Thursday, 30 November 2017

Farm Pond : Rainwater harvesting

Rain water harvesting pond in our farm. The first picture was on 03 Nov, when it started filling up.
The second picture is of 06 Nov 2017, around 1600 hrs. The pond is brimming over. Just 4 days of intense NE monsoon. For the remaining period of the monsoon, this pond can not collect any more water.
You can imagine the quantum of water we can collect, save and percolate into the ground if we can have thousands of these, or even smaller ponds.
Picture as on 03 Nov 17
Picture as on 06 Nov 17



Saturday, 14 October 2017

CASUARINA

Introduction

SpeciesCasuraina equisetifolia
FamilyCasuarinaceae
Local Name
TamilSavukku
TeluguSaragudu
Kannada Sarve
Marathi Saru
OriyaJhabuke
Trade NameBeef wood
Image courtesy : Wikipedia

Origin

Casuarina is an exotic to mainland India. It was introduced in Karwar District in 1668.It occurs naturally in the Andaman’s, Bangladesh and Burma coast. Natural regeneration of the species is rarely seen and it has to be raised by planting only.

Description

Casuarina is a large fast growing evergreen tree with graceful appearance, resembles a feathery conifer. Bole  is  long and cylindrical.  In rare cases and in the interiors, there are instances of developing thick branches.  In  it is natural state it is gregarious, forming pure crops with little or no under growth except grass and sporadic shrubs.

The tree attains height up to 40 m with diameter of 60 cm (180 cm girth) often, buttressed at the base. It is  short lived;  its natural span of  life seldom exceeds 50 years. In less favorable localities, it turns misshapen and hollow beyond 25 years of age. The tree flowers generally twice a year during February–April and September– October.  Fruits (Cones) appear in June and December.  Variations in flowering and fruiting  may occur with localities.

Environmental Requirements

Temperature: Along the coastal regions, where Casuarina thrives, the temperature is extreme sometimes extending to 470C. Under inland conditions it tolerated extreme temperatures, but its growth is poor.

Rainfall: It grows well in both Southwest and North East monsoons. In peninsular India, the rainfall
is in between 900 to 3800 mm. Growth is poor in low rainfall areas.

Soil: Casuarina grows best in loose, fine coastal sands.It can grow well under inland conditions of well drained  sandy soils. It tolerates lateritic and red soils and also saline, alkaline and acidic conditions. The trees have  nitrogen fixing root nodules and hence dependability on nitrogen supplement is less.

Silvicultural Requirement 

Casuarina is a fast growing, light demanding species. It is very sensitive to excess soil moisture, fire and frost. It does not tolerate water logging for long. It does not tolerate drought  up to sapling stage, later with deep rooting, it can withstand drought.  It tolerates low temperature and shade.  As a general rule it does  not  coppice  but  can  with  stand  pollarding. Rare instances of natural regeneration and root suckers are noticed.  It improves soil fertility by virtue of its vigorous root nodulation with nitrifying bacteria.

Yield

Every part of the tree is useful, including needles as fuel.  The best yield of about  125 to 150 tons per hectare is possible with in three years at an espacement of 4 X 4 feet or 5 X 5 feet.  It is also possible to increase the yield through quality planting material coupled with irrigation and fertilization.

Intercropping

Agricultural crops can be raised in the first year with Casuarina especially groundnut and melons in sandy soils, sesame in red soils and pulses in heavy soils. 

Utility

Pulp  wood:
Casuarina is a good pulpwood species. Farmers are cultivating mostly this species for pulpwood. Yield and strength  properties of Casuarina pulp are reported satisfactory for wrapping paper and duplex paper. It makes good pulp by  use of neutral sulfite semi chemical process. The material with bark is used for pulping.

Fuel wood:
Casuarina is considered to be the best firewood in the world, burns even  when  green. Its calorific value is 4950  Cal/Kg and hence, it can be a source of bioenergy.

Timber:
 The sapwood is pale brown, heartwood dark reddish brown.  Timber is strong and heavy (average 850 kg/m3). It is liable to crack and split, not easy to saw and season.  It is used as poles, scaffolding, transmission lines and
 rafters. 

Medicinal:
 Bark  of Casuarina is a tonic and astringent useful in dysentery and diarrhea. Decoction of leaves and twigs is  used  in  colic  and  powdered  seed  in made  into  a  paste  and  applied  as  balm  for  headaches.  Bark  contains  6-18% tannin,  which  is  also  used  for  dyeing  wool  and  silk  fabrics and  for  toughening fishermen nets.  It also yields a resin. Needles of Casuarina have been used for preparing activated carbon by the zinc chloride method.

Avenue:
Casuarina forms a good avenue tree and most suitable for landscaping sea beaches.   It forms a good hedge plant and can be shaped to desired form.

Windbreak:
Casuarina with deep taproot can withstand cyclonic storms than any other species and is very useful as a windbreak and for sand dune stabilization.

Soil Improvement:
Casuarina develops  nitrogen  fixing  nodules  of  Frankia  species  on  the roots.  They fix considerable quantities of nitrogen in the soil and help to improve the soil nutrient status.

For contract farming, the following addressee can be contacted;
1) The Head (Environment), Sheshasayee  Paper  Board,  Erode.  Mobile: 9443340236.
2) The Manager (Plantations), Tamil  Nadu  Newsprints and  Papers Ltd, Mobile: 9442591411.

For further information; please contact
The Dean,
Forest College and Research Institute,
Tamil Nadu Agricultural university,
Mettupalayam, Tamil Nadu– 641 301.
Ph: 04254 – 22010, 222398, 227418.
Mobile: 09443505844.
Email: deanformtp@tnau.ac.in
Website: tnau.ac.in

Info courtesy : TNAU

Thursday, 7 September 2017

உரமாகும் பார்த்தீனியம்

பார்த்தீனியம்

கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
Image courtesy : Wikipedia



மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது பார்த்தீனியம் செடி. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும்.

இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்படியே இயற்கை உரமாக மாற்றலாம்

“முதலில் 6 அடிக்கு 4 அடி அளவுள்ள (தேவைக்கேற்ப நீள அகலங்களை மாற்றிக் கொள்ளலாம்.) 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில் வேருடன் பிடுங்கிய பார்த்தீனியச் செடிகளை போட வேண்டும். அத்துடன் கொழுஞ்சி, எருக்கன் இலை, வேப்பிலை மற்றும் கிடைக்கும் இலை தழைகளையும் கலந்து போட்டு இரண்டடி உயரத்திற்கு நிரப்பி, நன்கு மிதித்து அதன் மேல் சாணி மற்றும் கோமியக் கரைசல் தெளிக்க வேண்டும்.

அதன் மேல் மூன்று அங்குல அளவிற்கு மண் போட்டு, மீண்டும் இதே மாதிரி மூன்று நான்கு அடுக்குகள் போட்டு, மேலே மண் போட்டு மீண்டும் மூடி வைத்தால் ஓரிரு மாதங்களில் அற்புதமான இயற்கை உரம் தயாராகிவிடுகிறது.

இதில் மற்ற உரங்களில் கிடைப்பதை விட நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது. பயிர்களுக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்துக்களும் அதிக அளவில் இருப்பதால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கும்.

தென்னை, மா, எலுமிச்சை மரங்களுக்கு இடையில் 2அடிக்கு 2 அடி 2 அடி குழி வெட்டி அதில் பார்த்தீனியம் மற்றும் சாணிக் கரைசல் உள்ளிட்டவற்றை போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு மாதத்தில் அவை மக்கி விடும். மரத்தின் வேர்கள் அந்த உயிர்ச் சத்தை கிரகத்துக் கொண்டு நன்கு செழித்து வளர்வதுடன் அதன் காய்ப்புத் திறன் அதிகரிக்கும்”

பார்த்தீனியம் நச்சுக் களைச் செடி நன்கு உயரமாக வளர்ந்து ஆழமாக பரவும் வேர்களைக் கொண்டது. இதன் இலைகள் கேரட் இலைகளைப்போல இருக்கும். செடிகளின் நுனிப்பகுதியில் ஏராளமான வெள்ளை நிறப் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ஒவ்வொரு பூவிலும் ஏராளமான விதைகள் இருக்கும். விதைகள் காற்று, நீர் மூலம் பரவி முளைவிடும். இவை மழைக்காலத்தில் நன்கு வளர்ந்துவிடும்.

பொதுவாக சாலையோரங்கள், புறம்போக்கு நிலங்கள், தண்டவாளப் பகுதி, ஆற்றங்கரையோரம், கழிவுநீர் வாருகால், விளைநிலங்களில் அதிகம் காணப்படும்.

சுகாதாரக் கேடு

பார்த்தீனியத்தில் உள்ள "செஸ்கிடெர்பின் லேக்டோன்' என்ற வேதிப் பொருளால் மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, அரிப்பு, தோல் வியாதி, கண் வீக்கம், ஆஸ்துமா போன்ற உபாதைகள் ஏற்படும்.

விளை நிலங்களில் பாதிப்பு

பார்த்தீனியம் செடிகளின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் உள்ள "பினாலிக் அமிலம்' மற்ற செடிகளின் வளர்ச்சியைத் தடுத்து, அழிக்கும் வல்லமை கொண்டது. ஒரு செடியிலிருந்து 624 மில்லியன் மகரந்தத் தூள்கள் வெளிவந்து, காற்றில் பரவி இவை வளர்ச்சியடைவதுடன், மற்ற செடிகளின் பூக்களுக்குள் பரவி அவற்றின் காய்பிடிக்கும் தன்மையைப் பாதிக்கும். விளைநிலங்களில் இச் செடியின் வளர்ச்சியால் 50 சதவீதம்வரை மகசூல் இழப்பு நேரிடும்.

செடிகளை பிடுங்கி அழித்தல்

பார்த்தீனியத்தை இளந்தளிர் பருவத்திலேயே அகற்றி எரித்துவிட வேண்டும். இச்செடிகளைக் கையால் பிடுங்கி அழிக்கும்போது கண்டிப்பாக கையுறை, முக உறை அணிய வேண்டும். இதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்கலாம்.
சமுதாய நோக்குடன் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உதவியுடன் இச் செடிகளைப் பிடுங்கி எரிக்கலாம். மேலும், பூக்கும் பருவத்துக்கு முன்பும், மழைக்காலங்களிலும் அகற்றினால் இச்செடிகளின் பரவும் தன்மையைக் குறைக்கலாம்.
செவ்வந்தியை பயிர் சுழற்சி முறையில் பயிரிட்டு பார்த்தீனிய களையைக் கட்டுப்படுத்தலாம். அடர் அவரை, துத்திச் செடிகளை வளரச் செய்வதன் மூலமும், பார்த்தீனியம் அல்லாத காய்ந்த பிற செடிகளை நிலப்பரப்பில் பரப்பி வைப்பதன் மூலமும் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் முறை

சைகோகிராமா பைகலரோடா என்ற மெக்சிகன் வண்டும், அவற்றின் புழுக்களும் பார்த்தீனியம் செடியின் இலைகள், பூக்களைத் தின்னும். எனவே, இந்த வண்டுகளை மழைக்காலங்களில் குறிப்பாக, ஜூன் முதல் பிப்ரவரி வரை பார்த்தீனியம் செடிகளில் இட வேண்டும்.

மண்புழு உரம் தயாரித்தல்

பூக்கும் முன்னர் பார்த்தீனியம் களைகளைச் சேகரித்து, அவற்றை 5-10 செமீ அளவில் நீளவாட்டில் நறுக்கி 10 செமீ சுற்றளவில் 10 செமீ உயரத்துக்கு கீழிருந்து 5 அடுக்குகளாக அடுக்கி, அதன் மேல் 10 சதம் மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாள்கள் மக்குவதற்கு வைக்க வேண்டும். 45 முதல் 60 நாள்களில் மண்புழு உரம் கிடைக்கும்.

கம்போஸ்ட் தயாரித்தல்

இச்செடியை பூக்கும் முன்னர் ஒரு டன் அளவுக்கு சேகரித்து 7 செமீ முதல் 10 செமீ வரை சிறு துண்டுகளாக நறுக்கி, வடிகால் வசதி, நிழல் உள்ள உயரமான இடத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு 10 செமீ அடர்த்தியாக அடுக்குகளாக பரப்ப வேண்டும். இதன் மீது 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண மருந்து, 5 கிலோ யூரியாவைக் கரைத்து பரவலாக தெளிக்க வேண்டும். ஈரப்பதம் 50 முதல் 60 சதம்வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இது, 40 முதல் 45 நாள்களில் கம்போஸ்டாக கிடைக்கும். இது, பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி.



