Sadhana Organic Nature Gardens (SONGS) at Periya Kayappakkam village in Tamilnadu. It is an integrated sustainable bio-dynamic farm
Thursday, 31 March 2016
Wednesday, 30 March 2016
குறைந்த செலவில், அதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர்!
Image & Article courtesy : Dinamani |
மிகக் குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளை வளர்க்க முடியாத
சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்குத் தேவைப்படும் முதலீடு
மிகவும் குறைவு. வெள்ளாடுகள், இறைச்சி, பால் தேவைக்காக
வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச் செடிகளில்
மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி, கிடைக்கும் புல்
பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக் கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில
இடங்களில் ஆட்டுப் பாலையே விரும்பி அருந்துகின்றனர். அதுபோல் ஆட்டு
இறைச்சியும், ஒரு முக்கிய உணவாகும்.
வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்
வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு. இவை அளவில் சிறியதாக உள்ளதால், கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு. ஆடுகள் மிகக் குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும்.
இவை, 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும். பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது 4 குட்டிகள் போடுவது மிகவும் அரிது. வறண்ட நிலங்களில் மற்ற கால்நடைகளை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும். ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், வேளாண் பயிர்க் கழிவுகள், வேளாண் உப விளைபொருள்கள் போன்றவற்றை உண்பதால் தீவனப் பராமரிப்புச் செலவு குறைவு. ஆட்டு இறைச்சியில், பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது.
பசும்பாலை விட வெள்ளாட்டுப் பால் எளிதில் செரிக்கக் கூடியது. இதில், ஒவ்வாமை ஏதும் ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப் பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருள்கள் அதிக அளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு. வெள்ளாடு, செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும்போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பப் பகுதிகளுக்கு ஏற்றவை.
ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன. கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோருக்கும், ஏழைகளுக்கும் இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது.
வயது முதிர்ந்த ஆடுகளை வாங்கும்போது, அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0.5 லிட்டர் அதிகமாக இருப்பதாகும். இந்த அளவு, குட்டிகள் ஊட்டியது போல மீதமுள்ள அளவாகும். இளம் ஆடுகளை வாங்கும் போது, அதன் குட்டி ஈனும் உற்பத்தி அளவைப் பார்த்து வாங்குதல் வேண்டும். அதோடு ஆடு எந்த ஒரு உடல் குறைபாடும் இன்றி இருக்க வேண்டும். ஆடுகளின் 120 நாள் பால் உற்பத்தி அளவை வைத்தும், 2 வருட வயதில் அது ஈன்ற குட்டிகள் எண்ணிக்கையை வைத்தும் ஆட்டின் செயல்திறனைக் கணிக்கலாம்.
தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. அவை கன்னி ஆடுகள், கொடி ஆடுகள், சேலம் கருப்பு, கன்னி ஆடுகள் ஆகும். இம்மூன்று இனங்களும் இறைச்சி, தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன.
சினை ஆடுகள் பராமரிப்பு
சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும். சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.
குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விட வேண்டும்.
பிறந்த குட்டிகளின் பராமரிப்பு
குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்க வேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச் சுற்றியுள்ள திரவத்தை அகற்ற வேண்டும். பின்னங்கால்களையும் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம்.
இது மூச்சுக் குழல் பாதையை சுத்தம் செய்ய உதவும். குட்டி பிறந்த அரை மணி நேரத்துக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்க வேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.
தாய், தனது குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்க வேண்டும். முதல் அரை மணி நேரத்துக்குள் குட்டியை சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாக குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.
புதிதாகப் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும். தொப்புள் கொடியை சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விட வேண்டும்.
முதல் இரண்டு மாதங்கள் எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும். முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல் அவசியம்.
சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரத்தில் போடுதல் வேண்டும். 8 வார காலத்தில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்க வேண்டும். குட்டிகளைத் தனியே தரம் பிரித்து அதன் எடைக்கேற்ப சரியான தீவனமளித்தல் அவசியம்.
செய்யக் கூடாதவை
ஆட்டின் வாயில் ஏதேனும் காயமோ, வலியோ இருக்கும்போது தடுப்பு மருந்து அளிக்கக் கூடாது. பண்ணையில் உள்ள கால்நடைகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாயில் ஏதேனும் வலி இருந்தால் தடுப்பூசி (அ) தடுப்பு மருந்து அளிக்கும்போது வலி அதிகரிக்கும். இவ்வாறு வாய் பிரச்சனை உள்ள ஆடுகளைக் கவனித்து 3 வாரங்களுக்குப் பின் தடுப்பு மருந்து அளிக்கலாம்.
கால் நகங்களை வெட்டுதல்
கால் நகங்களை வெட்டும்போது நன்கு கவனித்து தேவையின்றி வளர்ந்த நகங்களை மட்டுமே நறுக்க வேண்டும். அதிகமாக வெட்டினாலும் காலில் வலி ஏற்படும். வெட்டாமல் விட்டாலும் கீழே, காலை உரசும் போது புண் (அ) ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும். நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது.
குட்டி ஈனும்போது பிரச்சனை
சினை ஆடுகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும். அதன் குட்டி ஈனும் காலத்தை தோராயமாகக் கணித்து, அதற்கேற்றவாறு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக குட்டி ஈனும் தருணத்தில் ரத்தம் விஷமாதல், கருக்கலைதல் (அ) குட்டி இறந்து பிறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நலம்.
மேலும் வெள்ளாடுகள் வளர்ப்பு குறித்து விவரம் தேவைப்படுவோர் தங்களது வட்டாரத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களையோ, மாவட்டத்தில் உள்ள கால்நடைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களையோ
அணுகலாம்.
Source : Dinamani
Tuesday, 29 March 2016
Bicycle Weeder by Gopal Malhari BhiseI
Not all the farmers in the country can
afford bullock, a small tractor or power tiller. Also due to relatively
low land holding capacity many farmers do not need these farm
equipments.
Courtesy : National Innovation Foundation : India |
Bicycle weeder is a multipurpose farm
implement developed by using inexpensive bicycle components. The main
part of the implement consists of the front portion of a bicycle, namely
handle bar, front axle and the wheel. A steel fork is connected to the
axle and other end carries different attachments. Separate attachments
for weeding and tilling are attached to the working end using bolts and
nuts. This helps in changing the attachments as needed. The load in
digging out the soil has been kept to the minimum by providing
appropriate profiles and curvature to the implements. Suitable slots are
provided for attachments so that the distance between the blades can be
adjustable to suit specific requirements. Not all the farmers in the
country can afford bullock, a small tractor or power tiller. Also due to
relatively low land holding capacity many farmers do not need these
farm equipments.
source : National Innovation Foundation : India
source : National Innovation Foundation : India
Indian scientists turn coconut oil into biofuel
Image courtesy : youtube.com |
Scientists who have been running the four-stroke diesel
engine of a light pick-up truck on coconut oil for the past one year
have approached the union government to commercialize the biofuel.
The
scientists are attached to the Kochi-based SCMS Institute of Bioscience
and Biotechnology Research and Development and the SCMS School of
Engineering and Technology.
While the manufacturers of the Tata Ace claim mileage of 16 km to a
litre of diesel, the vehicle can run 22.5 km per litre of the biofuel,
the scientists say.
"We purchased this brand new vehicle a year
back. By now, it has done 20,000 km and has proved beyond doubt that
coconut oil can replace diesel. We can provide this product at Rs.40 a
litre," C. Mohankumar, who heads the team of six scientists, told IANS.
Mohankumar
said they have already applied for a US patent and also approached the
union ministry of renewable energy to take this biofuel to its logical
conclusion by commercialising it.
"The emission levels are lower than other forms of biodiesel, making it a very eco-friendly product too," said Mohankumar.
Explaining the process, he said 760 litres of biofuel can be produced from the oil of 10,000 coconuts.
"There
are also five other by-products. This includes 5,000 kg of husk, 2,500
kg of coconut shells, 1,250 litres of coconut water, around 1,200 kg of
cake (that can be used as cattle feed) and 70 litres of glycerol."
