Monday, 29 February 2016

மூலிகைப் பூச்சி விரட்டி

மூலிகைப் பூச்சி விரட்டி: உழவர்கள் காலங்காலமாக கடைப்பிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எல்லாப் பூச்சிகளுமே பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவைகள் இருக்கவே செய்கின்றன. பசுமைப் புரட்சியின் சாதனையாக, மிகவும் விஷத் தன்மை கொண்ட ரசாயன பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்லத் தொடங்கியதும், உணவுப் பண்டங்கள் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து உயரின பன்மைய சுழலில் சமன்பாடு பாதிக்கப்பட்டு தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, அவற்றின் வீரியமும் பன் மடங்கு அதிகரித்தது. இதற்கு மாற்றாக பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மூலிகைப் பூச்சி விரட்டிகளை தயாரித்து பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். மூலிகைப் பூச்சி விரட்டியின் நோக்கம், பூச்சிகளை கொல்வது அல்ல, பூச்சிகளை விரட்டுவதே ஆகும்.
Image & Info courtesy : dinamani


 மூலிகைப் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை: மூலிகைப் பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக்கூடிய செடிகள், இரண்டு, தின்றால் கசக்கக்கூடிய செடிகள், மூன்று, ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் (எடுத்துக்காட்டாக ஆடாதொடா, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக்கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வெட்பாலை, மமரை, ஆவாரை) ஆகியவற்றில் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட செடிகளை எடுத்துக்கொண்டு, உரலில் போட்டு இடித்து, ஒரு மண் பானை, பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு, இலைகள் மூழ்கும் அளவிற்கு மாட்டுக் கோமியம், தண்ணீர் சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்ட கலவையை 15 நாள்கள் வரை நன்றாக மூடி வைக்கட வேண்டும். தயாரித்த 15 நாளில், ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும். பயிரிட்ட 15-ஆம் நாளிலிருந்து (15 நாளுக்கு ஒரு முறை) பூ பூக்கும் வரை தெளிக்கலாம்.

 மூலிகைப் பூச்சி விரட்டி செயல்படும் விதம்: பூச்சிகள் எண்ணிக்கையில் மிகுந்தவை. ஆனால் உயிரினங்களில் இது சிற்றினம். இவை இயல்புத் தூண்டலால் குறிப்பிட்ட செடிகளின் இலையையோ, காயையோ தின்று உயிர் வாழ்கின்றன. இதற்காக இவை இலைகளில் தொட்டுணர்ந்தே செடியை இனம் காணுகின்றன. பல வகை மணம் கொண்ட மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாயப் பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது. இந்தப் பூச்சி விரட்டியுடன் புங்க எண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கும்போது, எண்ணெய் பசை பயிரில் படிந்து இருப்பதால், எந்த ஒரு பூச்சியும் பயிரைத் தாக்காது. மூக்கு வண்டு, புகையான், தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழு, சாறு உறுஞ்சும் பூச்சி, குருத்துப்பூச்சி போன்ற எல்லா வகையான பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். பூச்சி விரட்டியானது, 80 சதவீதம் பூச்சி விரட்டியாகவும், 20 சதம் பயிர் ஊக்கியாகவும் செயல்பட்டு, விளைச்சலை அதிகரிக்கிறது.

நன்றி : தினமணி

Sunday, 28 February 2016

Coconut -- amazing video


fresh coconut!
!Perfect
Posted by Radio Gaza FM 100.9 on Wednesday, 14 October 2015

வறண்ட பூமியில் துளசி

சிவகங்கை அருகே துளசி விவசாயத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதித்து வருகிறார் விவசாயி. வறண்ட பூமியான சிவகங்கையில் சாதாரண துளசி விவசாயத்திலும், சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் விவசாயி மாணிக்கம்.
Image courtesy : wikipedia
சிவகங்கை-மதுரை ரோட்டில் பொன்னாகுளத்தைச் சேர்ந்த இவர், ஒரு ஏக்கரில் துளசி விவசாயம் செய்து உள்ளார். எவ்வித செலவினமும் இன்றி, மாதம் ரூ.30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிறார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் வயல் வரப்புகளில் தானாக வளர்ந்து துளசி செடிகளை அறுத்து விற்பர். இதையே விவசாயமாக செய்து, லாபம் சம்பாதிக்க லாம் என, "தினமலர்' நாளிதழில் படித்தேன். இதற்காக மதுரையில் பயிற்சி வகுப்பிற்கு சென்றேன். இதன் மூலம் தென்னை தோட்டத்திற்குள் துளசி விவசாயம் செய்ய முடிவெடுத்தேன்.

கடந்த 8 மாதத்திற்கு முன், ரூ.300க்கு துளசி வாங்கி நாற்று வளர்த்தேன். ஒரு மாதத்தில் பிடுங்கி நடவு செய்தேன். 8 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் மட்டும் பாய்ச்சுகிறேன்.மருந்து எதுவும் தெளிக்க தேவையில்லை. தற்போது, பலனுக்கு வந்துள்ளது. நிழலில் நன்கு வளரும். தென்னைக்குள் ஊடு பயிராக நடலாம். பகுதி, பகுதியாக தினமும் அறுவடை செய்கிறோம். ஒரு மாதத்திற்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்க முடிகிறது. தற்போது ஒரு கிலோ ரூ.20 வரை விற்கப்படுகிறது. திருமணம், கோவில் சீசனில் கூடுதலாக சம்பாதிக்கலாம். சளி, இருமல், வயிறு கோளாறு, துளசி தைலம், துளசி தேன் தைலம், கோவில் மாலை, துளசி பவுடர் தயாரித்தல் உட்பட பல்வேறு பயன்பாடுக்கு உதவுகிறது. குச்சிப்படாமல் பருவத்தில் அறுவடை செய்தால் ஆண்டுதோறும் பலன் அறுக்கலாம். ஒருமுறை நடவு செய்தால் தொடர்ந்து பலன் எடுக்கும் ஒரே விவசாயம், என்றார்.

நன்றி : தினமலர்

Saturday, 27 February 2016

One Straw Revolution - by Masanobu Fukuoka

Harvesting Fresh Water from Fog

"What a great genius this water is! It has thousands of different beautiful faces: It is a rainbow, an ocean, a lake, an iceberg, a waterfall, a river, a drop, a fog… What a great genius this water is!"

― Mehmet Murat ildan

Friday, 26 February 2016

தென்னையை தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி?

தண்டு மீது துளைகள்
தென்னையைத் தாக்கும் பூச்சிகளான சிவப்பு கூன் வண்டு மற்றும் கான்டாமிருக வண்டு ஆகியன மரங்களின் மகசூலில் கனிஷமான இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. சிவப்பு கூண் வண்டானது கருஞ்சிவப்பு நிறத்தில் மூக்கு நீண்டு காணப்படும். இவை தாக்கப்பட்ட மரங்களில்(தண்டுபாகத்தில்) துளைகள் காணப்படும். அத்துளைகளின் வாய் பகுதியில் மரச்சக்கைகள் சுருண்டு காணப்படும். அத்துளைகளிலிருந்து சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் திரவம் வடிந்திருக்கும்.

Image courtesy : wikipedia
மரத்தில் காதினை வைத்துக் கேட்டால் வண்டுகளின் புழுக்கள் மரத்திசுவினை உண்ணும் சத்தம் கேட்கும். வண்டு மரத்தின் தண்டினுள் இருந்து திசுக்களை உண்பதால் மரத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் இலைகள் காய்ந்து மரம் இறந்து மரக்கொண்டையானது சாய்ந்துவிடும். இந்த வண்டுகளை கட்டுப்படுத்த தென்னை மரங்களில் பச்சை மட்டையை வெட்டுதல் மற்றும் அரிவாள் போன்ற சாதனங்களால் துளையிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றின் மூலமே வண்டுகள் மரத்தினுள் ஊடுருவுகின்றன. சிவப்பு கூண் வண்டு தாக்கி இறந்த மரங்களை வெட்டி முழுவதுமாக தீயிலிட்டு கொழுத்தி அழித்து விடுவதால் மற்ற மரங்களில் தாக்குதல் தொடர்வதை தவிர்க்கலாம்.


தின்றபின் வெளியே தள்ளப்பட்ட மரநாறுகள்
வேளாண்துறை சார்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிவப்பு கூண் வண்டுக்கான, இனக்கவர்ச்சி பொறி, 50 சதவீத மானிய விலையில், தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஆண் மற்றும் பெண் சிவப்பு கூண் வண்டுகள், தங்களின் எதிர்பாலினங்களை, தமது உடலில் ஒரு வேதிப்பொருளை சுரந்து, வாசனை உண்டாக்கி கவர்கிறது. இத்தகைய வாசனை வேதி பொருள் செயற்கையாக உருவாக்கப்பட்டு, அதை இனக்கவர்ச்சி பொறியில் மருந்து பொட்டலமாக வைக்கப்படுகிறது.
இனக்கவர்ச்சி பொறி என்பது, துளையிடப்பட்ட வாளி மற்றும் வாசனை மருந்து பொருளை உள்ளடக்கியது. அத்தகைய பொறியை எக்டருக்கு, 5 பொறி வீதம், அதிக தாக்குதல் உள்ள பகுதிகளில், மருந்துடன் வைத்து, ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.