Monday, 28 August 2017

கால்நடை வளர்ப்புக்கு உதவும் அரசு அமைப்புகள்

மாடுகளுக்கு…
அயலின கால்நடைப் பெருக்கப் பண்ணை, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர். தொ.பே. 04372 – 244844 மாவட்ட கால்நடைப் பண்ணை, உதகமண்டலம், நீலகிரி. தொ.பே. 0423 – 2444064 மாவட்ட கால்நடைப் பண்ணை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் தொ.பே. 94450 32535
நாட்டுப் பசு வகைகளுக்கு…
கால்நடைப் பண்ணை, கொருக்கை, திருவாரூர் தொ.பே. 04369 - 295565
வெள்ளாடு, செம்மறி ஆடு வகைகளுக்கு…
மாவட்ட கால்நடைப் பண்ணை, செட்டிநாடு, சிவகங்கை மாவட்டம் தொ.பே. 04565 – 283275 ஆட்டுப் பண்ணை, சின்னசேலம் விழுப்புரம் மாவட்டம்,
தொ.பே. 04282 – 260041
ஆட்டுப் பண்ணை, முகுந்தராயபுரம் வேலூர் மாவட்டம், கைப்பேசி: 94450 – 32529

ஆட்டுப் பண்ணை, சாத்தூர், விருதுநகர் மாவட்டம்,
தொ.பே. 04562 – 292666
Image courtesy : Wikipedia
கோழி வகைகளுக்கு…
மாவட்ட கால்நடைப் பண்ணை, அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி தொ.பே. 0462 – 2338759 கோழிப் பண்ணை, காட்டுப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் தொ.பே. 044 – 27452371
பன்றி வகைகளுக்கு…
மாவட்ட கால்நடைப் பண்ணை, ஒசூர், கிருஷ்ணகிரி தொ.பே. 04344 – 262632 மாவட்ட கால்நடைப் பண்ணை, புதுக்கோட்டை, தொ.பே. 04322 – 270395

நன்றி தி இந்து

Saturday, 3 June 2017

Pest and Disease Management-Organic Ecosystem : Avoidance Techniques

Avoidance Techniques

To manage pests and diseases effectively, producers need to understand the biology and growth habits of both pest and crop. The type and concentration of pests are often responses to previous crop history, pest life cycles, soil conditions and local weather patterns.

Crop Rotations

Crop rotation is central to all sustainable farming systems. It is an extremely effective way to minimize most pest problems while maintaining and enhancing soil structure and fertility. Diversity is the key to a successful Crop rotation program. It involves:
  • rotating early-seeded, late-seeded and fall-seeded crops

  • rotating between various crop types, such as annual, winter annual, perennial, grass and broadleaf crops; each of these plant groups has specific rooting habits, competitive abilities, nutrient and moisture requirements. (True diversity does not include different species within the same family - for example, wheat, oats and barley are all species of annual cereals.)
  • incorporating green manure crops, into the soil to suppress pests, disrupt their life cycles and to provide the additional benefits of fixing nitrogen and improving soil properties

  • managing the frequency with which a crop is grown within a rotation

  • maintaining the rotation's diversified habitat, which provides parasites and predators of pests with alternative sources of food, shelter and breeding sites

  • planting similar crop species as far apart as possible. Insects such as wheat midge and Colorado potato beetle, for example, are drawn to particular host crops and may over winter in or near the previous host crops. With large distances to move to get to the successive crop, the insects' arrival may be delayed. The number that find the crop may be reduced as well.
Diverse rotations are particularly effective in regulating flea beetles, cabbage butterfly, wheat midge, wheat stem maggot and wheat stem sawfly.


Rotations are also effective in controlling soil-and stubble-borne diseases. The success of rotations in preventing disease depends on many factors, including the ability of a pathogen to survive without its host and the pathogen's host range. Those with a wide range of hosts will be controlled less successfully. For example, sclerotinia stem-rot is a common disease in conventionally grown canola on the Prairies, but it can also infect at least a halfdozen other field crops. Rotations will not have much effect on pathogens that live indefinitely in the soil, but will shorten the life span of pathogens that can survive only brief periods apart from their hosts. Other situations that limit the benefit of crop rotations include: the transmission of pathogens via seed, the presence of susceptible weeds and volunteer crops that harbour pathogens, and the invasion of pathogens by wind and other means.

Rotations should be used with other cultural practices to achieve the greatest benefit.


Field Sanitation/Crop Residue Management

Reducing or removing crop residues and alternate host sites can be used to control some insects and many diseases. Incorporating the residue into the soil hastens the destruction of disease pathogens by beneficial fungi and bacteria. Burying diseased plant mate rial in this manner also reduces the movement of spores by wind.


Insects most affected by tillage will be those that overwinter in crop residue (for example, European corn borer and wheat stem sawfly) and those that lay their eggs in the residue. Conversely, fields where residue has not been disturbed may have higher levels of some beneficial predaceous insects, which may reduce levels of insect pests such as root maggots in canola. Reduced or zero-tillage may also reduce the damage by certain pests, as the crop residue creates a micro-climate less preferred by some insects (for example, flea beetles).


It is important to maintain a balance between crop sanitation and soil conservation. Lighter soils and those prone to wind and water erosion may require postponing tillage until just before seeding to ensure stubble cover for as long as possible.

Alternate host sites, such as field margins, fence lines, pastures, shelterbelts and riparian areas, will usually contain weeds and natural vegetation that may serve as reservoirs for disease, vectors of disease and insect pests. Left uncontrolled, these insect and disease pests can be transmitted to healthy crop plants. Insects may use these plants as alternate habitat until an appropriate crop occurs in a nearby field. However, these areas may also host many beneficial insects and predators, therefore the grower must carefully assess the potential threat from pest insects in these areas before mowing or removing any plants. The ecological importance of areas such as sloughs, wooded bluffs, road allowances, railroad rights-of-way, abandoned farmyards and schoolyards must also be included in long-range planning

Seed Quality

The use of high-quality seed is especially important in preventing disease. The seed supply should be free of smut, ergot bodies or other sclerotia, and free of kernels showing symptoms of Fusarium head blight infection.




Seed analysis by a reputable seed testing laboratory will help determine specific diseases in the seed supply.

Relatively few diseases are exclusively seed-borne, and it is more common for pathogens to be transmitted from soil, stubble, or wind, as well as with the seed.

Planting physically sound seed is also important. In crops such as flax, rye and pulses, a crack in the seed coat may serve as an entry point for soil-borne micro-organisms that rot the seed once it is planted.


Image courtesy : wikipedia

Weed Management

Although weeds need to be controlled to reduce their impact on crop yield and quality, a field completely free of weeds is not necessarily the best objective. In many cases, weeds provide food and shelter for beneficial insects. Parasitic wasps, for example, are attracted to certain weeds with small flowers. Field experience has shown that the number of predators attacking insects increases and the number of aphids and leafhoppers decreases on certain crops as the diversity of weeds (that act as host plants) increases. Research has shown that outbreaks of certain crop insect pests are more likely in weed-free fields. 


Insects that are generalist feeders, such as beet webworm, thistle caterpillars and grasshoppers, may prefer to feed on weeds rather than some crops, only damaging the crop after the weeds are eaten. 
 
Each field situation should be considered separately, as weed competition must always be taken into account. Sometimes mowing weeds at the edge of the field results in beneficial organisms moving into the crop where they are needed.

Forecasting

Producers should pay attention to the forecasts for various pest and disease infestations for each crop year. Maps of these forecasts are usually available for many of the major destructive insects such as grasshoppers and wheat midge, as well as some diseases . Agro meteorological warning and forecast can help in this way.

Record-Keeping

Keeping diligent field records can provide very useful information. A complete history of each field should include any insect or disease infestations, which management methods worked and which did not, and a list of management techniques to try in the future.

Info courtesy : TNAU Agritech Portal

Saturday, 27 May 2017

தொழிற்சாலைகளில் முருங்கையின் பயன்பாடுகள்.

தொழிற்சாலைகளில் முருங்கையின் பயன்பாடுகள்.

மொருங்கேசியே குடும்பத்தைச் சார்ந்த மொரிங்கா ஒலிஃபெரா எனும் தாவரவியல் பெயர் கொண்ட முருங்கை, ஒரு மென்தண்டுகளுடைய அழகான தாவரமாகும். இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்பயிர் வட இந்தியாவில் இமயமலையை சார்ந்த பகுதிகளும், உலகளவில் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்கின்றது. இதன் சத்து நிறைந்த கீரைக்காகவும் மென்மையான காய்களுக்காகவும் இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயிரடப்படுகின்றது. இதன் மணம் நிறைந்த காய்கள் மிகப்பிரபலமானவை. தென்னிந்தியாவில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட வீடுகளில் வீட்டுத் தோட்டப்பயிராக இது வளர்க்கப்படுகிறது. வேளாண்மை, மருத்துவம் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளால், முருங்கை தொன்மை வாய்ந்த இலக்கிய குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. (இராஜாங்கம் மற்றும் குழு, 2001).


Image courtesy : Wikipedia
தொழிற்சாலையில் முருங்கையின் பயன்பாடுகள்
முருங்கை எண்ணைய்
முருங்கையில் தோல் நீக்கப்பட்ட விதையில் 42 சதம் எண்ணைய் இருக்கிறது. எண்ணைய் தெளிவான மஞ்சள் நிறமுடையது. இந்த எண்ணைய் மிகவும் நுட்பமான கடிகாரம் போன்ற இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் இசைவு எண்ணையாகச் செயல்படுகிறது. முருங்கை எண்ணைய் மிகக் குறைந்த அளவே வழவழப்புடையதாக இருப்பதால் எளிதில் கெட்டுப் போவதில்லை. (பெராரோ மற்றும் பெராரோ, 1990, இராமசந்திரன் மற்றும் குழு, 1980). முருங்கை எண்ணெய் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. எளிதில் ஆவியாகக் கூடிய வேதிப் பொருட்களை உறிஞ்சி, அதிக நேரம் தக்க வைத்துக் கொள்ளும் குணமுடையதால், முருங்கை எண்ணெய் 'சென்ட்' எனப்படும் வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. முருங்கை எண்ணையில் 0.5 முதல் 3.0 சதம் வரை எளிய கொழுப்பு அமிலம் உள்ளது. முருங்கை விதை எண்ணையில் 13 சதம் நிறைவடைந்த கொழுப்பு அமிலமும் 82 சதம் நிறைவில்லாக் கொழுப்பு அமிலமும் உள்ளன. இது அதிகபட்சமாக 70 சதம் ஒலியிக் அமிலம் கொண்டுள்ளது. ஆனால் பிற காய்கறி எண்ணையில் 40 சதம் மட்டுமே ஒலியிக் அமிலம் இருக்கிறது.

நீரைத் தூய்மைப்படுத்துதல்.
முருங்கை விதையில் 30-42 சதம் வரை எண்ணைய் உள்ளது. இதன் புண்ணாக்கு புரதச் சத்து நிறைந்தது ஆகும். இந்தப் புரதத்தில் சுமார் 1 சதவீதம் 7-17 கி டால்டன் மூலக்கூறு எடை கொண்ட நேர்மின் திறனுடைய பாலி எலக்ட்ரோலைட்டுகள் ஆகும். இந்த நேர்மின் திறனுடைய பாலி எலக்ட்ரோலைட்டுகள் மண் துகள்கள் மற்றும் அசுத்தம் நிறைந்த நீரில் உள்ள எதிர் மின் சுமையுடைய கூழ்மத்துகள்களை உறிஞ்சுவதால் தண்ணீரைத் தூய்மைப்படுத்துகின்றன. எனவே முருங்கைப்புரதத்தினை குடிநீரைச் சுத்தப்படுத்தவும், எண்ணைய் பொருட்களைத் தூய்மைப்படுத்தவும், குளிர்பானங்களில் உள்ள நார்ப்பொருட்களைப் பிரித்தெடுக்கவும் ஒரு சிறந்த பக்க விளைவில்லாத இயற்கை பிரிப்பானாகப் பயன்படுத்தலாம். ஆனால் அலுமினா போன்ற செயற்கைப் பிரிப்பான்கள் விஷத்தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற செயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முறையான பயிற்சியும் அதிக செலவும் தேவைப்படுகின்றது.

சீனாவில் பல்லாண்டுகளாக முருங்கைப் புரதப்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின்போது, இக்குறிப்புகள் பல்வேறு நாடுகளிலும் பரவின, எகிப்திலும் சூடான் நாட்டிலும் குடிநீராகப் பயன்படுத்தப்பட்ட நைல் நதி நீரைத் தூய்மைப்படுத்தி முருங்கைப் புரதம் பயன்படுத்தப்பட்டது.