"Each
of these products has a market value and that's how we are able to
commercially supply this biodfuel at Rs.40 a litre," Mohankumar said. "We
have conducted numerous tests on this coconut biofuel that are for
anyone to see. It shows that all the parameters are much lower than
other biodiesel products," he added.
The study was published in the December 2014 issue of the journal 'Fuel'. Coconut
Development Board (CDB) Chairman TK Jose said he had studied the
performance of the vehicle that the scientists have been using.
"We
(CDB) don't have the funds for taking forward their innovation and
hence they have approached the centre. I have gone through all their
reports on the biofuel. The emission levels are much less than other
similar products," Jose told IANS.
Courtesy : IBN Live
Monday, 28 March 2016
Friday, 25 March 2016
An ingenious rice parboiler unit that has changed the lives of rural women
Simple, innovative technology can truly transform the lives of people
living in the hinterlands. That’s what an ingenious rice parboiler unit
has done for the rural women of Deoghar district in Jharkhand.
Image & Article courtesy : .theweekendleader.com |
Parvati Devi, 45, of Madanpur village in Deoghar, is all smiles these
days because she has acquired a rice parboiler unit, which enables her
to save more than 50 per cent of her yield that used to get destroyed
earlier when she’d heat the paddy to make parboiled rice, popularly
known as ‘usna’ in the region.
Whereas for this mother-of-eight growing paddy on their two-acre farm
was not difficult - she had been tilling land ever since she was a
young girl - the nightmare began when, at the end of every Rabi season,
she had to prepare the parboiled rice for storage.
Across eastern India, ‘usna’ is a staple with rice eaters. Post-harvest
the grain is steamed in an iron tray for one-and-a-half hour and then
dried under shade. Thereafter, it is taken to the rice hulling machine
for final processing.
The steaming process is labour intensive as the paddy requires constant
monitoring and turning over by hand to prevent it from burning. “Every
year, I used to end up losing sizeable amounts of the yield as I used
the age-old technique of boiling paddy to prepare parboiled rice that we
consume as part of our daily meal. While this rice is better to taste,
healthy and lasts for a longer period of time, the boiling process is
tiring and the losses incurred can be huge,” she remarks.
Like Parvati, other farmers in the area, too, had resigned themselves
to losing a sizeable portion of their produce during processing.
However, the introduction of the rice parboiler unit has slowly improved
the situation not just for the local women – it has lessened their work
burden considerably – but also assured families of a steady supply of
their favourite food.
This technology has been brought to people’s doorsteps through local
farmers’ clubs constituted by the Centre for World Solidarity (CWS), a
non government organisation in the area.
According to Rajesh Kumar Jha of CWS, which has worked with farmers to
develop the unit, “The idea behind creating this device was to save rice
that forms the basis of all food in these parts. The procedure of
boiling the paddy consumed enormous amounts of fuel and needed dedicated
manpower but ultimately the loss was still colossal.”
The unit called Devipur Usna has been designed by Abhivyakti
Foundation, a non-government organisation working with CWS, and it uses
convection heating to treat the rice. A 200-litre drum that doubles up
as storage is divided into two vertical chambers with the help of a net
sieve fixed one foot from the bottom.
The lower chamber is used to store water that is boiled to create steam
that rises to cook the paddy uniformly. Just above the sieve there is
an opening from where the steamed rice can be removed.
Around four years back, a trial run of the first unit was conducted in
Madanpur village with the help of two farmers. Their feedback enabled
some vital design modifications - an additional sheet was put at the
bottom to safeguard the grain from high heat.
Elaborates Lokeshwar of Abhivyakti Foundation, “The minor changes we
made to the paddy boiler unit have had a significant impact. It is
economical at every level - just one person is needed to operate the
boiler, is less time consuming and needs minimal fuel. Moreover, the
paddy that used to get burnt earlier due to high heat is unaffected.”
The Devipur Usna has four-fold benefits. A farmer can steam 1800 kilos
of paddy in a single batch, only one person is required to keep an eye,
there is no need to turn it over and all this results in reduced work
load for the womenfolk. Within an-hour-and-a-half the entire process is
complete. The fuel consumption is down by 50 per cent as is the
probability of losing the produce.
“A little innovation can make a huge difference to the lives of people
who are anyway impoverished. The post harvest process used to be very
labourious for women, who are responsible for doing most of the work
during cultivation season. The rice parboiler unit ensures them some
time off to either be with their children or simply rest,” observes
Rajesh Kumar.
As per the 61st round of National Sample Survey (NSS) 46.3 per cent of
people in Jharkhand are living below poverty line while the per capita
income is only Rs 7,200. In fact, between the years 1983 and 2000 there
was a 20 per cent increase in poverty in the state in comparison to the
national average.
Where the state of hunger is concerned, a qualitative baseline survey
conducted by the CWS has declared it as one of the most food insecure
states in the country with more than 12.5 per cent of the population out
of the food safety net with no guarantee of regular meals throughout
the year. The India State Hunger Index (2008) also reveals a grim
picture documenting the presence of severe undernourishment, child
malnutrition and infant mortality.
“Thanks to this rice parboiler unit, at least farmers like me do not
have a reason to complain and fret that the food we grew was lost,” says
Rina Devi, who had lived with severe loss of grain year after year in
her small village of Devipur until she discovered the goodness of the
steaming unit.
Although storage of food grains and quality and quantity of produce
still remain key concerns for several farmers in the region, they are
pleased with the fact that at least the food they grow with great
diligence and patience can be saved with a device that has proved to be
quite the lifesaver.
“For women famers like me, this unit is a real boon. While the men-folk
continue to migrate seasonally for work those of us left behind have
remained loyal to the land and cultivation remains our main work. Small
ways to keep the losses to a minimum can only be a bonus for us,”
concludes Rina Devi. - Women's Feature Service.
Source : theweekendleader.com
Thursday, 24 March 2016
Wednesday, 23 March 2016
ராதா வாய்க்காலும் ரங்கநாயகியும்! (தி இந்து)
Image & Article courtesy : தி இந்து |
நமது விவசாய முறை பாரம்பரியம் நிறைந்தது. வேளாண் அறிஞர்களும்
அறிவியலாளர்களும் சேர்ந்து விவசாயத்தை வளப்படுத்திய வரலாறு நம்முடையது.
விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ள நாட்டில் விவசாயம் பற்றிய புரிதலும் அது
சார்ந்த அறிவியல் ரீதியான அணுகுமுறைகளும் சிறப்பாக இருப்பதில்
ஆச்சரியமில்லை. அப்படி வழிவழியாக விவசாயம் பார்த்துவந்த நமது விவசாயிகள்,
விவசாயத்துக்குத் தேவையான தண்ணீருக்காகப் படாத பாடுபடுகின்றனர்.
பாசனத்துக்கு நீரின்றி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையையும்
நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இப்படியொரு நிலையில்தான் மாற்றத்துக்கான சாவியைக் கையில் எடுத்திருக்கிறார்
ரங்கநாயகி. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த இவர், விவசாய
நிலத்துக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி, அதில்
வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ரங்கநாயகி, விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சுந்தர்ராமனின் கரம்பற்றி
மனைவியானதும் விவசாயத்தை மறந்து குடும்பச் சூழலுக்குத் தன்னை
மாற்றிக்கொண்டார். திருமணமான சில வருடங்களிலேயே கணவர் இறந்துவிட, இரண்டு
மகள்கள் மற்றும் ஒரு மகனை வைத்துக்கொண்டு எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது
என்று வழி தெரியாமல் விழித்தார். அவருடைய தந்தை கொடுத்த ஊக்கத்தால்
தன்னம்பிக்கையுடன் களத்து மேட்டுக்குச் சென்றார்.
தண்ணீர்ப் போராட்டம்
களத்து மேட்டில் நின்று ஒரு பெண் விவசாயம் பார்ப்பதை, கோழி கூவி விடியவா
போகுது என்று பலர் ஏளனம் செய்தனர். ஆனாலும் கம்பீரமாய்க் களமிறங்கிய
ரங்கநாயகிக்குத் தண்ணீர் வடிவில் சோதனை ஏற்பட்டது. தனது நிலம்
மட்டுமல்லாமல் வடம்பூர் பகுதியில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவு
விவசாய நிலத்துக்குத் தேவையான தண்ணீர் 9.5 கி.மீ. தொலைவில் உள்ள வீராணம்
ஏரியிலிருந்து ராதா வாய்க்கால் மூலம் வந்து சேர வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால், ராதா வாய்க்காலோ ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருந்தது.
