Tuesday, 20 December 2016

Effective Microorganisms Technology

Image courtesy : TNAU


EM or Effective Microorganisms is a consortium culture of different effective microbes commonly occurring in nature. Most important among them are: N2-fixers, P-solubilizers, photosynthetic microorganisms, lactic acid bacteria, yeasts, plant growth promoting Rhizobacteria and various fungi and Actinomycetes. In this consortium, each microorganism has its own beneficial role in nutrient cycling, plant protection and soil health and fertility enrichment.

Benefits of EM use : Improve seed germination, seedling emergence, growth of plants, flowering, fruiting and ripening of grains and fruits.
  •  Improves photosynthetic potential.
  •   Increase tolerance in plants against pest attack.
  •   Improves physico-chemical and biological properties of soil.
  •   Help in control of soil borne pathogens.
  •   Interdependent biological activity of different EM organisms creates a congenial environment for growth and spread of soil's flora and fauna. They also promote the   growth and colonization of VAM, which further help in plant growth promotion.
  •   Help in quick degradation of organic matter. With the use of EM the requirement of compost can be reduced or dispensed with. Just recycling of crop residue with EM can give similar results as with good compost. This saves lot of labour and space required for compost preparation.
  •   Improves soil biota and makes the soil soft and porous
How to use EM : Application of EM in agriculture involves four steps as follows:
  1.  Procurement of primary EM- available in market
  2. Preparation of secondary EM – to be carried out by the farmer
  3. Appropriate dilution of the secondary EM solution
  4. Application to plants, soil and organic matter as spray
Preparation of secondary EM solution Depending upon the requirement and its end use, various EM formulations have been developed. Even among one formulation depending upon the place and climatic conditions some variations have been incorporated and recommended by promoting institutes and agencies. Some of the widely used and popular formulations are described below. Water used in all formulations should be either rainwater or fresh tube-well water. Tap water is not to be used. 

EM-1 formulation :This formulation is used for seed treatment, soil enrichment and for spray in field after the emergence of seedlings.
  • Dissolve 5 kg jaggary (chemical free) in about 100 lit of water
  • Add 5 lit of EM
  • Mix thoroughly and pour into a plastic carboy. Seal the carboy and allow to ferment for 7 days
  •  Dilute this solution in a ratio of 1:1000 and spray over soil or crop residue. For seed treatment soak the seeds in this diluted solution. 
EM-5 for control of insects and pests
  • Dissolve 100gm of jaggary in 600 ml of water

  • Add 100 ml each of natural vinegar, wine or brandy and EM

  • Mix thoroughly and transfer the contents in a plastic bottle or carboy and seal the container.

  • To increase the potency few cloves of garlic and chilly paste can also be added to this suspension before sealing the container.

  • Allow the contents to ferment for 5-10 days under shade.

  • Release the gas daily

  • Within 10 days the EM solution will be ready for use. This can be stored up to 3 months at normal room temperature in a cool and dry place.

  • Dilute the contents in a ratio of 1: 1000 and apply as foliar spray with the help of a sprayer.  
Fermented Plant Extract (FPE) In this formulation fresh green weeds are fermented with EM to obtain a fermented plant extract.
  • Cover the drum and tie with a rope.

  • The drum should be filled up to the top, leaving very little space for air.

  • Fermentation and gas formation process will start slowly.

  • Mix the contents at repeated intervals.

  • Finished FPE having a pH of 3.5 with pleasing smell will be ready in 5-10 days time.

  • Filter the solution through a cloth and collect the filtrate.

  • For spraying on soil dilute the FPE in a ratio of 1 : 1000 with fresh water.

  • For spraying on crops dilute FPE in a ratio of 1 : 500.