பொறியில் உள்ள வாளியில், புளிப்பான அன்னாசி பழத்துண்டுகளை சேர்த்து வைத்தால், அதிக பூச்சிகளை கவர முடியும். மருந்தின் வீரியம், 6 மாதத்துக்கு மட்டுமே இருப்பதால், மருந்து பொட்டலத்தை மாற்ற வேண்டும்.


நன்றி : தினமலர்

நன்றி : தினகரன்
Image courtesy : தவேப வேளாண் இணைய தளம்

 

Sadhana Sukumar at the wheels

Sadhana Sukumar at the wheels.

Posted by Sadhana Nature Organic Farm on Friday, 26 February 2016

Jeera Samba by SRI Method @ sadhana


Jeera Samba by SRI Method @ sadhana nature organic farm
Posted by Sadhana Nature Organic Farm on Thursday, 25 February 2016

Thursday, 25 February 2016

தென்னை நார் கழிவுகளை கம்போஸ்ட் உரமாக மாற்றலாம்


தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுத்தலின் போது, மிகப்பெரிய அளவிலான எஞ்சிய நார் கழிவுகள் கிடைக்கின்றன. இவைகள் தென்னை நார் கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன.
Image courtesy : wikipedia
நார் கழிவில் அதிக கார்பன், நைட்ரஜன் மறறும் லிக்னின்  உள்ளதால் அது எளிதாக மக்குவதில்லை. மேலும் அதில் உள்ள சத்துக்கள் பயிர்களுக்கு உடனடியாக கிடைப்பதில்லை.தென்னை நார் கழிவுகளை புளுரோட்டஸ் காளான் வித்துக்கள் கொண்டு மக்க வைப்பதால் எளிதில் மக்கி உரமாக மாற்றப்படுகிறது. இந்த கம்போஸ்ட் உரத்தில் உள்ள சத்துக்கள் பயிர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய வடிவில் உள்ளது

கம்போஸ்ட் உரம் தயாரிக்க 100 கிலோ தென்னை நார்கழிவு 1 டன் புளூரோட்டஸ் காளான்வித்து 1 கிலோ, யூரியா 5 கிலோ எடுத்துக் கொள்ளவேண்டும். முதலில் தென்னை நார்கழிவை 5 மீ. -3 மீ. நீள அகலமுடைய மேடான நிலப்பரப்பில் சமமாக பரப்ப வேண்டும் ( சராசரியாக 4 முழுச்சாக்கு கொள்ளளவு கொண்டது). பின்னர் அதன் மேல் 200 கிராம் புளூரோட்டஸ் காளான் வித்துகளை சீராக பரப்ப வேண்டும். பின் அதன் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்னர் அதன் மேல் 100 கிலோ தென்னை நார்கழிவை பரப்பி ஒரு கிலோ யூரியாவை சீராக தூவ வேண்டும். மீண்டும் அதன் மேல் நன்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். இதேபோல் நார்கழிவு, புளூரோட்டஸ் காளான்  வித்து மற்றும் யூரியா ஆகியவற்றை 10 அடுக்குகள் வரும் வரை (ஒரு மீட்டர் உயரம் வரை) மாற்றி மாற்றி அடுக்கி ஈரம் காயாதவாறு தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 30 நாட்களுக்கு பிறகு இந்த கழிவானது கருப்பு நிறத்தில் மாறும். இதுவே கம்போஸ்ட் உரமாக பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய மிகச்சரியான தருணம் ஆகும். இந்த உரத்தால்  தென்னை நார்கழிவில் உள்ள நார்ப் பொருட்கள் சிதைக்கப்பட்டு எளிதில் பயிருக்கு கிடைக்கும் சத்தாக மாறுகிறது, கரிமம், நைட்ரஜன் ஆகியவற்றின் விகிதாச்சாரம் 112-:1 லிருந்து 21:1 என்ற அளவிற்கு குறைக்கப்படுகிறது. இதனால் நைட்ரஜன் சத்து  என்ற வீணாவது குறைந்த பயிருக்கு பெருமளவில் கிடைக்கிறது, தழைச்சத்தின் அளவு 0.26 சதத்திலிருந்து 1.06 சதமாக அதிகரிக்கிறது, மக்கிய கம்போஸ்டில் நுண் சத்துக்கள், முதன்மைச்சத்துக்கள் மற்றும் இரண்டாம் நிலை சத்துக்கள் அளவு அதிகமாக இருக்கும், இக்கம்போஸ்ட் உரமானது மானாவாரி நிலங்களும், களர் உவர் நிலங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மண்ணின் பௌதீக மற்றும் வேதியல் தன்மைகளை பாதுகாக்கிறது, இந்த உரமானது நிலத்துக்கு சத்துக்கள் அளிப்பதுடன் மண்ணின் நீர்பிடிப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது, ஒரு ஏக்கருக்கு சாதாரணமாக 5 டன் தொழு உரம் இடும் இடத்தில் இக்கம்போஸ்ட் உரத்தினை 2 டன் இட்டாலே தொழு உரத்திற்கு இணையான மகசூலும், விளைபொருட்களின் தரமும், மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் கேடும் தவிர்க்கப்படுகிறது. இந்த உரத்தினை தென்னை மற்றும் அனைத்து சாகுபடி பயிர்களுக்கும்  பயன்படுத்தலாம்.

நன்றி : தினகரன்
நன்றி : மாலைமலர்
நன்றி : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் இணையதளம்.
நன்றி : தினமலர்

Tuesday, 23 February 2016

கேழ்வரகு உருண்டை (தி இந்து நாளிதழ்)

Image & article courtesy :tamil.thehindu.com
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
கடலைப் பருப்பு, உளுந்து - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவோடு அரிசி மாவு, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். அவற்றை இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவைத்து, ஆறவிடுங்கள். பிறகு அவற்றைக் கொதிக்கும் நீரில் போட்டு ஒரு நிமிடம் வைத்திருந்து, பிறகு தண்ணீரை வடித்துவிடுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் கடலைப் பருப்பு, உளுந்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தேங்காய்த் துருவல், கேழ்வரகு உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். கேழ்வரகில் களி, கூழ் செய்து கொடுத்தால் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட இந்தக் கேழ்வரகு உருண்டைகளை ஒரு பிடி பிடிப்பார்கள். 
நன்றி : தி இந்து நாளிதழ்

நார்த்தம் பழம் (தினமலர்)

Image & Article courtesy : Dinamalar


நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்துக்கு, மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.
இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்
பழமே விளங்குகிறது.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.

நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வந்தால், ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு நீங்கும். பசியை அதிகரிக்கும். இதன் சாறு வாந்தியை நிறுத்தும். பசியை தூண்டி விடும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார்த்தை பழத்தின் மேல் தோலை, தேன் அல்லது சர்க்கரை பாகில் ஊற வைத்து, நன்கு ஊறிய பின், சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுத்தால் நல்ல பலன் தரும்.

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன், ரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால், உடல் வலுப்பெறும். ரத்தம் மாசடையும்போது ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற, நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து, தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு, கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும். சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட, வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து, வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால், வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.
நன்றி : தினமலர்

Monday, 22 February 2016

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு (தினகரன்)

Image & Article courtesy : Dinakaran.com
கேழ்வரகு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. அரிசியை விட அதிக சத்துள்ள அற்புதமான உணவு. அரிசி விரைவில் செரிமானம் ஆகும். கேழ்வரகு மெதுவாக செரிமானம் ஆகி சத்துக்களை கொடுக்கும். கேழ்வரகில் இனிப்போ, காரமோ சேர்த்து உணவாக கொடுக்கும்போது குழந்தைகளுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். உடலும், மனமும் சோர்வு இல்லாமல் இருக்கும். கேழ்வரகு சத்தூட்ட உணவாக விளங்குகிறது. இதற்கு ‘ராகி’ என்ற பெயரும் உண்டு.


கேழ்வரகை பயன்படுத்தி சிற்றுண்டி தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு, தேங்காய் துருவல், முருங்கை கீரை, மிளகாய் பொடி, வெங்காயம், சீரகப்பொடி, உப்பு, நல்லெண்ணெய். இவை அனைத்தையும் சேர்த்து பிசைந்து வைக்கவும். பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். பிசைந்து வைத்திருந்த மாவை அடையாக தட்டி போடவும். சிறு தீயில் வைத்து மொரு மொரு பதத்தில் எடுக்கவும்.

இதேபோல், கேழ்வரகு மாவுடன் வெல்லம், ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து இனிப்பு அடை தயாரிக்கலாம். நல்லெண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளவும்.   தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த அடையை கொடுத்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சோர்வு இருக்காது. உடல் பலம் பெரும்.எலும்பை பலப்படுத்தும் உளுந்தம் களி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: உளுந்தம் மாவு, வெல்லம், ஏலக்காய், நெய். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

ஏலக்காய் பொடி சேர்க்கவும். வறுத்து பொடி பண்ணி வைத்திருக்கும் உளுந்தம் மாவை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். பின்னர், வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். உளுந்தம் களி பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இடுப்பு எலும்புகள் பலப்படும். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. இட்லி, தோசைக்கு அத்தியாவசிய தேவையாக உளுந்து பயன்படுகிறது.