முருங்கை விதையில் தோலுறித்தபின், கொட்டைகளைப் பொடியாக்கி, இந்தப் பொடியை அசுத்தமான நீரில் சேகரித்து, 5 நிமிடம் வரை நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து, சுத்தமான துணியில் வடிகட்டினால் தூய்மையான நீர் கிடைக்கும். மாற்றுவழியாக, ஒரு துணியில் முருங்கைவிதைப் பொடியைக் கட்டி, அதனை தூய்மைப்படுத்தப்பட வேண்டிய நீரில் இரவு முழுவதும் ஊறவிடவேண்டும். பின்பு பொடி கொண்ட துணியை நீக்கிவிட்டு, நீரை வடிகட்டினால் தூய்மையான நீரைப்பெறலாம். இம்முறையால் சுமார் 99 சதம் வரை அசுத்தங்களை நீக்க முடியம். சுமாரான அசுத்தமுடைய நீர் எனில் ஒரு லிட்டர் நீருக்கு ஒரே ஒரு விதையும், மிகவும் அசுத்தமுள்ள நீருக்கு இரண்டு விதைகளும் தேவைப்படும். எண்ணைய் நீக்கப்பட்ட புண்ணாக்கினை நீரைத் தூய்மைப்படுத்துவதற்கு உபயோகிக்கலாம்.

சமீப காலத்தில் கழிவு நீரைத் தூய்மைப்படுத்துவதற்கு ஏற்ற மலிவான உள்ளூர் பொருட்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் கழிவு நீர்த் தூய்மைப்படுத்தும் முறையில் தாதுப் பொருட்கள் சரியாக நீக்கப்படாமை, அதிக செலவு மற்றும் அதிக சக்தித் தேவை போன்ற இடர்பாடுகளால், முருங்கைப் பொடி போன்ற இயற்கைப் பொருட்களின் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது. தற்போது ஆராய்ச்சி குறிப்புகள் மூலம் நீர் நிலைகளில் உள்ள கடினமான தாதுப்பொருட்கள் மற்றும் ஆவியாகக்கூடிய அங்ககச் சேர்மங்களை நீக்குதிலின் முருங்கையின் விதைகளும் காய்களும் எவ்விதம் பயன்படுகின்றன எனத் தெரிய வருகிறது.
(அக்கார் மற்றும் குழு 2006, கர்மா மற்றும் குழு 2006).

முருங்கை இலைப்பொடி
முருங்கை இலைப்பொடி, கேப்சூல்களாக விற்பனை செய்யப்படுகின்றது. இதற்கென தனித் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இந்தியாவிலும், வெளிநாடுவாழ் இந்திய மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் முருங்கையிலைப் பொடி கலந்த சாம்பார் பொடிகள் பிரபலமடைந்து வருகின்றன.

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக வெளியீடான Moringa book - Tamil லிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது.  

Sunday, 7 May 2017

முருங்கையில் பூ உயிரியியல் மற்றும் வீரிய ஒட்டுத்தன்மை

முருங்கையில் பூ உயிரியியல் மற்றும் வீரிய ஒட்டுத்தன்மை


பூ உயிரியியல்
முருங்கை பூக்கள் வெள்ளை நிறத்தில் மணமுடையதாகவும் பூக்காம்புகள் நீளமாகவும் படர்ந்தும் காணப்படும். பூவிலைக் காம்புகள் ஐந்து இருக்கும். அவை மடங்கியும் கூர்மையுடையதாகவும் வெளிப்புறத்தில் குழல் போன்று வளைந்து காணப்படும். பூ மடல்கள் ஐந்து காணப்படும் அவை தனியே குறுகி மடல் போன்று காணப்படும். மகரந்ததாள் மஞ்சள் நிறத்தில் ஐந்து காணப்படும். மகரந்தக்காம்புகள் நீண்டு காணப்படும். கருவறைகள் மூன்று காணப்படும். காய்கள் 30 முதல் 120 செ.மீ நீளமுடையதாகும். முக்கோண வடிவில் நீண்டு 13 முதல் 22 விதைகள் உடையதாக காணப்படும்.

Image courtesy : Wikipedia
பூ மலருதல்
முருங்கையில் அதிகாலை 4.30 முதல் 6.30 வரை பூக்கள் மலரும். மிக முக்கியமாக 5.30 மணிக்கு அதிகப்படியான வளர்ச்சி இருக்கும். பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதில் பூ மலரும் நேரம் அதிகாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை என்றும், 27.3o செ - 29.3o செ. மற்றும் காற்றின் ஈரப்பதம் 68 முதல் 78 சதவீதம் பூ மலர்ச்சிக்கு பெரிதும் துணை செய்கிறது என்றும் கண்டறிந்துள்ளனர். மகரந்தத் தாளில் மிகவும் நீளமான மகரந்தத்தாள் முதலில் மலர்கிறது. மகரந்தத்தூள் முதிர்ச்சியடைந்த நிலையில் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். மலர்ந்த நிலையில் மகரந்ததூள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஒரு மகரந்ததூளில் சுமார் 7,400 மகரந்ததூள்கள் இருக்கும்.

சூல்முடிபூ மலர்வதற்கு ஒருநாள் முன்பும் பின்னர் மலர்ந்த நாள் அன்றும் ஏற்புத்தன்மை உடையதாய் இருக்கும். அதனால் அயல்மகரந்தச்சேர்க்கை தேனீக்கள் மற்றும் ஈக்களினால் நடைபெறுகிறது. சுமார் 72 சதவீதம் மகரந்தம் உயிருடன் இருக்கும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 28 ஆகும்.

மகரந்தச்சேர்க்கை
முருங்கையில் பெரும்பாலும் அயல்மகரந்தச்சேர்க்கையே நடைபெறுகிறது. ஈக்கள், பூச்சிகள், கொசு அயல் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் துணைபுரிகின்றன. பூ மலர்வதற்கு முதல் நாள் பூவிலுள்ள மகரந்தத் தாளினை நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் 11 மணிக்கு முன்னர் ஆண் மரத்திலிருந்து மகரந்தத்தை சேகரித்து, மகரந்தத்தாள் நீக்கின பெண் தாவரத்தின் பூவில் மகரந்தச்சேர்க்கை செய்யவேண்டும். பின்னர் பை கொண்டு மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற மலரினை மூடிவிட வேண்டும். 4-5 நாட்கள் கழித்து பூவிலிருந்து பிஞ்சு வெளிவந்தவுடன் பையினை நீக்கி அட்டையினால் அடையாளம் இட வேண்டும். மேற்கூறிய முறையில் அதிக எண்ணிக்கையில் வீரிய ஒட்டு காய்களை உருவாக்கலாம்.

பொதுவாக முருங்கையில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்தில் பூக்கள் தோன்றும் அதிகப்படியான பூக்கள் பிப்ரவரி மாதத்தில் தோன்றும். பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். பூவிதழ்கள் ஒரே மாதிரியான உயரத்தில் இருக்கும். பூவிலிருந்து ஒரு வித வாசனை உண்டாகும். காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை பூக்கள் மலரும் அதன் பின்னர் மகரந்தத்தாள் வெடிக்கும் மற்றும் தேன் சுரப்பது ஆரம்பிக்கும் வெடித்த மகரந்தத்தாளிலிருந்து கொத்து கொத்தாக மகரந்தத்தூள்கள் வெளியேறும் இவை பூச்சிகளினால் கவரப்பட்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. பூச்சிகளில் சைலோகோப்பா என்கின்ற பூச்சியின் கால்களில் மகரந்தத் தூள் அதிகளவில் ஒட்டிக்கொண்டு மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. இவை தவிர தட்டுப்பூச்சி ஒரு வித எறும்புகள் மற்றும் லெப்பிடாப்டிரா வகையை சார்ந்த பூச்சிகளும் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன. சூல்முடி பூ மலரும் தருணத்தில் மகரந்ததாள் உயரத்திலேயே இருக்கும் அதனால் பின்னர் சிறிது சிறிதாக வளர்ந்து மகரந்ததாளை விட அதிக உயரத்தில் காணப்படும். பூ விரிந்து ஒரு சில மணி நேரங்களிலேயே இவ்வளர்ச்சி காணப்படுவதால் மகரந்தச்சேர்க்கைக்கு அந்நிய காரணிகளில் தேவை முருங்கை மரத்திற்கு காணப்படுகிறது.

முருங்கையில் பூ உயிரியல் பற்றிய ஆராய்ச்சி
கால்டாஸ் (2000) என்ற அறிஞர் முருங்கையில் மகரந்தச்சேர்க்கைக்கும் அதன் மூலம் காய் உற்பத்திக்கும் வெளிப்புற காரணிகளான பூச்சிகள் மற்றும் காற்று போன்றவை மிக அவசியம் என்று கண்டறிந்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் முருங்கையில் இரண்டு பருவங்களில் பூ மலர்ச்சி உண்டாகிறது என்று ஜோதி மற்றும் குழுவினர் (1990) கண்டறிந்துள்ளனர். அவை முறையே பிப்ரவரி முதல் மே மாதம் முடிய மற்றும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய என்றும் கார்பெண்டர் ஈக்கள் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்கின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

பாபு மற்றும் ராஜன் என்பவர்கள் (1996) முருங்கை மரத்தில் பூக்கும் பருவம் மகரந்தத்தின் தன்மைகள் பற்றி ஆகஸ்ட் 1995 முதல் ஜனவரி 1996 வரை ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி முருங்கை மரம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை முதலில் பூக்கிறது பின்னர் டிசம்பர் முதல் ஜனவரி வரை பூக்கிறது.பூக்களில் மகரந்தத்தூள்கள் முதலில் முதிர்ச்சியடைகின்றன, பின்னர் பூ மலர்ச்சி சூல்முடி முதிர்ச்சி நடைபெறுகிறது. பூக்கள் 14.30 முதல் 9.00 மணி முடிய மலர்கின்றன. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை பூக்கும் பூக்களில் மகரந்தத்தாள் அதிகம் வெடிப்பதில்லை ஏனெனில் குளிர் அதிகம் நிலவுவதால் மகரந்தத்தாளில் ஈரத்தன்மை காணப்படுகிறது. இதனால் மகரந்தச்சேர்க்கைக்கு பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கருப்பு எறும்புகள் மற்றும் வண்டுகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவி செய்கின்றன என்றும் கண்டறிந்துள்ளார்.


தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக வெளியீடான Moringa book - Tamil லிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது. 

Saturday, 6 May 2017

முருங்கையில் பூக்களை அதிகப்படுத்த மண் மற்றும் நீர் மேலாண்மை.

முருங்கையில் பூக்களை அதிகப்படுத்த மண் மற்றும் நீர் மேலாண்மை.

முருங்கை மரம் ஒரு வெப்ப மண்டலத்தை சார்ந்த பயிராதலால் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பண்புகள் உள்ளது. பல்லாண்டு மர முருங்கை மரத்தின் தண்டுகளில் நீரை சேமிக்ககூடிய செல்கள் உள்ளன. மேலும் இவற்றில் இலைவழி நீராவியாதல் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அதிக குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் உதிர்ந்து விடுகின்றது. மேலும் பிஞ்சிலிருந்து உருவாகக் கூடிய காய்களில் பச்சையம் இருப்பதால் ஒளிச்சேர்க்கை நடைபெற்று தனக்கு தேவையான உணவினை தயாரித்துக் கொள்கின்றன. இதனால் வறட்சி காலங்களில் கூட மரத்தில் காய்கள் அதிகம் உதிர்ந்து விடுவதில்லை.

அதிகம் நீர் தேங்காத வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த களி, செம்புரை மண், மணற்பாங்கான நிலங்களில் முருங்கை நன்கு செழித்து வளர்கிறது. முருங்கையின் வேர்கள் நீர் தேக்கத்தைத் தாங்கிக் கொள்வதில்லை. முருங்கை மரத்திற்கு 10-15 நாட்கள் இடைவெளியில் நீர்பாய்ச்சலாம். மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து நீர் பாய்ச்சுதலை அதிகப்படுத்தலாம்.

Image courtesy : wikipedia

மண்ணில் ஈரப்பதத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைத்துக் கொண்டால் இலைகள் உற்பத்தி குறைந்து, பூ மொட்டுகள் உருவாவது அதிகமாகிறது. பூ உற்பத்தியாவதற்கு நீர் பற்றாக்குறை அவசியம். ஆனால் பூக்கள் அதிகம் தோன்றியவுடன் நீர்ப்பாய்ச்சுதலை குறைத்தால் காய்கள் உற்பத்தி பாதிக்கப்படும், மகரந்தம் கருகி மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படும். அதனால் மண்ணின் காரணிகளைப் பொறுத்து 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சுவதினால் காய்ப்பிடிக்கும் தன்மையினையை அதிகப்படுத்தலாம். காய் முதிரும் பருவத்தில் மிதமான நீர் பாய்ச்சுதல் அவசியம். ஏனெனில் காய்களில் நீர் கோர்த்து அறுவடைக்கு பிந்திய நிலைப்புத் தன்மை பாதிக்கப்படும், காய்கள் முதிரும் பருவத்தில் நீர்ப்பாய்ச்சுதலை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் விதை உற்பத்தி அதிகரிக்கும்.