  • Spraying should be done after germination of seeds in early morning hours once or twice a week. 
EM - Bokashi
Bokashi is a type of compost prepared by fermentation of waste organic matter with the help of EM. Bokashi is mainly used for improving the fertility status of soil and for enhancing the degradation of crop residue.
  • Collect sufficient quantity of different organic matter (such as rice bran, fish meal, animal waste etc) equivalent to 150 lit drum volume. 
  • Mix 150gm of jaggary and 50 ml of EM in 15 lit of water.
  • Mix this solution with organic waste thoroughly in such a way that entire contents get uniformly moistened.
  • Grind 2.3 kg of fresh green weeds to a coarse paste. Dilute with 14 lit of water.
  • Dissolve 42 gm of jaggary in some water and mix with weed suspension.
  • Add 420ml of EM
  • Transfer the contents to a plastic drum and with the help of a thick plastic sheet
  • Transfer the contents in a plastic bag and seal the bag.
  • To ensure the anaerobic conditions put this bag into another polythene bag and seal
  • Allow the contents to ferment for 3-4 days in a cool shade place
  • Bokashi will be ready after 4 days.
  • This can be used immediately.
  • In plastic air tight bags Bokashi can be stored up to 6 months.
How to use Bokashi
source: TNAU

Tuesday, 1 November 2016

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் : மரக்கன்றுகளின் விலை விவரம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்-641 301

தைலம் (மரம்)