இதில் புரதம், மினரல் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. மருத்துவ வேதிப்பொருட்களை உள்ளடக்கியது.  அரிசி மாவு, கடலை பருப்பை பயன்படுத்தி ஆரோக்கிய சிற்றுண்டி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி மாவு, வேக வைத்த கடலை பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய், தேன், பால்.புழுங்கல் அரிசியை கரைசலாக எடுத்து கொதிக்க வைக்கவும்.

கட்டியாக மாறும்போது காய்ச்சிய பால் சேர்க்கவும். சிறிது நெய் சேர்த்து கலக்கவும். கடலை பருப்பு, தேங்காய் துருவல், வெல்லம் சேர்க்கவும். ஏலக்காயை தட்டி போடவும். இளகிய பதம் வந்தவுடன் தேன் சேர்க்கவும். இதை தேர்வுக்கு தயாராகும் குழந்தைகள் சாப்பிடும்போது ஆரோக்கியம் கூடும். தேர்வு சமயத்தில் வீட்டிலேயே இதுபோன்ற உணவுகளை செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

நன்றி : தினகரன்

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை : (தினகரன்)


கட்டிகளை ஆற்ற கூடியதும், பித்தத்தை போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டதும், பசியை தூண்டக் கூடியதுமான புளிச்ச கீரையை பற்றி பார்ப்போம்.  புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது.புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.
Image & Article courtesy : Dinakaran.com

புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.புளிச்ச கீரையின் மொட்டுக்களை பயன்படுத்தி வாய் கசப்பு, வாந்திக்கான மருந்து தயாரிக்கலாம்: இதற்கு தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை மொட்டுக்கள், மிளகுப் பொடி, தேன். சுமார் 10 மொட்டுக்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டிய பின் உப்பு, மிளகு, தேன் சேர்த்து கலந்து குடித்தால் தலைசுற்றல் சரியாகும். பித்த வாந்திக்கான மருந்தாகிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த கீரை புளிப்பு சத்தை உடையது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, அரிப்பு, மயக்கம் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. பித்த சமனியாக விளங்குகிறது. புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதய நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. புளிச்ச கீரையை பயன்படுத்தி சூப் தயாரிக்கலாம்: தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை, பட்டை, பூண்டு, வெங்காயம், நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு.

பாத்திரத்தில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன் ஒரு துண்டு பட்டை, 2 பல் பூண்டு தட்டி போடவும். வெங்காயம் வதங்கியவுடன் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி மிளகு பொடி சேர்த்து குடித்துவர உடல்நலம் பெறும். புளிச்ச கீரை உன்னதமான உணவு மற்றும் மருந்தாகிறது. ஊடு பயிராக பயிரிடப்படும் இது வாயு கோளாறுகளை போக்கும். சத்து குறைபாட்டினால் ஏற்படும் எலும்புருக்கி நோயை குணமாக்கும். வாந்தியை நிறுத்த கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக கோளாறுகளை போக்கும். சிறுநீர் பெருக்கியாக உள்ளது.

நன்றி : தினகரன்

பழம்பெருமை மிக்க தாமிரபரணி (தினதந்தி)

ஆதிகாலத்தில் மனிதன் ஆற்றுப்படுகைகளையே தனது இருப்பிடமாக ஆக்கிக்கொண்டான். காரணம், அது தான் அவனது வாழ்வாதாரத்துக்கு வேண்டிய அனைத்தையும் வாரி வழங்கியது. மேலும் ஆற்றுப்படுகைகளின் பரந்த பூமி, அவனுக்கு பாதுகாப்பானதாகவும் இருந்தது. இதே அடிப்படையில்தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் நாகரிகமும், ஆற்றுப்படுகையான தாமிரபரணி நதிக்கரையில் கருக்கொண்டது.
Image & Article courtesy :dailythanthi.com
தாமிரபரணி ஆறு, பல்வேறு சிறப்புகளைத் தாங்கி, பல ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வற்றாத ஜீவநதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆற்றின் பிறப்பிடம், மேற்குத் தொடர்ச்சி மலை மீது முண்டந்துறை காட்டுப்பகுதியில் உள்ள பூங்குளம் என்ற இடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1,725 மீட்டர் உயரத்தில் பிறந்து, வங்கக்கடலை நோக்கி ஓடி வரும் தாமிரபரணி, வழியில் பல நதிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு வந்து, புன்னக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் சங்கமம் ஆகிறது. அடர்ந்த காட்டுப் பகுதியான முண்டந்துறையில் பல ஆயிரம் ஆண்டுகளாக படிந்து இருக்கும் செடி, கொடிகளின் எச்சங்களும், மண்ணும் பஞ்சு மெத்தை போன்ற அமைப்பைப் பெற்று இருப்பதால், தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அங்கு பெய்யும் மழை நீர் முழுவதையும் அந்த இடம் அப்படியே உள்வாங்கிக் கொண்டு, மழை அல்லாத காலங்களில் சிறுகச் சிறுக வெளிவிடும் போது அது, தாமிரபரணி ஆறாக உருவாகி, ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடி வருகிறது.

தமிழ் நாட்டிலேயே உருவாகி, தமிழ் நாட்டிலேயே கடலில் கலக்கிறது என்ற பெருமை பெற்ற ஒரே நதி தாமிரபரணி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் இந்த நதி, திருநெல்வேலி மாவட்டத்தில் 60 சதவீதம் அளவிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 சதவீதம் அளவிலுமாக மொத்தம் 125 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, தனது ஓட்டத்தை அந்த இரு மாவட்டங்களுக்குள் அடக்கிக் கொள்கிறது. தாமிரபரணியின் புகழ் வரலாறு, பல பக்கங்களைக் கொண்டது. ‘தாமிரபரணி மகாத்மியம்’ என்று தனியாக ஒரு நூல் உருவாகும் அளவுக்கு அதன் பெருமைகள் ஏராளமாக நிரம்பிக் கிடக்கின்றன.தாமிரபரணியின் பிறப்பிடம், அமைந்துள்ள மலை மீது அமர்ந்துதான் அகஸ்திய முனிவர் தமிழ் மொழியை உருவாக்கினார் என்று புராணங் கள் கூறுகின்றன.இப்போது உள்ளது போன்ற தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணி ஆற்றின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதே அந்த நதியின் பெருமைக்கு தக்க சான்றாக இருக்கிறது.

மகாபாரத இதிகாசம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.அந்த மகாபாரதத்திலேயே தாமிரபரணியின் புகழ் பாடப்பட்டு இருக்கிறது. பாண்டவர்களில் ஒருவரான தர்மர், வனவாசத்தின் போது வசிப்பதற்கு ஏற்ற இடத்தைக் கூறும்படி தவும்யர் என்ற முனிவரிடம் கேட்கிறார். முனிவர் தவும்யர், பல இடங்களைப் பற்றி விரிவாகச் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு கூறுகிறார்– ‘‘குந்தியின் புதல்வனே! தாமிரபரணியைப் பற்றிச் சொல்வேன், அதனைக் கேள்! மோட்ச பலனை விரும்புகிற தேவர்களால் எந்த இடத்தில் ஆசிரமத்தில் தவம் செய்யப்பட்டதோ, கோகர்ணம் என்று மூவுலகிலும் பிரசித்தி பெற்ற அந்த தாமிரபரணி என்ற ஷேத்திரம் இருக்கிறது. அவ்விடத்தில் குளிர்ந்த ஜலமுள்ளதும், அதிக ஜலமுள்ளதும், புண்ணியமானதும், மங்களகரமானதும், மனதை அடக்காத மனிதர்களால் அடைய மிக அரியதுமான மடு இருக்கிறது. அந்த இடத்தில் உள்ள தேவசஹம் என்கிற மலையில் மரங்களாலும், புல் முதலியவைகளாலும் நிறைந்தும், கனிகளும் கிழங்குகளும் உள்ளதும், புண்ணியதுமான அகஸ்தியருடைய ஆசிரமம் இருக்கிறது’’.இவ்வாறு தாமிரபரணி குறித்தும், அது உருவாகும் மேற்குத் தொடர்ச்சி மலை குறித்தும், மகாபாரதத்தில் கூறப்பட்டு இருப்பதால், அந்தக்காலத்திலேயே தாமிரபரணி நதியின் புகழ், இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்பதைத்தெரிந்து கொள்ளலாம்.