முருங்கை மரத்தின் தூர் பகுதியினை எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இதற்கு மண் அணைத்து அடிப்பகுதியை மேடு போன்று ஆக்குவதினால் தண்டு துளைப்பான் மற்றும் கரையான்களிலிருந்து பாதுகாக்கலாம். மரத்தின் வேர்கள் மிகவும் மென்மையாக இருப்பதினால் அதிக காற்று அடித்தால் மரம் வேருடன் சாய்ந்து விடுகிறது, மேலும் வேர்ப்பகுதியும் பாதிக்கப்படுகிறது. இதற்கு பாத்திகட்டி நீர்ப்பாய்ச்சுவதினாலோ அல்லது வாய்க்கால் வழி நீர் பாய்ச்சுவதினாலோ வேருடன் நீரின் நேரடி தொடர்பினை தவிர்க்கலாம். இதனால் வேர் பாதிப்படைவது தவிர்க்கப்படுகிறது.

சொட்டு நீர் வழி பாய்ச்சும் பொழுது, சொட்டு நீர் குழாய்களை மரத்திலிருந்து 1 முதல் 1.5 அடி தூரத்தில் வைப்பதினால் வேருக்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்கலாம். உழவியல் முறைகளான கோடை உழவு, அகலப்படுக்கை அமைத்தல், சொட்டு நீர்ப்பாசனம், நிலப்போர்வை அமைத்தல், இயற்கை உரங்களை அளித்தல், கரிம அமிலங்களை அளிப்பதினால் முருங்கையில் மண், நீர் மேலாண்மையை திறம்படுத்தலாம். இதனால் முருங்கையில் அதிக பூக்கள் உருவாகி உற்பத்தி அதிகரிக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக வெளியீடான Moringa book - Tamil லிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

Friday, 24 March 2017

கூட்டம் பிரிதல்: தேனீ வளர்க்கலாம் பகுதி-IX

கூட்டம் பிரிதல்:
சாதகமான சூழ்நிலை நிலவும் காலங்களில் தேனீக்கள் பல்கிப் பெருகுகின்றன. இவ்வாறு பெருக்கம் அடைந்த கூட்டங்களில் இனவிருத்தியின் பொருட்டுக் கூட்டம் பிரிதல் அல்லது குடி பெயர்தல் நிகழ்கின்றது. 

கூட்டம் பிரியும் தாபம் தேனீக்களிடம் காணப்படும் ஓர் இயற்கையான உணர்வு ஆகும். இந்தியத் தேனீ இனங்களில் இவ்வுணர்வு கூடுதலாகக் காணப்படுகின்றது. மதுர வரத்து கூடும் காலங்களில் இவ்வுணர்வு கூடுகின்றது. கூட்டம் பிரியும் உணர்வு கூட்டத்திற்குக் கூட்டம் மாறுபடும். கூட்டம் பிரியும் காலம் மதுர வரத்திற்கு ஏற்ப இடத்திற்கு இடம் வேறுபடும். இந்த உணர்வு தேனீக்களுக்குப் பல வழிகளில் உதவுகின்றது. கூட்டம் பிரிதலால் தேனீக்கள் உணவு அதிகமாகக் கிடைக்கும் இடங்களை நாடிச் செல்லுகின்றன. இதனால் தேனீ இனம் உணவின்றி அழிவது தவிர்க்கப்படுகின்றது.

நடைபெறக் காரணங்கள்:
  • ஒரு சில கூட்டங்களில் பாரம்பரிய ரீதியாகக் கூடுதலாகக் காணப்படும் பிரிந்து செல்லும் உணர்வு
  • அதிக மதுர வரத்தால் விரைந்து நடைபெறும் கூட்ட வளர்ச்சி
  • வயதான ராணித் தேனீயால் போதிய அளவு ஈர்ப்புச் சுரப்பைச் சுரக்க இயலாத சூழ்நிலை
  • வீட்டுத் தேனீக்களின் எண்ணிக்கை வயல் வெளித் தேனீக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக இருத்தல்
  • புழு வளர்ப்பு மற்றும் தேன் சேமிப்பிற்குப் போமிய இட வசதியின்மை
  • கூட்டின் வெப்ப நிலை கூடுதல்
  • கூட்டில் போதிய காற்றோட்ட வசதியின்மையால் ஏற்படும் புழுக்கம்
  • தேனீப் பெருக்கத்தாலும் தேன் சேமிப்பாலும் தோன்றும் இட நெருக்கடி
  • சேமித்து வைத்துள்ள தேனை அவ்வப்பொழுது எடுக்காது இருத்தல்
ஏன் தடுக்க வேண்டும்?
தேனீ வளர்ப்போர் தேனீக் கூட்டம் பிரித்து செல்வதை அவசியம் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் அடிக்கடி கூட்டம் பிரிய நேரிட்டால்
  • கூட்டத்தின் வலு குறையும்
  • தேன் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்
  • அடைப் பரப்பில் போதிய பணித் தேனீக்கள் இல்லாத நிலையில் வளரும் புழுக்கள் போதிய கவனிப்பும் சூடும் இன்றி இறக்க நேரிடும்
  • புழு வளர்ப்பு தற்காலிகமாகத் தடைப்படும்
  • பணித் தேனீக்களின் உணவு திரட்டும் ஆர்வம் குறையும்
  • சில நேரங்களில் ராணித் தேனீ இழப்பு நேரிட்டு, பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்கும். இதனை உரிய நேரத்தில் தடுக்காவிட்டால் கூட்டமே படிப்படியாக அழிய நேரிடும்
அறிகுறிகள்:
  • பெட்டியில் தேனீக்கள் பொங்கி வழியும்
  • ஆண் தேனீ அறைகள் அதிக எண்ணிக்கையில் அடையில் கட்டப்படும்
  • புதிய ராணித் தேனீ வளர்ப்பு அறைகள் அடையின் கீழ்ப்புற விளிம்புகளில் அதிக எண்ணிக்கையில் கட்டப்படும்
நடைபெறும் விதம்:
  • மதுர வரத்து கூடும் பொழுது கூட்டம் பிரியும் உணர்வு தூண்டப்படுகின்றது. இத்தருணத்தில் ராணித் தேனீயின் தினசரி முட்டையிடும் திறன் கூடுகின்றது. புழு வளர்ப்பும் துரிதமாக நடைபெறுகின்றது. இதனால் வீட்டுத் தேனீக்களின் எண்ணிக்கை கூடுகின்றது. மேலும் பெட்டியில் இடநெருக்கடி ஏற்படுகின்றது.
  • தாதித் தேனீக்களில் அரசக் கூழ் அதிக அளவு சுரக்கின்றது. இவ்வாறு சுரக்கும் அரசுக் கூழினை வெளியேற்றிப் பயன்படுத்துவதற்காகப் புதிய ராணித் தேனீ அறைகள் கட்டப்படுகின்றன. பணித் தேனீக்கள் இரண்டு நாள் இடைவெளியில் பல ராணித் தேனீ வளர்ப்பு அறைகளைப் புழு அடையின் கீழ்ப்புற விளிம்புகளில் கட்டுகின்றன.
  • ராணித் தேனீ அறைகளைக் கட்டும் முன்னர் ஆண் தேனீ அறைகள் அடையின் பல பகுதிகளிலும் தேனீக்களால் கட்டப்படுகின்றன. புதிதாக வரவிருக்கும் ராணித் தேனியுடன் புணர்ந்து கருவுறச் செய்வதற்காக ஆண் தேனீக்களை இவ்வாறு திட்டமிட்டு உருவாக்குகின்றன
  • ராணித் தேனீக்கு தரப்படும் உணவின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படுகின்றது. இதனால் ராணித் தேனீயின் வயிறு மெலிந்து பறக்கும் சக்தியைப் பெறுகின்றது
  • ராணித் தேனீ அறைகள் மெழுகு மூடியினால் மூடப்பட்டவுடன்  பழைய ராணித் தேனீ, பாதிக்கும் மேற்பட்ட பணித் தேனீக்களுடன் கூட்டைவிட்டு ஒரு கூட்டமாகப் பறந்து செல்கின்றது
  • கூட்டை விட்டு பிரிந்து செல்லும் முதல் கூட்டம் முதன்மைக் கூட்டம் எனப்படும். பொதுவாகக் காலை நேரத்தில் பிரகாசமான சூரிய ஒளி இருக்கும் பொழுது கூட்டம் பிரிதல் நடைபெறுகின்றது. கூட்டம் பிரிவதற்கு சற்று முன் சில பணித் தேனீக்கள் நுழைவு வழியின் முன் பரபரப்புடன் பறந்து கொண்டு இருக்கும். இவை ஒரு வித ரீங்கார ஒலியை ஏற்படுத்தும் நேரம் ஆக ஆக அதிக எண்ணிக்கையில் பணித் தேனீக்கள் கூட்டை விட்டு வெளியேறும். இவ்வாறு வெளியேறும் பணித் தேனீக்கள் தேனைக் குடித்து விட்டு வரும். பணித் தேனீக்களுடன் சேர்த்து ராணித் தேனீயும் கூட்டை விட்டு வெளியேறும். பின்னர் பிரிந்த கூட்டம் முதலில் அருகில் இருக்கும். ஏதாவது ஒரு மரக் கிளையில் ஓரிரு நாட்கள் புதிய கூட்டை அமைப்பதற்கான இடம் செரிவு செய்யப்படும் வரை ஒரு திரளாகத் தங்கும்.
  • முதன்மைக் கூட்டம் வெளியேறிய ஒரு வாரத்திற்குள் வெளிவரும் புதிய ராணித் தேனீ பிற ராணித் தேனீ அறைகளைக் கடித்து சேதப்படுத்தும் அல்லது எஞ்சியுள்ள பணித் தேனீக்களின் ஒரு பகுதியுடன் வெளியேறும். இவ்வாறு கூட்டத்தின் வலுவைப்பொறுத்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பின் கூட்டங்கள் வெளியேறும்
தடுக்கும் முறைகள்:
  • கூட்டம் பிரிதலை முற்றிலுமாகத் தடுக்க இயலாது. ஆனால் தேனீ வளர்ப்போர் தேனீக்களின் இத்தாபத்தைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டங்களைப் பிரியும் முன்னரே பிரித்துப் புதிய கூட்டங்களை உருவாக்கலாம்
  • ராணித் தேனீ முட்டையிடுவதற்குத் தேவையான இட வசதி செய்து கொடுக்க வேண்டும். இருப்பு இருந்தால் புழு அறையில் காலி அடைகள் தரலாம். இல்லையென்றால் அடை அஸ்திவாரத் தாள் பொருத்தப்பட்ட காலிச் சட்டங்களைப் புழு அறையில் தரலாம். இதன் மூலம் பெட்டியினுள் இடநெருக்கடி காரணமாக ஏற்படும் புழுக்கத்தைக் குறைக்க முடியும்
  • Image courtesy : wikipedia
  • மதுர வரத்து துவங்கும் பொழுது கூட்டங்களுக்கு உரிய நேரத்தில் தேன் அறைகளைக் கொடுக்க வேண்டும். தேன் சேமிப்பிற்கான இடத் தேவை பூர்த்தி செய்யப்படும் பொழுதும் கூட்டம் பிரியும் உணர்வு குறையும். இதனால் கூட்டம் பிரிதலைத் தாமதப்படுத்தலாம்
  • தேனீக் கூட்டங்கள் ராணித் தேனீ வளர்ப்பு அறைகள் கட்டுப்பட்டு இருக்கும் சமயம் கூடுதலாகக் கொட்டும். அத்தகைய தருணங்களில் அடிக்கடி புழு அடைகளைக் கவனமாகச் சோதனை செய்து, புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராணித் தேனீ வளர்ப்பு அறைகளை ஒன்று விடாது அழித்துவிட வேண்டும். அடையின் கீழ் விளிம்பில் கட்டப்பட்டு இருக்கும் ராணித் தேனீ வளர்ப்பு அறைகளைத் தொடர்ந்து அழித்தால், தேனீக்கள் ராணித் தேனீ வளர்ப்பு அறைகளை அடையின் மையப் பகுதியில் கட்டும் இத்தகைய அறைகளைக் கண்டு பிடித்து அழிப்பது சற்று கடினம். ஓரிரு அறைகள் தப்பினாலும் கூட்டம் உறுதியாகப் பிரிந்து விடும். எனவே இம்முறை ஓரளவிற்கு மட்டுமே பயன் கொடுக்கும்
  • ராணித் தேனீயின் இறக்கைகளை வெட்டுவதன் மூலமும், வாயில் தகட்டை நுழைவு வழி முன் வைத்தும் ராணித் தேனீ கூட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கலாம். இதனால் ராணித் தேனீ கூட்டைவிட்டுப் பணித் தேனீக்களுடன் பறந்து செல்ல இயலாது. எனவே ஒருவேளை ராணி இல்லாது பணித் தேனீக்கள் பிரிந்து சென்றாலும் அவை அனைத்தும் மீண்டும் கூட்டிற்கே திரும்பி வந்துவிடும்
  • ஒவ்வொரு ஆண்டும் ராணித் தேனீயை மாற்ற வேண்டும். இதனால் கூட்டம் பிரதலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம்
  • பிரிந்து சென்றாலும் முதன்மை கூட்டத்தைத் தனியே பிடித்து வைக்கலாம்
  • பிரிந்து செல்லும் பின் கூட்டங்களைக் காலம் தாழ்த்தாது பிடித்துத் தாய்க் கூட்டங்களுடன் இணைந்து வைப்பதே நல்லது
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Wednesday, 15 March 2017

