காவிரி
கர்நாடகத்தில் பிறந்து, ஒகேனக்கல் வழியாக நுழைந்து தமிழகத்தில் ஓடி கடலை
அடைகிறது. காவிரி என்பது தனி இல்லை, பல இடங்களில் பல நதிகள் கலக்கின்றன.
அனைத்து உப நதிகளின் பங்களிப்புடன் தமிழகம் வரும் காவிரி, ஸ்ரீரங்கநாதனை
தொழுதபின் இரண்டாக பிரிந்து கடலை நெருங்க நெருங்க பல அவதாரங்கள்
எடுத்துக் கொள்கிறது.
பிள்ளையார் சதுர்த்தி முடிந்து முன்றாம் நாள், பிள்ளையார் சிலையை
கரைப்பதற்கும், ஆடி பெருக்கிற்கும் காவிரி ஆற்றகரையில் மனிதத் தீவு
போல் மக்கள் கூட்டம் காட்சி அளிக்கும். ஆனால் அதெல்லாம் பழங்கதையாகி
இன்று குப்பைகளே ஒரு தீவு போல் காட்சி அளிக்கிறது.
திருச்சியில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா ஸ்தலங்களும், காவிரி நதியின் வரலாற்றை சார்ந்தே இருக்கிறது. இன்னும் மேலும் பல சிறப்பு அம்சங்களை கொண்டு உள்ளது. திருச்சியில் காவிரி பாலம் நோக்கி ஒரு நடை நடந்தால் மாலை சூட்டில் மணல் காய்ந்து கால்களுக்கு வெது வெதுப்பாய் இருந்தது.
கோடை காலம் ஆரம்பிக்கும் நிலையில், காவிரி கரைந்து காய்ந்து இருந்தது. உள்ளூர் கிரிக்கெட் ஆட்டக் காரர்களுக்கு விடுமுறை நாட்களில், காவிரிக்கரை ஈடன் கார்டனாகி விடுகிறது. திருச்சியில் உள்ள குட்டி சுட்டிகளெல்லாம் இந்த கோடை காலத்தில் காவிரி ஆற்றில் போடப்படும் சம்மர் பீச்சை காண ஆவலுடன் காத்து இருப்பர். அந்த சம்மர் பீச்சை, ஆற்றோரத்தில் பாலத்தை ஒட்டியது போல அதற்கான இடத்தை சுத்தம் செய்து, முப்பது நாற்பது டியூப் லைட்டுகள் போட்டு தயார் செய்வார்கள்
அந்த சமயத்தில் காவேரி பாலத்தில் இருந்து பார்த்தால், காவிரி ஆறு மெரினா கடற்கரைப் போல் காட்சி அளிக்கும். தள்ளுவண்டியில் முட்டை போண்டா, சிறுவர் சிறுமியர் கைகளில் சுண்டல் என காவேரி களை கட்டும்
இப்படி அனைவருக்கும் சந்தோஷம் தரும் காவிரியை இப்பொழுது கரையோரமாக நின்று பார்த்தால் குட்டை போல் காட்சி தருகிறது. மற்ற இடமெல்லாம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து பாலையாக காட்சி அளிக்கிறது. தேங்கி இருக்கும் குட்டைகளில் காவிரியின் அழகை ரசிக்க வரும் மக்கள், காவிரிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக தங்கள் கொண்டுவரும் சோளக்கதிரு , பாணி பூரி தட்டுக்கள் , சாக்லெட் கவர்களை பரிசாக அளித்து செல்கின்றனர் .
இது ஒரு பக்கம் இருக்க , காவிரி கரைகளில் இருப்பவர்களும் தங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை இங் கேயே கொட்டுகின்றனர். இதுதவிர தோஷம் கழிக்கிறேன் பேர்வழி என்று மக்கள் தங்கள் தோஷப் பொருட் களை ஆற்றிலே விட்டு தங்களுக்கு இருந்த தோஷத்தை காவிரிக்கு தந்து செல்கின்றனர் .
"முன்னெல்லாம் காவிரியை வற்றாத ஜீவ நதின்னும் சொல்லுவாங்க. அப்புறம் சில வருடங்களில் ஆறு மாதம் தண்ணீர் புரளும். இப்போ மூணு மாதம் தான் வருகிறது. இப்போ காவிரியல் தண்ணி வந்தா மக்கள் கூட்டம் கூட்டமா வந்து அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்து செல்கின்றனர், அதுக்கும் மேல நிறைய பேரு கார்ல வந்து கரையோரமா “உற்சாகமா ”இருக்க வராங்க. போகும்போது தாங்கள் கொண்டு வர்ற மிச்சங்களை இங்கவே போட்டுட்டு போயிடறாங்க. இப்படியே தொடர்ந்து நடந்தால், கொஞ்ச நாள்ல இந்த காவிரி ஆறு, கூவத்துக்கு போட்டியா மாறிடும் போல இருக்கு" என வருந்தினார் திருச்சிவாசி ஒருவர்.
இலக்கியமும் திருச்சி மக்களின் இதயமும் கொண்டாடிய காவிரி நதி, தன் அழகை முற்றாக இழந்து கொண்டிருப்பதை இனியும் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல.
அரசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விழித்துக் கொள்ளவேண்டிய தருணம் இது
- க. கவின் பிரியதர்ஷினி (மாணவப் பத்திரிக்கையாளர்)
source:http://www.vikatan.com
Image & Article courtesy : vikatan.com |

No comments:
Post a Comment