 இந்துக்களின் புனித நூலான வேதம், எழுதிவைக்கப்படாமலேயே, வாயால் மட்டும் ஓதப்பட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாக நீடித்து வருகிறது. எழுதிவைத்துப் படித்தால், உச்சரிப்பும் அதனால் ஏற்படும் ஒலியும் மாறுபடலாம் என்ற அச்சத்தால், அதனை எழுதி வைக்காமல் மனப்பாடம் செய்து ஓதியதோடு, அதை ஒருவர் மற்றொருவருக்கு அப்படியே கற்றுக் கொடுத்தனர்.வேதத்தின் உயிர் நாடியே அதை ஓதும்போது ஏற்படும் ஒலி தான் என்பதாலேயே அதனை எழுத்தில் பதியவில்லை.இதன் காரணமாகவே வேதத்தை ‘எழுதாக்கிளவி’ என்று தமிழில் அழகாகக் கூறுவது உண்டு. வேதம் ஏராளமான சுலோகங்களைக் கொண்டது. அவ்வளவையும் ஒருவரே படித்து மனப்பாடம் செய்வது என்பது கலிகாலத்தில் இயலாதது என்பதால், முனிவர் வியாசர், வேதத்தை யஜுர், சுக்ல, அதர்வண, சாம என்று நான்காக பிரித்துக் கொடுத்தார்.இதையும் மக்கள் புரிந்துகொள்வது சிரமம் என்பதால், வேதத்தின் முழு சாரம்சத்தையும் தொகுத்து ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்ற பெயரில் எளிய சுலோகங்களால் ஆக்கித் தந்து இருக்கிறார், முனிவர் வியாசர்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தி இயற்றப்பட்ட, பெருமை மிகு ஸ்ரீமத் பாகவதத்திலும் தாமிரபரணி ஆறு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோறாவது காண்டம், ஐந்தாவது அத்தியாயம், முப்பத்தி எட்டாவது சுலோகத்தில் முனிவர் நாரதர், நிமிச் சக்கரவர்த்தியிடம் ‘‘இந்த கலியுகத்தில் பல நாராயண பக்தர்கள் இருப்பார்கள். இந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தோன்று வார்கள். என்றாலும், குறிப்பாக தென்இந்தியாவில் அநேகம் பேர் தோன்றுவார்கள். இந்த கலியுகத்தில் திராவிட தேசத்து புண்ணிய நதிகளான தாம்ரபரணி, கிருதமாலா, யஸ்வினி, மிகவும் புண்ணியம் வாய்ந்த காவேரி மற்றும் பிரதீசி, மகாநதி ஆகிய நதிகளின் நீர்களைப் பருகுபவர்கள், கிட்டத்தட்ட பரமபுருஷராகிய வாசுதேவரின் தூய இருதயம் படைத்த பக்தர்களாக இருப்பார்கள்’’. இவ்வாறு ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டு இருக்கிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக்கு இந்த விவகாரம் நேரடியாக தொடர்பு உடையது அல்ல என்றாலும், தாமிரபரணி நதி நாகரிகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்ற அதன் கால வரலாற்றை மெய்ப்பிக்க, தாமிர பரணி நதி பற்றிய குறிப்பு காணப்பட்ட மகாபாரதத்தின் காலம் என்ன என்பதை இங்கே சற்றுப் பார்க்கலாம். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் எப்போது எழுதப்பட்டன என்பதற்கு ஆதார பூர்வமான தகவல் கிடைக்கவில்லை என்றாலும், அந்த இதிகாசங்களில் காணப்படும் நட்சத்திர வரிசைகள், எந்தக் காலத்தில் அவ்வாறு இருந்து இருக்கும் என்ற வானவியல் ஆராய்ச்சி மூலம் அவற்றின் காலத்தை நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். ‘‘ராமாயண கதாநாயகன் ராமர் பிறந்தது கி.மு.5114, ஜனவரி மாதம் (அப்போது ஆங்கில மாத பெயர் இல்லை என்றாலும் இப்போதைய கணக்குப்படி மாதத்தின் பெயர் சொல்லப்படுகிறது) 10–ந் தேதி பகல் மணி 12.05. என்றும், குருஷேத்திரத்தில் மகாபாரத யுத்தம் கி.மு.3139 அக்டோபர் 13–ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றது’’ என்றும் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கலாசார மாநாடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேதிகள் சரியானதுதானா என்ற வினா தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனாலும், மகாபாரத இதிகாசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதிலும், அந்தக் காலத்திலேயே தாமிரபரணி ஆறு புகழ் பெற்று விளங்கியதால் தான் மகாபாரதத்தில் அது பற்றி பேசப்பட்டு இருக்கிறது என்பதிலும் சிறிதும் சந்தேகம் இல்லை.பழங்கால தமிழ் இலக்கியங்களில் ‘பொருநை’ என்ற பெயரில், தாமிரபரணி ஆற்றின் புகழ் பல இடங்களில் பாடப்பட்டு இருக்கிறது.மாமன்னர் அசோகரின் பாறைக் கல்வெட்டுக்களிலும் தாமிரபரணி ஆறு இடம்பிடித்து இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டினர் பலர், இந்தியாவின் புகழ் மிக்க வரலாறு பற்றிக் கேள்விப்பட்டு, அதனை நேரில் பார்க்க இங்கே வந்து சுற்றுப்பயணம் செய்து, தாங்கள் கண்டவற்றை ஆவணமாகப் பதிவு செய்து இருக்கிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் கி.மு. 5–ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹொரோட்டஸ், பிளினி ஆகியோரின் குறிப்புகளிலும் தாமிரபரணி கூறப்படுகிறது.கி.பி. 5–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிளாடியஸ் தாலமி, தனது ‘ஜியாக்ரபி’ என்ற புத்தகத்தின் 7–ம் பாகம் முதல் அத்தியாயத்தில் தாமிரபரணி ஆறு பற்றியும், கொற்கை நகர் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்.தாமிரபரணி ஆறும், அந்த நதிக்கரையில் இருந்த புகழ்மிக்க நாகரிகமும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இவைபோல ஏராளம் இருக்கின்றன.

நன்றி : தினதந்தி

Sunday, 21 February 2016

Mini harvester (Facebook video)


#USEFUL TO FARMERS (small scale fields )
#USEFUL TO FARMERS (small scale fields ) #MINI combine harvester for #Both rice and wheat.Three #combined functions:Harvest ----Threshing----Pack grains of rice or wheat into #bag.It is efficient and useful for #small scale field, #mountain and hill areas.#Not good to harvest in big field.
Posted by My farming style on Sunday, 21 February 2016

Vermi wash

Image & Info courtesy : vknardep.org
Vermiwash is a liquid that is collected after the passage of water through a column of worm action and is very useful as a foliar spray. It is a collection of excretory products and mucus secretion of earthworms along with micronutrients from the soil organic molecules. These are transported to the leaf, shoots and other parts of the plants in the natural ecosystem. Vermiwash, if collected properly, is a clear and transparent, pale yellow coloured fluid.

The basic principle of Vermi wash preparation is simple. Worm worked soils have burrows formed by the earthworms. Bacteria richly inhabit these burrows, also called as the drilospheres. Water passing through these passages washes the nutrients from these burrows to the roots to be absorbed by the plants. This principle is applied in the preparation of vermiwash. Vermiwash can be produced by allowing water to percolate through the tunnels made by the earthworms on the coconut leaf - cow dung substrate kept in a plastic barrel. Water is allowed to fall drop by drop from a pot hung above the barrel into the vermicomposting system. But barrels are not a must for Vermi wash preparation. Vermiwash units can be set up either in barrels or in buckets or even in small earthen pots.


source

Friday, 19 February 2016

எப்போதும் இளமை வேண்டுமா-'கறிவேப்பிலை' (தினகரன் நாளிதழ்)

Image & Article courtesy : Dinakaran.com
கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்.

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

பைத்தியம் தெளிய

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.

Thursday, 18 February 2016

மண் இல்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி : சாதிக்கும் பெண் விவசாயி (தினமலர் நாளிதழ் கட்டுரை)

Image & Article courtesy : Dinamalar
மண் இல்லாமல் விவசாயமே இல்லை. ஆனால் தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த பெண் விவசாயி வி.மணிமாலா, மண் இல்லாமல் தீவன வளர்ப்பு என்ற நவீன முறையில் ஆடு, மாடுகளுக்கான தீவனங்களை விளைவித்து வருகிறார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாய ஆர்வலர்கள் வந்து இவரது தீவனவளர்ப்பு கூடத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

இவரது மாட்டுக்கொட்டகையில் 10 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட ஒரு அறை உள்ளது. இந்த அறையின் மேல் பகுதி பச்சைவலையால் மூடப்பட்டுள்ளது. அறைக்குள் வெளிச்சம் வரும் வகையில் பாலிதீன் ஷீட்டால் பக்கவாட்டு பகுதிகள் மூடப்பட்டுள்ளது. அறைக்குள் சிறிதளவு மட்டும் வெளிச்சம் வருகிறது. தரையின் அடித்தளத்தில் முக்கால் அடி உயரத்திற்கு மணல் பரப்பி உள்ளார். ஒரு அடி நீளம், ஒன்றரை அடி அகலம், 3 இன்ச் உயரம் கொண்ட 60 "பிளாஸ்டிக் டிரே' களை வைக்கும் அளவிற்கு "ரேக்' அமைத்துள்ளார்.
இந்த டிரேக்களின் அடிப்பகுதியில் மிகச்சிறிய அளவிலான 12 துவாரங்கள் உள்ளன. டிரேக்களில் தெளிக்கப்படும் தண்ணீர் வெளியேற இந்த ஏற்பாடு.

ஒரு மணி நேரத்திற்கு இரண்டு நிமிடம் வீதம் 60 டிரேக்களிலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தானியங்கி சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. அறைக்குள் 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் காக்கப்படுகிறது. காற்றின் ஈரப்பதம் 80 முதல் 85 சதவீதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு டிரேயிலும் 350 கிராம் விதைகளை போடவேண்டும். இதற்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதனை ஈரத்துணியில் 24 மணி நேரம் கட்டி வைக்கவேண்டும். இந்த விதைகள் ஒரு வாரத்தில் 15 செ.மீ., உயரம் வளர்ந்து விடுகிறது. வேர்கள் அடிப்பகுதியில் பின்னிப்பிணைந்து வெள்ளை மெத்தை போல் அழகாக காணப்படுகிறது.
இந்த முறையில் மட்டுமே விதை, இலை, வேருடன் எடுத்து ஆடு, மாடுகளுக்கு கொடுக்கலாம். இம்முறையில் மக்காச்சோளம், சோளம், கோதுமை, பார்லி விதைகள் வளர்க்கப்படுகின்றன. பசுக்கள், ஆடுகள் வளர்ப்பவர்கள் பசுமை கூடாரம் (பாலி ஹவுஸ்) அமைத்தும் வளர்க்கலாம்.

