Saturday, 29 October 2016

Timber Tree Plantation

In the process of planting 1350 saplings of timber trees supplied by the forest dept as a part of an agro forestry scheme. A noble scheme. Our small contribution to green the planet. Agro forestry is the way to go for a sustainble integrated organic farming. There are so many mutual benefits. In addition, other timber trees like mahogany, teak, vengai, poovarasu and bamboo are also being planted. The micro climate of the area will improve in the next few years, and carbon sequestration will commence. Global warming....we are going to arrest it in our own small way.

Saturday, 22 October 2016

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் : மரக்கன்றுகளின் விலை விவரம் - I I

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்-641 301
வ.எண்விளக்கம்விலை ரூ
நாற்றுகள் (பாலீதீன் கொள்கலனில்)
21.நூக்கம் (டால்பர்ஜியா லேட்டிபோலியா)6.00
22.சிசூ (டி.சிசூ)10.00
23.சந்தன வேங்கை (டீரோகார்பஸ் சான்டலினஸ்)8.00
24.வேங்கை (டீரோகார்பஸ் மார்சுபியம்)7.00
25.வாகை (அ . லேப்பேக்)6.00
26.டேர்மினாலியா6.00
27.வேவாலா(லாகெர்ஸ்ட்ரீமியா லேன்சியாலேட்டா)6.00
28.மலை வேம்பு (மெலியா காம்போசிடா))10.00
29.வேம்பு (அசாரிடாக்டா இண்டிகா)6.00
30.புங்கம் (புன்கேமியா பின்னேட்டா)6.00
31.இலுப்பை (மதுக்கா லேட்டிபோலியா)6.00
32.காட்டாமணக்கு (ஜேட்ரோபா குர்கஸ்)6.00
33.சொர்க மரம் (சைமரூபா கிளௌக்கா) 6.00
34.புண்ணை மரம் (கேல்லோபில்லம் இமொபில்லம்) 6.00
35.அயிலை (ஆயிலான்தஸ் எக்செல்சா) 10.00
36.மலைக் கொன்றை (அக்ரோகார்பஸ் பிராக்ஸினிபோலியஸ்) 10.00
37.வெள்ளைக் கதம்பு (அந்தோசெபலஸ் கதம்பா) 10.00
38.இளவம் (செய்பா பெண்டான்ட்ரா) 5.00
39.மலை வேம்பு (மெலியா டுபியா) 8.00
40.மர வேம்பு (ச்விட்டோனியா மகோகனி) 10.00
41.குமிழ் (மெலினா ஆர்போரியா) 7.00
42.உரகுமஞ்சை (பிக்சா ஒரில்லானா) 6.00
43.குழாய் மூங்கில் (பாம்பூஸா பாம்போஸ்) 6.00
44.கல் மூங்கில் (மெலினா ஆர்போரியா) 6.00
45.மூங்கில்(பாம்பூசா வல்காரிஸ்) 12.00
46.தங்க மூங்கில் (பாம்பூசா ஸ்ட்ரிக்டா) 40.00
47.வாமின் மூங்கில்(பாம்பூசா வாமின்) 40.00
48.ராட்சத மூங்கில் (பாம்பூசா டேன்ரோ கெலாமஸ்) 60.00
மேலும் தொடர்புக்கு
பண்ணை மேலாளர்
தொலைபேசி எண் : 04254 – 271539
மின்னஞ்சல் : deanformtp@tnau.ac.in

source : TNAU
Link of Part-I of this Article

Friday, 21 October 2016

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் : மரக்கன்றுகளின் விலை விவரம் - I

