Sunday 25 September 2016

அசோஸ்பைரிலம்

இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம்.

வளிமண்டலத்தில் மிக அதிகமாக உள்ள (78%) நைட்ரஜன் (N) வாயுவை நிலைப்படுத்தி அதாவது நைட்ரேட்டாக (NO3) மாற்றித் தாவரங்களுக்கு அளிக்கும் வேலையைச் செய்பவையே உயிர் உரங்கள் என்று அழைக்கப்படும். உம். பாசி மற்றும் பூஞ்சை வகைகளைச் சேர்ந்த அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ், பாஸ்போ பாக்டீரியா, அசட்டோ பாக்டர், அனபினா, நாஸ்டாக்  மற்றும் வேர்முடிச்சு (வேர்முண்டுகள்) பாக்டீரியமான ரைசோபியம். அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ் ஆகியவை நெல் போன்ற பயிர்களுக்கு உயிர் உரமாகத் தரப்படுகிறது. ரைசோபியம் அவரை, உளுந்து  குடும்பத் தாவரங்களின் வேர்முடிச்சுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது. 

அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.

Image courtesy : wikipedia
அசோஸ்பைரிலம் நுண்ணுயிர் ஒரு பாக்டீரியா வகையைச் சேர்ந்தது. இது வளர்வதற்கு மிகக்குறைந்த அளவு காற்று போதுமா னது. காற்றில் உள்ள தழைச் சத்தை உட்கிரகித்து பயிர்களுக்கு வழங்குகிறது. நெல் மற்றும் பிற தானியப் பயிர் களின் வேர் மண்டலத்தில் இணைந்து வாழும் நுண்ணு யிர் இதுவாகும்.அசோஸ்பைரிலம் நுண் ணுயிரியை நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, பனி வரகு, தினை, சாமை, குதி ரை வாலி போன்ற தானியப் பயிர்களுக்கும், பருத்தி, சூரியகாந்தி மற்றும் கரும்பு போன்ற இதர பயிர்களுக் கும் பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி செய்ய ஒரு பொட்டலமும் (200 கிராம்) நாற்று விட்டு நடவு செய்யும் பயிர்களுக்கு நாற் றின் வேர்களை நனைக்க இரண்டு பொட்டலமும் (400 கிராம்), நடவு வயல் அல்லது நேரடி விதைப்பு செய்யும் நிலத்திற்கு ஏக்க ருக்கு 4 பொட்டலமும் (800 கிராம்) பயன்படுத்த வேண்டும்.

தாவர வளர்ச்சி ஊக்கிகளை வேர் மண்டலத்தில் உண்டாக்கு வதால் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. பயிர் களின் மகசூல் அதிகரிப்பதுடன் மண்வளம் பாதுகாக் கப்படுகிறது”.





நன்றி : தினகரன்

நன்றி : தீக்கதிர்

courtesy : Google Groups


No comments:

Post a Comment