன் மைதா உணவுகளும் அதிகம் சாப்பிடும்போது ரிஸ்க் இன்னும் அதிகமாகிவிடுகிறது. இதில் நம்  உடல் உழைப்புக்கு எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது தெரியாமலேயே High calorie diet  எடுத்துக்கொள்கிற தவறான பழக்கத்தாலும் நீரிழிவு ஏற்படுகிறது.

அதனால், மைதா உணவுகளை விட்டுவிடுவதே நல்லது. தவிர்க்க முடியாதபட்சத்தில் குறைந்த அளவிலேயே எடுத்துக்  கொள்ளுங்கள். மைதா உணவுகளை சாப்பிட்டுவிட்டால் அதற்கேற்ற நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என கொஞ்சம் அந்த  எனர்ஜியை செலவு செய்யும் வழிகளைப் பின்பற்றிவிடுங்கள்’’ என்கிறார் டாக்டர் பரணீதரன்.

ரசாயன நச்சுக் குப்பை!


மைதாவில் சேர்க்கப்படும் ரசாயனங்களின் தன்மை குறித்து மேலும் விளக்கமாகக் கூறுகிறார் கரிமவேதியியல் பேராசிரியரான விஜயகுமார்.‘‘மைதாவில் சேர்க்கப்படும் பென்சாயி்ல் பெராக்சைடின் முக்கியப் பயன்பாடு அதை  வெண்மையாக்குவதுதான். காலில் ஆணி ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்காகவும், பொருட்களை  பளபளப்பாக்குவதற்கும் இந்த பென்சாயி்ல் பெராக்சைடு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது ரத்தத்தில் Free radicals என்ற நச்சுக்குப்பைகளை உருவாக்குவதால் ஆக்சிஜன் உடைந்து செல்களில்  பாதிப்பு ஏற்படும். அலொக்ஸான் எனும் ரசாயனத்தை எலிக்குக் கொடுத்து பரிசோதித்தபோது இன்சுலின் உற்பத்திக்கு  ஆதாரமாக இருக்கக் கூடிய பீட்டா செல்களை நேரடியாகத் தாக்கி நீரிழிவை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது.

இது அதிக அளவில் உடலில் தங்கும்போது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பது ஆராய்ச்சியில்  நிரூபணமாகி உள்ளது.ஒரு தானியத்தை இயற்கையான முறையில் வெண்மைப்படுத்தும் வேலையை சூரிய  ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் செய்கின்றன. ஆனால், பல்லாயிரம் டன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களால்  அப்படி செய்வது சாத்தியமற்றது என்பதாலேயே இந்த ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள்’’ என்கிறார் விஜயகுமார்.

நோயைத் தவிர ஒன்றுமே இல்லை!


மைதாவால் நமக்கு என்னதான் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினால், ‘நோயைத் தவிர வேறொன்றும் இல்லை’  என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சுப்ரியா... ‘‘கோதுமையின் தவிட்டை நீக்கிவிட்டால் கிடைக்கும் மைதா மாவில்  மாவுச்சத்தைத் தவிர நமக்கு கிடைக்கக்கூடிய நன்மை எதுவுமில்லை. பீட்சா, பர்கர், புரோட்டா, சோலா பூரி, பாஸ்தா,  நாண், பிஸ்கெட், கேக், சமோசா, வட இந்தியர் உட்கொள்ளும் கச்சோரி, ருமாலி ரொட்டி என மைதாவில் தயார்  செய்யப்படும் உணவுப்பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மாவுச்சத்து அதிக அளவில் உடலில் தங்கி விடும்.  தேவைக்கு அதிகமான மாவுச்சத்து கெட்ட கொழுப்பாக மாறிவிடும்.

மைதா உணவுகள் பெரும்பாலானவற்றில் எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாகவும் கொழுப்பு  அதிகரித்து பருமன் ஏற்படும். எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைதாவால் தயாரிக்கப்படும் எந்த  உணவுப் பொருட்களையும் உட்கொள்ளக் கூடாது.மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக்  அல்சர், பித்தப்பைக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நமது உடலில் 150 மில்லிகிராம் அளவுக்கு  மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது. மைதாவில் இருக்கும் கெட்ட கொழுப்பு உடலில் அதிகம் தங்கும் போது  ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. நார்ச்சத்து அறவே நீக்கப்பட்ட மைதா  உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளும்போது நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால் மலச்சிக்கல்,  ஆசனவாய்ப் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோய் சிவப்பு இறைச்சி மற்றும் மைதா  சாப்பிடுகிறவர்களுக்கே அதிக அளவில் ஏற்படுகிறது’’ என்கிறார் சுப்ரியா.

நன்றி : தினகரன்

Friday, 19 August 2016

பள்ளிப்பருவப் பழத்தை மறந்துபோனோமே! : இலந்தை

பள்ளிக்கு வெளியே விற்கப்படும் பழம், அந்தக் காலத்தில் குழந்தைகளால் அதிகம் உண்ணப்பட்ட பழம், இலந்தைப் பழமாகவே இருக்க வேண்டும். அதற்குக் காரணம், அதன் புளிப்பு கலந்த சுவை. 
Image & Article courtesy : தி இந்து
பழங்கள் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. இவற்றில் வைட்டமின் சி, சர்க்கரைகள், கனிம உப்புகள், கரிம அமிலங்கள், கரோட்டின், தயமின், ரிபோஃபிளேவின், நியாசின், பெக்டின் போன்ற ஊட்டப் பொருட்கள் உள்ளன. பழம் ரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, உடலுக்குக் குளிர்ச்சியளிக்கிறது, வலியை அகற்றுகிறது, மலட்டுத் தன்மையை நீக்குகிறது. 

பழங்கள் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. இவற்றில் வைட்டமின் சி, சர்க்கரைகள், கனிம உப்புகள், கரிம அமிலங்கள், கரோட்டின், தயமின், ரிபோஃபிளேவின், நியாசின், பெக்டின் போன்ற ஊட்டப் பொருட்கள் உள்ளன. பழம் ரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, உடலுக்குக் குளிர்ச்சியளிக்கிறது, வலியை அகற்றுகிறது, மலட்டுத் தன்மையை நீக்குகிறது. 

மருத்துவப் பலன்கள்
இது ஜோஷாண்டா என்ற ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது; இந்த மருந்து மார்புக் கோளாறுகளை நீக்குகிறது. விதையோ குமட்டலை நீக்குகிறது, கருவுற்ற பெண்களின் வயிற்று வலியைப் போக்குகிறது, மயக்கத் தூக்கத்தைத் தாண்டுகிறது, வயிற்றுப் போக்கைத் தடுக்கிறது, கருவுறுதலைத் தடை செய்கிறது (Oral Contraceptive), காயங்களைப் போக்குகிறது. வேர் குளிர்ச்சி ஊட்டுகிறது, கபத்தைப் போக்குகிறது, பித்தத்தையும் தலைவலியையும் நீக்குகிறது. பட்டை பல், ஈறு கோளாறுகளைப் போக்குகிறது. பட்டை வடிநீர் உணவுக்குழாய் கோளாறுகளை நீக்குகிறது. 