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்-641 301
வ.எண்விளக்கம்விலை ரூ
நாற்றுகள் (பாலீதீன் கொள்கலனில்)
1.அக்கேசியா மரக் கன்றுகள்5.00
2.தைல மரக் கன்றுகள்4.00
3.சவுக்கு (கேசுவாரினா ஈக்விசிடிபோலியா)4.00
4.அச்சா (ஹார்ட்விக்கியா பின்னேட்டா)5.00
5.பெருந்தகரை (லியூசீனா லியூக்காசெபலா)5.00
6.புளி (டாமரிண்டஸ் இண்டிகா)6.00
7.வில்வம் (ஈகிள் மார்மலஸ்)7.00
8.நாவல் (சைஜியம் கியுமினி)6.00
9.நெல்லி (எம்பிளிக்கா அபிசினாலிஸ்)6.00
10.பாதாம் (டெர்மினாலியா கட்டப்பா)6.00
11.கொடுக்காப்புளி (பிதிசெல்லோபியம் டல்ஸ்)6.00
12.அரநெல்லி (பில்லான்தஸ் அசிடஸ்)6.00
13.செம்மயிற்கொன்றை (டிலோநிக்ஸ் ரெஜியா)7.00
14.கொன்றை கொன்னை (காசியா) 7.00
15.தூங்குமூஞ்சி மழை மரம்(அல்பீசியா சமன்) 7.00
16.பட்டடி (ஸ்பத்தொடியா காம்பனுலேட்டா) 7.00
17.பெருங்கொன்றை (பெல்ட்டோபோரம் டீரோகார்ப்பம்) 7.00
18.பூவரசு (தெஸ் பீசியா பாபல்னியா) 7.00
19.சந்தன மரக்கன்றுகள் (சாண்டலம் ஆல்பம்) 20.00
20.தேக்கு (டேக்டோனா கிராண்டிஸ்) 6.00
மேலும் தொடர்புக்கு
பண்ணை மேலாளர்
தொலைபேசி எண் : 04254 – 271539
மின்னஞ்சல் : deanformtp@tnau.ac.in

source : TNAU

Monday, 10 October 2016

இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி

Image courtesy : wikipedia
இயற்கை விவசாய முறையில் நெல் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமன்றி மண் வளத்தையும் பாதுகாக்க முடியும் என்கிறார் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) முருகன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பல்வேறுபட்ட கால நிலைகள், மண் வகைகளில் நெல்பயிர், அதைச் சார்ந்த பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்து வருவதால், அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.
இதன் விளைவாக மண்வளம், மகசூல் குறைகிறது. நிலத்தடி நீர் மாசு, சுற்றுப்புற மாசு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த வழிமுறையாக உள்ளது.
அதிலும் உலக அளவில் நெல்லை உணவுப் பயிராகப் பயன்படுத்துவதால், இயற்கை முறையில் நெல் சாகுபடி மிக, மிக அவசியமாகிறது.
இயற்கை நெல் சாகுபடி என்பது, செயற்கை உரங்களையோ, பூச்சிக்கொல்லி மருந்துகளையோ பயன்படுத்தாமல் இயற்கை சார்ந்த எருக்கள், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.
இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு வெளிநாடு, உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், பெருநகரங்களில் இயற்கை வேளாண் விளை பொருள்களுக்காக தனியாகக் கடைகள் தொடங்கப்படுவதோடு, கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராகி வருகின்றனர்.
எனவே இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்தால், விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமல்லாமல், மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.

நெல் சாகுபடிக்கேற்ற இயற்கை வேளாண் தொழில் நுட்பங்கள்: இயற்கை வேளாண்மையில் நல்லத் தரமான சன்ன ரகங்களான வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை 43, 45, 49, கோ-51, பூச்சி, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை உபயோகப்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதோடு கூடுதல் விலையும் பெற முடியும். இயற்கை சாகுபடி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகிக்க வேண்டும்.

விதை நேர்த்தி: விதை நேர்த்தி செய்வதற்கு ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து உயிர் உரங்கள், தாவரம் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.
1 கிலோ விதைக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம், 10 கிராம் பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் என்ற அளவில் உபயோகித்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால், இளம் பயிரில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து மண் வழியில் பரவும் நோய்கள் தவிர்க்கப்படும்.

நாற்றாங்கால் தயாரிப்பு: நாற்றாங்கால் தயாரிப்புக்கு 1 சென்டுக்கு 100 கிலோ தொழு உரம், 50 கிலோ மண் புழு உரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.

