Tuesday 14 March 2017

தேனீக்கு உணவு தரும் முக்கிய பயிர்கள் மற்றும் மதுர வரத்துக் காலப் பராமரிப்பு : தேனீ வளர்க்கலாம் பகுதி-VII

தேனீக்கு உணவு தரும் முக்கிய பயிர்கள்

மதுரம் தரும் பயிர்கள்:
ரப்பர், புளி, பாட்டில், புருசு, இலவம், இலுப்பை, சில்வர் ஓக், லாடப் பூ, அகத்தி, அரப்பு, கடுக்காய், புங்கம், வேம்பு, அர்ச்சுன மரம், சிசு மரம், தீக்குச்சி மரம், செம்மரம், லிட்சி இலந்தை, சோயா மொச்சை, குதிரை மசால், காப்பி, தும்பை, கள்ளிப் பூண்டு 

மகரந்தம் தரும் பயிர்கள்:
கரு வேல், வெள் வேல், குடை வேல், ஆண் பனை, பாக்கு, தென்னை,  நெல்லி, தக்காளி, கத்தரி, பறங்கி  பூசணி, வெள்ளரி, சீமை வெள்ளரி, சுரை, சவ் சவ், சோளம், கம்பு, மக்காச்சோளம்.

மதுரம் மற்றும் மகரந்தம் தரும் பயிர்கள்:
தைல மரம், சீமைக் கருவேல், கரக்கொன்றை, வேங்கை, நாவல், வாகை, முந்திரி, கொடுக்காப்புளி, ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம், செர்ரி, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, வாழை, முருங்கை, வெங்காயம், காரட், முட்டைக்கோஸ், பூக்கோஸ், நில சம்பங்கி, அவரை, துவரை, உளுந்து, காராமணி, கொண்டக் டகலை, பருத்தி, ஏலக்காய், கொத்தமல்லி, சூரியகாந்தி, எள், பேய் எள், ஆன்டிகோனான், கடுகு, நெருஞ்சி, ஓணான் கொடி, துத்தி.

மதுர வரத்துக் காலப் பராமரிப்பு:

மதுர வரத்து துவுங்கிவிட்டதற்கான அறிகுறிகள்:
  • தேனீக்கள் நுழைவு வாயில் சுறுசுறுப்பாக இயங்கும்
  • தேனீக்களுக்கு சர்க்கரைப்பாகு கொடுத்தால் அதனை எடுக்காது
  • தேனீக்கள் மதுரத்திலுள்ள நீர் அளவைக் குறைத்து தேனாகக் கெட்டிப்படுத்தும் பொழுது காற்றில் ஒருவித மலர் வாசனை வீசும்
  • தேனீக்கள் சட்டங்களுக்கு இடையில் வெள்ளை அடை கட்டும்
  • தேனீக்கள் அடை அறைகளில் விளிம்பில் வெள்ளை மெழுகினை வைக்கும்
  • தேனீக்கள் அடைகளைப் புதிப்பிக்கும் பணியிலும் புது அடைகள் கட்டும் பணியிலும் ஆர்வத்துடன் ஈடுபடும்
  • அடைகளை ஆய்வு செய்யும் பொழுது திறந்த அடை அறைகளிலிருந்து மதுரம் சொட்டும்
மதுர வரத்திற்குக் கூட்டங்களைத் தயார் செய்தல்:
  • தேனீப் பெட்டிகள் வைப்பதற்கு ஏற்ற அதிக மதுரவரத்து உள்ள இடங்களை முன் கூட்டியே தெரிவு செய்ய வேண்டும்
  • மதுர வரத்து துவங்குவதற்கு ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு முன்னரே கூட்டங்களை தயார் செய்ய வேண்டும்
  • தேன் அறைகள், காலி அடைகள், வெற்றுச் சட்டங்கள், அடை அஸ்திவாரத்தாள், தேன் எடுக்கும் கருவி ஆகிய சாதனங்களைத் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்
  • சர்க்கரைப் பாகு மற்றும் மகரந்த உணவு கொடுத்துக் கூட்டங்களை வலுப்படுத்த வேண்டும்
  • ஆண்டுக்கு ஒரு முறை ராணித் தேனீயை மாற்ற வேண்டும்
  • கூட்டங்களுக்கு புதிய ராணித் தேனீ தர வேண்டும்
  • வலுக்குன்றிய கூட்டங்களை இணைக்க வேண்டும். வலுவான கூட்டங்களால் மட்டுமே கூடுதலாகத் தேனைத் திரட்டிச் சேமிக்க இயலும்
Image courtesy : wikipedia
மதுர வரத்தின் போது பராமரிப்பு:
  • ராணித் தேனீ முட்டையிடப் போதிய இட வசதி செய்து தர வேண்டும்
  • உரிய நேரத்தில் தேன் அறைகள் கொடுக்க வேண்டும். காலித் தேன் அடைகள் கொடுத்தால் தேனீக்கள் விரைந்து தேனை சேமிக்கும்
  • காலி அடைகள் இல்லைளென்றால் புழு அறையிலுள்ள தேன் அடையை அறுத்து தேன் அறை சட்டங்களில் கட்டிக் கொடுக்க வேண்டும்
  • தேன் அறையில் ராணித் தேனீ முட்டையிடுவதைத் தடை செய்யப்புழு அறைக்கும் இடையில் ராணித் தேனீ தடைத் தகட்டை வைக்க வேண்டும் அல்லது அவ்வாறு முட்டையிடப்பட்ட தேன் அடைகளில் தண்ணீரை தெளிப்பதன் மூலம் இப்பிரச்சனையைத் தவிர்க்க இயலும்
  • தேன் அறையில் ஒரு சட்டம் குறைவாகத் தர வேண்டும். இதனால் ஒவ்வொரு தேன் அடைச் சட்டத்திலும் தேன் கூடுதலாகச் சேமிக்கப்படும். மேலும் மூடப்பட்ட தேன் அறைகளின் கூடிகளை எளிதாகச் சீவலாம்
  • தேன் அடைகளில் மூன்றில் இரண்டு பங்கு அறைகள் மூடப்பட்ட நிலையில் தாமதம் செய்யாமல் தேன் அறைகளைத் தேன் எடுப்பதற்கு எடுக்க வேண்டும்
  • தேன் எடுத்த பின்னர் தேன் அறைகளை மீண்டும் தேனீகு் கூட்டத்திற்கு உடனடியாக கொடுத்துவிட வேண்டும்
  • கூட்டம் பிரிந்து விடாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
 நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

No comments:

Post a Comment