இலந்தையின் இலை ஆடு, மாடுகளுக்குச் சிறந்த தீவனமாக அமைகிறது. இதன் மரக்கட்டை வலுவானது, நிலைத்து உழைக்கக் கூடியது; பலவகை மரப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வடஇந்தியாவில் இந்த மரம் அரக்கு உருவாக்கும் (Shellac) பூச்சியின் உறைவிடமாகச் செயல்படுகிறது.
ஒதுக்கப்படும் பழம்
கடந்த காலத்தில் நன்கு போற்றப்பட்ட இந்தத் தாவரம் தற்போது தமிழகத்தில் பரவலாக ஒதுக்கப்பட்டுவருவது கவலையளிக்கிறது. வட இந்தியாவிலிருந்து பெறப்படும் பெரிய வகைப் பழங்கள் ஓரளவுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் சிறிய வகைப் பழங்கள் பெரிதும் ஒதுக்கப்படுகின்றன. நான் அறிந்தவரை இது எந்தப் பழக்கடையிலும், குறிப்பாக நகரக் கடைகளில் விற்கப்படுவதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது, விரும்பி, ருசித்துச் சாப்பிட்ட இலந்தைப் பழம் தற்போது கிராமப்புற, சிறிய நகர்ப்புறப் பள்ளிகளின் நுழைவாயிலுக்கு அருகில் வயதான பெண்களால் கூறுகட்டி விற்கப்படுவதை மட்டுமே காண முடிகிறது. இந்தப் பழத்தைப் பிரபலப்படுத்தத் தகுந்த முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

கடந்த காலத்தில் நன்கு போற்றப்பட்ட இந்தத் தாவரம் தற்போது தமிழகத்தில் பரவலாக ஒதுக்கப்பட்டுவருவது கவலையளிக்கிறது. வட இந்தியாவிலிருந்து பெறப்படும் பெரிய வகைப் பழங்கள் ஓரளவுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் சிறிய வகைப் பழங்கள் பெரிதும் ஒதுக்கப்படுகின்றன. நான் அறிந்தவரை இது எந்தப் பழக்கடையிலும், குறிப்பாக நகரக் கடைகளில் விற்கப்படுவதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது, விரும்பி, ருசித்துச் சாப்பிட்ட இலந்தைப் பழம் தற்போது கிராமப்புற, சிறிய நகர்ப்புறப் பள்ளிகளின் நுழைவாயிலுக்கு அருகில் வயதான பெண்களால் கூறுகட்டி விற்கப்படுவதை மட்டுமே காண முடிகிறது. இந்தப் பழத்தைப் பிரபலப்படுத்தத் தகுந்த முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

நன்றி : தி இந்து


Tuesday, 16 August 2016

Biofortification: Micronutrient-built-in grains

Mahatma Gandhi was always advocating us to eat hand pound rice and hand ground wheat rather than eating polished rice. Yet we continue using machine-polished cereals because they can be stored longer. But machine-polishing removes the bran (surrounding the seed) containing the pericarp and the ‘aleurone layer’ which have small amounts of essential nutrients such as some vitamins, iron, zinc and other inorganic components. So, Gandhiji was right! Machine-polished grains are thus poorer in such “micronutrients.”
Image source : Wikipedia
This leads to what is today termed as “hidden hunger.” You may a eat stomach full of food everyday and yet miss out on these micro-nutrients essential for the growth and health of the body. UN agencies estimate that hidden hunger affects one in every three children across the world, leading to deficiency in physical growth and development of the brain. Children missing out on vitamin A suffer from vision problems. Missing out on iron leads to blood disorders while deficiency in zinc retards growth, causes diarrhoea, hair loss, lack of appetite and other health issues.

A programme in India, started way back in the 1970s by Dr Ramalingaswami of ICMR, administering large amounts (megadose) of vitamin A every six months to children, has been found serving in helping them come out of “night blindness.” This is because a derivative of vitamin A is essential in the retina of the eye in harvesting light and converting it into electrical signals which aid the process of vision.

Dr Maharaj Kishan Bhan, earlier at the All India Institute of Medical Sciences and was the Secretary of the Department of Biotechnology of the Government of India in New Delhi has come out with a salt mixture containing some of the micronutrients including zinc and iron, to be given to children suffering from diarrhoea and dehydration. The results are strikingly positive; with micronutrient supplementation, particularly zinc, in young children with acute diarrhoea was found to be very useful indeed.

Why is zinc so important to the body? This is because over 300 enzymes in our body use zinc as an essential component in their action. Zinc is essential in supporting our immune system, in synthesising (and degrading) DNA, in wound healing and several other activities. And the amount of zinc we need is not very much. In a human body of, say, 70 kg, there is but 2 to 3 grams of zinc. But if the level falls down to below normal, growth is retarded, diarrhoea sets in, eye and skin lesions appear, and appetite is lost. Thus, addition of zinc in the daily diet becomes essential.

While downing tablets containing vitamins and some of these minerals is fine, this is no solution to billions of children, largely in the developing world. But what if, rather than supplementing these micro-nutrients separately, they become part and parcel of the rice, wheat and other cereals we eat daily? Are there rice or wheat plants which are inherently rich in some of these micronutrients? Can they be grown, cross-bred or hybridised with other conventional rice or wheat plants? This has been the dream of agricultural scientists across the country, and the group led by Dr Vemuri Ravindra Babu of the Institute of Rice Research (of the Indian council of Agricultural Research or ICAR) at Hyderabad has succeeded in doing so, after a pursuit that has lasted for over 12 years. A particular variety, termed DRR Dhan 45 (also termed IET 23832) is a zinc- rich rice plant developed by this group. It contains as much as 22.18 parts per million of zinc (the highest so far in released rice varieties) It is also moderately resistant to pests that kill rice plant by causing the leaf blast disease.

Arriving at DRR Dhan 45, the high zinc rice was not an easy task. Starting in 2004, it has involved screening several thousands of rice varieties from various parts of India, checking the zinc content in each, choosing as many as 168 of them which looked promising, analyzing the iron and zinc content in them, rigorously screening them and cross-breeding and combining the high yield plant with the high zinc one, and finally getting the variety IET 23832 or DRR Dhan 45. It has truly been a long haul and this effort of “biofortification” (meaning that the fortification or enrichment is inherent, rather than externally added, as in the Bhan method) succeeded. It is also important to note that the zinc and other mineral content are not lost upon polishing. The rice can thus be kept for long and used, and it tastes just as good as the conventional variety.

Also note that this is not a GM (genetically modified) crop, so it bypasses any unnecessary controversy. An added benefit is that DRR Dhan 45 has a low glycemic index (51 against 75 in conventional rice), so that it is good for diabetic patients. Dr Babu tells me that it also takes a little longer to digest and thus you feel sated! Their current coordination effort is to develop similar zinc and other nutrient rich varieties of wheat, maize and millets under the ICAR Biofortification. Let us wish them the very best in their endeavors!

source : The Hindu

Sunday, 14 August 2016

வயிற்றுப்புண்ணை ஆற்றும் வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ வயிற்றுப்புண்ணை ஆற்றும். இந்த ரசத்தை வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

மாலைமலர் நாளிதழில் வெளிவந்த குறிப்பு
தேவையான பொருட்கள் :
புளி - நெல்லிக்காய் அளவு
வேப்பம்பூ  - 1/2 கப் (காய்ந்தது)
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையானது

அரைக்க :
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2

தாளிக்க :
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
  • வேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் வறுத்த வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.
  • அரைக்கக் கொடுத்துள்ளவைகளை லேசாக எண்ணெயில் வறுத்து விழுதாக அரைத்து அதையும் கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
  •  நன்றாக கொதித்த பின் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் வேண்டும்.
  • சத்தான வேப்பம்பூ ரசம் ரெடி.

நன்றி : மாலைமலர்

Wednesday, 10 August 2016

முருங்கை எனும் சஞ்சீவி தாவரம்

வறண்ட பாசன வசதி மற்றும் குறைந்த வெப்பம் உள்ள பகுதிகளில் முருங்கை நன்றாக வளரும். கிராமங்களில் முருங்கை வளர்ப்பு அமோகமாக உள்ளது. மர முருங்கை, செடி முருங்கை என இரண்டு ரகங்கள் உண்டு. செடி முருங்கையை விதை இட்டு வளர்க்க வெகு விரைவில் வளர்ந்து மென்மையான காய்களையும், கீரையையும் தரும். மர முருங்கையின் மரக்கிளையை தரையில் நட்டு வளர்த்தால் மெதுவாகவும், திடமாகவும் வளர்ந்து பலன் தரும். ஆண்டு தோறும் பிப்ரவரியில் காய்கள் காய்க்கும். 
Image courtesy : Wikipedia
முருங்கைப்பூ: முருங்கைப்பூக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் தோன்றும். இந்தப்பூக்கள் முளைத்த பின் இரண்டு மாதம் கழித்து காய்கள் நார் போன்று தோன்றி படிப் படியாக தடிப்பு பெற்று கவர்ச்சியாகக் காட்சி அளிக்கும். தரமான காய்கள் மிக நீளம் உடையதாக அமையும். தோட்டங்கள், வீடுகள், காலி இடங்களில் முருங்கை வளர்த்து லாபம் ஈட்டலாம். நன்கு வளர்ச்சியடைந்த முருங்கை மரம் பல ஆண்டுகள் வரை நல்ல பலன் தரும். கீரை, காய், பூ, விதை, பட்டை, வேர், ஈர்க்கு, பிசின், எண்ணெய் இவை அனைத்துமே முருங்கை மரத்தால் பெற இயலும். 