நடவுப் பணி: நடவு வயலில் கடைசி உழவின்போது, 1 ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும்.
அல்லது நடவு வயலில் நடுவதற்கு முன்பு பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப் பூண்டு, சணப்பை, கொழுஞ்சி விதைகளை 20 கிலோ விதைத்துப் பிறகு 45 நாள்கள் கழித்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது 10 டன்கள் வரை பசுந்தாள் உரங்கள் கிடைப்பதோடு, 50 முதல் 80 கிலோ வரை தழைச் சத்தும் கிடைக்கிறது.
பண்ணையில் காணப்படும் வேம்பு, புங்கம், கிளைசிரிடியா, செஸ்பானியா, சூபாபுல், மரத்தின் சிறுக் கிளைகளை உடைத்து வந்து சரியான ஈரப் பதத்தில் நிலத்தில் நன்கு மட்கும்படி மடக்கி உழ வேண்டும்.
பசுந்தாள் உரப் பயிர்களை வளர்க்க முடியாவிட்டால், 1 ஏக்கருக்கு 5 டன் மண் புழு உரம் போடலாம்.
சூடோமோனாஸ், உயிர் பூஞ்சானக் கொல்லியை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் நடுவதற்கு முன்பாக இட வேண்டும்.
நடவு வயலில் அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட், பால்போ பாக்டீரியா 10 பாக்கெட் ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
அசோலா உயிர் உரத்தை 1 ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் நடவு செய்த 3 முதல் 5 நாள்களுக்குள் இட்டு, நன்கு வளர்ந்த அசோலாவை (20 நாள்கள் கழித்து) கோனோவீடர் மூலம் நன்கு அழுத்தி விடுவதால், வயல்களுக்கு தழைச் சத்து உரமாகக் கிடைக்கிறது.
களை எடுக்கும் கருவிகளான கோனோவீடர் அல்லது ரோட்டரி கருவி ஆகியவற்றைக் கொண்டு நடவு செய்த 15 நாள்கள் முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்வதால் களைகள் குறைந்து மண் காற்றோட்டம் அடைவதுடன், வேரின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. நடவு வயலில் மேல் உரமாக 1 ஏக்கருக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, பயிர் தூர் தட்டும் பருவத்தில் போட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறைகள்: இயற்கை நெல் சாகுபடியில் பூச்சி, நோய் மேலாண்மை  சவாலாக விளங்குகிறது. இருந்த போதிலும் ரசாயனப் பூச்சிக் கொல்லி அல்லாத ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக கடைப்பிடிப்பதால், பூச்சி, நோய்களை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.
கோடை உழவு செய்வதால், மண்ணில் உள்ள பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
வரப்பில் உள்ள களைகளை சுத்தமாக வெட்டிவிட வேண்டும். சரியான முறையில் நீர்ப் பாசனம் செய்வதுடன் தகுந்த வடிகால் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
அதிக அளவில் தழைச்சத்து இடாமல் இருக்க வேண்டும். இனக் கவர்ச்சி பொறி, விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டம், எண்ணிக்கையைக் கண்காணித்து தகுந்த கட்டுப்பாடு முறைகளைக் கையாளுதல் வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கக் கூடிய தாவர வகைப் பூச்சி மருந்துகள், உயிரியல் பூச்சி நோய்த் தட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
பசுவில் இருந்து கிடைக்கக் கூடிய 5 பொருள்களான சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா (3 சதவீதம்) இலை வழி ஊட்டமாக தெளிக்க வேண்டும்.
குருத்துப் புழு, இலைச் சுருட்டுப் புழு கட்டுப்படுத்தும் முறை: 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும்.
ட்ரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணி அட்டையை ஏக்கருக்கு 2 சி.சி. அளவில் 1 வார இடைவெளியில் 3 முறைக் கட்ட வேண்டும். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் உயிரியல் காரணியை ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிக்க வேண்டும்.
தத்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி கட்டுப்படுத்துதல்: சரியான அளவு தழைச் சத்து இட வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.
5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 2 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.
குலை நோய் கட்டுப்படுத்துதல்: வரப்பில் உள்ள களைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
அதிகமான அளவு தழைச்சத்து இடக் கூடாது. எதிர் சக்தி கொண்ட கோ-47 ரகம் சாகுபடி செய்ய வேண்டும். சூடோமோனாஸ், உயிரியல் காரணி ஆகியனவற்றை நடவு செய்த 45-ஆம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் 0.2 சதவீதத்தில் 3 முறை தெளிக்க வேண்டும்.