அதனை மீட்க ரங்கநாயகி நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. இருப்பினும்
விடாமுயற்சியோடு போராடிய ரங்கநாயகியின் முயற்சிக்குத் தோள்கொடுக்கத்
தொடங்கினர் வடம்பூர் கிராம மக்கள். அதன் விளைவாக ராதா வாய்க்கால்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது தடையின்றித் தண்ணீர் வரத்
தொடங்கியுள்ளது. இதனால் தற்போது கடலூர் மாவட்ட வேளாண்மை அலுவலர்களும்,
விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் ரங்கநாயகியை ‘ராதா வாய்க்கால்’ ரங்கநாயகி
என்றே அழைக்கின்றனர்.
பொன் விளையும் பூமி
“விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன். சுமார் 10 கி.மீ
நீளமுள்ள ராதா வாய்க்காலில் பல்வேறு ஆக்கிரமிப்புகள். ஒருபுறம் கழிவு நீர்,
மற்றொரு புறம் சுகாதார நிலையங்களின் மருத்துவக் கழிவுகள் என அந்த
வாய்க்கால் எப்போதும் துர்நாற்றம் வீசும். ஏராளமான சுகாதாரச்
சீர்கேட்டுக்கும் அது காரணமாக இருந்தது. வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை
அகற்றி, சுத்தம் செய்ய நான் மேற்கொண்ட முயற்சிக்குக் கிராம மக்களும்,
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரத்னூவும் உதவினர். இதையடுத்து
வாய்க்கால் சீரமைக்கப்பட்டு,தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லும் ரங்கநாயகியின்
விவசாய ஈடுபாட்டைப் பாராட்டி எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை 2010-ம் ஆண்டு
விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.
“விவசாயம் நஷ்டமான தொழில் என ஒருபோதும் நான் கூறமாட்டேன். பொன் விளையும்
பூமியைக் குறை சொல்வது பெண்ணைக் குறை சொல்வதற்குச் சமம். இயற்கை விவசாயத்தை
ஒதுக்கிவைத்துவிட்டுக் களைக் கொல்லி, பூச்சிக் கொல்லி ஆகியவற்றைப்
பயன்படுத்திப் பூமியைப் பாழ்படுத்தியது நாம்தான். எல்லாவற்றுக்கும்
மூலாதாரம் விவசாயம். அப்படிப்பட்ட நிலத்தை விற்கப் போகிறேன் என்று யாராவது
சொல்வதைக் கேட்பதைவிட வேறென்ன துயரம் இருக்கிறது?” என்கிறார் ரங்கநாயகி.
தன்னைப் பார்த்து ஏளனம் செய்தவர்களைப் பற்றி ரங்கநாயகி கவலைப் படவில்லை.
மாறாக அந்த ஏளனப் புன்னகையை ஆச்சரியக்குறியாக மாற்றக் கடுமையாக உழைத்தார்.
விவசாயம் குடும்பத் தொழில் என்பது ரங்கநாயகிக்குள் தைரியத்தை
ஏற்படுத்தியது.
“விவசாயத்தை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. தமிழர்களின் வாழ்வோடு
இணைந்தது விவசாயம். விவசாயத்துக்கு முன்னோடி நாம் என்பதில் பெருமை
கொள்வோம்” என்கிறார் ரங்கநாயகி!
நன்றி : தி இந்து
Friday, 11 March 2016
ஒரு ரூபாயில் ஒரு கிலோ உரம் - மண்புழுக்கள் செய்யும் மாயம்
Image & Article courtesy :தி இந்து |
மண் புழு உரம், இயற்கை வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கம். கால்நடைகளின்
சாணம், இலை, தழை, பாசி வகைகள், கோழி எச்சம், மாட்டுச் சாணம், தென்னை நார்க்
கழிவு போன்ற கழிவுகளை உண்டு மண்புழுக்கள் உரமாக வெளியேற்றுகின்றன. கழிவுப்
பொருட்கள் அவற்றின் உடலில் செரித்த பிறகு, சத்து மிகுந்த கழிவாக
வெளியேற்றுகிறது. இக்கழிவுடன் மண்புழுவின் உடலில் இருந்து வெளிவரும் தாவர
வளர்ச்சி ஊக்கிகள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகிய திரவங்களும்
வெளியேறுகின்றன. எனவே, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும்
ஒருங்கே அடங்கியுள்ள சிறந்த இயற்கை உரமாக மண்புழு உரம் கருதப்படுகிறது.
விலங்குக் கழிவுகள்
திண்டுக்கல் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ். பீர் முகமது மண்புழு உரம் குறித்து விளக்குகிறார்:
உலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் உள்ளன. இவற்றில்
உரத்துக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் பயன்படுபவை மிகச் சில. இதில்
மண்ணின் மேற்பரப்பில் வாழும் புழுக்களே, மண்புழு உரம் தயாரிக்க மிகவும்
ஏற்றவையாகக் கருதப்படுகின்றன. பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ், டிராவிடாலில்சி,
யூடிரிலஸ்யூஜினே, அய்சினியாபிட்டிடா ஆகிய மண் புழுக்கள் அதிகம்
உற்பத்தியாகக் கூடியவை.
இவற்றில், யூடிரில்லங் யூஜினே எனப்படும் ஆப்பிரிக்க நாட்டு மண்புழு
பொருளாதார ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் புழு வெளியேற்றும்
கழிவு அதிகமாக இருப்பதால் மண்புழு உர உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாகக்
கருதப்படுகிறது.
மாடு, ஆடு, குதிரை, யானை, கோழி உள்ளிட்ட விலங்குக் கழிவுகள், கரும்பு, வாழை
இலை, நெல், கோதுமை, தினை, ஆகாயத் தாமரை, தென்னை, மரக் கழிவுகள் உள்ளிட்ட
பண்ணைக் கழிவுகள், ரசாயனம் கலக்காத ஆலைக் கழிவுகள், சுத்திகரிப்பு ஆலையில்
இருந்து வரும் கழிவுகள், பேப்பர் மற்றும் பருத்தி ஆலைக் கழிவுகள், சர்க்கரை
ஆலையில் இருந்து வரும் கரும்புச் சக்கைகள் உள்ளிட்ட ஆலைக் கழிவுகளில்
இருந்தும் மண் புழு உரம் தயாரிக்கலாம்.
தயாரிக்கும் முறை
தோட்டங்களில் குழி வெட்டியும், தொட்டிகள் அமைத்தும் மண்புழு உரம்
தயாரிக்கலாம். தொட்டிகள் அமைத்துத் தயாரிக்க 10 அடி நீளம், 7 அடி அகலம், 3
அடி உயரம் கொண்ட தொட்டிகள் அமைக்க வேண்டும். இந்தத் தொட்டிகளில்
மேற்குறிப்பிட்ட கழிவுகளுடன் மாட்டுச் சாணம் கலந்து மண்ணைத் தொட்டியில்
நிரப்ப வேண்டும். இதில் ரசாயனம் கலந்த பொருள்கள், கல், கண்ணாடி,
பிளாஸ்டிக், பீங்கான் போன்ற பொருட்கள் இல்லாமல் கழிவுகளை அடுக்கடுக்காகப்
போட வேண்டும்.
தொட்டியில் கழிவுகள் இட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். ஈரப்பதம் 40 முதல்
50 சதவீதம்வரை பராமரிப்பது புழுக்களின் வளர்ச்சிக்கு நல்லது. தொட்டிகளின்
மேல் பகுதி வழியாகப் பல்லிகள், பறவைகள், எலி, தவளைகள் புழுக்களைச்
சாப்பிட்டுவிடாமல் இருக்கக் கம்பி வலைகள் அமைப்பது பாதுகாப்பைத் தரும்.