விவசாயி வி.மணிமாலா கூறியதாவது: சராசரியாக மண்ணில் ஒரு கிலோ பச்சை புல் விளைவிக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டும். பல நூறு லிட்டர் தண்ணீர் செலவிட வேண்டும். நான் பயன்படுத்தும் மண் இல்லா மாட்டுத்தீவன வளர்ப்பு முறையில் தினமும் 20 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்துகிறேன்.

பூச்சிகொல்லிகள், ரசாயன உப்புக்கள், களைக்கொல்லிகள் பயன்படுத்துவதில்லை. தினமும் 30 கிலோ விளைச்சல் எடுக்கிறேன். ஒரு கிலோ விதையில் ஏழே நாளில் 8 கிலோ அறுவடை செய்கிறேன். இந்த முறையின் மூலம் ஆண்டு முழுவதும் சீரான பசுந்தீவனம் கால்நடைகளுக்கு தரலாம். மக்காச்சோளத்தை மாவாக்கி போடுவதை விட முளைக்க வைத்து போடுவது மேலானது. இதன் மூலம் வைட்டமின், மினரல், என்சைம்கள் அதிகரிக்கும். முளைகட்டிய இந்த தீவனத்தில் சாதாரணமாக விளையும் தீவனத்தை விட பல மடங்கு அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் மாடு, ஆடுகள் நல்ல ஊக்கத்துடன் வளர்கின்றன, என்றார்.

Wednesday, 17 February 2016

தும்பைப் பூ : தினகரன் நாளிதழ்

Image & Info courtesy : Dinakarn Daily
தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

வாழைத் தண்டு (Banana Stem) : தினகரன் (நாளிதழ்)

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல்&கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

Banana stem

Tuesday, 16 February 2016

சிறுதானிய சமையல் (விகடன்) : கலவை தானியக் கூழ்

தேவையானவை:
கம்பு - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
மோர் - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
Image & article courtesy : Vikatan.com

செய்முறை:
கம்பு, கேழ்வரகை தனித்தனியாக வறுத்து, ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைக்கவும். மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கரண்டி மாவை தண்ணீர்விட்டு கரைத்து, கொதிக்க வைக்கவும், நன்கு வெந்த பின் இறக்கி, ஆற விடவும். மோர், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலக்கி, கூழ் ஆக பரிமாறவும்.

சிறுதானிய சமையல் (விகடன்) : தினைப் பாயசம்

தேவையானவை:
தினை அரிசி - 1 கப்
பனை வெல்லம் - 3/4   கப் 
பால் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 5
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - 5
நெய் - 2 தேக்கரண்டி


Image & article courtesy : Vikatan.com

 செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர்விட்டு அதில் தினையைச்  சேர்த்து நன்றாக வேக வைக்கவும். அரிசி நன்றாக வெந்த பின், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் அதை வேகவிட்டு, பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, அதில் சேர்க்கவும். கடைசியாக, ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது,  ஏலக்காய்த் தூள் போட்டு இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

Monday, 15 February 2016

புரதச்சத்து மிக்க உலர்தீவனம் நிலக்கடலை செடி (தினமலர் நாளிதழ் 20 Dec 15)

கோவை: உலர் தீவனங்களில், புரதச்சத்துக்கள் நிரம்பிய, நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு கொடுப்பதால், சத்துக்கள் கிடைப்பதோடு, தீவனங்கள் வாங்க செலவாகும் பெருந்தொகையை குறைக்கலாம் என, கால்நடைத்துறை பரிந்துரைத்துள்ளது.


Image courtesy : wikipedia
கால்நடைகள், உலர் தீவனங்களை விரும்பி சாப்பிடாது. இதில், குறைந்த புரதச்சத்துகள் இருப்பதோடு, எளிதில் செரிப்பதால், பால் உற்பத்தி குறைவதோடு, உடல் வளர்ச்சி தாமதப்படும். இதற்காக, அதிக விலை கொடுத்து, அடர் தீவனங்கள் வாங்க வேண்டியிருக்கும். பாலின் விலை அதிகமாவதற்கு, தீவனச் செலவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், உலர் தீவனங்களின் சத்துக்களை தரம் காணும் சோதனை நடத்தப்பட்டது. இதில், மற்ற வகை தீவனங்களை காட்டிலும், கடலைச்செடியில், புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் நிரம்பி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடை பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'கடலையை பிரித்தெடுத்த பின் சேகரமாகும் செடியை, காலை, மாலை வேளைகளில் உலர்த்தி, ஈரமில்லா இடத்தில் வைப்பது நல்லது. ஏனெனில், ஈரப்பதம் இருப்பின், எளிதில் காளான் நச்சு தொற்று, செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். இதை, நிலங்களில் பயிரிட்ட விவசாயிகள், தங்களது கால்நடை களுக்கு பிரத்யேகமாக உலர் தீவனங்களை, விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை. கொட்டில் முறையில் வளர்க்கும் ஆடுகளுக்கு, எவ்வித அடர்தீவனமும் கொடுக்காமல், நிலக்கடலை செடியை கொடுத்தே, ஆரோக்கியமாக வளர்க்க முடியும்,'' என்றார்.

Saturday, 13 February 2016

Benefits of banana leaf (Dinakaran Daily Article)

Image courtesy : http://www.dinakaran.com
வெப்ப மண்டல நாடுகளில் வாழ்பவர்களுக்கு இயற்கை கொடுத்த கொடை என்று நாம் வாழையைச் சொல்லலாம். வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள். வீட்டு விழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாழைக்கன்று மற்றும் வாழைக்கம்பங்களை நடுவதில் தொடங்கி, விருந்து பரிமாற வாழை இலையைப் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குப் பின்பும் மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன. விழாக்களில் விருந்தினருக்கு உணவு பரிமாற வாழை இலையைத்தான் இன்றளவிலும் பயன்படுத்தி வருகிறோம். வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு மட்டுமல்ல... சூழலியலுக்கும் நல்லது என்கிறார் சித்த மருத்துவர் மருதமலை ஆர்.சுப்ரமணியம்.

‘‘உணவுச் சங்கிலியில் முதல் உணவே இலைகள்தான். எல்லாத் தாவரங்களும் இலைகளை உடையவை. இலைகள் உயிரினங்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஆற்றலை உள்வாங்கி அதனை உயிராற்றலாகவும் உணவாகவும் மாற்றுகிறது. அனைத்து எரிபொருட்களுக்கும் இலைகள்தான் மூலப்பொருளாக இருக்கிறது.நமது முன்னோர் உணவு பரிமாறு வதற்கு வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அது பெரிதாக இருக்கிறது என்பது மட்டுமல்ல... வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது.

இதனால் செல்  சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய்  மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன. வாழை இலையில் இருக்கும் Polyphenol, செல்களில் உள்ள டிஎன்.ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து  பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள Polyphenol சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.

அழுகி விடாது. வாழை இலை வெளியிடும் ஆக்சிஜன் அந்தப் பொருட்களுக்கும் கிடைப்பதால் அவை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். வாழை இலையின் குளிர்ச்சி உணவை சீக்கிரம் ஆற வைத்து விடும். இயற்கை மருத்துவத்தில் வாழை இலையை  சூரியக் குளியலுக்கு பயன்படுத்துகிறோம். சுவாசிப்பதற்கான துவாரம் விட்டு உடல் முழுவதும் வாழை இலையை வைத்துக் கட்டி வெயிலில் படுக்க வைத்து விடுவோம். வெயில் இலை வழியாக உள்ளே  வந்து வியர்வையை உண்டாக்கும்.

இதனை சூரிய ஒளி இலைக்குளியல் என்போம். இதனால் சரும நோய்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவு பெறும், செரிமான சக்தி அதிகரிக்கும். மேலும் வியர்வைத் துவாரங்கள் திறந்து  கொள்வதால் நுரையீரலின் மூச்சு விடும் சக்தி அதிகரிக்கிறது. இதனால் மிகுந்த  புத்துணர்ச்சி ஏற்படும். வைட்டமின் டி சத்து பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சூரிய ஒளி இலைக்குளியல் ஆகச்சிறந்த  மருத்துவம்.

தீக்காயங்களுக்கு ஆளானவர்களை வாழை இலையில்தான் படுக்க வைப்பார்கள். வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், சீக்கிரம் காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது. வாழை இலை சருமத்தில் ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து.

சரும அரிப்பு, பூச்சிக்கடி ஆகியவற்றுக்கும் வாழை இலை மருந்தாகப் பயன்படுகிறது. கல்லீரல்தான் நமது உடலின் ரசாயனத் தொழிற்சாலையாக செயல்படுகிறது. வாழை இலை கல்லீரலுக்கு உகந்தது. கல்லீரலைத் தாக்கக்கூடிய நோய் மஞ்சள் காமாலை. வாழை இலையை அரைத்து அதை மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறோம்.

வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதோடு மட்டுமே நின்று விடவில்லை. சாப்பிட்டு முடித்த பின் வாழை இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது. ஆகவே, வாழை இலையில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைக்கு பெரும்பாலான உணவகங்களில் பாலிதீன் தாளில்தான் உணவு பரிமாறுகிறார்கள். சூடான உணவை அதில் பரிமாறும்போது அதன் நச்சு உணவில் கலந்து கேடு விளைவிப்பதோடு, அது மக்காமல் சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்தும்.

யானைக்கு சில மருந்துகள் கொடுக்கும்போது வாழை இலையில் வைத்துதான் கொடுப்பார்கள். சில வகை உணவுப் பொருட்களை நீராவியில் வேக வைக்க வாழை இலையில் சுருட்டிதான் வேக வைப்பார்கள். இப்படியாக நமது உணவுப் பழக்கத்தில் வாழை இலை மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. திருவிழா மற்றும் வீட்டு விசேஷங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்பதால்தான், வாழைக்கம்பங்களை நட்டு வைக்கிறோம்.

இப்படி பார்க்கும்போது நமது பண்பாட்டில் வாழைக்கு முக்கியமான இடம் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு  நுட்பமாக  ஆராய்ந்து இதனை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதையும் உணர முடியும்’’ என்கிறார் சுப்ரமணியம்.

Courtesy : Dinakaran Daily

கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம் (தினமணி நாளிதழ்)

கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்:

மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி, ஆய்வகத் தலைவருமான பேராசிரியர் ந.புண்ணியகோடி தெரிவித்தார்.   
மடிவீக்க நோய்: கறவை மாடுகளில் மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமித் தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும் கடினத் தன்மையுடனும் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது ரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாட்டுக்குத் தேவைப்படும் மூலிகை, மருத்துவப் பொருள்களாக 250 கிராம சோற்றுக் கற்றாழை, 50 கிராம் மஞ்சள் பொடி, 15 கிராம் அதாவது ஒரு கொட்டைப் பாக்கு அளவு சுண்ணாம்பு ஆகியவை தேவைப்படும்.
 மேற்கண்ட பொருள்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டுக் கரைத்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை மடிவீக்கம் குறையும் வரை குறைந்தது 5 நாள்களுக்குப் பூச வேண்டும். தினமும் புதிதாக மருந்து தயாரித்துக் கொள்ள வேண்டும். 
 வயிறு உப்புசம்: கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளால் ஏற்படக்கூடியது. இது மிக அதிகமான எளிதில் செரிக்கக்கூடிய தானிய வகை உணவு, ஈரமான பசுந்தீவனங்களை உண்பதால் ஏற்படுகிறது.  இதைத் தவிர்க்க ஒரு மாட்டுக்கு வெற்றிலை 10 எண்ணிக்கை, பூண்டு 5 பல், பிரண்டை 10 எண்ணிக்கை, மிளகு 10 எண்ணிக்கை, வெங்காயம் 5 பல், சின்னசீரகம் 10 கிராம், இஞ்சி 100 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சிகிச்சை வாய்வழியாக இருக்க வேண்டும். சின்னசீரகம், மிளகை இடித்து, பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து அக்கலவையை 100 கிராம் பனை வெல்லத்துடன் கலந்தபின் சிறுசிறு உருண்டைகளாக பிரித்து, கல் உப்பு தொட்டு மாட்டினுடைய நாக்கின் மேல் அழுத்தமாகத் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.
 

 கழிச்சல்: நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு காணப்படும். வால், பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச் சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகள் மாடுகள் சோர்ந்து காணப்படும். இதை சரிப்படுத்த ஒரு மாடுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு சின்ன சீரகம் 10 கிராம், கசகசா 10 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 எண்ணிக்கை, மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து அடுத்து நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.
 இவ்வாறு சிகிச்சை முறைகளை தெரிவித்துள்ள பேராசிரியர் ந.புண்ணியகோடி அவ்வப்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சிறப்புக் கால்நடை முகாம்களில் முதல் உதவி மூலிகை மருத்துவம் குறித்து தொடர்ந்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு விளக்கி வருகிறார்.

Success story of software engineer to farmer - Pasumai Vikatan

விவசாயத்துலயும் அதிகளவு வருமானம் எடுக்க முடியுங்கிறதை ‘பசுமை விகடன்’ல படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் வேலையில் இருந்து விலகி விவசாயத்துக்கே வந்தேன். நானும் வெற்றிகரமா விவசாயம் செய்துக்கிட்டு இருக்கேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார், ‘சாஃப்ட்வேர்’ என்று ஆங்கிலத்தில் விளிக்கப்படும் மென்பொருள் துறை வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் கால் பதித்திருக்கும் சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் எனும் கிராமத்தில் இருக்கிறது, பார்த்தசாரதியின் பண்ணை. ஒரு முற்பகல்வேளையில் அங்கே அவரைச் சந்தித்தோம்.


for more info Please follow this link --> Link to original article 

Drawbacks of Using Composts

Agricultural use of composts remains low for several reasons:
  • The product is weighty and bulky, making it expensive to transport. 
     
  • The nutrient value of compost is low compared with that of chemical fertilizers, and the rate of nutrient release is slow so that it cannot usually meet the nutrient requirement of crops in a short time, thus resulting in some nutrient deficiency 
     
  • The nutrient composition of compost is highly variable compared to chemical fertilizers. 
     
  • Agricultural users might have concerns regarding potential levels of heavy metals and other possible contaminants in compost, particularly mixed municipal solid wastes. The potential for contamination becomes an important issue when compost is used on food crops. 
     
  • Long-term and/or heavy application of composts to agricultural soils has been found to result in salt, nutrient, or heavy metal accumulation and may adversely affect plant growth, soil organisms, water quality, and animal and human health 
     
    source : http://agritech.tnau.ac.in/

Wednesday, 10 February 2016

Advantages of Composting

Advantages of Composting



Volume reduction of waste. 

Final weight of compost is very less. 

Composting temperature kill pathogen, weed seeds and seeds. 

Matured compost comes into equilibrium with the soil. 

During composting number of wastes from several sources are blended together. 

Excellent soil conditioner 

Saleable product.

Improves manure  handling 

Reduces the risk of pollution 

Pathogen reduction 

Additional revenue.

Suppress plant diseases and pests.

Reduce or eliminate the need for chemical fertilizers.

Promote higher yields of agricultural crops.


Facilitate reforestation, wetlands restoration, and habitat revitalization efforts by amending contaminated, compacted, and marginal soils.

Cost-effectively remediate soils contaminated by hazardous waste.

Remove solids, oil, grease, and heavy metals from stormwater runoff.

Capture and destroy 99.6 percent of industrial volatile organic chemicals (VOCs) in contaminated air.

Provide cost savings of at least 50 percent over conventional soil, water, and air pollution remediation technologies, where applicable.

courtesy : tnau.ac.in

Sunday, 7 February 2016

இயற்கையை வியாபாரம் ஆக்காதீர்கள்! - ‘மண்புழு நண்பன்' சுல்தான் இஸ்மாயில் நேர்காணல் (தி இந்து நாளிதழ்)