இலையுறை அழுகல், இலையுறை கருகல், பாக்டீரியா இலை கருகலை கட்டுப்படுத்தல்: சூடோமோனாஸ், உயிரியல் காரணி ஆகியவற்றை நடவு செய்த 45-ஆம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் 0.2 சதவீதம் என்ற வீதத்தில் 3 முறை தெளிக்க வேண்டும். 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 2 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். பசுவின் சாணம் 20 சதவீதம் கரைசலை நோய் புலப்படும் தருணத்தில் 15 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை 044 - 2745 2371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் உதவிப் பேராசிரியர் முருகன்.

நன்றி : தினமணி

Wednesday, 5 October 2016

நிலப்பண்படுத்துதல் மற்றும் பயிர் அறுவடையில் நன்னெறி மேலாண்மை முறைகள்


உழவு மற்றும் அறுவடையில் கடைபிடிக்க வேண்டிய நன்னெறி மேலாண்மை முறைகள்

1. நீர்வழிப் பாசன மூலம்  இடுபொருள் இடுதல்
உரம், பூச்சிக்கொல்லி மற்றம் இதர டு பொருட்களை நீர்வழி பாசன மூலம் அளித்தால், வேலை சுலபமாக முடிவதோடு, மண்ணில் இழுவை இயந்திரம் பயன்படுத்துவதால் வரும் மண் இறுக்கத்தை தவிர்க்கலாம். நீர்வழி  இடுபொருள் இடும்போது சரியான அளவினை பயன்படுத்தவேண்டும்.


2. இழுவை இயந்திரத்துடன் பிற வேலைகளையும் சேர்ந்து செய்தல்
டிராக்டர் உழவு செய்யும் பொது, கரும்பு நடவு செய்தல் போன்றவற்றையும் இணைத்து செய்யும் போது நிலத்தில் டிராக்டர் அதிகம் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

சில ஆலோசனைகள்

உரம் மற்றும் கலை கொல்லியினை ஒரு சேர இடுதல்

இடை சாகுபடியினை செய்யும் போது உரமிடுவதையும் ஒன்றாகச் செய்தல்.


3. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது பாரம்பரிய, அங்கக மற்றும் உயிரி முறையில் பயிர்ப் பாதுகாப்பு செய்தலாகும். இம்முறையில் நன்மை தரும் பூச்சியினை அதிகரித்து, பூச்சிக்கொல்லி தெளிப்பதைத் தவிர்க்கலாம். அதோடு மண் இறுக்கத்தையும் தவிர்க்கலாம்.



4. செயற்கை காற்றுத் தடுப்புச் சுவர்
அதிவேக காற்றினை தடுத்து பயிர் பாதிக்காமல் காப்பதாகும்.
உதாரணம்
தடுப்பு சுவர்களை, கம்பிகள் அல்லது சிமெண்ட் தூண்கள் ஆகியவற்றை நிலத்தின் ஓரத்தைச் சுற்றிலும் நட்டு வைத்தல் அல்லது மரங்களை வளர்த்தல், அதிவேக காற்றினை தடுப்பதோடு பயிர் சேதமடையாமல் காக்கிறது.

5. பல்லாண்டுப் பயிர்
தானியப்பயிர், தீவனப்பயிர் மற்றும் பழப்பயிர்களை, பல்லாண்டுகள் சாகுபடி செய்வதாகும். அவ்வாறு செய்யும் போது மண் அரிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

6. மண் ஈரப்பதத்திற்கேற்ப பயிர் சாகுபடி
மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப பயிர் சாகுபடி செய்வது ஓர் மிகச்சிறந்த தொழில்நுட்பமாகும். இம்முறையில் நடவு செய்யும் நேரம் குறைவதோடு பயிர் நன்கு ஊன்றி வளரவும் வழிவகுக்கும். பயிர் நடுவதற்கும், நட்ட பயிர் விரைவில் முளைப்பதற்கும் இடையே உள்ள கால இடைவெளியை குறைக்கவும் உதவுகிறது. மண்ணின் ஈரப்பதத்தால் மேல் பரப்பில் கடினமாகாமல், நட்ட நாற்றுக்கள் காற்றினால் குலைந்துப் போகாமலிருக்க உதவுகிறது.