ஒவ்வொரு தொட்டிக்கும் குறைந்தது 2,000 புழுக்களை விட வேண்டும். ஈரப்பதம்
குறையாமல் தண்ணீர் தெளித்து வரவேண்டும். இந்தப் புழுக்கள் ஒரு நாளைக்கு 5
கிலோ கழிவை எருவாக மாற்றும். 1 டன் ஈரக் கழிவுகளில் ஏறக்குறைய 300 கிலோ
மண்புழு உரம் கிடைக்கும். 1 கிலோ உரம் உற்பத்தியாகச் செலவு 1 ரூபாய்தான்.
தொட்டியில் இருந்து 50 – 60 நாட்களில் மண்புழு உரம் எடுக்கலாம்.
எடுப்பதற்கு, சில நாட்களுக்கு முன்பு தொட்டிகளுக்குத் தண்ணீர் தெளிப்பதை
நிறுத்த வேண்டும். ஈரப்பதம் இல்லாதபோது புழுக்கள் தொட்டியின்
அடிப்பகுதிக்குச் சென்றுவிடும். அப்போது கழிவுகளை மேல் பகுதியில் குவித்து
வைக்க வேண்டும். குவித்து வைத்த உரத்தைச் சல்லடைகளில் சலிக்க வேண்டும்.
சலிக்கும்போது உரத்தில் உள்ள குச்சி, கல் போன்ற பொருள்கள் தனியாகப்
பிரிந்துவிடும். சில நேரம் முட்டை, சிறிய புழுக்கள் இருக்கலாம். அவற்றைப்
பிரித்தெடுப்பதற்கும் இம்முறை உதவும். பிரித்து எடுத்த உரத்தைப் பைகளில்
நிரப்பி விற்பனை செய்யலாம்.
மண்புழு உரத்தில் உள்ள சத்துகள்
மண் புழு உரத்தில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் இருப்பதுடன் அங்கக
பொருட்கள், பயிருக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள், பயிர் ஊக்கிகள்
பெருமளவில் உள்ளன. மண்புழு உரம் ஈரத்தை மண்ணில் நிலைநிறுத்தும். மண்
அரிப்பைத் தடுக்கும். மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளை அதிகரிக்கும். மண்புழுக்கள்
மண்ணில் ஊடுருவிச் செல்வதால் மண்ணைத் துகள்களாக்குகின்றன. இதன் காரணமாக
மண் பொலபொலவென்றாகி பயிர்களின் வேர்கள் நன்கு ஊடுருவுவதற்கு வாய்ப்பு
கிடைக்கிறது. பயிர்களின் வேர்களுக்குப் போதிய காற்றோட்டம் கிடைக்கிறது.
நன்றி : தி இந்து
Thursday, 10 March 2016
Wednesday, 9 March 2016
Safal Compost - Introduction
Image courtesy : wikipedia |
India has enough potential for providing the
nutrients through animal dung base organic manures. Animal dung is
plenty available with the Indian farmers, but hardly few farmers
utilized it as processed and mature manure or in form of compost. Rest
of farmers just apply it in the field without taken care as immature and
un-decomposed material, which is high in temperature resulting in
non-nutritive residues leading to release of harmful pathogenic
microbes, besides that such immature material application (due its wide
C: N ratio) its negatively affect on productivity due to created
shortage of nitrogen in soil.This type of compost heaps is available in
every village throughout the country that’s poorly performed for crop
productivity and promotes the infestation of disease and insects. Its
proper decomposition is the major and important issue for the country
farmers particularly in Haryana, Punjab, Uttar Pradesh, Madhya Pradesh,
Maharashtra and Gujarat where buffalo’s population is high.
Organic manures maintain and restore the
active soil life and health. These manures are important sources of
plant nutrients, soil carbon conversation and beneficial microbial
buildup in soil. But the available rural animal dung manure is made of
poor quality due its un-decomposed process being very hot even after ten
years lying in the heap. One dialog that is true with manure: compost should not be hot. If hot it is not consider as compost.
Organic carbon is the “Life-Glucose for dying-Soil” and mature compost is the master key for revival of soil health”. Organic
manures maintain and restore soil life and sustainable crop
productivity and is the important sources of plant nutrients that help
in soil life and sustainable crop productivity and is the important
sources of plant nutrients that help in soil carbon conservation and
maintains soil health buildup through beneficial micro-organisms. Mature
compost should be cool, soft texture, fair smell, dark brown color, non
pathogenic, crop buster, capable to good water holding, carbon
recharging, full with enzymatic activity, hormones, and antibiotics for
better plant growth promoting properties.
Composting is an attractive proposition
for turning on-farm organic waste materials into a good farm resource.[
composting is an exothermic aerobic biological process that stabilizes
biodegradable organic matter (BOM). Decomposition rates are affected by
all factors that commonly affect microbial growth, i.e. carbon nitrogen
ratio, oxygen supply, moisture, pH, temperature, and nutrient levels]. A
measure of compost that is conducive for crop growth refers to maturity
representing relationship between compost quality and crop growth. On
the other hand stability refers to the aerobic biological activity,
representing relationship between compost quality and biological
activity within the compost.
To avoiding the boring and laborious process of
composting methodology, a simple, cost effective, lest laborious, short
time maturity, good quality, quick field response base technology may be
the substitute of urea, interesting, easy to operate and easy adoptive
to farmers. Time saving composting methodology, which readily releases
the nutrients, suitable production technology to Indian farmers, is the
hour.
Info courtey : tnau agritech portal
Monday, 7 March 2016
Mixed cropping, organic farming and water saving technologies help Naidu turn barren land into a green farm
At a time when farmer suicides continue unabated in Telangana State, a
62-year-old farmer, Gudivada Nagaratnam Naidu, defies the second
consecutive drought season, setting national records in paddy and
groundnut yields, and showing the way to prosperity with innovative
methods and intelligent farming.
“There is even a flourishing apple tree on my farm,” declares G.N.
Naidu – the altitude and rainfall demanding apple tree being symbolic of
what he has achieved on his 17-acre farm on what was once parched land
in Taramathipet village, about 25 km from Hyderabad.
Apart from the five acres set aside for paddy, Naidu grows papaya on
three acres – stacking up to 45 tonnes of this fruit seasonally –
besides flowers of 20 regular and exotic varieties which are transported
to Bengaluru every day, and a range of vegetables including brinjal,
okra, beans, tomato and green leafy veggies.
Add to that list: guava, banana, five varieties of mango, coconut,
almond, jamun and sapodilla, and you know why today, apart from
providing salaries to 12 employees in a massively debt-trapped
population, every month Naidu takes home close to a lakh rupees – along
with the coffee, pepper and cardamom he grows for personal use.
On this February morning he has just arrived at his farm at 8:30 a.m.
from his modern duplex home in Dilsukhnagar in Hyderabad. Usually he
takes the State-run bus, as does his 93-year-old mother Muni Ratnamma.
All along the way, through the Himayatnagar mandal of Ranga Reddy
district, the landscape is the barren and rocky land synonymous with the
Deccan plateau. Not a patch of green, or even a shrub. Certainly no
apple tree!
This was where it started in 1989. Naidu, a service engineer, along
with his wife Satyavathy, an office assistant, both working in
Associated Marketing Agencies, an electronic goods firm in Hyderabad,
resigned and made their way back to their roots.
Born in Balakrishnapuram village in Chittoor, Andhra Pradesh, Naidu had
followed the conventional trail of school, studying electronics in a
polytechnic, and finding work in the capital city. But it was farming
that called to him.
“When I first went with friends to survey the land, everyone discouraged
me,” Naidu says. “They said it was impossible to till in this rocky
terrain.” His friends were right, but Naidu was determined.
For want of money, men and machinery, he along with his wife and his
mother – just the three of them –pulled out rocks, weeds and shrubs, and
enriched the land with cow dung. It took all of six years and 300
lorries of rocks removed for the resolute trio to get the farm in shape.
Initially an acre was made fertile and the first investment was the
purchase of two cows – now they have 12. The rocks still persevere. So
does the gritty threesome. Satyavathy says, “Even now we keep removing
rocks that sprout from nowhere!”
The turnaround came when Naidu read about SRI cultivation in a journal.