இடப்பெயர்ச்சி முறை தேனீ வளர்ப்பு:தேனீ வளர்க்கலாம் பகுதி-VIII

இடப்பெயர்ச்சி முறை தேனீ வளர்ப்பு:
தேனீ வளர்ப்பை வணிக ரீதியில் வெற்றிகரமாக வளர்க்கத் தேனீக் கூட்டங்களைக் கூடுதலாக உணவு கிடைக்கும் இடங்களுக்கு எடுத்துச் சென்று வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தேனீக் கூட்டங்கள் உணவின்றி வலுக் குன்றுவதைத் தடுக்கவும். கூட்ட வளர்ச்சியைக் கூட்டிக் கூடுதல் தேன் மகசூல் பெறவும் இயலும். இத்தகைய இடப்பெயர்ச்சி முறைத் தேனீ வளர்ப்பு குமரி மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறுகின்றது.

சில குறிப்புகள்:
  • தேனீப் பெட்டிகளை எடுத்துச் செல்ல ஏற்ற நேரம் இரவு நேரமே
  • தேனீப் பெட்டிகளின் நுழைவு வழி, வண்டி செல்லும் வழிக்கு இணையாக இருக்கும்படி டெம்போ வண்டியில் தேனீ பெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும்
  • ஒரே இடத்தில் அதிகமான எண்ணிக்கையில் கூட்டங்களை வைப்பது தேன் மகசூல் குறைவிற்கு வழி வகுக்கும்
  • வலுவான கூட்டங்களே கூடுதலாகத் தேன் சேகரிக்கும்
  • மதுர வரத்து துவங்கும் முன்னரே தேனீக் கூட்டங்களுக்கு கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றவாறு வாரம் ஒரு முறை சர்க்கரைப்பாகு கொடுத்துக் கூட்டத்தை வலுப்படுத்த வேண்டும்
  • சர்க்கரைப் பாகு கொடுப்பதை மதுர வரத்து தொடங்கியவுடன் நிறுத்திவிட வேண்டும்
  • உரிய நேரத்தில் கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றபடி இரண்டு முதல் மூன்று தேன் அறைகள் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொன்றாகக் கொடுக்க வேண்டும்
  • கூடுதல் வளர்ச்சியுள்ள கூட்டங்களைத் தேவைக்கு ஏற்பப் பிரித்து புதிய கூட்டங்களையும் புதிய ராணித் தேனீக்களையும் உருவாக்க வேண்டும்
  • ஆண்டிற்கு ஒரு முறை ராணியை மாற்றுவதன் மூலம் கூட்டம் பிரிதலைத் தடுக்கவும் கூடுதல் தேன் மகசூல் பெறவும் இயலும்
  • விரைவான வளர்ச்சி நோய் இல்லாமை மற்றும் கூடுதலாகத் தேன் மகசூல் தந்த கூட்டங்களில் உருவாகும் மூடப்பட்ட ராணி அறைகளை நீக்கி எடுத்துப் பிரித்த கூட்டத்திற்கும் ராணியை நீக்கி விட்டுக் கொடுக்க வேண்டும்
  • புழு அறையில் கறுத்த ஓர அடைகளை நீளுவாக்கில் துண்டுகளாக அறுத்துத் தேன் அறைச் சட்டத்தின் அடிக் கட்டையில் ரப்பர் வளையம் கொண்டு பொறுத்தித் தேன் அறையில் அடை எடுத்த இடத்தில் காலிச் சட்டத்தைக் கொடுக்க வேண்டும்
  • தேன் அறையில் ஒரு சட்டம் குறைவாக ஒவ்வொரு சட்டத்திற்கும் இடையே சிறிது கூடுதல் இடைவெளி விட்டு வைப்பதன் மூலம் பருமனான தேன் அடைகளைப் பெற இயலும். இதனால் கூடுதலாகத் தேன் மகசூல் கிடைக்கும். மேலும் தேன் எடுக்கும் பொழுது தேன் அறைகளின் மெழுகு மூடிகளை எளிதாகச் சீவி நீக்கலாம்
  • தேன் அறைகள் முழுவதும் மூடப்பட்ட பின்னர் தேன் அடைகளைத் தேன் எடுப்பதற்கு எடுத்தால் நல்ல தரமான தேன் பெற இயலும்
  • தேன் எடுத்த பின்னர் தேன் அறைகளை உடனே தேனீக் கூட்டத்திற்குக் கொடுத்துவிட வேண்டும்
  • மதுர வரத்து முடிந்தவுடன் ஒரு தேன் அறையை மட்டும் விட்டு விட்டு மீதித் தேன் அறைகளை நீக்கிவிட வேண்டும்
  • தேனீக் கூட்டங்களை மதுரவரத்து அதிகம் கிடைக்கும் பல இடங்களுக்கு அடுத்தடுத்து எடுத்துச் செல்லுவதன் மூலம் கூடுதல் தேன் மகசூல் பெற இயலும்
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Tuesday, 14 March 2017

தேனீக்கு உணவு தரும் முக்கிய பயிர்கள் மற்றும் மதுர வரத்துக் காலப் பராமரிப்பு : தேனீ வளர்க்கலாம் பகுதி-VII

தேனீக்கு உணவு தரும் முக்கிய பயிர்கள்

மதுரம் தரும் பயிர்கள்:
ரப்பர், புளி, பாட்டில், புருசு, இலவம், இலுப்பை, சில்வர் ஓக், லாடப் பூ, அகத்தி, அரப்பு, கடுக்காய், புங்கம், வேம்பு, அர்ச்சுன மரம், சிசு மரம், தீக்குச்சி மரம், செம்மரம், லிட்சி இலந்தை, சோயா மொச்சை, குதிரை மசால், காப்பி, தும்பை, கள்ளிப் பூண்டு 

மகரந்தம் தரும் பயிர்கள்:
கரு வேல், வெள் வேல், குடை வேல், ஆண் பனை, பாக்கு, தென்னை,  நெல்லி, தக்காளி, கத்தரி, பறங்கி  பூசணி, வெள்ளரி, சீமை வெள்ளரி, சுரை, சவ் சவ், சோளம், கம்பு, மக்காச்சோளம்.

மதுரம் மற்றும் மகரந்தம் தரும் பயிர்கள்:
தைல மரம், சீமைக் கருவேல், கரக்கொன்றை, வேங்கை, நாவல், வாகை, முந்திரி, கொடுக்காப்புளி, ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம், செர்ரி, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, வாழை, முருங்கை, வெங்காயம், காரட், முட்டைக்கோஸ், பூக்கோஸ், நில சம்பங்கி, அவரை, துவரை, உளுந்து, காராமணி, கொண்டக் டகலை, பருத்தி, ஏலக்காய், கொத்தமல்லி, சூரியகாந்தி, எள், பேய் எள், ஆன்டிகோனான், கடுகு, நெருஞ்சி, ஓணான் கொடி, துத்தி.

மதுர வரத்துக் காலப் பராமரிப்பு:

மதுர வரத்து துவுங்கிவிட்டதற்கான அறிகுறிகள்:
  • தேனீக்கள் நுழைவு வாயில் சுறுசுறுப்பாக இயங்கும்
  • தேனீக்களுக்கு சர்க்கரைப்பாகு கொடுத்தால் அதனை எடுக்காது
  • தேனீக்கள் மதுரத்திலுள்ள நீர் அளவைக் குறைத்து தேனாகக் கெட்டிப்படுத்தும் பொழுது காற்றில் ஒருவித மலர் வாசனை வீசும்
  • தேனீக்கள் சட்டங்களுக்கு இடையில் வெள்ளை அடை கட்டும்
  • தேனீக்கள் அடை அறைகளில் விளிம்பில் வெள்ளை மெழுகினை வைக்கும்
  • தேனீக்கள் அடைகளைப் புதிப்பிக்கும் பணியிலும் புது அடைகள் கட்டும் பணியிலும் ஆர்வத்துடன் ஈடுபடும்
  • அடைகளை ஆய்வு செய்யும் பொழுது திறந்த அடை அறைகளிலிருந்து மதுரம் சொட்டும்
மதுர வரத்திற்குக் கூட்டங்களைத் தயார் செய்தல்:
  • தேனீப் பெட்டிகள் வைப்பதற்கு ஏற்ற அதிக மதுரவரத்து உள்ள இடங்களை முன் கூட்டியே தெரிவு செய்ய வேண்டும்
  • மதுர வரத்து துவங்குவதற்கு ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு முன்னரே கூட்டங்களை தயார் செய்ய வேண்டும்
  • தேன் அறைகள், காலி அடைகள், வெற்றுச் சட்டங்கள், அடை அஸ்திவாரத்தாள், தேன் எடுக்கும் கருவி ஆகிய சாதனங்களைத் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்
  • சர்க்கரைப் பாகு மற்றும் மகரந்த உணவு கொடுத்துக் கூட்டங்களை வலுப்படுத்த வேண்டும்
  • ஆண்டுக்கு ஒரு முறை ராணித் தேனீயை மாற்ற வேண்டும்
  • கூட்டங்களுக்கு புதிய ராணித் தேனீ தர வேண்டும்
  • வலுக்குன்றிய கூட்டங்களை இணைக்க வேண்டும். வலுவான கூட்டங்களால் மட்டுமே கூடுதலாகத் தேனைத் திரட்டிச் சேமிக்க இயலும்
Image courtesy : wikipedia
மதுர வரத்தின் போது பராமரிப்பு:
  • ராணித் தேனீ முட்டையிடப் போதிய இட வசதி செய்து தர வேண்டும்
  • உரிய நேரத்தில் தேன் அறைகள் கொடுக்க வேண்டும். காலித் தேன் அடைகள் கொடுத்தால் தேனீக்கள் விரைந்து தேனை சேமிக்கும்
  • காலி அடைகள் இல்லைளென்றால் புழு அறையிலுள்ள தேன் அடையை அறுத்து தேன் அறை சட்டங்களில் கட்டிக் கொடுக்க வேண்டும்
  • தேன் அறையில் ராணித் தேனீ முட்டையிடுவதைத் தடை செய்யப்புழு அறைக்கும் இடையில் ராணித் தேனீ தடைத் தகட்டை வைக்க வேண்டும் அல்லது அவ்வாறு முட்டையிடப்பட்ட தேன் அடைகளில் தண்ணீரை தெளிப்பதன் மூலம் இப்பிரச்சனையைத் தவிர்க்க இயலும்
  • தேன் அறையில் ஒரு சட்டம் குறைவாகத் தர வேண்டும். இதனால் ஒவ்வொரு தேன் அடைச் சட்டத்திலும் தேன் கூடுதலாகச் சேமிக்கப்படும். மேலும் மூடப்பட்ட தேன் அறைகளின் கூடிகளை எளிதாகச் சீவலாம்
  • தேன் அடைகளில் மூன்றில் இரண்டு பங்கு அறைகள் மூடப்பட்ட நிலையில் தாமதம் செய்யாமல் தேன் அறைகளைத் தேன் எடுப்பதற்கு எடுக்க வேண்டும்
  • தேன் எடுத்த பின்னர் தேன் அறைகளை மீண்டும் தேனீகு் கூட்டத்திற்கு உடனடியாக கொடுத்துவிட வேண்டும்
  • கூட்டம் பிரிந்து விடாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
 நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Sunday, 12 March 2017

தேனீ வளர்ப்பு சாதனங்கள் : தேனீ வளர்க்கலாம் பகுதி-VI

1. தேனீப் பெட்டிகள்
நியூட்டன் பெட்டி BIS Hives

தேனீ வளர்ப்பிற்கு வேண்டிய மிக முக்கியமான சாதனம் தேனீப் பெட்டிகளாகும். அடுக்குத் தேனீக்களை மட்டுமே செயற்கை முறையில் மரச் சட்டங்களுள்ள பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். ஒவ்வொரு மரச்சட்டத்திலும், ஒரு மேல் கட்டை, ஒரு அடிக் கட்டையுடன் இரண்டு பக்கக் கட்டைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டியினுள் தரப்படும் இந்த மரச்சட்டங்களில் தேனீக்கள் அடுக்கடுக்காக அடைகளைக் கட்டுகின்றன. ஒவ்வொரு ஆடையும் மரச் சட்டத்துடன் தனித்து வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. மரச் சட்டங்களுக்கு இடையேயும் சுற்றிலும் போதிய இடைவெளி தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் தேனீக்கள் அடையில் அமர்ந்து வசதியாகத் தங்கள் பணிகளைச் செய்ய முடியும். இந்த இடைவெளி தேனீ இடைவெளி எனப்படும். இந்தச் சந்து மிகச் சிறிதாக இருப்பதால் தேனீக்கள் இதில் அடை கட்டுவதில்லை. பெரிதாக இருப்பதால் தேன் பிசின் கொண்டு மூடுவதுமில்லை.