சவுக்கு

வில்வம்
வ.எண்விளக்கம்விலை ரூ
நாற்றுகள் (பாலீதீன் கொள்கலனில்)
1.அக்கேசியா மரக் கன்றுகள்5.00
2.தைல மரக் கன்றுகள்4.00
3.சவுக்கு (கேசுவாரினா ஈக்விசிடிபோலியா)4.00
4.அச்சா (ஹார்ட்விக்கியா பின்னேட்டா)5.00
5.பெருந்தகரை (லியூசீனா லியூக்காசெபலா)5.00
6.புளி (டாமரிண்டஸ் இண்டிகா)6.00
7.வில்வம் (ஈகிள் மார்மலஸ்)7.00
8.நாவல் (சைஜியம் கியுமினி)6.00
9.நெல்லி (எம்பிளிக்கா அபிசினாலிஸ்)6.00
10.பாதாம் (டெர்மினாலியா கட்டப்பா)6.00
11.கொடுக்காப்புளி (பிதிசெல்லோபியம் டல்ஸ்)6.00
12.அரநெல்லி (பில்லான்தஸ் அசிடஸ்)6.00
13.செம்மயிற்கொன்றை (டிலோநிக்ஸ் ரெஜியா)7.00
14.கொன்றை கொன்னை (காசியா) 7.00
15.தூங்குமூஞ்சி மழை மரம்(அல்பீசியா சமன்) 7.00
16.பட்டடி (ஸ்பத்தொடியா காம்பனுலேட்டா) 7.00
17.பெருங்கொன்றை (பெல்ட்டோபோரம் டீரோகார்ப்பம்) 7.00
18.பூவரசு (தெஸ் பீசியா பாபல்னியா) 7.00
19.சந்தன மரக்கன்றுகள் (சாண்டலம் ஆல்பம்) 20.00
20.தேக்கு (டேக்டோனா கிராண்டிஸ்) 6.00
21.நூக்கம் (டால்பர்ஜியா லேட்டிபோலியா)6.00
22.சிசூ (டி.சிசூ)10.00
23.சந்தன வேங்கை (டீரோகார்பஸ் சான்டலினஸ்)8.00
24.வேங்கை (டீரோகார்பஸ் மார்சுபியம்)7.00
25.வாகை (அ . லேப்பேக்)6.00
26.டேர்மினாலியா6.00
27.வேவாலா(லாகெர்ஸ்ட்ரீமியா லேன்சியாலேட்டா)6.00
28.மலை வேம்பு (மெலியா காம்போசிடா))10.00
29.வேம்பு (அசாரிடாக்டா இண்டிகா)6.00
30.புங்கம் (புன்கேமியா பின்னேட்டா)6.00
31.இலுப்பை (மதுக்கா லேட்டிபோலியா)6.00
32.காட்டாமணக்கு (ஜேட்ரோபா குர்கஸ்)6.00
33.சொர்க மரம் (சைமரூபா கிளௌக்கா) 6.00
34.புண்ணை மரம் (கேல்லோபில்லம் இமொபில்லம்) 6.00
35.அயிலை (ஆயிலான்தஸ் எக்செல்சா) 10.00
36.மலைக் கொன்றை (அக்ரோகார்பஸ் பிராக்ஸினிபோலியஸ்) 10.00
37.வெள்ளைக் கதம்பு (அந்தோசெபலஸ் கதம்பா) 10.00
38.இளவம் (செய்பா பெண்டான்ட்ரா) 5.00
39.மலை வேம்பு (மெலியா டுபியா) 8.00
40.மர வேம்பு (ச்விட்டோனியா மகோகனி) 10.00
41.குமிழ் (மெலினா ஆர்போரியா) 7.00
42.உரகுமஞ்சை (பிக்சா ஒரில்லானா) 6.00
43.குழாய் மூங்கில் (பாம்பூஸா பாம்போஸ்) 6.00
44.கல் மூங்கில் (மெலினா ஆர்போரியா) 6.00
45.மூங்கில்(பாம்பூசா வல்காரிஸ்) 12.00
46.தங்க மூங்கில் (பாம்பூசா ஸ்ட்ரிக்டா) 40.00
47.வாமின் மூங்கில்(பாம்பூசா வாமின்) 40.00
48.ராட்சத மூங்கில் (பாம்பூசா டேன்ரோ கெலாமஸ்) 60.00
விதைக் கரணை மற்றும் விதையில்லா பெருக்கம்
1.தைல மரக்கன்றுகள்50.00
2.சவுக்கு (கேசுவாரினா ஈக்விசிடிபோலியா)50.00
3.இந்தோனேசியா சவுக்கு (கேசுவாரினா சுங்குநியானா)50.00
4.சிசூ (டால்பர்ஜியா சிசூ)10.00
5.தேக்கு டெக்டோனா கிரான்டிஸ் 10.00
6.காட்டாமணக்கு (ஜட்ரோபா குர்கஸ்) 50.00
7.புங்கம் ஓட்டுகள் (பொங்கோமியா பின்னேட்டா) 20.00
8.சொர்க மரம் (சைமறுபா க்களௌக்கா) ஓட்டுகள் 20.00
9.பூமருது (முளைத்த தண்டுத்துண்டுகள்) 10.00
10.மலை வேம்பு (மெலியா டுபியா) தண்டுத்துண்டுகள் 10.00
11.பாப்லர்(பாபுலஸ் டெல்டாய்டஸ்)தண்டுத்துண்டுகள் 10.00
12.மஞ்சள் கொன்றை (கேசியா சியாமியா) 10.00
13.பூவரசு (தெஸ்பீசியா பாபல்நியா)முளைத்த தண்டுத்துண்டுகள் 7.00
14.சீமைக் கொன்றை (15-30 செ.மீ)0.50
15.டுராண்டா 5.00
உயிர் உரங்கள்
1.நுண்ணுயிர் உயிர் உரங்கள் /கிலோ (அசாஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம்,அசடோபாக்டர், அசோபாஸ்). 40.00
2.வி.ஏ.எம் / கிலோ 30.00
3.மண்புழு /கிலோ 200.00
4.மண்புழு உரம்/கிலோ 6.00
மேலும் தொடர்புக்கு
பண்ணை மேலாளர்
தொலைபேசி எண் : 04254 – 271539
மின்னஞ்சல் : deanformtp@tnau.ac.in

source : TNAU

Saturday, 29 October 2016

Timber Tree Plantation

In the process of planting 1350 saplings of timber trees supplied by the forest dept as a part of an agro forestry scheme. A noble scheme. Our small contribution to green the planet. Agro forestry is the way to go for a sustainble integrated organic farming. There are so many mutual benefits. In addition, other timber trees like mahogany, teak, vengai, poovarasu and bamboo are also being planted. The micro climate of the area will improve in the next few years, and carbon sequestration will commence. Global warming....we are going to arrest it in our own small way.