SRI or the ‘System of Rice Intensification’ is an agro-ecological
methodology for increasing the productivity of irrigated rice by
managing plants, soil, water and nutrients.
A man of science, Naidu decide to adopt it, and learnt that
long-standing misconceptions are responsible for low yield of crops,
such as paddy. According to him, paddy requires water but is not a water
plant as is generally believed; secondly, farmers plant too deep in the
soil with their fingers. It works better to just place the plant on top
of the soil and allow the roots to search for water.
Precise distances between two plants and rows, and comparatively less
water ensures that “the root will search for water and absorb
micronutrients in the surrounding areas.”
Importantly, the number of seeds used per acre is far less in the SRI
method of cultivation than traditional ways; while conventional farmers
use 30 kg of seeds per acre, only 2 kg of seeds is required in the SRI
method.
“If one could collect the seeds wasted every year, we could feed the
nation for 22 days,” says Naidu in a rough but insightful and amazing
estimation. Naidu had made a good decision with SRI. It doubled his
yield of paddy. If 35 bags per acre is the maximum yield that a farmer
gets, Naidu managed 92 bags!.
This was in 2004. And there was no looking back.
News of Naidu’s farm and its golden harvest spread far and wide.
Accolades started pouring in from Chief Ministers and Union ministers.
In the process thanks to the spotlight on it, Taramathipet village got
good tar roads when the then Chief Minister of Andhra Pradesh, Late Y.S.
Rajasekhara Reddy, visited Naidu’s farm.
Agricultural scientists thronged to the farm – more than 40 scientists
from as many countries. Not just that, in 2006 the State government
chose Naidu to interact with US President, George W. Bush, who visited
the then united Andhra Pradesh, where Naidu explained SRI cultivation to
him.
This season, for want of water and electricity, Naidu is not
cultivating paddy; instead he is relying on the fruit, vegetables and
floriculture to assure him and his team of a dozen workers financial
stability.
“Mixed cropping assures farmers a continuous income,” Naidu says. “If I
were to depend on just paddy, I too would have been in trouble.” His
use of mixed cropping, organic farming and dry-land water saving
technologies has paid off. Naidu does not use pesticides and
fertilizers; cow dung and neem cakes are enough to replenish the soil.
Naidu’s agricultural philosophy and methods have become an inspiration.
He is most sought after to share his rich experiences at agricultural
universities and research centres. Till date he has trained more than
50,000 students across India in the farming practices he employs.
In India he has delivered lectures in farming communities in Gujarat,
Karnataka, Maharashtra, Uttar Pradesh, Uttaranchal, Madhya Pradesh and
Haryana, to name a few, and also in South Africa, Ethiopia, Bangladesh,
Malaysia, Thailand, Singapore and China, among other countries.
He has bagged nearly 300 awards in the State and in the country,
besides international honours such as a certificate of appreciation from
the Association of Land Reforms and Development, Dhaka, Bangladesh in
2007, a letter of honour from ICRISAT (International Crops Research
Institute for the Semi-Arid Tropics) in 2008 for implementing organic
farming practices in groundnut cultivation and generating a record yield
of 95-110 kg pods from 2 kg seeds, and the best SRI farmer award from
WWF Netherlands.
In an agriculturally bleak State where 2,000 farmer suicides were
reported in the last two years, Naidu stands as an affirmation of life
and accomplishment, grit and determination. “I want to make impossible
possible,” Naidu says. And he has.
The three-foot apple tree bears testimony to this.
Article and image courtesy : .theweekendleader.com
பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பு
Image courtesy : wikipedia |
பண்ணைகளில் பல வகையான இலைச்சருகுகள், மாட்டுத் தொழுவ
கழிவு, பயிர்க்கழிவுகள் உள்ளன. இவற்றை புளூரோட்டஸ் பூஞ்சானம் உதவியுடன்
மக்கச் செய்து, எருவாக்கி மண்ணில் இடுவதால், மண் வளத்தைப் பாதுகாப்பது
மட்டுமின்றி, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டச் சத்துகள் மண்ணில்
சேர்க்கப்படுகின்றன.
தேவையான பொருள்கள்: பண்ணைக்கழிவு ஆயிரம் கிலோ, யூரியா
50 கிலோ, புளூரோட்டஸ் ஒரு கிலோ, சாணிப்பால் (20 கிலோ சாணம், 60 லிட்டர்
தண்ணீர்).
செய்முறை: ஒரு டன் பண்ணைக் கழிவை 10 பாகங்களாகப்
பிரித்து நிழலான மேட்டுப்பாங்கான இடத்தில் (5 மீட்டர் ஷ் 25 மீட்டர்) 100
கிலோ கழிவை படுக்கையாகப் பரப்பி, அதன் மேல் 200 கிராம் புளூரோட்டஸ்
காளான்வித்தை சீராக இட வேண்டும்.அதற்கு மேல் 100 பண்ணைக் கிலோ கழிவை பரப்பி 2 கிலோ
யூரியாவை சீராக இட வேண்டும். அதன் மேல் தண்ணீர் மற்றும் சாணிப்பால கலந்து
தெளிக்க வேண்டும்.
இதேபோல், பண்ணை கழிவு புளூரோட்டஸ் காளான்வித்து, யூரியா
மற்றும் சாணிப்பால் இவற்றை 10 அடுக்குகள் வரும் வரை மாற்றி மாற்றி அடுக்கி
ஈரம் காயாதவாறு தினமும் தண்ணீர் தெளித்து வரவேண்டும்.
15 நாள்களுக்கு ஒரு முறை நீர் தெளித்து நன்கு கிளறி விட
வேண்டும். நன்கு மக்கிய கம்போஸ்ட் உரம் 8 வாரங்களில் தயாராகி விடும்.
இதனைப் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம்.நன்றி : தினமணி
Saturday, 5 March 2016
Dyspepsia tendency : cumin (குன்மம் போக்கும் சீரகம்)
Image courtesy : wikipedia |
சீரகம் என்ற பெயரை சொன்னவுடன் அதன் பயனை தெரிந்து கொள்ளலாம். சீர் அகம். உடலை சீராக வைத்திருக்க உதவிடும் ஒரு கடை சரக்கு. நாள்தோறும் சமயலுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது ஒரு மூலிகை என்பதே பலருக்கு தெரிவதில்லை. குன்மம் போக்குதல், வயிறு வாயு அகற்றுதல், காசத்தை குணமாகுதல், செரிமானத்தை அதிகரித்தல், காமாலை போகுதல், சிறு நீரை பெருக்குதல், திசுக்களை இறுக செய்தல் மாதவிடாய் தூண்டுதல், மார்புவலி, கண்நோய் போக்குதல் உள்ளிட்ட நோய்களை போக்கம் குணங்களை கொண்டது.
இதில் சீரகம், கருஞ்சீரகம், காட்டுசீரகம், பெருஞ்சீரகம் என பலவகைகள் உண்டு. தமிழகத்தின் வளமான பகுதிகளில் வளர்கிறது. சீரகத்தை நாட்டுசர்க்கரையுடன் கலந்து நாள்தோறும் விடாமல் சாப்பிட்டுவந்தால் தேகம் வன்மை பெறும். 34 கிராம் சீரகத்தை 1400 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி சீரகம் வெடித்து பதத்தில் வடித்து கொள்ளவும். இதை தலையில் தேய்த்து மூழ்கிவர கண்நோய், மயக்கம், வாந்தி, தலைவலி, மந்தம் முதலியவை நீங்கும்.
சீரகதிதை நிழலில் காயவைத்து பொடித்து தேன் அல்லது பாலில் காலை மாலை சப்பிட பித்தம், வாயு, சீதக்கழிச்சல், செரியாக்கழிச்சல் நீங்ககும். சீரகத்தூளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட இருமல் நோய் விலகும். சீரகம் 200 கிராம் உலர்ந்த கற்றாழை 170 கிராம் பனை வெல்லம் 170 கிராம் எடுத்து பசும்பால் நெய் தேவையான அளவு சேர்த்து கிண்டி சாப்பிட நீர்ச்சுருக்கு, எரிவு, வெப்பம், அஜீரணம், கண்ணெரிவு, கைகால் உடல் எரிச்சல் ஆசனக்கடுப்பு, மலக்கட்டு நீங்கும்.