முருங்கைக்கீரை: கீரை வகையான முருங்கை இலைகளை சுத்திகரித்து உரியவாறு சமைத்து சாப்பிட்டால் உடம்புக்கு ஆரோக்கியமும், வலுவும் ஏற்படும். வைட்டமின் பி, ஊட்டச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் முதலியன அடங்கியுள்ளன. இதை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் சகல வீக்கங்களும் குணமாகும். விளக்கெண்ணெயில் இதை வதக்கி வலியின் மீது ஒத்தடம் இட்டால் குணமடையும். பல்வேறு நோய்களை நீக்கும் மூலிகை வர்க்கம் முருங்கை என சித்த மருத்துவ குறிப்பு உள்ளது. 

முருங்கைக்காய்: மண் வளத்திற்கு ஏற்றவாறு முருங்கைக்காய் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ அளவில் வேறுபடும். இந்த காய்களை அவற்றின் நடுவே இரண்டாக கீறி சாம்பாரில் இட்டால் சீக்கிரம் வெந்து அதிக சுவையை தரும். இவற்றை பொரியல் செய்து சாப்பிடுவது சாலச்சிறந்தது. இவற்றுக்கு சரீரத்தை இளமையாக வைக்கும் ஆற்றல் உள்ளது. சமைத்து உட்கொள்வதன் மூலம் எவ்வகை வாத நோயும் விலகிவிடும். சமைத்து முருங்கைக்காய்களை இளம் விதைகளோடு சாப்பிடுவது ஆண்மை குறைவு நீங்க அருமருந்து.  

பலமிக்க முருங்கை: முருங்கை விதைக்குள் உள்ள பருப்பை சமைத்து சாப்பிட ரத்தம் சுத்தமாகும். தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும். முருங்கை பூக்களை பசும் பாலில் இட்டு காய்ச்சி இரவில் அருந்த ஆண்மை அதிகரிக்கும். இதயம் வலிமையுறும். முருங்கை காம்புகளை (ஈர்க்குகள்) குடிநீரில் இட்டு பருக உடல் வலி, கை கால் அசதி நீங்கும். முருங்கை பிசின் துாளை பாலுடன் கலந்து பருகி வர மேனி அழகு மேம்படும். முருங்கை பட்டை, வேரின் சாற்றை உணவுடன் உட்கொண்டால் கபம், வலிப்பு, குளிர் காய்ச்சல், வாத, வாய்வு தொல்லை நீக்கும். முருங்கை எண்ணெய் (பென் ஆயில்) நாட்டு மருத்துவத்தில் பிணிகளை நீக்கும் பரிகாரமாக பயன்படுகிறது. முருங்கை எனும் ஓர் ஒப்பற்ற சஞ்சீவி தாவரத்தை வீடுகள் தோறும் நட்டு வளர்த்து பயனடைவோம். 
 - முன்னோடி விவசாயி எஸ்.நாகரத்தினம் விருதுநகர்

நன்றி : தினமலர்

Friday, 5 August 2016

வல்லாரைக்கீரை

மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை இந்தியராகிய நாம் ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வல்லாரை வழங்கும் நன்மைகள் எக்கச்சக்கம்!

ஆண் குழந்தைகளை உயரமாக வளரச் செய்வதில் தொடங்கி, பெண் குழந்தைகளை நிறமாக்குவது வரை எல்லாவற்றுக்கும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து, செயற்கையான பொருட்களை உபயோகிப்பதே பலரது வழக்கம். அந்த வகையில் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தவும் மாத்திரைகளையும் ஊட்டச்சத்து பானங்களையுமே நம்புகிறார்கள்.

Image & Article courtesy : Dinakaran
பக்க விளைவுகள் அற்ற, நிரந்தர நினைவாற்றலைத் தரக்கூடிய வல்லாரைக் கீரையை எத்தனை வீடுகளில் அறிந்திருப்பார்கள் என்பதே சந்தேகம்தான். கல்விக் கடவுளை சரஸ்வதி என்கிறோம். நினைவாற்றலை மேம்படுத்தி, கற்கும் திறனை அதிகரிக்கச் செய்கிற வல்லாரைக் கீரையையும் சரஸ்வதி கீரை என்றே அழைக்கிறார்கள்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கார்த்திகா. வல்லாரை  கீரையின் வலிமைகளைப் பற்றிப் பேசுவதுடன், அதை வைத்து சுவையான 4 ஆரோக்கிய ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர்.

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.

பலவகையான மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த மூலிகை, இந்தியா முழுவதிலும் நீர் நிலைகள் அதாவது, ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இலைகளில் நரம்புகள் இழையோடுவதைக் காணலாம். வீட்டு சமையலில் வல்லாரையை வாரம் இருமுறையேனும் பயன்படுத்த வேண்டும்.

வல்லாரையில் அடங்கியுள்ள சத்துகள்

* வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, தாது உப்புகள் ஏராளமாக அடங்கியுள்ளன.

*ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை இந்த கீரை சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும் பயன்களும்

1. வல்லாரை கீரை உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
2. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்தசோகையை போக்கும்.
3. மூளையின் நரம்புகளைத் தூண்டி நினைவாற்றலைப் பெருக்கும். அத்துடன் மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை, தகுந்த முறையில்பெற்றிருக்கிறது.
4. வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகள் நீங்கும். மேலும் பல் ஈறுகள் பலப்படும்.
5. கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கிறது.
6. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தொண்டைக் கட்டி, காய்ச்சல், உடற்சோர்வு மற்றும் படை போன்ற சரும நோய்களைப் போக்கும்.
7. யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்து கட்டினால் நோயின் தாக்கம் குறையும்.

தினசரி உணவில் எப்படி?

வல்லாரை கீரையை கொண்டு நம் தினசரி உணவில் பல ஆரோக்கியமான உணவுகளை சமைக்கலாம். அதில் சில வல்லாரை கீரை பருப்பு மசியல், வல்லாரை கீரை தோசை மற்றும் சப்பாத்தி செய்து அதை அழகிய வடிவங்களில் கட் செய்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு சமைக்கலாம்.வல்லாரை கீரையை பொடியாக அரைத்து உபயோகித்தும் பயன் அடையலாம்.

நீங்கள் பயன் அடைவதற்காக சில செய்முறைகள்:


* வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளையும் 1 டீஸ்பூன் பொடியில் தேவையான அளவு தேன் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து விழுதாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு சுடுநீருடன் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

* வல்லாரை இலையை காயவைத்து சீரகம், மஞ்சள் சேர்த்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு முன்பாக 2 கிராம் அளவில் சாப்பிட்டு சூடான பசும்பால் குடித்து வர நினைவாற்றல் பெருகும்.

* 1/4 கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து அத்துடன் வல்லாரை இலைகளையும், 5 மிளகாயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து அந்த மாவில் ரொட்டி போலச் செய்து சாப்பிட்டு வர சரும  நோய்கள் விலகும்.

* வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ-மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதி குணமாகும்.

* வல்லாரை இலையை சுத்தம் செய்து அதை டீயுடன் சேர்த்து குடிக்கலாம். இதைச் செய்தால் ஆஸ்துமா, சளி, இருமல்  போன்றவற்றுக்கு மருந்தாகும்.

* வல்லாரை கீரை சட்னியை இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள பொருத்தமான சட்னி இது.