Saturday, 22 October 2016

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் : மரக்கன்றுகளின் விலை விவரம் - I I

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்-641 301
வ.எண்விளக்கம்விலை ரூ
நாற்றுகள் (பாலீதீன் கொள்கலனில்)
21.நூக்கம் (டால்பர்ஜியா லேட்டிபோலியா)6.00
22.சிசூ (டி.சிசூ)10.00
23.சந்தன வேங்கை (டீரோகார்பஸ் சான்டலினஸ்)8.00
24.வேங்கை (டீரோகார்பஸ் மார்சுபியம்)7.00
25.வாகை (அ . லேப்பேக்)6.00
26.டேர்மினாலியா6.00
27.வேவாலா(லாகெர்ஸ்ட்ரீமியா லேன்சியாலேட்டா)6.00
28.மலை வேம்பு (மெலியா காம்போசிடா))10.00
29.வேம்பு (அசாரிடாக்டா இண்டிகா)6.00
30.புங்கம் (புன்கேமியா பின்னேட்டா)6.00
31.இலுப்பை (மதுக்கா லேட்டிபோலியா)6.00
32.காட்டாமணக்கு (ஜேட்ரோபா குர்கஸ்)6.00
33.சொர்க மரம் (சைமரூபா கிளௌக்கா) 6.00
34.புண்ணை மரம் (கேல்லோபில்லம் இமொபில்லம்) 6.00
35.அயிலை (ஆயிலான்தஸ் எக்செல்சா) 10.00
36.மலைக் கொன்றை (அக்ரோகார்பஸ் பிராக்ஸினிபோலியஸ்) 10.00
37.வெள்ளைக் கதம்பு (அந்தோசெபலஸ் கதம்பா) 10.00
38.இளவம் (செய்பா பெண்டான்ட்ரா) 5.00
39.மலை வேம்பு (மெலியா டுபியா) 8.00
40.மர வேம்பு (ச்விட்டோனியா மகோகனி) 10.00
41.குமிழ் (மெலினா ஆர்போரியா) 7.00
42.உரகுமஞ்சை (பிக்சா ஒரில்லானா) 6.00
43.குழாய் மூங்கில் (பாம்பூஸா பாம்போஸ்) 6.00
44.கல் மூங்கில் (மெலினா ஆர்போரியா) 6.00
45.மூங்கில்(பாம்பூசா வல்காரிஸ்) 12.00
46.தங்க மூங்கில் (பாம்பூசா ஸ்ட்ரிக்டா) 40.00
47.வாமின் மூங்கில்(பாம்பூசா வாமின்) 40.00
48.ராட்சத மூங்கில் (பாம்பூசா டேன்ரோ கெலாமஸ்) 60.00
மேலும் தொடர்புக்கு
பண்ணை மேலாளர்
தொலைபேசி எண் : 04254 – 271539
மின்னஞ்சல் : deanformtp@tnau.ac.in

source : TNAU
Link of Part-I of this Article

Friday, 21 October 2016

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் : மரக்கன்றுகளின் விலை விவரம் - I