மார்த்தாண்டம் பெட்டி
தேனீப் பெட்டிகளை வடிவமைக்கும் பொழுது, சரியான தேனீ இடைவெளி கிடைக்கும் வண்ணம் பெட்டியும் மரச் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். பெட்டிகள் மற்றும் சட்டங்களின் அளவுகள் ஒரு நூல் அளவு கூடக் கூடவும் விடாது, குறையவும் விடாது. தேனீ இடைவெளி கூடுதலாக இருக்கும் பொழுது தேனீக்கள் அடைகளை ஒழுங்காகக் கட்டாது. தேவையற்ற உதிரி அடைகளையும் இணைப்பு அடைகளையும் கட்டும். மேலும் சட்டங்களைப் பிரித்து எடுப்பது சிரமமாக இருக்கும். அதனால் பெட்டியை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்களை கொட்ட நேரிடும். இத்தகைய அடைகளில் சேமிக்கப்பட்ட தேன் மெழுகும் வீணாகின்றது. 


தேனீக்களின் இனத்திற்கு ஏற்பவும் தேனீக்கு உணவு கிடைக்கும் அளவைப் பொறுத்தும் தேனீப் பெட்டிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். குமரி மாவட்டத்தில் நியூட்டன் பெட்டியை விடச் சிறிய பெட்டிகளில் இந்தியத் தேனீக்கள் சிறப்பாக வளர்க்கப்படுகின்றன. இப்பெட்டிகள் மார்த்தாண்டம் பெட்டிகள் எனப்படும். அளவில் சிறியதாக இருப்பதால் இப்பெட்டிகளைத் தேன் சேகரிப்பிற்காகப் பல இடங்களுக்கும் நெடுந்தொலைவு எளிதாக எடுத்துச் செய்ய இயலும். இப்பெட்டியில் புழு அறையில் ஆறு சட்டங்கள் இருக்கும். குறைவான மதுர வரத்துள்ள இடங்களுக்கும் ஏற்றது. இப்பெட்டி எளிய வடிவமைப்பும் குறைவான விலையும் உள்ளதால் தேனீ வளர்ப்பிற்கு அதிக அளவு தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றது.

தேனீப் பெட்டிகள் நன்கு விளைந்த மரப்பலகைகள் கொண்டு செய்யப்பட வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில் தான் தேனீக்களால் சீரான வெப்ப நிலையைப் பராமரிக்க இயலும். பச்சை மரப் பலகைகள் கொண்டு தேனீப் பெட்டிகள் செய்தால் நாளடைவில் பெட்டியின் பாகங்கள் வளையும். அதனால் பெட்டியில் தேனீக்களும் அவற்றின் எதிரிகளும் புகுந்து செல்லப் பல நுழைவு வழிகள் உண்டாக்கும். மேலும் மழைத் தண்ணீர் பெட்டிக்குள் புக நேரிடும். தேனீக்களால் தங்களைத் தங்கள் எதிரிகளிடமிருந்து சரிவரத் தற்காத்துக் கொள்ள இயலாது. பெட்டிகளில் வெடிப்புகள் பிறவுகள் இல்லாமல் இருத்தல் அவசியம். மரம் அல்லது இரும்பாலான தாங்கிகளைப் பயன்படுத்தலாம். தாங்கிகளின் கால்கள் எறும்புகள் ஏறாமல் தடுப்பதற்காக நீருள்ள கிண்ணத்துள் இருக்க வேண்டும்.

தேனீபு் பெட்டியின் பாகங்கள்
அடிப் பலகை
அடிப் பலகை ஒரே பலகையால் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுப் பலகைகளை இணைத்து உருவாக்கும் பொழுது இடைவெளி சிறிதும் இல்லாமல் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும்.  அடிப்பலகை தேனீப் பெட்டியை விட்டுச் சற்று முன்பக்கம் நீட்டி வைக்கப்பட்டுள்ளது. நீண்டுள்ள இப்பகுதியைப் பறந்து வரும் தேனீக்கள் இறங்கும் தளமாகப் பயன்படுத்துகின்றன.

புழு அறை
புழு அறையை அடிப் பலகையின் மேல் வைக்க வேண்டும். இந்த அறையின் அகல வாட்டத்தில் இருப்புறத்திலும் உள்ள இரண்டு காடிகள், சட்டங்களைத் தொங்க விட ஏற்றதாயுள்ளது. இச்சட்டங்களில் கட்டப்படும் அடைகளில் புழு வளர்ப்பு நடைபெறுகின்றது. சட்டங்கள் உட்சுவரையும் அடிப் பலகையையும் உரசாத வண்ணம் தேனீ இடைவெளி கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் பெட்டியின் முன் புறச் சுவரின் அடியில் தேனீக்கள் வந்து செல்வதற்கான ஒரு நுழைவு வழி அமைக்கப்பட்டுள்ளது.

தேன் அறை
தேன் அறையைப் புழு அறையின் மேல் வைக்க வேண்டும். இதனுள் தொங்க விடப்பட்டுள்ள சட்டங்களில் கட்டப்படும் அடைகளில் உபரியாகக் கிடைக்கும் தேன் சேமிக்கப்படுகின்றது. அந்தச் சட்டங்களும் புழு அறைச் சட்டங்கள் உட்சுவர் மற்றும் உள் மூடியை உரசாத வண்ணம் உரிய தேனீ இடைவெளி தரப்பட்டு இரண்டு காடிகளில் தொங்க விடப்பட்டுள்ளன. 

உள் மூடி அல்லது சிகைப் பலகை
உள் மூடி தேன் அறையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே ஒரு பெரிய துறை கம்பி வலை கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கூட்டினுள் காற்றோட்டத்திற்கு உதவுகின்றது. கம்பி வலையை சிறிது நெம்பி ஒரு தேனீ செல்லும் அளவிற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இதனால் உள் மூடிக்கும் இடையே அகப்பட்ட தேனீக்கள் கூட்டினுள் செல்ல இயலும். உள் மூடி பெட்டியினுள் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் வெளி மூடியினுள் தேனீக்களை அடை கட்டுவதைத் தவிர்க்கவும் உதவுகின்றது.

மேல் மூடி அல்லது கூரை
கூரை தட்டையாகவோ அல்லது இருபுறமும் சரிந்தோ இருக்கும். நியூட்டன் தேனீப் பெட்டியில் கூரையும் உள் மூடியும் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும். தட்டையாக உள்ள மேல் மூடியின் மேல் தகரத் தகட்டைப் பொருத்துவதால் மரத்தாலான மூடி மழையினால் பாதிப்படையாது. மார்த்தாண்டம் பெட்டியில் மேல் மூடி மட்டுமே இருக்கும் உள் மூடி இருக்காது.

2. அடை அஸ்திவாரத் தாள்
அடை அஸ்திவாரத் தாள் தேன் மெழுகிலாலான அறுகோணப் பதிவுகளுடன் கூடிய மெழுகுத் தாள் ஆகும். அப்பதிவுகளின் மேல் தேனீக்கள் பணித் தேனீ வளர்ப்பு அறைச் சுவர்களை இருபுறமும் கட்டுகின்றன. இந்த அடை அஸ்திவாரத் தாளை சட்டங்களின் மேல் கட்டையின் உட் பகுதியில் பொருத்த வேண்டும். அடை அஸ்திவாரத் தாள் மீது அடை கட்டப்படும் பொழுது
  • அடைகள் செங்குத்தாகவும் சீராகவும் கட்டப்படும்
  • கட்டப்படும் அடை அறைகள் ஒரே வடிவில் சீராக இருக்கும்
  • அடை கட்டப்படும் பணி சுலபமாகவும் விரைவாகவும் நடைபெறும்
  • அடைகள் உறுதியானதாக இருப்பதால் அவற்றைத் தேன் எடுக்கும் கருவியில் வைத்து சுற்றும் பொழுது சேதமாவதில்லை
  • தேனீக்கள் தேன் வரத்து மிகும் காலங்களில் குறுகிய காலத்திற்குள் அடைகளைக் கட்டித் தேனைச் சேமிக்க இயலும்
  • குறைந்த மெழுகுச் செலவில் அடைகள் கட்டப்படும்
  • தேனீக்கள் அடை கட்டுவதற்காக தேன், காலம், சக்தி ஆகியவற்றை விரயம் செய்வது குறைக்கப்படும்
3. தடுப்புப் பலகை
தடுப்புப் பலகை மரத்தினாலான பலகை. இதனை அடைச்சட்டங்களுடன் புழு வளர்ப்பு அறையில் தொங்க விடலாம். வலுக் குன்றிய கூட்டங்களில் உள்ள காலி அடைகளை நீக்கிய பின்னர், இறுதி அடையை ஒட்டி இத்தடுப்புப் பலகையை வைக்க வேண்டும். இதனால் தேனீக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புழு அறையில் கொள்ளளவு குறைக்கப்படுகின்றது. அவ்வாறு இப்பலகையை ஒரு நகரும் சுவராகப் பயன்படுத்தலாம். மேலும் கூட்டின் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் தேனீக் கூட்டங்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கவும் இப்பலகை உதவுகிறது.

4. பணித் தேனீ நீக்கும் பலகை
பணித் தேனீ நீக்கும் பலகை மரத்தாலான ஒரு பலகை. அதன் நடுவே ஒரு வழிப்பாதை ஒன்று உள்ளது. இதனைப் புழு அறைக்கும் தேன் அறைக்கும் நடுவே வைக்க வேண்டும். இரவு வேளையில் தேன் அறையில் உள்ள பணித் தேனீக்கள் இப்பலகையில் உள்ள ஒரு வழிப்பாதை மூலம் புழு அறைக்கு வந்து விடும். அவ்வாறு வந்த பணித் தேனீக்கள் மீண்டும் தேன் அறைக்குள் செல்ல இயலாது. எனவே இப்பலகை தேன் அறையிலிருந்து பணித் தேனீக்களை விரட்டப் பயன்படுகின்றது.

5. ராணித் தேனீ நீக்கி
ராணித் தேனீ நீக்கி சீராகத் துளையிடப்பட்ட நாகத் தகட்டால் ஆனது. ராணித் தேனீ பணித் தேனீக்களை விட உருவில் பெரிதாக இருப்பதால் இந்நீக்கியில் உள்ள வழியே ராணித் தேனீயால் நுழைய இயலாது. இந்நீக்கியை புழு அறைக்கும் தேன் அறைக்கும் இடையில் வைக்க வேண்டும். இதனால் ராணித் தேனீ தேன் அறைக்குச் சென்று முட்டை வைப்பது தவிர்க்கப்படுகின்றது. ஆகவே தூய்மையான தேன் பெறவும் வழி பிறக்கின்றது.

6. வாயில் தகடு
வாயில் தகடு சீராகத் துறையிடப்பட்ட ஒரு நாகத் தகடு ஆகும். இத்தகட்டை நுழைவு வழி முன் வைக்க வேண்டும். இந்த தகட்டில் உள்ள துறை அளவு சிறியதாக இருப்பதால் ராணித் தேனீயால் கூட்டை விட்டு வெளியேற முடியாது. இத்தகடு புதிதாகப் பிடித்த தேனீக் கூட்டத்திலிருந்து ராணி தப்பிச் செல்வதைச் தடுக்கவும் கூட்டம் பிரிவதைத் தடுக்கவும் உதவுகின்றது.