வல்லாரை வளர்க்கலாம்!

மற்ற எல்லா கீரைகளையும் போலவே வல்லாரை கீரையையும் நமது வீட்டு தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம். வல்லாரை விதைகளை வாங்கித் தூவி, மிதமான வெயில் படும் இடத்தில் வைத்து, அளவாகத் தண்ணீர் விட்டு வந்தால் தினசரி உங்களுக்கு ஃப்ரெஷ்ஷான வல்லாரைக் கீரை சமையலுக்கு ரெடி!


source:Dinakaran

Tuesday, 26 July 2016

ரத்தத்தைப் பெருக்கும் நாவல்!

Image & Info courtesy : Pasumai Vikatan


ஆற்றங்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காய்த்துக் குலுங்கிய நாவல் மரங்களில் ஏறி விளையாடியதும், நாவல் பழங்களைப் பறித்தும், பொறுக்கியும் ருசித்தது... தற்போதைய நடுத்தர வயதினரின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
நாவல் பழங்களின் மருத்துவ குணங்கள் பற்றி பேசிய திருவண்ணாமலையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கிருபாகரன், ''நாவல் பழம் கணிசமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கனிமங்கள், சர்க்கரை மற்றும் புரதங்கள் தவிர, இதில் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. பழமாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், சுவையான பானங்கள், மணப்பாகு (சிரப்) ஆகியவற்றையும் தயாரிக்கலாம். சிறிய அளவில் பழச்சாறு உண்டால், வயிற்றுப்போக்கு குணமாகும். நாவல் பழங்களுக்கு பசியைத் தூண்டும் குணமும், ரத்தத்தை விருத்தி செய்யும் குணமும், உடலை உரமாக்கும் குணமும் இருக்கிறது. 

பொதுவாக, நாவல் பழங்கள் சாப்பிட்டால், நீர் வேட்கை நீங்கும். நாவல் பழச்சாற்றை ஒரு மாதம் வரை புளிக்க வைத்துப் பயன்படுத்தினால், சர்க்கரை நோயாளிகளின் நீர் வேட்கை தணியும். இரைப்பைக் குடல்வலி நீக்குவதோடு, சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது. குளிர்ச்சி மற்றும் செரிமானப் பண்புகளையும் கொண்டுள்ளது. பொடி செய்யப்பட்ட விதைகள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். நாவல் விதைகள், நிரந்தரமாக சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதிகமான நாவல் பழங்கள் உண்டால் பித்தம் கூடும். சில நெல்லிக்காய்களை மென்று தண்ணீர் குடித்தால் பித்தம் தணிந்துவிடும்'' என்று சொன்னார்.

நன்றி : பசுமை விகடன்

Saturday, 23 July 2016

varagu recipes

வரகு 

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.
  • வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
  • அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
  • வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்

மருத்துவ பயன்கள்

  • சர்க்கரை அளவை குறைக்கிறது.
  • மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
  • கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
  • நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.

வரகு உப்புமா 

Image courtesy : Dinakaran.com
என்னென்ன தேவை?
வரகு அரிசி - 1/2 கப்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,
கேரட் - சிறிது,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
வரகு அரிசியை கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சைமிளகாய், வெங்காயம், கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். 1 1/2  கப் தண்ணீர் சேர்க்கவும். வரகு அரிசியை தண்ணீர் கொதித்தவுடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து, கடாயை மூடி வேக விடவும். 7-8 நிமிடங்கள் கழித்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். சூடான வரகு உப்புமா தயார்.

வரகு கஞ்சி

Image courtesy : vikatan.com
சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும். பாதி அளவு வெந்ததும், உரித்த பூண்டு பல் 10, ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள, கறிவேப்பிலை துவையல் அருமையாக இருக்கும்

வரகு கொழுக்கட்டை.

தேவையான பொருட்கள்: வரகு அரிசி மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்.
வரகு அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து எடுக்கவும். இதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடலாம். உடலுக்கு சத்துத்துக்களை கொடுக்கும். உடலை தேற்றும். வரகு அரிசி அற்புதமான உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகிறது


source : www.dinakaran.com
www.vikatan.com
Wikipedia
www.dinakaran.com  

Friday, 22 July 2016

Medicinal properties of mango

Mangifera indica (MI), also known as mango, aam, it has been an important herb in the Ayurvedic and indigenous medical systems for over 4000 years. It is native tropical Asia and has been cultivated in the Indian subcontinent for over 4000 years and is now found naturalized in most tropical countries.

Image courtesy : Wikipedia
MI is a large evergreen tree in the anacardiaceae family that grows to a height of 10-45 m, dome shaped with dense foliage, typically heavy branched from a stout trunk. The leaves are spirally arranged on branches, linear-oblong, lanceolate – elliptical, pointed at both ends, the leaf blades mostly about 25-cm long and 8-cm wide, sometimes much larger, reddish and thinly flaccid when first formed and release an aromatic odour when crushed. The inflorescence occurs in panicles consisting of about 3000 tiny whitish-red or yellowish – green flowers. The fruit is a well known large drupe, but shows a great variation in shape and size. It contains a thick yellow pulp, single seed and thick yellowish – red skin when ripe. The seed is solitary, ovoid or oblong, encased in a hard, compressed fibrous endocarp.

Mangoes belong to genus Mangifera which consists of about 30 species of tropical fruiting trees in the flowering plant family Anacardiaceae. According to ayurveda, varied medicinal properties are attributed to different parts of mango tree. 

Mango is one of the most popular of all tropical fruits. Mangiferin, being a polyphenolic antioxidant and a glucosyl xanthone, it has strong antioxidant, anti lipid peroxidation, immunomodulation, cardiotonic, hypotensive, wound healing, antidegenerative and antidiabetic activities

Various parts of plant are used as a dentrifrice, antiseptic, astringent, diaphoretic, stomachic, vermifuge, tonic, laxative and diuretic and to treat diarrhea, dysentery, anaemia, asthma, bronchitis, cough, hypertension, insomnia, rheumatism, toothache, leucorrhoea, haemorrhage and piles. All parts are used to treat abscesses, broken horn, rabid dog or jackal bite, tumour, snakebite, stings, datura poisoning, heat stroke, miscarriage, anthrax, blisters, wounds in the mouth, tympanitis, colic, diarrhea, glossitis, indigestion, bacillosis, bloody dysentery, liver disorders, excessive urination, tetanus and asthma. 

Ripe mango fruit is considered to be invigorating and freshening. The juice is restorative tonic and used in heat stroke. The seeds are used in asthma and as an astringent. Fumes from the burning leaves are inhaled for relief from hiccups and affections of the throat. The bark is astringent, it is used in diphtheria and rheumatism, and it is believed to possess a tonic action on mucus membrane. The gum is used in dressings for cracked feet and for scabies. It is also considered anti-syphilitic. The kernels are converted into flour after soaking in water and eliminating the astringent principles. Most parts of the tree are used medicinally and the bark also contains tannins, which are used for the purpose of dyeing. 

