Saturday 23 July 2016

varagu recipes

வரகு 

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.
  • வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
  • அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
  • வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்

மருத்துவ பயன்கள்

  • சர்க்கரை அளவை குறைக்கிறது.
  • மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
  • கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
  • நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.

வரகு உப்புமா 

Image courtesy : Dinakaran.com
என்னென்ன தேவை?
வரகு அரிசி - 1/2 கப்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,
கேரட் - சிறிது,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
வரகு அரிசியை கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சைமிளகாய், வெங்காயம், கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். 1 1/2  கப் தண்ணீர் சேர்க்கவும். வரகு அரிசியை தண்ணீர் கொதித்தவுடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து, கடாயை மூடி வேக விடவும். 7-8 நிமிடங்கள் கழித்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். சூடான வரகு உப்புமா தயார்.

வரகு கஞ்சி

Image courtesy : vikatan.com
சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும். பாதி அளவு வெந்ததும், உரித்த பூண்டு பல் 10, ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள, கறிவேப்பிலை துவையல் அருமையாக இருக்கும்

வரகு கொழுக்கட்டை.

தேவையான பொருட்கள்: வரகு அரிசி மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்.
வரகு அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து எடுக்கவும். இதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடலாம். உடலுக்கு சத்துத்துக்களை கொடுக்கும். உடலை தேற்றும். வரகு அரிசி அற்புதமான உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகிறது


source : www.dinakaran.com
www.vikatan.com
Wikipedia
www.dinakaran.com  

No comments:

Post a Comment