மண்புழு என்றால் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதை மாற்றி மண்புழுக்களின் மீது மக்களுக்கு மரியாதை பிறக்கச் செய்த மனிதர் அவர். "நான் இருக்கும் வரை மண்புழுக்களுக்கு இடையே எனது வாழ்க்கை. நான் இறந்த பிறகு என் மீது மண்புழுக்களின் வாழ்க்கை!" - இதுவே, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறும் எளிய வாழ்க்கைத் தத்துவம்.
இந்தியாவில் 80-களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு 'வெர்மிடெக்' என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கும். மண்புழுக்களைக் கொண்டு உரம் தயாரிக்கிற பேராசிரியருடைய கண்டுபிடிப்பு, இந்திய விவசாயத்தில் மிக முக்கியமான புரட்சி. 'உலகச் சுற்றுச்சூழல் நாளை' ஒட்டி அவரை சந்தித்து உரையாடியதில் இருந்து...
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் உடனே புலி, யானை போன்ற பெரிய உயிரினங்களைப் பாதுகாப்பதுதான் என்று தவறாக நினைத்துக்கொள்கிற நிலையே இருக்கிறது. உங்கள் பார்வை என்ன?
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உயிரினங்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு சிந்தனை மக்களிடையே தோன்றியிருக்கிறது. ஆனால் உண்மை அப்படியில்லை. காடுகள், மண் வளம், நீர் வளம், பறவைகள், பூச்சிகள், பருவநிலை என அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்
உதாரணத்துக்குப் புலியை எடுத்துக்கொள்வோம். அது ஒரு பெரிய மானை அடித்தால், குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு அதைப் பத்திரப்படுத்திச் சாப்பிடும் வழக்கம் கொண்டது. அப்படியென்றால் ஓர் ஆண்டுக்கு 52 மான்கள் தேவைப்படும். ஒரு காட்டில் குறைந்தபட்சம் 520 மான்கள் இருந்தால்தான் புலிக்குத் தொடர்ந்து இரை கிடைத்துக்கொண்டே இருக்கும்.
ஆனால், அந்த அளவுக்கு மான்கள் இருக்க வேண்டும் என்றால், அங்குத் தாவரங்கள் செழிப்புடன் இருக்க வேண்டும். வளமான தாவரவியல் பன்மை இருக்க வேண்டுமென்றால், அங்கு மண் வளம் நன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் எல்லா வளத்தையும் தரும் மண்ணை 'தாய்மண்' என்று அழைக்கிறோம். அந்த மண் நல்ல வளத்துடன் இருக்க வேண்டும் என்றால், அங்கு மண்புழுக்கள் உயிர்த்திருக்க வேண்டும். அதனால்தான் 'மண்புழு மண்ணுக்கு உயிர்நாடி' என்கிறோம்.
இந்த ஆண்டு 'சர்வதேச மண் வள' ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் முக்கியத்துவம் என்ன?
மனிதர்களில் பல வகைகள் இருப்பது போலவே, மண்ணிலும் பல வகைகள் உண்டு. மண்ணைக் குறிப்பாகக் களிம்பு, சவுடு, மணல் என மூன்றாகப் பிரிக்கலாம். இடத்துக்கு ஏற்றதுபோல், இவற்றின் விகிதாச்சாரமும் மாறலாம். இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுக்கவே மண் வளம் சீரழிந்து வருகிறது. மண்ணில் உப்புத்தன்மை அதிகரித்துவருகிறது. இந்திய மண்ணில் 'கரிமச் சேர்மங்கள் உள்ளடக்கம்' (organic compound content), 4 முதல் 5 சதவீதம்வரை இருந்தால் நல்லது.
ஆனால், தற்போது அதன் தேசியச் சராசரியே 0.5 சதவீதம்தான். இதை அதிகரிக்கச் செய்ய மண்புழு உரத்தால் முடியும். தவிர, நீர் அதிகம் தேவைப்படாத சிறுதானியங்களை விளைவிப்பதன் மூலமும் மண்வளத்தை மீட்டெடுக்கலாம். காரணம், இவற்றுக்கு ரசாயன உரங்கள் தேவைப்படாது.
மண்புழு மீது உங்கள் கவனம் எப்படித் திரும்பியது?
அடிப்படையில் நான் விலங்கியல் மாணவன். 1978-79-ல் சென்னை புதுக் கல்லூரியில் எம்.ஃபில். படிப்பை முடித்து, அங்கேயே ஆசிரியப் பணியிலும் சேர்ந்தேன். அப்போது ஒரு மாணவர் என்னைச் சந்திக்கவந்தார். அவருக்கு எம்.ஃபில். படிக்க அங்கு இடம் கிடைக்கவில்லை. ஆனாலும், ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற துடிப்பும், ஆர்வமும் அவரிடம் இருந்தது. அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, கல்லூரியின் ஆய்வக உதவியாளர் எங்களைக் கடந்து சென்றார். 'ஆய்வகத்தில் என்ன உயிரினங்கள் இருக்கின்றன?' என்று அவரிடம் கேட்டேன். 'மண்புழு இருக்கு, சார்' என்றார். உடனே அது குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினோம்.
எங்கள் கண்டறிதல்களை ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டோம். 1980-ம் ஆண்டு மண்புழுவின் இயல்புகள் குறித்து இந்தியாவில் வெளியான முதல் ஆய்வுக் கட்டுரை அது. பிறகு அது எவ்வாறு விவசாயத்துக்கு உதவும் என்பது குறித்துப் பல ஆய்வுகளைச் செய்தோம்.
இவற்றை அடிப்படையாக வைத்துச் சில போலிகளும் அப்போது வந்தனர். அவர்கள் அறிமுகப்படுத்திய வெளிநாட்டு மண்புழுக்கள் நமது மண்ணைச் சீரழித்தன. எங்கிருந்து வேண்டுமானாலும் மண்புழுக்களைக் கொண்டு வரலாம். ஆனால், அவை அந்தந்த மண்ணில் இருந்து பிறந்தவையாக இருந்தால் மட்டுமே, அது பயன்படும்.
இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும், உண்மையை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முயன்றபோதுதான் வந்தனா சிவா, நம்மாழ்வார், கிளாட்ஆல்வாரெஸ் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. அனைவரும் சேர்ந்து 'அரைஸ்'(ARISE - Agriculture Renewal in India for Sustainable Environment) எனும் இயக்கத்தை ஏற்படுத்தினோம். அதன் மூலம் மக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வையும் அக்கறையையும் ஏற்படுத்த முடிந்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சி!
'பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவை தீவிரமடைய இந்திய விவசாயம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. கால்நடைகள் அதிகம் பயன்படுத்தப்படுவது இதற்குக் காரணம்' என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறதே. இது சரியா?
மாடு, எருமை போன்றவற்றின் சாணத்தில் இருந்து மீத்தேன்உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் தோன்றுவது உண்மைதான். இது ஆய்வகரீதியான கண்டுபிடிப்பு.
ஆனால், கள ரீதியான கண்டுபிடிப்பை வைத்துப் பார்க்கும்போது, கால்நடைகளின் சாணத்தை உடனடியாக எருவாக மாற்றி பயன்படுத்தும்போது, அதில் உள்ள நைட்ரஸ் வாயுக்கள் மண்ணுக்கு வளம் ஏற்படுத்தும் நைட்ரேட் உயிர்ச்சத்தாக மாறிவிடுகின்றன. சாணத்தைவிட சிறந்த எரு எதுவும் கிடையாது. கோமியத்தைவிட சிறந்த பூச்சிக்கொல்லியும் கிடையாது. ஆனால், இன்றைக்குப் பெரும்பாலான விவசாயிகள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இன்றைக்குத் தீவிரமாகிவிட்ட நுகர்வுக் கலாசாரத்தில் விவசாயிகள் மீது மக்களுக்கு மரியாதை இல்லை. அது விவசாயிகளை, ரசாயனத்தின் உதவியை நாட வைத்திருக்கிறது.
இன்று தமிழகத்தில் அதிகளவு இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர, பசுமை அங்காடிகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?
பணி நிமித்தமாக நான் கிராமப்புறங்களுக்குச் செல்வதுண்டு. அங்கு மக்களிடையே உரையாடியபோது, 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஏக்கரில் 30 முதல் 60 மூட்டை நெல் விளைவித்தோம் என்று கூறுவார்கள். ஆனால், ரசாயன உரங்கள் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, 19 அல்லது 20 மூட்டைதான் விளைவிக்க முடிகிறது என்கிறார்கள்.
இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் என்னைப் போன்றோர், அதனால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிடுவோம் என்று கனவு காணவில்லை. என்றாலும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தும்போது கிடைக்கக்கூடிய விளைச்சலின் அளவுக்குச் சமமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இயற்கை விவசாயம் மூலம் பெற முடியும் என்பதையே வலியுறுத்துகிறோம்.
இன்னொரு புறம் இப்படி இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைப் பசுமை அங்காடி என்ற பெயரில் விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துவருகின்றன. ஆனால், அங்கே பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. காரணம் பெருநிறுவனங்களைப் போல அல்லாமல், ஒவ்வொரு விவசாயியிடமும் நேரடியாகச் சென்று பொருட்களை வாங்கி, அதை ஓரிடத்துக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. இந்தப் போக்குவரத்து செலவுகள்தான் பெரும்பாலும் விலையில் பிரதிபலிக்கின்றன.
ஆனால், அதையே காரணமாகக் கூறிக்கொண்டு, இஷ்டத்துக்குப் பொருட்களின் விலையை நிர்ணயித்து அநியாய விலையில் விற்பனை செய்கிறார்கள். இதனால் ‘மக்களின் நலனுக்காக‘ என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நற்செயல், மக்களைச் சுரண்டுவதற்குப் பயன்படும் அவலம் நேர்கிறது.
முன்பு நான் மண்புழு உரம் தயாரித்தபோது ஒரு கிலோவுக்கு 30 அல்லது 40 பைசாதான் விலை வைத்தேன். அப்போது விவசாயிகள் மாட்டுவண்டியில் வந்து உரத்தை நிரப்பிக்கொண்டு போவார்கள். ஆனால் எப்போது எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை விட்டுக்கொடுத்தேனோ, அப்போது என்னைப் போலவே பலரும் மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் ஒரு கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை விலை வைத்தார்கள். அப்படியென்றால், ஆயிரம் கிலோ உரம் தேவைப்படும் ஒரு விவசாயி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம்வரை செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் அதைவிட விலை குறைவாக உள்ள ரசாயன உரத்தைத் தேடிப் போக அவர் தூண்டப்படுகிறார்.
இயற்கையை நமது தேவைக்குப் பயன்படுத்தி அதில் இருந்து வருமானம் ஈட்டலாம், தவறே இல்லை. ஆனால், எப்போது லாப வெறியுடன் இயங்குகிறோமோ அப்போது இயற்கை அழிக்கப்படுகிறது. தயவு செய்து இயற்கையை வியாபாரம் ஆக்காதீர்கள், நண்பர்களே!
மண்புழு உரம் தயாரிப்பது முதற்கொண்டு பல அறிவியல் விஷயங்களைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்வதில் அதிக அக்கறை காட்டிவருகிறீர்கள். அது குறித்து…
ஆங்கிலத்தில் Demystifying Science என்ற சொல்வார்கள். அறிவியல் தொடர்பான தவறான கருத்துகளை நீக்கி, அறிவியல் மேதைகள்தான் கடினமான விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்ற கற்பிதத்தை உடைத்து, குழந்தைகளிடம் அவற்றைக் கொண்டு சேர்ப்பதே அதன் முக்கிய சாராம்சம். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன், அனைவரிடமும்.
நம்மைச் சுற்றி நாம் அறியாமலேயே அறிவியல் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் சில விஷயங்களில் ஒளிந்திருக்கும் அசாத்தியமான சிந்தனையைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், 100 அறிவியல் சோதனைகளைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். எளிய முறையில் நமது வீடுகளிலேயே அவற்றைச் செய்துபார்க்க முடியும் என்பதுதான் இதில் சிறப்பம்சம். இந்த அறிவியல் பரிசோதனைகள் 'simple tasks great concepts' என்ற தலைப்பில்யூடியூபிலும், 'ஆப்' ஆகவும் கிடைக்கின்றன. என்னுடைய வலைப்பூவிலும் அவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன (https://simpletasksgreatconcepts.wordpress.com/2010/12/03/hello-world/).
இன்றைக்குப் பெரும்பாலான அறிவியல் பேராசிரியர்கள் கல்லூரி செல்வதோடு, தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்களே…
இது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இன்று பெரும்பாலான ஆய்வுகள் கல்லூரி, பல்கலைக்கழக ஆய்வகங்களோடு தங்கிவிடுகின்றன. அதன் மூலம் கிடைக்கும் புதிய கண்டறிதல்களைச் சமூகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்களோடு மக்களாக இணைந்து, களப் பணியாற்றி, தங்களுடைய ஆய்வு முடிவில் கிடைக்கும் கண்டுபிடிப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாகப் பேராசிரியர்கள் மாற்ற வேண்டும்.
ஆய்வுக்குக் கிடைக்கும் நிதியில் ஒரு பகுதியை விரிவாக்கப் பணிகளுக்காகச் செலவிட வேண்டும் என்று உயர்கல்வி கொள்கையில் விதி கொண்டு வந்தால்தான், இது உத்தரவாதமாக நடக்கும். 

