Tuesday, 23 February 2016

கேழ்வரகு உருண்டை (தி இந்து நாளிதழ்)

Image & article courtesy :tamil.thehindu.com
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
கடலைப் பருப்பு, உளுந்து - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவோடு அரிசி மாவு, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். அவற்றை இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவைத்து, ஆறவிடுங்கள். பிறகு அவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு ஒரு நிமிடம் வைத்திருந்து, பிறகு தண்ணீரை வடித்துவிடுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் கடலைப் பருப்பு, உளுந்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தேங்காய்த் துருவல், கேழ்வரகு உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். கேழ்வரகில் களி, கூழ் செய்து கொடுத்தால் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட இந்தக் கேழ்வரகு உருண்டைகளை ஒரு பிடி பிடிப்பார்கள். 
நன்றி : தி இந்து நாளிதழ்

No comments:

Post a Comment