Saturday, 16 July 2016

முடக்கத்தான் கீரை : ஆரோக்கிய உணவு

முடக்கு + அறுத்தான் என்பதே முடக்கத்தான் என மருவியது. இந்தக் கீரையை அடிக்கடி உண்பவர்களுக்கு கை, கால்கள் முடங்கிப் போவது தவிர்க்கப்படுமாம்.முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. லேசான துவர்ப்புச் சுவையுடையது. கிராமங்களில் வேலி ஓரங்களில் படர்ந்து கிடக்கும். வீட்டுக்கு வீடு இந்தக் கீரையைப் பார்க்கலாம். நகர வாழ்க்கையில் கீரைகளே அரிதாகிக் கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் முடக்கத்தான் கீரையைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Image & Article courtesy : Dinakaran
மூட்டுவலியைப் போக்குவதில் முடக்கத்தானின் பங்கு பற்றித்தான் பலருக்கும் தெரியும். அதற்கு மூலநோய், மலச்சிக்கல், கரப்பான், பாத வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் குணம் உண்டு. எனவே மாதம் இரண்டு முறையாவது முடக்கத்தானை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் போடலாம்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர். முடக்கத்தான் கீரையின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பேசுவதுடன், அந்தக் கீரையை வைத்து 3 ஆரோக்கிய உணவுகளையும் செய்து காட்டியிருக்கிறார் அவர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம், முடக்கத்தான் கீரைக்கு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டை கரைக்கும் சக்தி கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளார்கள். மூட்டுகளில் யூரிக் அமிலம், கொழுப்பு, புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள் படிவதாலேயே மூட்டுவலி ஏற்படுகிறது. நமது மூட்டுகளில்  யூரிக் ஆசிட் எங்கு இருந்தாலும் அதைக் கரைத்து சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடுகிற தன்மை முடக்கத்தான் கீரைக்கு உண்டு. மூட்டுவலி உள்ளவர்கள் இதை உள்ளே உணவாக எடுத்துக் கொள்வதைப் போல வெளிப்பூச்சுக்கும் பயன்படுத்தி, நிவாரணம் பெறலாம்.

முடக்கத்தான் கீரைக்கு ஜலதோஷம் மற்றும் இருமலை விரட்டும் குணமும் உண்டு. குறிப்பாக குழந்தை களுக்கு இருமலும் சளியும் ஏற்படுகிற போது பாதுகாப்பான மருந்தாக இந்தக் கீரையைத் தரலாம். தவிர, காது வலி, மாதவிலக்கின் போதான வலி, களைப்பு, அசதி போன்றவற்றையும் இது விரட்டக்கூடியது. எக்ஸீமா என்கிற சரும நோய்க்கு முடக்கத்தான் கீரை சாற்றுடன் சுத்தமான மஞ்சளை அரைத்துத் தடவலாம். 

  • முடக்கத்தான் கீரையை நெய்யில் வதக்கி, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் பார்வைக் கோளாறுகளை விரட்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நின்று போகும் நேரத்தில் எலும்புகள் தேய்ந்து, முதுகு வலியும், மூட்டு வாதமும் வரும். சிறு வயதிலிருந்தே முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளப் பழகினால் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.
  • நீரிழிவை எதிர்த்துப் போராடுவது, புற்றுநோய்க்கான மருந்துகளில் பயன்படுவது, பால்வினை நோய்களை குணப்படுத்துவது, மனப்பதற்றத்தைக் குறைப்பது என முடக்கத்தானுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதை வேறு வேறு ஆய்வுகள் வேறு வேறு காலகட்டங்களில் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருவதும் குறிப்பிடத்தக்கது.

மூட்டுவலிக்கு ஒரு மருந்தும் ஒரு சிகிச்சையும்

கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரையை எடுத்து இரண்டு, மூன்று முறை நன்கு அலசவும். அதில் 2 கப் தண்ணீர், 1 டேபிள்ஸ்பூன் சீரகம், சிட்டிகை பெருங்காயம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்து பாதியாக வற்றியதும் அடுப்பை அணைத்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால் மூட்டு வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

ஒரு இரும்புக் கடாயில் சிறிது விளக்கெண்ணெய் விட்டு, அதில் முடக்கத்தான் இலையைச் சேர்த்து குறைந்த தணலில்  வதக்கவும். இலைகள் நன்கு சூடானதும் சுத்தமான காட்டன் துணியில் வைத்துக் கட்டி,  வலியுள்ள உடல் பாகங்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். அப்படி அழுத்தி ஒத்தடம் கொடுக்கும்போது, விளக்கெண்ணெய் கசிந்து வெளியே வரும் என்பதால் அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு இதைச் செய்யவும். சூடு குறைந்ததும் மறுபடி முதலில் சொன்னதுபோல மறுபடி சூடேற்றிக் கொள்ளவும். 

மலச்சிக்கலுக்கும் மருந்து 
 தீவிரமான மலச்சிக்கலால் அவதிப்படுகிற சிலருக்கு முடக்கத்தான் கீரையின் அனைத்து பாகங்களுமே மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. அப்படி மொத்தச் செடியில் இருந்து எடுக்கப்படுகிற டிகாக்‌ஷன் மலச்சிக்கலுக்கு மட்டுமின்றி, வலி உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகளுக்கும் மருந்தாகிறது. 
வலி நிவாரணி 
 முடக்கத்தான் கீரையில் இருந்து பெறப்படும் சாற்றினை வயதுக்கேற்ப தினம் 10 முதல் 30 மி.லி. வரை எடுத்துக் கொள்வதால் வலிகள் மறையுமாம். ஆண்களுக்கு ஏற்படுகிற விரைவீக்கப் பிரச்னைக்கும் முடக்கத்தான் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. கீரையின் விழுதை வலியுள்ள இடங்களில் தடவுவதன் மூலம் தற்காலிக நிவாரணம் கிடைக்கச் செய்ய முடியும்.  

பொடுகு போக்கும்... 
முடக்கத்தான் கீரையை 6 மணி நேரத்துக்கு தண்ணீரில் ஊற வைத்து அந்தத் தண்ணீரைத் தலை குளிக்கப் பயன்படுத்தினால் கூந்தல் சுத்தமாகும். முடக்கத்தான் கீரை தைலத்தை நல்லெண்ணெயுடன் கலந்து தலைக்குத் தடவிக் குளித்தால் பொடுகும் மறையும். கூந்தலும் நன்கு வளரும். 

எப்படித் தேர்வு செய்வது?மஞ்சள் அல்லது பழுப்பு நிற இலைகள் இல்லாமல் பச்சைப் பசேலென இருக்க வேண்டும். கீரைக் கட்டைக் கையில் எடுத்துப் பார்த்தால் வாடி வதங்கி இருக்கக்கூடாது. ரொம்பவும் இளசான கீரை என்றால் அதைத் தண்டுடனேயே சேர்த்து சமைக்கலாம். கீரையை வாங்கியதும் ஒரு பேப்பரில் சுற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

எப்படிச் சமைப்பது? 

கீரையை கட்டுடன் நிறைய தண்ணீர் வைத்து இரண்டு, மூன்று முறை அலசி, ஈரம் போக பரப்பி வைக்க வேண்டும். எல்லாக் கீரைகளையுமே இப்படி சமைப்பதற்கு முன்புதான் அலச வேண்டும். ரொம்பவும் முன்கூட்டியே அலசினால் அந்த ஈரப்பதம் கீரையை வீணாக்கிவிடும். 

தோசையாகச் செய்வதானால் கீரையையும், இளசான தண்டையும் சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்து மாவுடன் சேர்க்கலாம். ரசம் அல்லது சூப்பில் சேர்ப்பதானால் கீரையை மட்டும் கிள்ளி, லேசாக வதக்கிச் சேர்க்கலாம்.

வாசனைக்காக சேர்ப்பதானால் கொத்தமல்லி மாதிரி மெலிதான தண்டுடன் கீரையை அப்படியே சேர்க்கலாம். பாஸ்தா, பீட்சா போன்றவற்றில் இந்தக் கீரையைப் பொடியாக நறுக்கி, மேலே தூவிக் கொடுக்கலாம்.

தெரியுமா?


முடக்கத்தான் கீரையுடன்  ஆங்காங்கே குட்டிக்குட்டி பலூன் போன்ற பைகள் தொங்கும். காற்றடைத்த பைகள்  போன்ற அவற்றினுள் முடக்கத்தான் விதைகள் இருக்கும். அந்த விதைகளை உற்றுப்  பார்த்தால், அவற்றில் இதய வடிவம் பொறிக்கப்பட்டது போல இருக்கும்.

முடக்கத்தான் கீரை தோசை
என்னென்ன தேவை?


தோசை மாவு - 1 கப், முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி, பூண்டு - 5 பற்கள், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?


கீரை, பூண்டு, மிளகு, சீரகத்தை எண்ணெயில் தனியாக வதக்கி, அரைத்துக் கொள்ளவும். தோசை மாவில் அரைத்த விழுதைக் கலந்து தோசைகளாக வார்க்கவும்.