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்-641 301
வ.எண்விளக்கம்விலை ரூ
நாற்றுகள் (பாலீதீன் கொள்கலனில்)
1.அக்கேசியா மரக் கன்றுகள்5.00
2.தைல மரக் கன்றுகள்4.00
3.சவுக்கு (கேசுவாரினா ஈக்விசிடிபோலியா)4.00
4.அச்சா (ஹார்ட்விக்கியா பின்னேட்டா)5.00
5.பெருந்தகரை (லியூசீனா லியூக்காசெபலா)5.00
6.புளி (டாமரிண்டஸ் இண்டிகா)6.00
7.வில்வம் (ஈகிள் மார்மலஸ்)7.00
8.நாவல் (சைஜியம் கியுமினி)6.00
9.நெல்லி (எம்பிளிக்கா அபிசினாலிஸ்)6.00
10.பாதாம் (டெர்மினாலியா கட்டப்பா)6.00
11.கொடுக்காப்புளி (பிதிசெல்லோபியம் டல்ஸ்)6.00
12.அரநெல்லி (பில்லான்தஸ் அசிடஸ்)6.00
13.செம்மயிற்கொன்றை (டிலோநிக்ஸ் ரெஜியா)7.00
14.கொன்றை கொன்னை (காசியா) 7.00
15.தூங்குமூஞ்சி மழை மரம்(அல்பீசியா சமன்) 7.00
16.பட்டடி (ஸ்பத்தொடியா காம்பனுலேட்டா) 7.00
17.பெருங்கொன்றை (பெல்ட்டோபோரம் டீரோகார்ப்பம்) 7.00
18.பூவரசு (தெஸ் பீசியா பாபல்னியா) 7.00
19.சந்தன மரக்கன்றுகள் (சாண்டலம் ஆல்பம்) 20.00
20.தேக்கு (டேக்டோனா கிராண்டிஸ்) 6.00
மேலும் தொடர்புக்கு
பண்ணை மேலாளர்
தொலைபேசி எண் : 04254 – 271539
மின்னஞ்சல் : deanformtp@tnau.ac.in

source : TNAU

Monday, 10 October 2016

இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி

Image courtesy : wikipedia
இயற்கை விவசாய முறையில் நெல் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமன்றி மண் வளத்தையும் பாதுகாக்க முடியும் என்கிறார் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) முருகன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பல்வேறுபட்ட கால நிலைகள், மண் வகைகளில் நெல்பயிர், அதைச் சார்ந்த பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்து வருவதால், அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.
இதன் விளைவாக மண்வளம், மகசூல் குறைகிறது. நிலத்தடி நீர் மாசு, சுற்றுப்புற மாசு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த வழிமுறையாக உள்ளது.
அதிலும் உலக அளவில் நெல்லை உணவுப் பயிராகப் பயன்படுத்துவதால், இயற்கை முறையில் நெல் சாகுபடி மிக, மிக அவசியமாகிறது.
இயற்கை நெல் சாகுபடி என்பது, செயற்கை உரங்களையோ, பூச்சிக்கொல்லி மருந்துகளையோ பயன்படுத்தாமல் இயற்கை சார்ந்த எருக்கள், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.
இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு வெளிநாடு, உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், பெருநகரங்களில் இயற்கை வேளாண் விளை பொருள்களுக்காக தனியாகக் கடைகள் தொடங்கப்படுவதோடு, கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராகி வருகின்றனர்.
எனவே இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்தால், விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமல்லாமல், மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.

நெல் சாகுபடிக்கேற்ற இயற்கை வேளாண் தொழில் நுட்பங்கள்: இயற்கை வேளாண்மையில் நல்லத் தரமான சன்ன ரகங்களான வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை 43, 45, 49, கோ-51, பூச்சி, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை உபயோகப்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதோடு கூடுதல் விலையும் பெற முடியும். இயற்கை சாகுபடி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகிக்க வேண்டும்.

விதை நேர்த்தி: விதை நேர்த்தி செய்வதற்கு ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து உயிர் உரங்கள், தாவரம் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.
1 கிலோ விதைக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம், 10 கிராம் பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் என்ற அளவில் உபயோகித்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால், இளம் பயிரில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து மண் வழியில் பரவும் நோய்கள் தவிர்க்கப்படும்.