நடைமுறைப்படுத்த சில ஆலோசனைகள்
மண் அழுத்தம் அதிகமாகாமல் காக்கவேண்டும். இதனால் அதிக உழவு செய்வதைத் தடுக்கலாம். நடவு செய்ய நிலம் தயார் செய்தவுடன் பாசனம் செய்யவேண்டும். நீர்ப் பாசனத்திற்கு பின், மெல்லிய கடினமான புரணி மண்ணின் மேற்பரப்பில் உருவாகும். நாற்று மேடை, நீர்ப்பாசனம் மற்றம் நடவு ஆகியவற்றிற்கிடையே உள்ள நேரத்தை குறைக்கவேண்டும்.

7. துல்லியப் பண்ணையம்
துல்லியப் பண்ணை என்பது ஜி.பி.எஸ் கருவியைக் கொண்டு பண்ணையின் கருவிகள், செயல்பாடுகளைத் துல்லியமாக செய்து அதிக இலாபம் பெறுவதாகும். துல்லியப் பண்ணையில் பயிர் சாகுபடி முறையில் முரண்பாடு வராமல் நிகழும் தட்பவெப்பத்திறனுக்கு ஏற்ப செயல்படுவதாகும்.

8. அறுவடை வேலை குறைப்பு
அறுவடை கருவிகளை நிலத்தில் பயிரை அறுவடை செய்ததை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. அவ்வியந்திரத்தின் உபயோகத்தை குறைக்க போது மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.


9. குறைந்த உழவு முறை
குறைந்த உழவு முறை என்பது, பயிர் சாகுபடிக்கு செய்யப்படும் உழவு எண்ணிக்கையை குறைத்தலாகும். அதிக முறை உழவு செய்தல் மண்ணின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாக்க உழவு முறையில் மாற்றம் தேவை.

ஆலோசனைகள்
குறைந்த உழவு முறை, நிலப்போர்வை உழவு முறை.

10.மண்ணின் ஈரப்பத்திற்கேற்ப உழவு செய்தல்
மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப உழவு செய்தல் என்பது உழவு செய்வதற்கு முன்பு அல்லது செய்யும் போது அல்லது மழை வரும் போது உழவு செய்தலாகும். நீர், மண்ணின் துகள்களை ஒன்றாக இணையச் செய்து, மண்ணின் ஆக்சிஜன் குறைந்து காற்று சென்றடையாமல் தடுக்கிறது. நன்கு காய்ந்த மணல், மேற்பரப்பிலிருந்து காற்றினான் அரித்துச் சென்றுவிடும். தேவையான அளவு ஈரப்பதத்தை காக்க உழவு செய்வதற்கு முன் நீர்ப் பாசனம் செய்தல் அல்லது மழைக்குப் பின் உழவு செய்தல்வேண்டும். உழவுக்குப் பின் பெரிய மணல் கட்டி உருவாகும், இவை மண் அரிப்பை தடுக்கிறது.

சில ஆலோசனைகள்
தேவையான ஆழம் வரை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மழைப்பொழிவும், உழவும் ஒன்றே நேரத்தில் நடைபெற  திட்டமிடவேண்டும்.


11. உழவு முறை செய்யும் காலம்
மண் அரிப்பு ஏற்படும் நேரத்திற்கு முன் உழவு செய்தலே சிறந்த உழவு செய்யும் நேரமாகும். உழவு செய்யும் நேரத்தை சரி செய்யும் போது மண் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.


Saturday, 1 October 2016

வேர் உட்பூசணம் என்னும் பயிர்களின் நண்பன்

பயிர்களின் வேர்கள் நிலத்தில் பதித்து சத்துக்களை கிரகித்து வளர்கின்றன. இந்த வேர்கள் குறிப்பிட்ட அளவு ஆழத்திற்கு மட்டுமே செல்லும். அப்படி செல்லும் இடத்தில் கிடைக்கும் சத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆனால் வேர் உட்பூசணங்களை பயிர்களுக்கு இடும் போது அவை தாவரங்களுக்கு எளிதில் கிடைக்காத சில நுண்ணிய சத்துக்களை கூட கிரகித்து பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த வேர் பூசணங்கள் என்பது ஒரு வகை நுண்ணுயிர் வகையை சேர்ந்தது. இது பயிர்களின் வேர்களில் வாழ்ந்து கொண்டு பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து தான் சாந்து வாழும் பயிர்களுக்கு அளிக்கின்றன.