மூட்டுவலி போக்கும் முக்கியமான கீரை!


சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்துக்காகவும் நேரத்துக்காகவும் அடக்கி வைக்கிறோம். இந்த நிலை பெண்களுக்கு, 10 வயது முதலும், ஆண்களுக்கு, 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது. அப்போது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக, சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது.

அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் (Uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு சிறு கற்கள், சினோரியல் மெம்கிரேம்   எனும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது. சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் (Rheumatoid Arthritis) ஆரம்ப நிலை.

முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல எடுத்துச்சென்று, சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலில் விட்டு செல்கிறது. இது மிக முக்கியமான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான்கீரை துவையல்

என்னென்ன தேவை?


முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, உளுந்து - 1 டேபிள்ஸ்பூன், புளி - சிறிதளவு, பெருங்காயம் - சிறிது, உப்பு- தேவைக்கேற்ப, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


கடாயில் எண்ணெய் வைத்து உளுந்து, மிளகாய், இஞ்சி,  பிறகு கீரை, பெருங்காயம் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி, ஆறியதும் புளி, உப்பு வைத்து அரைக்கவும்.

முடக்கத்தான் கீரை ரசம்

என்னென்ன தேவை?


வேக வைத்த  துவரம் பருப்பு (வெந்த தண்ணீருடன்) - 1 கப், முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி அளவு, நசுக்கிய பூண்டு - 2 பல், சாம்பார் வெங்காயம் - 4, தக்காளி - 1, பொடித்த மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், உப்பு-தேவைக்கு.

தாளிக்க... எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம்.

எப்படிச் செய்வது?


கடாயில் எண்ணெய் வைத்து தாளிப்புப் பொருட்களைச் சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், வேக வைத்து மசித்த பருப்பு மற்றும் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய முடக்கத்தான் கீரை சேர்த்து இறக்கவும்.

தகவல் மற்றும் படம் : தினகரன்

Wednesday, 8 June 2016

அல்சரை விரட்டும் அமுத பானம் இளநீர்

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் எனப்பாடினார் திருமூலர். வாழ்க்கை வாழ்வதற்கு உண்ண உணவும், உடுத்த உடையும், வாழ இருப்பிடமும்  அவசியம். இதில் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இருக்கவேண்டும். நேரத்திற்கு ஏற்றவாறு உண்பது அவசியம். ஆனால் இன்றைய நவீன  யுகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடிகிறதா? என்றால் கேள்விக்குறிதான். 
பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலை நேரங்களில் உணவை அவசர  அவசரமாகவும், வெந்தும் வேகாமலும், சுவையோ அல்லது சுகாதாரத்தைப்பற்றியோ யோசிக்காமல் அரைகுறை வயிற்றுடன் சாப்பிட்டுவிட்டு  அலுவலகம் அல்லது பள்ளிக்கு செல்வோரை நாம் காண்கிறோம். அதேபோல் மதிய நேரத்திலோ அல்லது இரவிலோ சரியான நேரத்திற்கு போதிய  அளவு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு.

காரணம் அவர்கள் உணவுக்கு பதிலாக அடிக்கடி டீ, காபி, நொறுக்கு தீனி, பாஸ்ட்புட் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது ஒரு காரணமாக அமைந்து  விடுகிறது. இது நாளடைவில் பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. இதன் விளைவு வயிற்றுப்புண் ஏற்பட்டு அல்சரில் கொண்டு  சேர்க்கிறது. அல்சர் நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படும் பாதிப்பு. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்டநேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான  திண்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது. அல்சர்  இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்சு  எரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைகள் ஏற்படும்.

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிட தொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் காற்றுப்புகாத பைகளில்  கட்டிவைத்தால் அவை அழுகிவிடும். எனவே அவற்றை உயிருள்ள உணவு என்கிறோம். அந்த உயிர்சத்துதான் நம் உடலில் உண்டாகும் அல்சர்  போன்ற பிரச்னைகளை தடுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. அல்சரை போக்கும் சக்தி தேங்காய்க்கும் உண்டு.

தேங்காயில் உள்ள நீர், இளங்காயாக இருக்கும்போது அதில் இருக்கும் மெல்லிய வழுவழுப்பான பொருள் நம் உடலில் உண்டாகும் நோயை தடுக்கும்  இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதனை தினமும் காலை, மாலை என இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டை தணிக்கும்,  கண்கள் குளிர்ச்சி பெறும், பட்டினி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஜீரணமாகவும், அஜீரண கோளாறு ஆகியவற்றை போக்குவதில் இளநீர்முக்கிய பங்கு  வகிக்கிறது.

இளநீரை தினமும் மதியநேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீரை  வெளியேற்றுவதுடன், ரத்த சோகையை போக்குகிறது. எனவே நோயற்ற வாழ்க்கைக்கு உகந்த உணவை சரியான முறையில் சரியான அளவு  சாப்பிட்டால் அல்சர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். முடிந்தவரை காரமான மற்றும் பாஸ்ட்புட் மற்றும் நொறுக்கு தீனிகளை  குறைத்துக்கொண்டால் அல்சருக்கு எளிதில் ‘குட்-பை சொல்லலாம்.

நன்றி : தினகரன்

Wednesday, 27 April 2016

கண் எரிச்சலை போக்கும் முள்ளங்கி, வெள்ளரி

கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, கொத்துமல்லி போன்றவற்றை பயன்படுத்தி கண் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, சீரகப்பொடி, உப்பு. கால் டம்ளர் முள்ளங்கி சாறு, சம அளவு தக்காளி சாறு மற்றும் வெள்ளரி சாறுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது சமயல் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வாரம் இருமுறை குடித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை, சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி குணமாகும்.

உடல் குளிர்ச்சி அடையும்.நந்தியா வட்டை பூக்களை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். நந்தியா வட்டை பூக்களை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் கண் எரிச்சல் சரியாகும். பூக்களை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் கட்டி வைத்தால், கண் சோர்வு, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் செல்லும்போது கண்கள் சிவந்து போகும்.

இந்நிலையில், நந்தியா வட்டை பூக்கள் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைப்பதால் கண் பிரச்னைகள் சரியாகும். கண்களில் அழுக்கு படிதலை தடுப்பதுடன், கண்களுக்கு ஆரோக்கியம் தரும். பார்வையை தெளிவுபடுத்தும்.திரிபலா சூரணத்தை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை நன்றாக ஆற வைத்து, 2 முறை வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.

இந்த நீரை கொண்டு கண்கள், புண்கள், கொப்புளங்களை கழுவுவதால் அவைகள் வெகு விரைவாக ஆறும். கொத்துமல்லி இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து சாறு எடுக்கவும். மெல்லிய துணியில் இந்த சாறை நனைத்து கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது கண்கள் மீது 15 நிமிடங்கள் வைத்திருந்தால் கண் எரிச்சல் சரியாகும்.

இதேபோன்று, வில்வ இலை சாறு எடுத்து கண்களில் வைத்தால் கண் எரிச்சல் குணமாகும். தற்போதைய காலகட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. புற ஊதா கதிர்கள் அதிகளவில் தாக்குவதால் கண்கள் பாதிக்கிறது. கண்களின் சிவப்பு தன்மை, கண் எரிச்சல், கிருமிகள் தொற்றி கொள்வது போன்றவை நிகழும். இதற்கு கொத்துமல்லி, வில்வ இலை சாறு மருந்தாகிறது. இதுபோன்ற எளிய மருத்துவத்தின் மூலம் கண்களை நாம் பாதுகாக்கலாம்.

நன்றி : தினகரன்

Friday, 22 April 2016

நம்மை பாதுகாக்கும் கற்றாழை

உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழையில் உடலுக்குத் தேவையான முக்கியமான எட்டு அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.
Image courtesy : http://agritech.tnau.ac.in & Article courtesy : dinamani
 1) வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.

2) கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப் பருவினால் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும். கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.

 3) சதைப் பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

4) கண்களில் அடிபட்டாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

5) கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸாகக் குடிப்பது பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி : தினமணி

Saturday, 2 April 2016

தொண்டை புண்ணை ஆற்றும் இஞ்சி

Image & Article courtesy : Dinakaran

இஞ்சி நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதே நேரத்தில் அது மிகச் சிறந்த மருந்தாகவும் பயன் தருகிறது. இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் பித்தத்தால் ஏற்படும் கோளாறுகளை தணிக்கலாம். பித்தத்தை கட்டுப்படுத்துவதில் இஞ்சி மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இஞ்சியை பயன்படுத்தி நாம் காலை அருந்தும் தேநீர் ஒன்றை தயார் செய்யலாம்.


இதற்கு தேவையான பொருட்கள் புதினா இலை, இஞ்சி, பனங்கற்கண்டு. காய்ச்சிய பால். சிறிது புதினா இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு இஞ்சி துண்டுகளை நசுக்கி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொண்டு இதனுடன் பால் சேர்த்துக் கொள்ளலாம். பால் சேர்க்காமலும் இதை பருகலாம்.

வாரம் இரு முறையாவது இந்த தேநீரை எடுத்துக் கொள்வதன் மூலம் இஞ்சியின் பயன்களை நாம் பெறலாம். இஞ்சி உடலுக்கு உஷ்ணத்தை தரக் கூடிய உணவாகும். வயிற்று பொருமல், வயிற்று உப்புசம் ஆகிய கோளாறுகளை போக்கக் கூடிய மருந்தாக இஞ்சி விளங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து அதனால் இதய வலி ஏற்படுதல், மூட்டுகளில் வலி ஏற்படுதல், இதய அடைப்பு ஏற்படுதல் போன்றவற்றை உருவாக்கும் கொழுப்பு சத்தை கரைக்கக் கூடிய தன்மை இஞ்சிக்கு உள்ளது.

இதனால் இதய நோய் வராமல் இஞ்சி தடுக்கிறது. மேலும் செரிமானத்தை அளிக்கக் கூடியதாகவும் இஞ்சி விளங்குகிறது. ரத்த ஓட்டத்தை தூண்டக் கூடியது. சுறுசுறுப்பை தரக் கூடியது.இதை பருகுவதன் மூலம் உடலுக்கு புத்துணர்வு ஏற்படுகிறது. இஞ்சியை பயன்படுத்தி தொண்டை புண், தொண்டை வலிக்கான மருந்தை தயார் செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் இஞ்சி துண்டுகள், இலவங்க பட்டை, மிளகு பொடி, தேன். சிறிதளவு இஞ்சி துண்டுகளை எடுத்துக் கொண்டு அதனுடன் இரண்டு துண்டு லவங்க பட்டையை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிது மிளகு பொடியை சேர்க்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இதை வடிகட்டி எடுத்துக் கொண்டு இதனுடன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தொண்டை புண், வலி இருக்கும் போது இதை எடுத்துக் கொள்வதால் மிகுந்த பயனை தருகிறது. இஞ்சி ஒரு வலி நிவாரணியாக பயன் தருகிறது. நீண்ட நாளாக மூட்டுவலியை ஏற்படுத்தும் காய்ச்சல், முடக்கு வாதத்தை ஏற்படுத்தும் பிரச்னை தீர்க்க இந்த தேநீரை குடிப்பதால் மூட்டு வலி தீர்கிறது. உடலுக்கு வன்மையை தரும்.

Source : Dinakaran

Saturday, 5 March 2016

Dyspepsia tendency : cumin (குன்மம் போக்கும் சீரகம்)

Image courtesy : wikipedia


சீரகம் என்ற பெயரை சொன்னவுடன் அதன் பயனை தெரிந்து கொள்ளலாம். சீர் அகம். உடலை சீராக வைத்திருக்க உதவிடும் ஒரு கடை சரக்கு. நாள்தோறும் சமயலுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது ஒரு மூலிகை என்பதே பலருக்கு தெரிவதில்லை. குன்மம் போக்குதல், வயிறு வாயு அகற்றுதல், காசத்தை குணமாகுதல், செரிமானத்தை அதிகரித்தல், காமாலை போகுதல், சிறு நீரை பெருக்குதல், திசுக்களை இறுக செய்தல் மாதவிடாய் தூண்டுதல், மார்புவலி, கண்நோய் போக்குதல் உள்ளிட்ட நோய்களை போக்கம் குணங்களை கொண்டது.

இதில் சீரகம், கருஞ்சீரகம், காட்டுசீரகம், பெருஞ்சீரகம் என பலவகைகள் உண்டு. தமிழகத்தின் வளமான பகுதிகளில் வளர்கிறது. சீரகத்தை நாட்டுசர்க்கரையுடன் கலந்து நாள்தோறும் விடாமல் சாப்பிட்டுவந்தால் தேகம் வன்மை பெறும். 34 கிராம் சீரகத்தை 1400 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி சீரகம் வெடித்து பதத்தில் வடித்து கொள்ளவும். இதை தலையில் தேய்த்து மூழ்கிவர கண்நோய், மயக்கம், வாந்தி, தலைவலி, மந்தம் முதலியவை நீங்கும்.

சீரகதிதை நிழலில் காயவைத்து பொடித்து தேன் அல்லது பாலில் காலை மாலை சப்பிட பித்தம், வாயு, சீதக்கழிச்சல், செரியாக்கழிச்சல் நீங்ககும். சீரகத்தூளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட இருமல் நோய் விலகும். சீரகம் 200 கிராம் உலர்ந்த கற்றாழை 170 கிராம் பனை வெல்லம் 170 கிராம் எடுத்து பசும்பால் நெய் தேவையான அளவு சேர்த்து கிண்டி சாப்பிட நீர்ச்சுருக்கு, எரிவு, வெப்பம், அஜீரணம், கண்ணெரிவு, கைகால் உடல் எரிச்சல் ஆசனக்கடுப்பு, மலக்கட்டு நீங்கும்.

சீரகத்தை புடைத்து தூய்மையாக்கி 170 கிராம் எடுத்து கொள்ளவேண்டும்.  அதனுடன் ஏலம், சுக்கு, திப்பிலி, மிளகு, கோட்டம், நெல்லிமுள்ளி, நெற்பொரி, வில்வப்பழதோடு இவைகளின் பொடி வகைக்கு 8 கிராம் சேர்த்து அதனை ஒன்றாக கலந்து அதன் அளவுக்கு சர்க்கரை சேர்த்து 4 கிராம் முதல் 8 கிராம் வரை காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் வயிற்றுவலி, வாயுநோய், ஈரல்நோய், காசம், கல்லடைப்பு, இரைப்பு, கம்மல் வலிநோய்கள் நீங்கும்.

தூய்மை செய்யப்பட்ட சீரகம் 250 கிராம் எடுத்து அது மூழ்கும் அளவு எழுமிச்சை சாறு, நெல்லிச்சாறு, இஞ்சிசாற்றில் தனித்தனியாக மும்மூன்று முறை ஊறவைத்து பின்பு அதை நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பிட்டுவர செரியாமை, சுவையின்மை, பித்தமயக்கம், கண்ணெரிச்சல், வயிற்றுவலி, மூலக்கொதிப்பு, சீதக்கழிச்சல் நீங்கும். உடல் சூடு தணியும்.

சீரகத்தை கையாந்தகரைச்சாற்றில் ஊறப்போட்டு சூரணம் செய்து 4 கிராம் பொடியுடன் சர்க்கரை, சுக்கு தலா 2 கிராம் சேர்த்து மூன்றையும் ஒன்றாக கலந்து காலை மாலை சாப்பிட காமாலை, வாயு, உட்கரம் தீரும். சீரகம், சுக்கு, ஏலம், நெல்லி முள்ளி பொடி ஒரு நிறயாய் எடுத்து அதில் பாதியளவு சர்க்கரை சேர்த்து மூன்றுவிரல் அளவு காலை மாலை சாப்பிட தீக்குற்றம் தணியும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் வைத்து சாப்பிட எரிகுன்மம் என்ற வயிற்றுஎரிச்சல் நோய் நீங்கும்.