நாற்றாங்கால் தயாரிப்பு: நாற்றாங்கால் தயாரிப்புக்கு 1 சென்டுக்கு 100 கிலோ தொழு உரம், 50 கிலோ மண் புழு உரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.

நடவுப் பணி: நடவு வயலில் கடைசி உழவின்போது, 1 ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும்.
அல்லது நடவு வயலில் நடுவதற்கு முன்பு பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப் பூண்டு, சணப்பை, கொழுஞ்சி விதைகளை 20 கிலோ விதைத்துப் பிறகு 45 நாள்கள் கழித்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது 10 டன்கள் வரை பசுந்தாள் உரங்கள் கிடைப்பதோடு, 50 முதல் 80 கிலோ வரை தழைச் சத்தும் கிடைக்கிறது.
பண்ணையில் காணப்படும் வேம்பு, புங்கம், கிளைசிரிடியா, செஸ்பானியா, சூபாபுல், மரத்தின் சிறுக் கிளைகளை உடைத்து வந்து சரியான ஈரப் பதத்தில் நிலத்தில் நன்கு மட்கும்படி மடக்கி உழ வேண்டும்.
பசுந்தாள் உரப் பயிர்களை வளர்க்க முடியாவிட்டால், 1 ஏக்கருக்கு 5 டன் மண் புழு உரம் போடலாம்.
சூடோமோனாஸ், உயிர் பூஞ்சானக் கொல்லியை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் நடுவதற்கு முன்பாக இட வேண்டும்.
நடவு வயலில் அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட், பால்போ பாக்டீரியா 10 பாக்கெட் ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
அசோலா உயிர் உரத்தை 1 ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் நடவு செய்த 3 முதல் 5 நாள்களுக்குள் இட்டு, நன்கு வளர்ந்த அசோலாவை (20 நாள்கள் கழித்து) கோனோவீடர் மூலம் நன்கு அழுத்தி விடுவதால், வயல்களுக்கு தழைச் சத்து உரமாகக் கிடைக்கிறது.
களை எடுக்கும் கருவிகளான கோனோவீடர் அல்லது ரோட்டரி கருவி ஆகியவற்றைக் கொண்டு நடவு செய்த 15 நாள்கள் முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்வதால் களைகள் குறைந்து மண் காற்றோட்டம் அடைவதுடன், வேரின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. நடவு வயலில் மேல் உரமாக 1 ஏக்கருக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, பயிர் தூர் தட்டும் பருவத்தில் போட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறைகள்: இயற்கை நெல் சாகுபடியில் பூச்சி, நோய் மேலாண்மை  சவாலாக விளங்குகிறது. இருந்த போதிலும் ரசாயனப் பூச்சிக் கொல்லி அல்லாத ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக கடைப்பிடிப்பதால், பூச்சி, நோய்களை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.
கோடை உழவு செய்வதால், மண்ணில் உள்ள பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
வரப்பில் உள்ள களைகளை சுத்தமாக வெட்டிவிட வேண்டும். சரியான முறையில் நீர்ப் பாசனம் செய்வதுடன் தகுந்த வடிகால் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
அதிக அளவில் தழைச்சத்து இடாமல் இருக்க வேண்டும். இனக் கவர்ச்சி பொறி, விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டம், எண்ணிக்கையைக் கண்காணித்து தகுந்த கட்டுப்பாடு முறைகளைக் கையாளுதல் வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கக் கூடிய தாவர வகைப் பூச்சி மருந்துகள், உயிரியல் பூச்சி நோய்த் தட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
பசுவில் இருந்து கிடைக்கக் கூடிய 5 பொருள்களான சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா (3 சதவீதம்) இலை வழி ஊட்டமாக தெளிக்க வேண்டும்.
குருத்துப் புழு, இலைச் சுருட்டுப் புழு கட்டுப்படுத்தும் முறை: 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும்.
ட்ரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணி அட்டையை ஏக்கருக்கு 2 சி.சி. அளவில் 1 வார இடைவெளியில் 3 முறைக் கட்ட வேண்டும். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் உயிரியல் காரணியை ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிக்க வேண்டும்.
தத்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி கட்டுப்படுத்துதல்: சரியான அளவு தழைச் சத்து இட வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.
5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 2 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.
குலை நோய் கட்டுப்படுத்துதல்: வரப்பில் உள்ள களைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
அதிகமான அளவு தழைச்சத்து இடக் கூடாது. எதிர் சக்தி கொண்ட கோ-47 ரகம் சாகுபடி செய்ய வேண்டும். சூடோமோனாஸ், உயிரியல் காரணி ஆகியனவற்றை நடவு செய்த 45-ஆம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் 0.2 சதவீதத்தில் 3 முறை தெளிக்க வேண்டும்.