7. ஆண் தேனீப் பொறி
 ஆண் தேனீப் பொறி ஒரு மரத்தாலான காடியுடன் கூடிய கட்டை ஆகும். இப்பொறியை நுழைவு வழி முன் வைக்கும் பொழுது நுழைவுப் பாதையின் அளவு குறைக்கப்படுகின்றது. இதனால் பெட்டியை விட்டு வெளியே பறந்து சென்ற ஆண் தேனீக்கள் மீண்டும் உள்ளே வர இயலாது. ஆனால் பணித் தேனீக்கள் எளிதாக இப்பொறி வழியே சென்று வந்து தங்களின் பணிகளைச் செய்ய முடியும்.

8. முகவலை
முகவலை கருப்பு நிற நைலான் கொசு வலையினால் ஆனது. தொப்பியுடன் கூடிய இதனைத் தலையில் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணியும் பொழுது முகத்திற்கும் திரைக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும். இதனை அணிவதால் தேனீக்கள் முகத்தில் கொட்டுவதும் தவிர்க்கப்படுகின்றது.

9. கையுறை
கையுறை காடாத் துணி அல்லது மெல்லிய ரப்பர் அல்லது தோலினாலானது. புதிதாகத் தேனீ வளர்ப்பைத் துவக்கியவர்கள் தேனீக்களை முறையாக கையாள தெரிந்து கொள்ளும் வரை, கைகளில் தேனீக்கள் கொட்டி விடாமல் இருப்பதற்காக இதனை அணிந்து கொள்ளலாம்.

10. புகைக் குழல்
புகைக் குழல் மிகவும் அவசியமான ஒரு கருவி. புனல் வடிவிலான மூடியுடன் கூடிய ஒரு டப்பாவினுள் சாக்குத்தூள், காகிதச் சுருள், மரப்பட்டைத் துண்டுகள், தேங்காய் நார், காய்ந்த இலை போன்றவற்றை இட்டு எடுக்கும் புகை உண்டாகின்றது. இப்புகை டப்பாவின் அடியில் இணைக்கப்பட்டுள்ள துருத்தியை அழுத்தும்பொழுது மூடியில் உள்ள துவாரம் வழியே வெளிப்படுகின்றது. புகை தேனீக்களிடம் ஒரு வித பய உணர்வை ஏற்படுத்துகின்றது. புகையால் பயந்த தேனீக்கள் சிறிது தேனைக் குடித்தவுடன் அமைதியாகி விடுகின்றன. இதனால் தேனீக்களில் கொட்டும் தன்மை வெகுவாகக் குறைகின்றது.

தேனீப் பெட்டிகளை ஆய்வு செய்து முடிக்கும் வரை புகைக் குழலில் புகை இருத்தல் வேண்டும். புகை வெண்மையாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். தேனீக் கூட்டங்களை ஆய்வு செய்யும் பொழுது புகையைத் தேவைப்படும் பொழுது மட்டும் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

11. மெழுகு மூடி சீவும் கத்தி
மெழுகு மூடி சீவும் கத்தி நீளமானது. இரு புறமும் கூர்மையானது. மரக் கைப்பிடி உடையாது. இக்கத்தி கொண்டு தேனடைகளின் மெழுகு மூடிகளைச் சீராகச் சீவலாம்.

12. தேனீ புருசு
தேனீக்களைத் தேன் அடைகளிலிருந்து அப்புறப்படுத்தவும் தேனீக் கூட்டங்களைப் பிரிக்கும் சமயத்தில் தேனீக்களை புழு அடைகளிலிருந்து நீக்கவும் தேனீ புருசு உதவுகின்றது. இதன் கைப்பிடி மரத்தால் ஆனது. இதன் குச்சங்கள் மிருதுவானவை.

13. தேன் எடுக்கும் கருவி
தேன் எடுக்கும் கருவி உருளை வடிவினாலான ஒரு பாத்திரமாகும். இப்பாத்திரம் பித்தளை, நாகத்தகடு அல்லது எவர்சில்வரால் ஆனது. இதனுள் ஒரு வலைப் பெட்டியுள்ளது. அவ்வலைப் பெட்டியினுள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட தேனடைச் சட்டங்களைச் செங்குத்தாகச் செருகி வைக்கலாம். மேலும் இவ்வலைப் பெட்டி இரண்டு பல்சக்கரங்கள் மூலம் ஒரு கைப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியைச் சுற்றும் பொழுது மைய விலக்கு விசை காரணமாக அடையிலிருந்து தேன் துளிகள் சிதறி விழுகின்றன. பிரித்து எடுக்கப்பட்ட தேன் இக்கருவியின் அடிப்பாகத்தில் உள்ள ஒரு சிறு குழாய் மூலம் வெளிவரும். இக்கருவியைப் பயன்படுத்துவதால்
  • தேன் அடைகள் சேதமாவது இல்லை
  • தேன் அடைகளை மீண்டும் பயன்படுத்தலாம்
  • தூய்மையான தேன் பெறலாம்
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Saturday, 11 March 2017

தேனீக்களும் பயிர் மகசூலும்: தேனீ வளர்க்கலாம் பகுதி-V

Image courtesy : wikipedia


தேனிக்களும் பயிர் மகசூலும்:
அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர் மகசூலைக் கூட்டுவதில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால் தேனீக்களை மேலை நாட்டினர் வேளாண் தேவதைகள் எனப் போற்றுகின்றனர். 

தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பயிர்களின் பூக்கள், தேனீக்களைக் கவர்வதற்காக கவர்ச்சிகரமான நிறமும் நல்ல மணமும் பெற்றுள்ளன. மேலும் இவை தேனீக்களுக்கு மதுரத்தையும் மகரந்தத்தையும் உணவாகத் தருகின்றன. உணவிற்காக மலரை நாடி வரும் தேனீக்களின் உடம்பில் மகரந்தப் பொடி ஒட்டிக் கொள்கின்றது. பின்னர் தேனீக்கள் மற்றொரு மலருக்கு உணவு தேடிச் செல்லும் பொழுது உடம்பில் ஒட்டிக் கொண்ட மகரந்தத்தூள் சூல்முடியைச் சென்று அடைகின்றது. இதனால் பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை அமைப்பும் சில சுபாவங்களும் தேனீக்களால் தனித் தன்மை வாய்ந்த உடல் அமைப்பும் சில சுபாவங்களும் தேனீக்களால் பயிரில் அதிக அளவில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற பெரிதும் உதவுகின்றன.

தேனீக்களின் சிறப்பியல்புகள்:
  • உடம்பு முழுவதும் உள்ள கிளையுடன் கூடிய ரோமங்களில் மகரந்தத் தூள் எளிதாக ஒட்டிக் கொள்கின்றது
  • தேனீக்களின் கால்கள் மகரந்தத் தூளைச் சுமந்து வரவும் அவைகளின் நீளமான நாக்கு மதுரச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் மதுரத்தை நக்கி, உறிஞ்சவும் ஏற்றவாறு உள்ளன
  • தேனீக்கள் விசுவாசத்துடன் ஒரு பயிர் இனத்தைச் சார்ந்த மலர்களை, பூக்கும் காலம் முடியும் வரை தொடர்ந்து நாடிச் சென்று உணவு திரட்டுகின்றன
  • புரதம் மிகுந்த மகரந்தம் வளரும் புழுக்களுக்கும், இளந்தேனீக்களுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. எனவே வயல் வெளித் தேனீக்கள், தேவை கருதி ஆர்வத்துடன் அதிக அளவு மகரந்தத்தைத் தேடிச் சேமிக்கின்றன. அவ்வாறு செயல்படும் பொழுது தேனீக்கள் அதிக அளவில் பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற வழி வகுக்கின்றன
  • கதிரவன் தோன்றியதிலிருந்து மறையும் வரை தேனீக்கள் பல மணி நேரம் உணவிற்காக மலரை மீண்டும் நாலடி வருகின்றன. இதனால் தேனீக்கள் பயிரில் கூடுதலாக மகரந்தச் சேர்க்கை நடைபெறத் துணை புரிகின்றன
  • தேனீக் கூட்டங்களை எளிதில் தேவையான இடத்திற்கு தேவையான எண்ணிக்கையில் எடுத்துச் சென்று வைத்துப் பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறப் பயன்படுத்தலாம்
  • அனுபவம் மிக்க வயல் வெளித் தேனீக்கள் உணவு கிடைக்கும் இடம் பற்றிய தகவல்களைப் பிற பணித் தேனீக்களுக்கு நடன மொழி மூலம் அறிவிப்பதால் தகவலறிந்த தேனீக்களும் அதிக எண்ணிக்கையில் பயிரை நாடிச் சென்று மகரந்த சேர்க்கை நடைபெற உதவுகின்றன
பராமரிக்கும் முறைகள்:
  • மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் தேனீ கூட்டங்கள் வலுவானதாக இருக்க வேண்டும்
  • போதிய அளவு தேன் மற்றும் மகரந்த இருப்பு இருக்க வேண்டும்
  • புழு அடையில் தேனீயின் வளர்ச்சிப் பருவங்கள் அனைத்தும் இருத்தல் அவசியம்
  • மொத்த அடைப் பரப்பில் குறைந்தது கால் பகுதியிலாவது புழுக்கள் வளரும் நிலையில் இருக்க வேண்டும். புழுக்களின் உணவுத் தேவைக்காகப் பணித் தேனீக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதிக அளவு மகரந்தம் திரட்டி வரும். அதனால் அயல் மகரந்தச் சேர்க்கை பயிரில் கூடுதலாக நடைபெறும்
  • ராணித் தேனீ சிறப்புறப் பணிபுரிய வேண்டும்
  • வீட்டுத் தேனீக்களும், வயல் வெளித் தேனீக்களும் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்
  • மகரந்தம் மற்றும் தேனைச் சேமித்து வைக்கக் காலி அடைகள் தேனீப் பெட்டிகளில் இருத்தல் வேண்டும்
  • இரண்டு அல்லது மூன்று தேனீப் பெட்டிகளை ஒரு தொகுதியாகத் தோட்டத்தின் மத்தியில் வைத்தால் தேனீக்கள் குறைந்த அளவு சக்தியைச் செலவழித்து உணவு தேடிக் கொண்டு வரும்
  • பயிர்கள் பூக்கத் தொடங்கியதுமே தேனீப் பெட்டிகளைத் தோட்டத்தில் கொண்டு சென்று வைக்க வேண்டும்
  • பொதுவாக ஓர் ஏக்கருக்கு ஒரு தேனீப் பெட்டி போதுமானது
  • பயிர்கள் பூத்திருக்கும் சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்த்தல் வேண்டும். பயிர் பூக்கும் சமயங்களில் பயிர் பாதுகாப்பு அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் தேனீக்களை அதிக அளவு பாதிக்காத பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்
  • எந்தப் பயிரில் தேனீக்களைக் கொண்டு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்த வேண்டுமோ, அப்பயிரின் மலர்களைச் சர்க்கரைப் பாகில் ஊற வைத்து முந்திய நாள் இரவு தேனீக்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனால் மறுநாள் தேனீக்கள் அம்மலருள்ள பயிரை நாடி உணவு தேடச் செல்லும்
பயிர் மகசூலில் தேனீக்களின் பங்கு:
  • தேனீக்களால் பயிறு வகைப் பயிர்கள் எண்ணெய் வித்துக்கள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பழ மரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை கூடுதலாக நடைபெறுகின்றது. குறிப்பாக ஆப்பிள், பேரிக்காய், தர்பூசணி, முலாம் பழம், எலுமிச்சை போன்ற பயிர்களின் பழ மகசூலும், பழங்களின் தரமும் கூடுவதற்கு தேனீக்களின் வரவு தேவைப்படுகின்றது
  • தேனீக்களால் வெள்ளரி மகசூலை இரட்டிப்பாக்க முடியும். மேலும் காரட், பூக்கோஸ், வெங்காயம் போன்ற காய்கறிப் பயிர்களில் தரமான விதைகளைக் கூடுதலாக உற்பத்தி செய்யத் தேனீக்கள் உதவுகின்றன
  • சூரியகாந்தி, எள், பேய் எள் மற்றும் கடுகு போன்ற எண்ணெய் வித்துப்பயிர்களில் உயர் மகசூல் பெறத் தேனீக்கள் பெரிதும் உதவுகின்றன. தேனீக்களால் சூரியகாந்திப் பயிரில் விதை மகசூல் கூடுவதுடன் எண்ணெய் சத்தும், புரத அளவும், விதை எடையும், விதைகளின் முளைப்புத் திறனும் கூடுகின்றது
  • தென்னந் தோப்புகளில் தேனீப் பெட்டிகளை வைப்பதால் நெட்டை ரகத் தென்னையில் குரும்பை உதிர்வது குறைந்து காய் மகசூல் 13 விழுக்காடு கூடுகின்றது
  • தேனுக்காக மட்டும் தேனீ வளர்ப்பு என்ற நிலை மாறி, மேலை நாடுகுளில் உள்ளது போல பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துவதற்காகவும் திட்டமிட்டுத் தேனீ வளர்ப்பு நடைபெற்றால் தான் நாம் பயிர் மகசூலைக் கூட்ட இயலும். வீரியக் காய்கறி விதை உற்பத்திக்கும் தேனீக்களைக் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையத்திலும், இயற்கை விவசாயத்திலும் தேனீ வளர்ப்பை மேற்கொள்ளுவதன் மூலமாகவும் இந்த நோக்கை எட்ட இயலும்.
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Friday, 10 March 2017