சீரகம், குறுந்தொட்டி வேர், ஓரெடை கூட்டிக்குடிநீர் செய்து மூன்று நாள் சாப்பிட குளிர்காய்ச்சல் நீங்கும். சீரகம் 51 கிராம் எடுத்து எழுமிச்சை பழச்சாற்றில் அரைத்து நல்ல வெல்லம் 17 கிராம் சேர்த்து பிசைந்து புதுச்சட்டியில் அப்பி 3 நாள் வெயிலில் காயவைத்து எடுத்து ஒரு சிட்டிகை அளவில் காலை மாலை 10 நாள் சாப்பிட வெட்டை, கைகால் குடைச்சல், எரிச்சல், குணமாகும்.

34 கிராம் சீரகத்தை வல்லாரைச் சாற்றில் 4 நாள் ஊறவைத்து நிழலில் காயவைத்து பசும்பால் விட்டு மைய அரைத்து பசும் வெண்ணெயில் கலந்து ஒரு நாள் ஊறவைத்து காய்ச்சி அதில் 340 கிராம் கற்கண்டு சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு 8 கிராம் முதல் 16 கிராம் வரை சாப்பிட பித்தம், வயிற்றுவலி, வாந்தி, அக்கனி மந்தம், விக்கல் நீங்கும். உணவின் சுவைக்கு பயன்படுத்தப்படும் கடைசரக்கு தானே என்றிடாமல் நமது முன்னோர்கள் சொல்லிவைத்த முறைப்படி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

நன்றி : தினகரன்

Tuesday, 23 February 2016

நார்த்தம் பழம் (தினமலர்)

Image & Article courtesy : Dinamalar


நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்துக்கு, மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.
இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்
பழமே விளங்குகிறது.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.

நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வந்தால், ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு நீங்கும். பசியை அதிகரிக்கும். இதன் சாறு வாந்தியை நிறுத்தும். பசியை தூண்டி விடும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார்த்தை பழத்தின் மேல் தோலை, தேன் அல்லது சர்க்கரை பாகில் ஊற வைத்து, நன்கு ஊறிய பின், சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுத்தால் நல்ல பலன் தரும்.

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன், ரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால், உடல் வலுப்பெறும். ரத்தம் மாசடையும்போது ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற, நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து, தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு, கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும். சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட, வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து, வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால், வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.
நன்றி : தினமலர்

Monday, 22 February 2016

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு (தினகரன்)

Image & Article courtesy : Dinakaran.com
கேழ்வரகு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. அரிசியை விட அதிக சத்துள்ள அற்புதமான உணவு. அரிசி விரைவில் செரிமானம் ஆகும். கேழ்வரகு மெதுவாக செரிமானம் ஆகி சத்துக்களை கொடுக்கும். கேழ்வரகில் இனிப்போ, காரமோ சேர்த்து உணவாக கொடுக்கும்போது குழந்தைகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். உடலும், மனமும் சோர்வு இல்லாமல் இருக்கும். கேழ்வரகு சத்தூட்ட உணவாக விளங்குகிறது. இதற்கு ‘ராகி’ என்ற பெயரும் உண்டு.


கேழ்வரகை பயன்படுத்தி சிற்றுண்டி தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு, தேங்காய் துருவல், முருங்கை கீரை, மிளகாய் பொடி, வெங்காயம், சீரகப்பொடி, உப்பு, நல்லெண்ணெய். இவை அனைத்தையும் சேர்த்து பிசைந்து வைக்கவும். பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். பிசைந்து வைத்திருந்த மாவை அடையாக தட்டி போடவும். சிறு தீயில் வைத்து மொரு மொரு பதத்தில் எடுக்கவும்.

இதேபோல், கேழ்வரகு மாவுடன் வெல்லம், ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து இனிப்பு அடை தயாரிக்கலாம். நல்லெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளவும்.   தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த அடையை கொடுத்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சோர்வு இருக்காது. உடல் பலம் பெரும்.எலும்பை பலப்படுத்தும் உளுந்தம் களி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: உளுந்தம் மாவு, வெல்லம், ஏலக்காய், நெய். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

ஏலக்காய் பொடி சேர்க்கவும். வறுத்து பொடி பண்ணி வைத்திருக்கும் உளுந்தம் மாவை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். பின்னர், வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். உளுந்தம் களி பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இடுப்பு எலும்புகள் பலப்படும். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. இட்லி, தோசைக்கு அத்தியாவசிய தேவையாக உளுந்து பயன்படுகிறது.

இதில் புரதம், மினரல் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. மருத்துவ வேதிப்பொருட்களை உள்ளடக்கியது.  அரிசி மாவு, கடலை பருப்பை பயன்படுத்தி ஆரோக்கிய சிற்றுண்டி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி மாவு, வேக வைத்த கடலை பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய், தேன், பால்.புழுங்கல் அரிசியை கரைசலாக எடுத்து கொதிக்க வைக்கவும்.

கட்டியாக மாறும்போது காய்ச்சிய பால் சேர்க்கவும். சிறிது நெய் சேர்த்து கலக்கவும். கடலை பருப்பு, தேங்காய் துருவல், வெல்லம் சேர்க்கவும். ஏலக்காயை தட்டி போடவும். இளகிய பதம் வந்தவுடன் தேன் சேர்க்கவும். இதை தேர்வுக்கு தயாராகும் குழந்தைகள் சாப்பிடும்போது ஆரோக்கியம் கூடும். தேர்வு சமயத்தில் வீட்டிலேயே இதுபோன்ற உணவுகளை செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

நன்றி : தினகரன்

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை : (தினகரன்)


கட்டிகளை ஆற்ற கூடியதும், பித்தத்தை போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டதும், பசியை தூண்டக் கூடியதுமான புளிச்ச கீரையை பற்றி பார்ப்போம்.  புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது.புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.
Image & Article courtesy : Dinakaran.com

புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.புளிச்ச கீரையின் மொட்டுக்களை பயன்படுத்தி வாய் கசப்பு, வாந்திக்கான மருந்து தயாரிக்கலாம்: இதற்கு தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை மொட்டுக்கள், மிளகுப் பொடி, தேன். சுமார் 10 மொட்டுக்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டிய பின் உப்பு, மிளகு, தேன் சேர்த்து கலந்து குடித்தால் தலைசுற்றல் சரியாகும். பித்த வாந்திக்கான மருந்தாகிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த கீரை புளிப்பு சத்தை உடையது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, அரிப்பு, மயக்கம் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. பித்த சமனியாக விளங்குகிறது. புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதய நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. புளிச்ச கீரையை பயன்படுத்தி சூப் தயாரிக்கலாம்: தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை, பட்டை, பூண்டு, வெங்காயம், நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு.

பாத்திரத்தில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன் ஒரு துண்டு பட்டை, 2 பல் பூண்டு தட்டி போடவும். வெங்காயம் வதங்கியவுடன் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி மிளகு பொடி சேர்த்து குடித்துவர உடல்நலம் பெறும். புளிச்ச கீரை உன்னதமான உணவு மற்றும் மருந்தாகிறது. ஊடு பயிராக பயிரிடப்படும் இது வாயு கோளாறுகளை போக்கும். சத்து குறைபாட்டினால் ஏற்படும் எலும்புருக்கி நோயை குணமாக்கும். வாந்தியை நிறுத்த கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக கோளாறுகளை போக்கும். சிறுநீர் பெருக்கியாக உள்ளது.

நன்றி : தினகரன்

Friday, 19 February 2016

எப்போதும் இளமை வேண்டுமா-'கறிவேப்பிலை' (தினகரன் நாளிதழ்)

Image & Article courtesy : Dinakaran.com
கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்.

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

பைத்தியம் தெளிய

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.