சீரகத்தை புடைத்து தூய்மையாக்கி 170 கிராம் எடுத்து கொள்ளவேண்டும். அதனுடன் ஏலம், சுக்கு, திப்பிலி, மிளகு, கோட்டம், நெல்லிமுள்ளி, நெற்பொரி, வில்வப்பழதோடு இவைகளின் பொடி வகைக்கு 8 கிராம் சேர்த்து அதனை ஒன்றாக கலந்து அதன் அளவுக்கு சர்க்கரை சேர்த்து 4 கிராம் முதல் 8 கிராம் வரை காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் வயிற்றுவலி, வாயுநோய், ஈரல்நோய், காசம், கல்லடைப்பு, இரைப்பு, கம்மல் வலிநோய்கள் நீங்கும்.
தூய்மை செய்யப்பட்ட சீரகம் 250 கிராம் எடுத்து அது மூழ்கும் அளவு எழுமிச்சை சாறு, நெல்லிச்சாறு, இஞ்சிசாற்றில் தனித்தனியாக மும்மூன்று முறை ஊறவைத்து பின்பு அதை நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை சாப்பிட்டுவர செரியாமை, சுவையின்மை, பித்தமயக்கம், கண்ணெரிச்சல், வயிற்றுவலி, மூலக்கொதிப்பு, சீதக்கழிச்சல் நீங்கும். உடல் சூடு தணியும்.
சீரகத்தை கையாந்தகரைச்சாற்றில் ஊறப்போட்டு சூரணம் செய்து 4 கிராம் பொடியுடன் சர்க்கரை, சுக்கு தலா 2 கிராம் சேர்த்து மூன்றையும் ஒன்றாக கலந்து காலை மாலை சாப்பிட காமாலை, வாயு, உட்கரம் தீரும். சீரகம், சுக்கு, ஏலம், நெல்லி முள்ளி பொடி ஒரு நிறயாய் எடுத்து அதில் பாதியளவு சர்க்கரை சேர்த்து மூன்றுவிரல் அளவு காலை மாலை சாப்பிட தீக்குற்றம் தணியும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் வைத்து சாப்பிட எரிகுன்மம் என்ற வயிற்றுஎரிச்சல் நோய் நீங்கும்.
சீரகம், குறுந்தொட்டி வேர், ஓரெடை கூட்டிக்குடிநீர் செய்து மூன்று நாள் சாப்பிட குளிர்காய்ச்சல் நீங்கும். சீரகம் 51 கிராம் எடுத்து எழுமிச்சை பழச்சாற்றில் அரைத்து நல்ல வெல்லம் 17 கிராம் சேர்த்து பிசைந்து புதுச்சட்டியில் அப்பி 3 நாள் வெயிலில் காயவைத்து எடுத்து ஒரு சிட்டிகை அளவில் காலை மாலை 10 நாள் சாப்பிட வெட்டை, கைகால் குடைச்சல், எரிச்சல், குணமாகும்.
34 கிராம் சீரகத்தை வல்லாரைச் சாற்றில் 4 நாள் ஊறவைத்து நிழலில் காயவைத்து பசும்பால் விட்டு மைய அரைத்து பசும் வெண்ணெயில் கலந்து ஒரு நாள் ஊறவைத்து காய்ச்சி அதில் 340 கிராம் கற்கண்டு சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு 8 கிராம் முதல் 16 கிராம் வரை சாப்பிட பித்தம், வயிற்றுவலி, வாந்தி, அக்கனி மந்தம், விக்கல் நீங்கும். உணவின் சுவைக்கு பயன்படுத்தப்படும் கடைசரக்கு தானே என்றிடாமல் நமது முன்னோர்கள் சொல்லிவைத்த முறைப்படி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.
நன்றி : தினகரன்
ஏன் வீழ்ந்தன நம் தானியங்கள்? (தி இந்து கட்டுரை)
‘கருங்கால்
வரகே இருங்கதிர்த்தினையே
சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கல்லது உணவும் இல்லை'
- என்று மாங்குடிக் கிழாரால் (புறநானூறு: 335) உயர்த்திக் கூறப்படும் வரகு,
தினை போன்ற தவசங்கள் (தானியங்கள்), தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி)
நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை. இன்றைய காலகட்டத்தில் வெறுத்து
ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட இவை, பல பன்னாட்டு நிறுவனங்களால் ஊட்ட
மாவுக்காகவும், ஊட்டக் குடிநீராகவும் (Health Drinks) விரும்பி
வாங்கப்படுகின்றன.
தானியங்களைப் பொறுத்த அளவில் நஞ்சை (நன்செய்) நிலத்தில் விளைபவை என்றும்
புஞ்சை (புன்செய்) நிலத்தில் விளைபவை என்றும் பொதுவாகப்
பிரிக்கப்படுகின்றன. ஆறுகள், குளங்களின் வழியே நீரைப் பெற்று உறுதியான பாசன
வசதியைக் கொண்ட நிலங்களை, நஞ்சை நிலங்கள் எனலாம். இங்கு விளையும்
தானியங்கள் மிகுந்த நீரை எடுத்துக்கொண்டு அதிக அளவு விளைச்சலைக்
கொடுக்கும். நெல், கோதுமை, மொக்கைச் சோளம் எனப்படும் மக்காச் சோளம் ஆகியன
நன்செய்க்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுப் பன்னெடுங்காலமாக
விளைவிக்கப்படுகின்றன.
பாதிக்கு மேற்பட்ட உணவு
வீரிய விதைகள் எனப்படும் ஒட்டு விதை ஆராய்ச்சியும் இந்தப்
பயிரினங்களில்தான் நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம்
முழுமைக்கும் பெருமளவு உணவை வழங்குவது என்னவோ, மானாவாரி வேளாண்மைப்
பயிர்களே. குறிப்பாக, இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட உணவு, மானாவாரி
நிலப்பரப்பில் இருந்தே கிடைக்கிறது. அதாவது இந்தியாவில் மொத்த உணவு தானிய
விளைச்சல் பரப்பான 14 கோடி ஹெக்டேர் பரப்பளவில் 8.5 கோடி ஹெக்டேர், அதாவது
65 விழுக்காடு நிலத்தில் உணவு தானியங்களே விளைகின்றன.
மானாவாரி நிலங்களுக்கே உரிய புஞ்சைத் தானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு,
வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி போன்றவை மிகக் குறைந்த
மழைநீரில் வளர்ந்து விளைச்சல் தருபவை. இவற்றில்கூட வரகு, சாமை, தினை,
குதிரைவாலி, காடைக்கண்ணி ஆகிய ஐந்தும் சிறுபுஞ்சைத் தானியங்கள் (minor
millets) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை அருந்தானியங்கள் என்றும்
அழைக்கலாம். ஏனெனில் அவை அரியவையாகவும், அருமையானவையாகவும் இருப்பதுதான்.
குறைந்த நீரே போதும்
உண்மையில் இவை சிறுதானியங்களன்று, பெருமைக்குரிய தானியங்கள். ஏனெனில்
இவற்றில் இருக்கும் ஊட்டங்கள் மிகச் சிறப்பானவை. மிகக் குறைந்த நீர், மிக
எளிய தொழில்நுட்பம், மிகக் குறைந்த இடுபொருள் செலவு, மிக அதிக ஊட்டம் என்று
எல்லா வகையான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தத் தானியங்களை நமது
வேளாண் அறிவியலாளர்களும், அரசுத் துறைகளும் புறக்கணித்துள்ளன.
குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 1,550 லிட்டர்,
அதேபோல ஒரு கிலோ கோதுமை விளைவிக்க 750 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால்,
புஞ்சைத் தானியங் களுக்கு இதில் 10-ல் ஒரு பங்கு நீர்கூடத் தேவையில்லை.
பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை.
ஆழ்துளைக் கிணறு மட்டுமல்ல திறந்த கிணறும் கூடத் தேவையில்லை. ஒரு கிலோ தினை
சாகுபடி செய்ய, எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற ஆய்வுகூட நடத்தப்படவில்லை
என்பதுதான் வேடிக்கை. இந்தத் தானியங்கள் மழை நீரை நம்பியே விளைகின்றன.