தேனீப் பண்ணை வைக்க இடதேர்வு : தேனீ வளர்க்கலாம் வாங்க பகுதி-IV



இடத் தேர்வு: தேனீப் பண்ணை அமைக்கத் தெரிவு செய்யும் இடம் தேனீக்களுக்கும் தேனீ வளர்ப்போருக்கும் ஏற்றதாக அமைத்தல் அவசியம். தேனீக் கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாகக் காணப்படுகின்றதோ அந்த இடங்கள் பொதுவாகத் தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை
  • தேனீ வளர்ப்பு நல்ல வெற்றி பெறவும் அதிகத் தேன் மகசூல் பெறவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் தேனீக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரும் மரம், செடி, கொடிகள் இருத்தல் வேண்டும்
  • தேனீக்களுக்குத் தேனை உற்பத்தி செய்ய மதுரமும், புழுக்களை வளர்க்க மகரந்தமும் அதிக அளவு தேவைப்படுகின்றன. ஒரு இடத்தில் தேனீக்கு உணவு தரும் சில மரம், செடி, கொடிகள் இருப்பதையோ, அல்லது சில ஏக்கர் இருப்பதையோ கொண்டு அந்த இடம் வணிக ரீதியாக தேனீ வளர்க்க வேண்டும் என்றால் அதன் அருகில் பல நூறு ஏக்கரில், தேனீக்களுக்கு உணவு தரும் பயிர்கள் இருத்தல் வேண்டும். அப்பயிரிகளிலிருந்து தரமான மதுரம் உற்பத்தி செய்யும் மலர்கள் மிகுந்த எண்ணிக்கைகளில் பூத்து இருக்க வேண்டும். ஓர் இடத்தில் கிடைக்கும் மதுர அளவைப் பொறுத்து அவ்விடத்தில் வைக்கப்படும் தேனீக்கூட்டங்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும்
  • தேனீக்களுக்குத் தூய்மையான தண்ணீர் அவசியம் தண்ணீர் கூட்டின் வெப்ப நிலையைக் குறைக்கவும் அவசக் கூழ் உற்பத்திக்கும் தேனின் கெட்டித் தன்மையைக் குறைக்கவும் தேவைப்படுகின்றது. ஆகவே தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு அருகே ஒரு கிணறோ, ஓடையோ, சுனையோ அல்லது வாய்க்காலோ இருத்தல் நலம்
  • தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவ நிலை நிலவும் இடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அதிக வெயில் அதிவேகமான காற்று மற்றும் கன மழை ஆகியவை தேனீக்களைப் பாதிக்கும் அதிக காற்றும் மழையும் பணித் தேனீக்களின் உணவு திரட்டும் திறனையும் அவைகள் ஆயுட்காலத்தையும் பாதிக்கின்றன. அதிக சூரிய வெப்பம் காரணமாக மெழுகு அடை உருகி விடும்
  • இடம் போதிய வடிகால் வசதியுடனும் இருக்க வேண்டும் வடிகால் வசதியற்ற இடங்களில் காற்றின் ஈரப்பதம் எப்பொழுதும் கூடுதலாக இருக்கும். இதனால் தேன் முதிர்வது பாதிக்கப்படும்
  • பயிர் பாதுகாப்பு மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் வெற்றிகரமாகத் தேனீ வளர்க்க இயலாது
  • தேனீக்களை வளர்க்க விவசாய நிலம் தேவையில்லை
  • கால்நடைகள் தேனீக்களின் கொட்டிற்கு இலக்காவதால் மேய்ச்சல் நிலங்களுக்கு அருகே தேனீப் பண்ணையைப் பள்ளி, சந்தை போன்ற பொது இடங்களிலிருந்து போக்குவரத்து சாலையை விட்டும் குறைத்து 100 மீட்டர் தள்ளியே அடைக்க வேண்டும். தேனீப் பண்ணையை வீட்டிற்கு அருகில் அமைக்க நேரிட்டால் குறைந்தது 50 மீட்டர் இடைவெளி தர வேண்டும். இதனால் தேனீக்களால் மனிதர்களுக்குக் கூடிய வரை எவ்விதத் தொந்தரவும் இருக்காது
  • ஒரு தேனீப் பண்ணைக்கும் மற்றொரு தேனீப் பண்ணைக்கும் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்
  • சாலை வசதி உள்ள இடம் போக்குவரவிற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்
தேனீப் பெட்டிகளை வைக்கும் விதம்:
  • தேனீப் பெட்டிகளை நிழலில், இயன்றால் கிழக்குப் பார்த்து வைத்தல் வேண்டும். காலை வெயில் பெட்டியின் மேல்படும் பொழுது தேனீக்கள் அதிகாலையில் தங்கள் பணியைத் துவங்கும்
  • தேனீ பெட்டிகளை ஓர் ஓடு போட்ட தாழ்வாரம் அல்லது கீற்றுக் கொட்டகையின் கீழ் வைக்கலாம். இல்லையெனில் மரம் அல்லது புதர் நிழலில் அடிக்கும் வெய்யிலிருந்து பாதுகாக்க அவசியம் நிழல் செய்து தர வேண்டும்
  • தேனீப் பெட்டிகளுக்கு இடையே ஆறு அடி இடைவெளி கொடுக்கலாம். தேனீப் பெட்டிகளை அடுத்தடுத்து நெருக்கமாக வைத்தலைத் தவிர்க்க வேண்டும். இதனால் பணித் தேனீக்களை கூடுமாறிச் செல்வது தடுக்கப்படும்
  • தேனீக்களை வீட்டில் வைத்து வளர்க்க விரும்புபவர்கள் தேனீபு் பெட்டிகளை கொல்லைப் புறத்திலோ அல்லது மாடியிலோ வைக்கலாம். தேனீக்கள் விளக்கு ஒளியை நாடிச் செல்வதால் தேனீப் பெட்டிகளில் மீது இரவில் வெளிச்சம் படாதவாறு வைக்க வேண்டும்
  • தேனீப் பெட்டிகளை சமதளமாக உள்ள தரையில் வைக்க வேண்டும்
  • எறும்புப் புற்று அல்லது எறும்புக் கூடு உள்ள இடங்களிலும் வாய்க்காலின் உள்ளும் தேனீபு் பெட்டிகளை வைக்க கூடாது
  • தேனீபு் பெட்டிகளை வைக்கும் தாங்களின் கால்களை நீர் ஊற்றிய கிண்ணங்களில் வைக்க வேண்டும் அல்லது வேப்ப எண்ணெய் கலந்த ‘கிரீஸை’ தாங்கியின் கால்களில் தடவி வைக்க வேண்டும். இல்லையெனில் கிழிந்த துணியை தாங்கியின் காலைச் சுற்றிக் கட்டி அத்துணியின் கழிவு எண்ணெயைத் தடவ வேண்டும். இதனால் எறும்புத் தொல்லையைத் தவிர்க்கலாம்
  • தேனீப் பெட்டியை தாங்கியுடன் சேர்த்துக் கயிறு கொண்டு கட்டி வைப்பது நல்லது இதனால் ஒரு வேளை தேனீப் பெட்டி சாய நேரிட்டாலும் பெட்டியின் பாகங்கள் தனித்தனியே பிரித்து விழாது
நன்றி : தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணையதளம்

Wednesday, 8 March 2017

தேனீ ஒரு ஆச்சரிய படைப்பு : தேனீ வளர்க்கலாம் வாங்க பகுதி-III

தேனீக்களோட வாழ்க்கை முறையைப் பார்த்தா... 'நாங்கள்லாம் ஆறறிவு படைச்சவங்கப்பா...'னு சொல்லிக்கறதுக்கே நாம யோசிப்போம். ஒரு கூட்டிலிருக்குற ஆயிரக்கணக்கான தேனீக்கள்ல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு குழுவை அமைச்சு, மனுஷனைவிட அபாரமா செயல்படுதுங்க தேனீக்கள். 


கூட்டிலிருந்து எந்தத் திசையில, எவ்வளவு தூரத்தில, எந்தப் பூவுல தேன் இருக்குதுங்கிறதைப் பார்த்துட்டு வந்து, அதை நடன மொழியில சொல்றதுக்காக செய்தித் தொடர்புக் குழு; சொல்ற தகவலைப் புரிஞ்சுகிட்டு, அதுங்க சொன்ன திசையில போயி, தேனை எடுத்து வர்ற பொருள் சேகரிக்கும் குழு; தேனை எடுக்கப் போய், குறிப்பிட்ட பூவுல உட்கார்ந்ததுமே அதுல இருக்கற ஏதாவது ஒரு விஷயத்தால (ரசாயனங்கள் உள்ளிட்டவை) உடம்பு சரியில்லாம போயிடற தேனீக்களுக்கு வைத்தியம் பாக்குற மருத்துவக் குழு; மருத்துவத்துக்கும் பயனில்லாம இறந்து போற தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறப்படுத்துற துப்புரவு குழு; இளம் தேனீக்களை பராமரிக்கற தாதிக்கள் குழு... இப்படி ஒரு ஒழுங்கோட தேனீக்கள் வாழற வாழ்க்கையைப் பார்த்தா... 'நாமெல்லாம் சும்மா...?'னு வாய்விட்டு உங்களையும் அறியாம கூப்பாடு போட்டுடுவீங்க!

ஒரு கூட்டுல ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருந்தாலும், ராணித் தேனீ... ஒரே ஒரு ஆண் தேனீயுடன் ஒரே ஒரு முறை மட்டுமே கூடி, வாழ்நாள் முழுவதும் முட்டையிடும். ராணியுடன் கூடின அந்த ஆண் தேனீ, உறவு முடிஞ்சதும் இறந்துடும். அதுக்குப் பிறகு, அந்த ராணி, வேற எந்த ராஜாவோடயும் கூடாது. இப்படியரு ஒழுங்கு... அதுகளோட வாழ்க்கையில இருக்கறதைப் பார்த்தா.... அசந்து போயிடுவீங்க! 

இப்படியெல்லாம் கட்டுப்பாட்டோட வாழற அந்த தேனீக் கூட்டம்... முழுக்க முழுக்க வாழறது தனக்காக இல்லீங்க... உங்களுக்கு, எங்களுக்கு, இன்னும் ஊருபட்ட அளவுல கிடக்கற பல ஜீவராசிகளுக்குனுதான், அதுங்களோட காலம் கரையுது. அதாவது, அயல் மகரந்தச் சேர்க்கை மூலமா தாவர இனங்களை வாழ வைக்குது. ஆடு, மாடு, மனுஷன், புழு, பூச்சினு பல ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கறதே இந்த தாவரங்களாலதானே! 

அதை விவசாயம்கிற பேருல நாம ஒரு தொழிலாக்கி, காலகாலமா செய்துகிட்டிருக்கோம். உலகத்துல இருக்கற அதிஉன்னதமான புனிதத் தொழில்ல... முதல்ல இருக்கற ஒரு தொழில்னா... தேனீக்கள் செய்ற மகரந்த சேர்க்கையைச் சொல்லலாம். கிட்டத்தட்ட அதுக்கு இணையானதுதான்... நாம செய்துகிட்டிருக்கற விவசாயத் தொழில். இது ரெண்டும் இல்லைனா... மனுஷ மக்க மட்டுமில்லீங்க... எந்த ஜீவராசியுமே இங்க உயிர் வாழ முடியாது. அதனால... தேனீப்பூச்சிகளை இந்த உலகத்துல இருக்கற ஒவ்வொரு ஜீவனுமே கைதொழணும் சூரியனுக்கு இணையா...!

ரொம்ப நாளா பூவெடுக்காத மரங்களுக்கு பக்கத்துல தேன் பெட்டியை வச்சா, கொஞ்ச நாள்லயே அந்த மரம் பூவெடுக்கும். அது கொஞ்ச, கொஞ்சமா சேர்த்து வைக்கற தேனும் நமக்குக் கிடைக்கும். இப்படி மகசூலை அதிகரிச்சு... தேன்ங்கற அற்புதமான அமுதத்தையும் கொடுத்து... நமக்காகவே வாழற தேனீக்களுக்கு நாம எவ்வளவு நன்றியுள்ளவங்களா இருக்கணும்.

நன்றி : vikatan.com