நுண்ணுயிரிகள்:

கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரினங்களை நுண்ணுயிரிகள் என்று அழைப்பர். இவற்றில் தாவர வேர்களில் கட்டாய கூட்டு வாழ்க்கை நடத்தும் வேர் உட்பூசணம் முக்கியமானதாகும். இந்த வேர் உட்பூசணம் என்ற நுண்ணுயிர் மண்ணில் ஸ்போர் எனப்படும் குறுகற்றையான பூஞ்சாணமாகவும், இழைத்துண்டுகளாகவும் காணப்படும். இப்படியான நுண்ணுயிரியான வேர் உட்பூசணங்கள் மண்ணில் இருக்கும் பயிரின் வேர்களை சார்ந்து வாழ்கின்றன.

இவை வளர தேவையான ஒத்த பயிர்கள் வளரும் போது வேர்ப்பூசண வித்துக்கள் முளைத்து அந்த பயிரின் வேரை சூழ்கின்றன. பிறகு சிறிதுசிறிதாகதான் சார்ந்த பயிரின் வேரினுள் நுழைகிறது. வேரிலிருந்துகிளம்பும் பூஞ்சண இழைகள் மண்ணில் சென்று சத்து நிரம்பிய நுண்ணூட்டங்களை கிரகிக்கின்றன. இவற்றால் உறிஞ்சப்படும் சத்துக்கள் வேர் இலைகளில் ஊட்டங்களாக சேமிக்கப்படுகின்றன.

வேர் உட்பூசணத்தின் செயல்பாடு:

இந்த பூசண வேர்த்தூவிகள் மண்ணில் வெகு துரத்திற்கு சுலபமாக பரவி விடுகிறது. இப்படி பரவும் திறன் இருப்பதால்,வேர்கள் பரவ முடியாத தூரத்தில் உள்ள சத்தை கூட இந்த பூசணம் உறிஞ்சி செடிகளுக்கு தருகிறது. இது தவிர, வேர் உட்பூசணம் தாவரத்தின் வேர்களுக்குள் நுழைந்து வேர் இழைகளை உண்டாக்கி, வேர்களுக்கு எட்டாத மணிச்சத்தை தனது இழைகளின் மூலம் பயிருக்கு கொண்டுவந்து சேர்க்கின்றன. மணிச்சத்தை பயிர்களுக்கு கொடுப்பதுடன் கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்து போன்ற சத்துக்களையும் மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்து கொடுக்கிறது. இதர நுண்ணுயிர்களைப்போல் வேர் உட்பூசணத்தை சர்க்கரை கரைசல் ஊடகங்களில் வளர்க்கமுடியாது. இது தாவர வேர்களிலேயே வளரக்கூடியது. எனவே வேர் உட்பூசணம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வெர்மி குலைட் அல்லது கிருமி நீக்கப்பட்ட மணல் மண் கலந்த பாத்திகளில் வளர்க்கப்பட்ட சோளம் அல்லது புல் வகைகளின் வேர்களில் வளர்க்கப்படுகிறது. பூசண வேரில் நன்கு வளர்ந்த பின் பயிரில் வளரும் வேரும் பரவிய மண்ணும் எடுக்கப்பட்டு துகள்களாக்கி பாலித்தீன் பைகளில் கொடுக்கப்படுகிறது. இந்த கலவையை வயலில் இட பரிந்துரைக்கப்படுகிறது.

பயன்படுத்தும் முறை:

ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேர் உட்பூசணங்கள் போதுமானது. விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் இடவும். பாலித்தீன் பைகளில் வளரும் நாற்றுகளுக்கு ஒரு பைக்கு 10 கிராம் வேர் உட்பூசணம் போதுமானது. பைகளுக்கு தேவைப்படும் மண் கலவையை தயார் செய்யும்போது, 100 கிலோ மண் கலவைகளில் 10 கிலோ வேர் உட்பூசணங்கள் வளர்ந்து பாலித்தீன் பைகளில் இடவும். வளர்ந்த பயிர்களுக்கு ஒரு பயிர்களுக்கு சுமார் 200 கிராம் வேர் உட்பூசணம் தேவைப்படும்.

