Friday 19 August 2016

பள்ளிப்பருவப் பழத்தை மறந்துபோனோமே! : இலந்தை

பள்ளிக்கு வெளியே விற்கப்படும் பழம், அந்தக் காலத்தில் குழந்தைகளால் அதிகம் உண்ணப்பட்ட பழம், இலந்தைப் பழமாகவே இருக்க வேண்டும். அதற்குக் காரணம், அதன் புளிப்பு கலந்த சுவை. 
Image & Article courtesy : தி இந்து
பழங்கள் உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. இவற்றில் வைட்டமின் சி, சர்க்கரைகள், கனிம உப்புகள், கரிம அமிலங்கள், கரோட்டின், தயமின், ரிபோஃபிளேவின், நியாசின், பெக்டின் போன்ற ஊட்டப் பொருட்கள் உள்ளன. பழம் ரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, உடலுக்குக் குளிர்ச்சியளிக்கிறது, வலியை அகற்றுகிறது, மலட்டுத் தன்மையை நீக்குகிறது. 

மருத்துவப் பலன்கள்
இது ஜோஷாண்டா என்ற ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது; இந்த மருந்து மார்புக் கோளாறுகளை நீக்குகிறது. விதையோ குமட்டலை நீக்குகிறது, கருவுற்ற பெண்களின் வயிற்று வலியைப் போக்குகிறது, மயக்கத் தூக்கத்தைத் தாண்டுகிறது, வயிற்றுப் போக்கைத் தடுக்கிறது, கருவுறுதலைத் தடை செய்கிறது (Oral Contraceptive), காயங்களைப் போக்குகிறது. வேர் குளிர்ச்சி ஊட்டுகிறது, கபத்தைப் போக்குகிறது, பித்தத்தையும் தலைவலியையும் நீக்குகிறது. பட்டை பல், ஈறு கோளாறுகளைப் போக்குகிறது. பட்டை வடிநீர் உணவுக்குழாய் கோளாறுகளை நீக்குகிறது. 

இலந்தையின் இலை ஆடு, மாடுகளுக்குச் சிறந்த தீவனமாக அமைகிறது. இதன் மரக்கட்டை வலுவானது, நிலைத்து உழைக்கக் கூடியது; பலவகை மரப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வடஇந்தியாவில் இந்த மரம் அரக்கு உருவாக்கும் (Shellac) பூச்சியின் உறைவிடமாகச் செயல்படுகிறது.
ஒதுக்கப்படும் பழம்
கடந்த காலத்தில் நன்கு போற்றப்பட்ட இந்தத் தாவரம் தற்போது தமிழகத்தில் பரவலாக ஒதுக்கப்பட்டுவருவது கவலையளிக்கிறது. வட இந்தியாவிலிருந்து பெறப்படும் பெரிய வகைப் பழங்கள் ஓரளவுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் சிறிய வகைப் பழங்கள் பெரிதும் ஒதுக்கப்படுகின்றன. நான் அறிந்தவரை இது எந்தப் பழக்கடையிலும், குறிப்பாக நகரக் கடைகளில் விற்கப்படுவதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது, விரும்பி, ருசித்துச் சாப்பிட்ட இலந்தைப் பழம் தற்போது கிராமப்புற, சிறிய நகர்ப்புறப் பள்ளிகளின் நுழைவாயிலுக்கு அருகில் வயதான பெண்களால் கூறுகட்டி விற்கப்படுவதை மட்டுமே காண முடிகிறது. இந்தப் பழத்தைப் பிரபலப்படுத்தத் தகுந்த முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

நன்றி : தி இந்து

No comments:

Post a Comment