Friday, 26 February 2016

தென்னையை தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி?

தண்டு மீது துளைகள்
தென்னையைத் தாக்கும் பூச்சிகளான சிவப்பு கூன் வண்டு மற்றும் கான்டாமிருக வண்டு ஆகியன மரங்களின் மகசூலில் கனிஷமான இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. சிவப்பு கூண் வண்டானது கருஞ்சிவப்பு நிறத்தில் மூக்கு நீண்டு காணப்படும். இவை தாக்கப்பட்ட மரங்களில்(தண்டுபாகத்தில்) துளைகள் காணப்படும். அத்துளைகளின் வாய் பகுதியில் மரச்சக்கைகள் சுருண்டு காணப்படும். அத்துளைகளிலிருந்து சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் திரவம் வடிந்திருக்கும்.

Image courtesy : wikipedia
மரத்தில் காதினை வைத்துக் கேட்டால் வண்டுகளின் புழுக்கள் மரத்திசுவினை உண்ணும் சத்தம் கேட்கும். வண்டு மரத்தின் தண்டினுள் இருந்து திசுக்களை உண்பதால் மரத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் இலைகள் காய்ந்து மரம் இறந்து மரக்கொண்டையானது சாய்ந்துவிடும். இந்த வண்டுகளை கட்டுப்படுத்த தென்னை மரங்களில் பச்சை மட்டையை வெட்டுதல் மற்றும் அரிவாள் போன்ற சாதனங்களால் துளையிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றின் மூலமே வண்டுகள் மரத்தினுள் ஊடுருவுகின்றன. சிவப்பு கூண் வண்டு தாக்கி இறந்த மரங்களை வெட்டி முழுவதுமாக தீயிலிட்டு கொழுத்தி அழித்து விடுவதால் மற்ற மரங்களில் தாக்குதல் தொடர்வதை தவிர்க்கலாம்.


தின்றபின் வெளியே தள்ளப்பட்ட மரநாறுகள்
வேளாண்துறை சார்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிவப்பு கூண் வண்டுக்கான, இனக்கவர்ச்சி பொறி, 50 சதவீத மானிய விலையில், தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஆண் மற்றும் பெண் சிவப்பு கூண் வண்டுகள், தங்களின் எதிர்பாலினங்களை, தமது உடலில் ஒரு வேதிப்பொருளை சுரந்து, வாசனை உண்டாக்கி கவர்கிறது. இத்தகைய வாசனை வேதி பொருள் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அதை இனக்கவர்ச்சி பொறியில் மருந்து பொட்டலமாக வைக்கப்படுகிறது.
இனக்கவர்ச்சி பொறி என்பது, துளையிடப்பட்ட வாளி மற்றும் வாசனை மருந்து பொருளை உள்ளடக்கியது. அத்தகைய பொறியை எக்டருக்கு, 5 பொறி வீதம், அதிக தாக்குதல் உள்ள பகுதிகளில், மருந்துடன் வைத்து, ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.

பொறியில் உள்ள வாளியில், புளிப்பான அன்னாசி பழத்துண்டுகளை சேர்த்து வைத்தால், அதிக பூச்சிகளை கவர முடியும். மருந்தின் வீரியம், 6 மாதத்துக்கு மட்டுமே இருப்பதால், மருந்து பொட்டலத்தை மாற்ற வேண்டும்.


நன்றி : தினமலர்

நன்றி : தினகரன்
Image courtesy : தவேப வேளாண் இணைய தளம்

 

No comments:

Post a Comment