பயன்கள்:

குறுகிய கால பயிர்களுக்கான பயறுவகைகள், நிலக்கடலை போன்றவற்றின் மகசூலை அதிகபடுத்தப்படுகின்றன. வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து பயிர்வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வேரைத்தாக்கும் பூஞ்சாண நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மண்ணின் கட்டடமைப்பை அதிகரிக்கிறது. நிலத்தின் களர், உவர் தன்மையை தாங்கி பயிரை நிலை நிறுத்துகிறது.

நன்றி: M S Swaminathan Research FoundationM S Swaminathan Research Foundation

உயிர் உரங்கள்

ஆற்றல்மிக்க ஆய்வு வகை நுண்ணுயிரிகளுடைய செயலுள்ள உயிரை அல்லது செயலற்ற உயரணுவை கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால், விதை அல்லது மண்ணின் வழியாக வேர்த்தண்டின் தொடர்பால் அளிக்கும் போது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துக்களை நுண்ணுயிரி முறைகளால் எளிதில் எடுத்துக் கொள்ள உதவுகிறது.

இயற்கையில் நுண்ணுயிரிகள் ஆற்றல் மிக்கதாக இல்லாமல் இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணில் நுண்ணுயிரிகளின் செயலை அதிகப் படுத்தலாம்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இரசாயன உரங்களுக்கான மாற்றாக நிலையான வேளாண்மையில், இந்த உயிர் உரம் விலை குறைவாகவும், ஊட்டச்சத்துக்களைப் புதுப்பித்தலுக்கான ஆதாரமாக இருக்கிறது. பல நுண்ணுயிரிகள் மற்றும் பயிர்களுடன் உள்ள தொடர்பால் உயிர் உரங்கள் தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கிறது. நுண்ணுயிரிகளின் தன்மை மற்றும் செயலைப் பொறுத்து இது பலவழிகளில் வகைப்படுத்தப்படுகிறது.

வகைகள்உதாரணங்கள்
தழைச்சத்தை நிலைப்படுத்தும் உயிர் உரங்கள்
தன்னிச்சையாக வாழ்தல்அசட்டோபேக்டர், பெய்ஜரிங்க்யா, க்ளாஸ்ட்ரிடியம், க்ளப்சில்லா, அனபீனா, நாஸ்டாக்
இணை வாழ் தன்மைரைசோபியம், ப்ரேங்கியா, அனபீனா, அசோலா
கூடிசேரும் இயல்புடைய இணை வாழ் தன்மைஅசோஸ்பைரில்லம்
மணிச்சத்தை கரைக்கும் உயிர் உரங்கள்
நுண்ணுயிரிபேசில்லஸ் மெகாடிரியம் வகை பாஸ்போடிக்கம், பேசில்லஸ் சப்டிலிஸ், பேசில்லஸ் சர்குலன்ஸ், சூடோமோனாஸ் ஸ்டெய்ரிட்டா
பூஞ்சைபெனிசிலியம் வகைகள், அஸ்பெர்ஜிலல்லஸ் அவாமோரி
மணிச்சத்தை இடம் பெயரச் செய்யும் உயிர் உரங்கள்:
குமிழியுடைய மரம் போன்ற
வேர்சூழ் பூசணம்
குலோமஸ் வகை, கிகாஸ் போரா வகை, அகேலூஸ்போரா வகை, ஸ்கூட்டலோஸ்போரா வகை, ஸ்கிளிரோ ஸிஸ்டிஸ் வகை
வெளி வேர் உட்பூசணம்லேக்கேரியா வகை, பிஸியோலித்திஸ் வகை, போலிடஸ் வகை, அமெனிட்டா வகை
எரிகாய்டு வேர் உட்பூசணம்பெஜிஜில்லா எரிக்கே
ஆர்கிட் வேர் உட்பூசணம்ரைசோக்டோனியா சொலானி
நுண்ணூட்டச் சத்துக்கான உயிர் உரங்கள்:
சிலிக்கேட் மற்றும் துத்தநாக கரைதிறன்கள்பேசில்லஸ் வகை
பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கும் வேர் நுண்ணுயிரி
சூடோமோனாஸ்சூடோமோனாஸ் ஃப்ளோரஸன்ஸ்


நன்றி : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழக இணையதளம்