Courtesy : tamil.thehindu.com

Mango tree at Sadhana Farm, Periaya Kayapakkam, Tamil Nadu

Mango Tree at Sadhana Farm

Friday, 5 February 2016

தென்னைக்கு இசைவான ஊடுபயிர் கோகோ!


திருநெல்வேலி: "சாக்லேட் மரம்' என அழைக்கப்படும் கோகோ-வை, தென்னைக்கு இசைவான ஊடுபயிராக சாகுபடி செய்து பயனடையலாம் என தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் டி. சி. கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோகோவின் தாவரவியல் பெயர் "தியோபுரோமா கோகோ'. இது, ஐஸ்கிரீம், கேக், சாக்லேட், ஊட்டச்சத்து பானங்களின் மூலப்பொருளாக விளங்குகிறது. இதனால், அதன் தேவை அதிகரித்துள்ளது.
இசைந்த பயிர்: 50 சதவீத நிழலில் வளரும் தன்மை கொண்ட கோகோ, தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிட மிகவும் ஏற்றது. 3 முதல் 45 ஆண்டுகள்வரை பலன் தரும். தென்னையின் நடுவே கோகோ பயிரிடுவதால் களைகள் கட்டுப்படும்; மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்; மண் அரிப்பு தடுக்கப்படும்.
கோகோ இலைகள் உதிர்ந்து மக்குவதால், மண்ணின் அங்ககச்சத்து ஹெக்டேருக்கு 1,000 முதல் 1,200 கிலோ வரை அதிகரிக்கும்.
Image courtesy : Wikipedia

இவ்வாறு இசைவான பயிராக இருப்பதால், தென்னை மகசூல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கிறது. தென்னந்தோப்பில் குளுமையான சூழ்நிலை உருவாகும்.
கோகோ பழத்தின் "ஓடு' உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. கூடுதல் சிரமமன்றி கோகோ சாகுபடி செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 50 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மேலும், கோகோ கன்றுகளை வழங்கும் மாண்டலிசா இண்டியா புட் நிறுவனம், அன்றைய சந்தை விலைக்கே விளைபொருளைக் கொள்முதல் செய்வதால் விற்பதில் பிரச்னை இல்லை.
சாகுபடி குறிப்பு: கிரையல்லோ, பாரஸ்டிரோ, டிரைனைடாரியா, சி.சி.ஆர்.பி-1 முதல் 7 வரையுள்ள ரகங்கள் சாகுபடி செய்யலாம். சாம்பல் சத்து நிறைந்த அங்ககச்சத்து மிகுந்த, கார அமிலத்தன்மை 6.6 முதல் 7.0 வரையிலான மண் வகை மிகவும் ஏற்றது.
கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதியில் இது வளரும். 3 மீட்டருக்கு 3 மீட்டர் (10 அடிக்கு 10அடி) என்ற இடைவெளியில் பயிரிடலாம். தென்னையின் 2 மரங்களுக்கு இடையில் ஒரு கோகோ, இரண்டு வரிசைகளுக்கு இடையில் ஒரு கோகோ என நட வேண்டும். 1.5 அடிக்கு 1.5 அடி என்ற அளவில் குழியமைக்க வேண்டும்.
மானிய உதவி: முந்திரி, கோகோ மேம்பாட்டுக் கழக இயக்கக உதவியுடன், தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்ககத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள மானிய உதவியாக 500 கோகோ கன்றுகள், பராமரிப்பு மானிய உதவி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை தென்னை சாகுபடியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார் அவர்.

Source : dinamani

Thursday, 4 February 2016

Dung and urine produced by animals per day

Dung and urine produced by animals per day

Animal Urine
 (ml / kg live wt)
Quantity of dung (Kg)
per day
Horse 3-18 9-18
Cattle 17-45 18-30
Buffaloes 20-45 25-40
Sheep and goats 10-40 1-2.5
Pigs 5-30 3-5
Poultry - 2.5-3.5
source : http://agritech.tnau.ac.in

Farm Photographs

Paddy Field at Farm

Wednesday, 3 February 2016

Farm Photograph

Coconut Tree at Sadhana Nature Organic Farm

ஏக்கருக்கு ரூ-2 லட்சம்...ஏற்றம் தரும் எலுமிச்சை!

ஊடுபயிரிலும் உன்னத வருமானம்! என்ற தலைப்பில் விகடனில் வெளிவந்த கட்டுரை

ஒன்றில் இருந்து இன்னொன்று அதிலிருந்து மற்றொன்று... எனத் தேடல் தொடர்ந்ததின் விளைவுதான் ரகம் ரகமாக நம்மால் பயிர்களை சாகுபடி செய்ய முடிகிறது. இதற்காக, விவசாயிகள் பலரும் தங்களின் தோட்டங்களையே ஆய்வுக்கூடங்களாக மாற்றி... சாதனை புரிந்து வருகிறார்கள். அத்தகைய சாதனையில் ஒன்றாக, எலுமிச்சையில் நாரத்தைச் செடியை இணைத்து ஒட்டுக் கட்டி, புதிய ரகத்தை உருவாக்கி, அதிக வருமானம் பார்த்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திர ராஜா.

மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.

link to the original article

Tuesday, 2 February 2016

Agriculture wisdom from Thirukkural

Image courtesy : wikipedia
குறள் 1039:
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

 உரை:
நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்

When master from the field aloof hath stood;
Then land will sulk, like wife in angry mood.


Explanation: If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.

குறள் 1038:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
உரை: ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now.


Explanation:Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).

குறள் 1037:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
உரை: ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;
Without one handful of manure, Abundant crops you thus secure.


Explanation: If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.


courtesy : thirukkural.com
 
  

மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும், சேமிக்கும் முறை

மாட்டுச் சிறுநீரை எவ்வளவு நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். எளிதாக சேகரிக்கும் முறையைச் சொல்லுங்கள்?

கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஜீரோ பட்ஜெட் விவசாய பயிற்சியாளர் ராமண்ணா பதில் சொல்கிறார்.

‘‘இந்தத் தகவல், உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதுதான் உண்மை. ‘பசுமாட்டுச் சிறுநீரை 100 ஆண்டுகள்கூட சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்கு காலதாமதமாகப் பயன்படுத்துகிறோமோ… அந்த அளவுக்கு அதன் வீரியம் கூடும். ஆனால், பசுஞ்சாணத்தை எவ்வளவு
விரைவாக முடியுமோ… அவ்வளவு விரைவாகப் பயன்படுத்திவிடவும். அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் பயன்படுத்திவிடுங்கள். இதற்கு மேல் சென்றால், சாணத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறையும். பின்பு நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது’ என்று ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் அடிக்கடி சொல்வார். 

பால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச் சேகரிப்பதும் ஒருவிதமான நுட்பம் என்றுதான் சொல்லவேண்டும். ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையை சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாக சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம். மருந்து தயாரிக்க பசுவின் சிறுநீர் தேவை என்றால், சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிறகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும், கிடைக்கும் சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படையான விஷயம். சிறுநீரைச் சேகரிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே எவர்சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். 

வழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறுநீர் கழிக்கும். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர்விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் கூடுதலாக சிறுநீர் கொடுத்து வருகின்றன.

Courtesy : Pasumai Vikatan