திட்டமிட்ட புறக்கணிப்பு
பசுமைப் புரட்சியால் பெரிதும் பாதிக்கப் பட்டவை இந்தப் புஞ்சைப்
பயிர்கள்தான். பசுமைப் புரட்சியில் நெல்லையும் கோதுமை யையும் குறிவைத்தே
ஆராய்ச்சிகள் நடந்தேறின. அத்துடன் அரிசிச் சோறு உண்பதே உயர்ந்த பண்பாடு
என்ற பரப்புரையும் விரிவாக்கப்பட்டது. குறிப்பிட்ட மேட்டுக்குடி மக்களின்
உணவாக இருந்த அரிசி, யாவருக்குமான உணவாக மாற்றப் பட்டது. பள்ளி உணவுத்
திட்டம், பொது வழங்கல் திட்டம் என்று யாவற்றிலும் அரிசியும் கோதுமையுமே
கொடுக்கப்பட்டன. ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள், சாகுபடிக்கான ஒதுக்கீடுகள்
என்று அளவற்ற பணம் இதில் முதலீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக மக்களின்
பயன்பாட்டில் இருந்து புஞ்சைத் தானியங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டன.
பழங்குடி மக்கள், ‘நாகரிகம்' தொடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் மட்டுமே
தானியங்களின் பயன்பாடு எஞ்சியிருந்தது. தமிழகத்தில் நாமக்கல், தருமபுரி,
மதுரை போன்ற மிக அரிதான இடங்களில் மட்டுமே சாமை, குதிரைவாலி, தினை போன்றவை
பயிரிடப்படுகின்றன. இன்றைக்கு மதுரைப் பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த
தானியங்களை விற்றுவிட்டு, நியாய விலைக் கடைகளில் ‘விலையில்லா' அரிசியை
வாங்கிச் சமைக்கின்றனர்.
இப்படிப் புறக்கணிக்கப்பட்ட தானியங்களால் ஏற்பட்ட சூழலியல், திணையியல்,
பொருளியல், பண்பாட்டியல் கேடுகளை இதுவரை யாரும் கணக்கில்
எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.
நன்றி : தி இந்து
நன்றி : தி இந்து
சேதாரமின்றி நெல் அவிக்கணும்!
Image & article courtesy : Dinamalar |
அவர் கூறியது: ஒரு ஏக்கர் நிலத்தில் நெல்சாகுபடி செய்கிறேன். நிலத்திலேயே ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கிறேன். அவற்றின் எருக்கள்தான் பயிருக்கு உரங்கள். வேறெந்த ரசாயனமும் சேர்ப்பதில்லை. 2 ஏக்கர் நிலத்தில் பழமரங்கள் வளர்கின்றன. 100க்கு 100 சதுர அடியில் குளம் அமைத்து கட்லா, மிர்கால், ரோகு ரகங்கள் வளர்க்கிறேன். கோழி என்றால் பிராய்லர் ரகமில்லை. பாரம்பரிய நாட்டுரகக் கோழிக் குஞ்சுகள் வளர்க்கிறேன்.
இரண்டு முறை நெல் சாகுபடி செய்து நெல்லை அப்படியே ரைஸ்மில்லுக்கு அனுப்பிவிட்டேன். குருணை அதிகமாக இருந்தது. இதை குறைப்பதற்கு மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தை அணுகினேன். அங்கே 'டபுள் பாய்லிங்' முறையில் நெல் அவிப்பதை தெரிந்து கொண்டேன். அதேபோல சொந்தமாக பாய்லர் தயாரித்தேன்.
சாதாரணமாக இட்லி அவிக்கும் முறைதான். பாய்லரின் அடியில் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தட்டு வைத்து 100 கிலோ நெல்லை கொட்ட வேண்டும். நடுவில் இரும்புக்குழாய், பக்கக்குழாய்களுடன் கம்பிபோன்ற துளைகள் இடப்பட்டிருக்கும். பாய்லரை மூடி அடுப்பை பற்ற வைத்தால் ஆவியின் மூலம் முக்கால் மணி நேரத்தில் 100 கிலோ நெல்லும் ஒரே சீராக வெந்துவிடும்.
தண்ணீரை வடிக்க வேண்டிய அவசியமில்லை. பக்கவாட்டில் உள்ள மதகை திறந்து நெல்லை வெளியே எடுத்தால் ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடும். நெல்லும் மண் இன்றி சுத்தமாக இருக்கும். ஒரு ஏக்கரில் விளைந்த நெல்லை இம்முறையில் எளிதாக அவித்து ரைஸ்மில்லுக்கு அனுப்பினேன்.
நுாறு கிலோவுக்கு அதிகபட்சமாக மூன்றுகிலோ அளவே குருணை கிடைக்கிறது. அரிசியை பட்டை தீட்டாததால் அதன் முனையில் உள்ள சத்துக்களும் குறைவதில்லை, என்றார். இவரிடம் பேச: 94431 49166.
நன்றி : தினமலர்
Friday, 4 March 2016
கறவை மாடுகளை சீராக கவனித்தால் கூடுதல் வருவாய்
Image & article courtesy : dinamani |
கால்நடை வளர்ப்பில் முக்கியமானது, அவற்றை நல்ல தரமான கன்றுகளைப் ஈன்ற வைப்பதேயாகும். அதற்கு சத்தான தீவனமும், முறையான கவனிப்பும் அவசியம். கன்றுகளை ஈனுவதற்கு முன்பிருந்தே மாட்டை நன்கு கவனித்தல் வேண்டும். இல்லையெனில், அந்த மாடுகள் ஈனும் கன்றும் மெலிந்து பலவீனமானஇருக்க நேரிடும். எனவே, கன்று ஈனுவதற்கு 6 முதல் 8 வாரங்களுக்கு முன்பிருந்தே சினை மாட்டுக்கு சிறந்த கவனிப்பு அவசியம்.
கன்றின் கவனிப்பு: கன்றை ஈன்ற உடனே அதன் வாயிலும், மூக்கிலும் போர்த்தியுள்ள கண்ணாடி போன்ற ஆடையை சுத்தம் செய்ய வேண்டும். தாய் மாடானது அதன் நாக்கினால் கன்றின் உடல் முழுவதும் சுத்தம் செய்யும். அவ்வாறு செய்யாவிடில், ஈரமற்ற துணி அல்லது சணல் பை கொண்டு கன்றினை சுத்தம் செய்து கன்றுக்கு சீரான சுவாசம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
அதன் வயிற்றிலும், நெஞ்சிலும் கையினால் அழுத்திவிட்டால் கன்று எளிதாக சுவாசிக்க இயலும். தொப்புள்கொடியை வயிற்றிலிருந்து 2 முதல் 5 செ.மீ. நீளம் விட்டு அறுத்து விட்டு டிஞ்சர் தடவி முடிந்துவிட வேண்டும்.
குட்டி தானாக எழுந்து சென்று தாய்ப்பால் அருந்த முடியவில்லை எனில், அதை தூக்கி விட்டு உதவி செய்யலாம். முடிந்தவரை 30-லிருந்து 45 நிமிடங்களுக்குள் எழுந்து சென்று தாய்ப்பால் குடிக்கச் செய்ய வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டும். ஈன்ற உடன் கன்றின் எடையை அளவிட வேண்டும். மாட்டின் காம்பினை நன்கு நீரினால் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். கன்றுக்குத் தேவையான படுக்கை வசதி அமைத்துத் தர வேண்டும்.
பிறந்த முதல் மூன்று நாள்களுக்கு கன்றுக்குத் தவறாமல் சீம்பால் அளிக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து கன்றுக்கு நல்ல தரமுள்ள பசுந்தீவனமும், 4 மாதத்துக்குப் பிறகு உலர்தீவனமும் அளிக்கலாம்.
பிற பராமரிப்புகள்: கன்றுகளை அடையாளம் காண நிரந்தர அல்லது தாற்காலிக அடையாளக் குறிகளைப் பயன்படுத்தலாம். காதின் அடிப்பகுதியில் எண்களையும், எழுத்துகளையும் பச்சை குத்தலாம் அல்லது உலோகக் காதணிகளை அணிவிக்கலாம்.
