ஆற்றல்மிக்க ஆய்வு வகை நுண்ணுயிரிகளுடைய செயலுள்ள உயிரை அல்லது செயலற்ற உயரணுவை கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால், விதை அல்லது மண்ணின் வழியாக வேர்த்தண்டின் தொடர்பால் அளிக்கும் போது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துக்களை நுண்ணுயிரி முறைகளால் எளிதில் எடுத்துக் கொள்ள உதவுகிறது.
இயற்கையில் நுண்ணுயிரிகள் ஆற்றல் மிக்கதாக இல்லாமல் இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணில் நுண்ணுயிரிகளின் செயலை அதிகப் படுத்தலாம்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இரசாயன உரங்களுக்கான மாற்றாக நிலையான வேளாண்மையில், இந்த உயிர் உரம் விலை குறைவாகவும், ஊட்டச்சத்துக்களைப் புதுப்பித்தலுக்கான ஆதாரமாக இருக்கிறது. பல நுண்ணுயிரிகள் மற்றும் பயிர்களுடன் உள்ள தொடர்பால் உயிர் உரங்கள் தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கிறது. நுண்ணுயிரிகளின் தன்மை மற்றும் செயலைப் பொறுத்து இது பலவழிகளில் வகைப்படுத்தப்படுகிறது.
வகைகள் | உதாரணங்கள் |
தழைச்சத்தை நிலைப்படுத்தும் உயிர் உரங்கள் | |
தன்னிச்சையாக வாழ்தல் | அசட்டோபேக்டர், பெய்ஜரிங்க்யா, க்ளாஸ்ட்ரிடியம், க்ளப்சில்லா, அனபீனா, நாஸ்டாக் |
இணை வாழ் தன்மை | ரைசோபியம், ப்ரேங்கியா, அனபீனா, அசோலா |
கூடிசேரும் இயல்புடைய இணை வாழ் தன்மை | அசோஸ்பைரில்லம் |
மணிச்சத்தை கரைக்கும் உயிர் உரங்கள் | |
நுண்ணுயிரி | பேசில்லஸ் மெகாடிரியம் வகை பாஸ்போடிக்கம், பேசில்லஸ் சப்டிலிஸ், பேசில்லஸ் சர்குலன்ஸ், சூடோமோனாஸ் ஸ்டெய்ரிட்டா |
பூஞ்சை | பெனிசிலியம் வகைகள், அஸ்பெர்ஜிலல்லஸ் அவாமோரி |
மணிச்சத்தை இடம் பெயரச் செய்யும் உயிர் உரங்கள்: | |
குமிழியுடைய மரம் போன்ற வேர்சூழ் பூசணம் | குலோமஸ் வகை, கிகாஸ் போரா வகை, அகேலூஸ்போரா வகை, ஸ்கூட்டலோஸ்போரா வகை, ஸ்கிளிரோ ஸிஸ்டிஸ் வகை |
வெளி வேர் உட்பூசணம் | லேக்கேரியா வகை, பிஸியோலித்திஸ் வகை, போலிடஸ் வகை, அமெனிட்டா வகை |
எரிகாய்டு வேர் உட்பூசணம் | பெஜிஜில்லா எரிக்கே |
ஆர்கிட் வேர் உட்பூசணம் | ரைசோக்டோனியா சொலானி |
நுண்ணூட்டச் சத்துக்கான உயிர் உரங்கள்: | |
சிலிக்கேட் மற்றும் துத்தநாக கரைதிறன்கள் | பேசில்லஸ் வகை |
பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கும் வேர் நுண்ணுயிரி | |
சூடோமோனாஸ் | சூடோமோனாஸ் ஃப்ளோரஸன்ஸ் |
No comments:
Post a Comment