கன்றுகளை 3 மாதங்கள் வரை தனித்தனி கொட்டிலில் பராமரிக்க வேண்டும். மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை குழுவாக வளர்க்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு கன்றுகள், கிடாரிகளைத் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். கன்றுகளின் வளர்ச்சி வீதத்தை அறிய 6 மாதங்கள் வரை வாரம் ஒருமுறையும் அதன்பின்பு மாதம் ஒருமுறையும் எடை பார்த்தல் நலம்.
கன்றுகள் ஈன்றப்பட்ட முதல் மாதத்தில் வயிற்றுப்போக்கு, குடற்புழு, காய்ச்சல் போன்றவற்றால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும்.
எனவே, அவற்றை நல்ல வெதுவெதுப்பான சுகாதாரமான இடத்தில் வளர்த்தல் இறப்பைக் குறைக்கும். கிடாரிக் கன்றில் 4-க்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் அதை பிறந்த முதல் இரு மாதங்களுக்குள் நீக்கி விடுதல் வேண்டும். காளைக் கன்றுகள் 8 அல்லது 9 மாதங்களில் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும். கன்றுகளை தாய்ப் பசுவிடமிருந்து பிரித்து தனியே வளரப் பழக்க வேண்டும்.
பசுவின் வளர்ச்சி அது சாப்பிடும் பசுந்தீவனத்தைப் பொறுத்தே அமையும். அதேசமயம், தேவையான அளவு உலர்தீவனம் கொடுத்தல் அவசியம். அதன் முந்தைய பேறுகாலங்களில் கொழுப்பை விட புரோட்டீன் அதிகம் தேவைப்படுகிறது. திறந்த வெளிக் கொட்டில் அமைப்பே கிடாரிக்கு மிகவும் ஏற்றது.
முதல் நான்கு பருவங்களில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். எனினும் எந்த அளவு அதிக சதைப் பற்றுடனும், எடையுடனும் இருக்கிறதோ அந்த அளவுக்கு பால் அதிகமாக உற்பத்தி செய்ய முடியும். மாட்டுக்கு அது தின்னும் அளவுக்கு பசுந்தீவனமும் வாரத்துக்கு 2-3 கிலோ அடர் தீவனமும் அளித்தல் அவசியம்.
கறவை மாடுகளின் பராமரிப்பு: கறவை மாடுகளுக்குத் தீவனம் மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனம், உலர் தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம். தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே, 2.5 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனம் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். கறவை மாடுகளை மென்னையாகக் கையாளுதல் வேண்டும். அவை பயந்தால் பால் உற்பத்தி குறையும்.
பால் உற்பத்தி அளவை ஒவ்வொரு முறையும் பதிவேடுகளில் பதிவு செய்தால் அதன் உற்பத்தி திறனை அறிந்து கொள்ள உதவும். ஒவ்வொரு கறவை மாட்டுக்கும் தனித்தனிப் பதிவேடுகள் அவசியம்.
கலப்புத் தீவனத்தை பால் கறக்கும் முன்பும், அடர் தீவனத்தை பால் கறந்த பின்பும் அளித்தல் சிறந்தது. ஒரு சீரான இடைவெளியுடன் தண்ணீர் வழங்க வேண்டும். வைக்கோல் போன்ற உலர் தீவனங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கும்.
தினசரி பால் கறப்பது அவசியமாகும். ஒரு நாளைக்கு 3 முறை கறப்பது, பால் உற்பத்தியை அதிகரிக்கும். கறக்காமல் மடியிலேயே விடப்படும் பால், அதிகமாக பால் சுரப்பதைக் குறைக்கிறது. முடிந்தவரை முழு கையையும் பயன்படுத்திப் பால் கறக்க வேண்டும்.
எருமை மாடுகளை பால் கறக்குமுன் நன்கு கழுவினால் சுத்தமான பால் கிடைக்கும். தினசரி மாடுகளை குளிப்பாட்டுதல் உதிர்ந்த முடியை நீக்க உதவும். ஒவ்வொரு கறவைப் பருவத்துக்கும் இடையே 60-90 நாள்கள் இடைவெளி வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பால் தரும் நாள்கள் குறையும். சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.
சினை மாடுகளுக்கு 1.25 முதல் 1.75 கிலோ கலப்புத் தீவனம் அதிகமாகக் கொடுக்க வேண்டும். சினை மாட்டுத் தொழுவத்தின் தரை வழுக்குமாறு இருக்கக் கூடாது.
காளை மாடுகளின் பராமரிப்பு: வெற்றிகரமான இனவிருத்திக்கு காளைகளைச் சரியாகப் பராமரித்துத் தகுந்த ஊட்டமளிக்க வேண்டும். காளைகளை இனவிருத்திக்காகப் பராமரிக்கும்போது பால் உற்பத்தி, மூதாதையரின் உற்பத்தித் திறன், உடலியல், உடற்கூறு தோற்றம் முதலியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு வயதிலேயே காளைக் கன்றுகளை மற்ற கன்றுகளிலிருந்து பிரித்து, அவற்றுக்கு நல்ல புரோட்டீன் தாதுக்கள், வைட்டமின்கள் கொண்ட தீவனங்களை சரியான அளவில் அளிக்க வேண்டும்.
இனவிருத்திக் காளைகள் மிகவும் அதிக எடையுடன் இருந்தால், அவை சிறந்த விந்துகளை உற்பத்தி செய்யாது. பெரிய தலையுடன் திடகாத்திரமான உடம்புடன் பரந்த மார்பு இருக்க வேண்டும். மாடுகளில், காளைகள் 16 முதல் 18 வயதில் பருவம் அடையும்.
நன்றி : தினமணி
Thursday, 3 March 2016
Wednesday, 2 March 2016
Sukumar @ Sadhana Farm
Sukumar's daily attire at the Sadhana Farm to alleviate effects of solar radiation. |
நோயை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்
ராமநாதபுரம்: களைகள், நோயை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என, வேளாண்மைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.அவர்கள் கூறியதாவது:
பயிர் அறுவடைக்கு பின் நிலத்தில் ஆழமான வெடிப்புகள் ஏற்பட்டு
அடிமண் ஈரம் ஆவியாகிறது. இதனால் சாகுபடி சமயங்களில் மீண்டும் தண்ணீர்
பாய்ச்சும்போது அடியில் சென்றுவிடும். மேலும் உழவின்போது வளமான மேல் மண்
துகள்கள் வெடிப்புகள் வழியாக அடிமட்டத்திற்கு சென்றுவிடும்.இதனை
தடுக்க கோடை உழவு அவசியமாகிறது. இதன்மூலம் அதிக வெடிப்பு ஏற்படாமல் மண்
பொல, பொலவென்று இருக்கும். முன்பருவ விதைப்புக்கு உதவுகிறது. அடிமண் ஈரம்
நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது. அறுவடைக்குபின் எஞ்சியுள்ள கட்டை பயிர்கள்
மண்ணில் மூடப்பட்டு மக்கி விடுகிறது. இதனால் பூச்சி, நோய் தொல்லை
குறைகிறது. மேலும் கட்டை பயிர் உரமாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண் வளத்தை
அதிகரிக்கிறது. கோடை உழவு நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய
வேண்டும்.
கோடை உழவு செய்யாவிட்டால் களைகள் அதிகமாகும். அறுவடைக்கு பின் எஞ்சியுள்ள கட்டைப் பயிர்கள் பூச்சிகள், நோய் கிருமிகளின் உறவிடமாக மாறிவிடும். இதனால் பயிர்களை எளிதல் நோய் தாக்கும், என்றனர்.
நன்றி : தினமலர்
Image courtesy : wikipedia |
கோடை உழவு செய்யாவிட்டால் களைகள் அதிகமாகும். அறுவடைக்கு பின் எஞ்சியுள்ள கட்டைப் பயிர்கள் பூச்சிகள், நோய் கிருமிகளின் உறவிடமாக மாறிவிடும். இதனால் பயிர்களை எளிதல் நோய் தாக்கும், என்றனர்.
நன்றி : தினமலர்
Subscribe to:
Posts (Atom)