இலையுறை அழுகல், இலையுறை கருகல், பாக்டீரியா இலை கருகலை கட்டுப்படுத்தல்: சூடோமோனாஸ், உயிரியல் காரணி ஆகியவற்றை நடவு செய்த 45-ஆம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் 0.2 சதவீதம் என்ற வீதத்தில் 3 முறை தெளிக்க வேண்டும். 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 2 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். பசுவின் சாணம் 20 சதவீதம் கரைசலை நோய் புலப்படும் தருணத்தில் 15 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை 044 - 2745 2371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் உதவிப் பேராசிரியர் முருகன்.

நன்றி : தினமணி

Wednesday, 5 October 2016

நிலப்பண்படுத்துதல் மற்றும் பயிர் அறுவடையில் நன்னெறி மேலாண்மை முறைகள்


உழவு மற்றும் அறுவடையில் கடைபிடிக்க வேண்டிய நன்னெறி மேலாண்மை முறைகள்

1. நீர்வழிப் பாசன மூலம்  இடுபொருள் இடுதல்
உரம், பூச்சிக்கொல்லி மற்றம் இதர டு பொருட்களை நீர்வழி பாசன மூலம் அளித்தால், வேலை சுலபமாக முடிவதோடு, மண்ணில் இழுவை இயந்திரம் பயன்படுத்துவதால் வரும் மண் இறுக்கத்தை தவிர்க்கலாம். நீர்வழி  இடுபொருள் இடும்போது சரியான அளவினை பயன்படுத்தவேண்டும்.


2. இழுவை இயந்திரத்துடன் பிற வேலைகளையும் சேர்ந்து செய்தல்
டிராக்டர் உழவு செய்யும் பொது, கரும்பு நடவு செய்தல் போன்றவற்றையும் இணைத்து செய்யும் போது நிலத்தில் டிராக்டர் அதிகம் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

சில ஆலோசனைகள்

உரம் மற்றும் கலை கொல்லியினை ஒரு சேர இடுதல்

இடை சாகுபடியினை செய்யும் போது உரமிடுவதையும் ஒன்றாகச் செய்தல்.


3. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது பாரம்பரிய, அங்கக மற்றும் உயிரி முறையில் பயிர்ப் பாதுகாப்பு செய்தலாகும். இம்முறையில் நன்மை தரும் பூச்சியினை அதிகரித்து, பூச்சிக்கொல்லி தெளிப்பதைத் தவிர்க்கலாம். அதோடு மண் இறுக்கத்தையும் தவிர்க்கலாம்.



4. செயற்கை காற்றுத் தடுப்புச் சுவர்
அதிவேக காற்றினை தடுத்து பயிர் பாதிக்காமல் காப்பதாகும்.
உதாரணம்
தடுப்பு சுவர்களை, கம்பிகள் அல்லது சிமெண்ட் தூண்கள் ஆகியவற்றை நிலத்தின் ஓரத்தைச் சுற்றிலும் நட்டு வைத்தல் அல்லது மரங்களை வளர்த்தல், அதிவேக காற்றினை தடுப்பதோடு பயிர் சேதமடையாமல் காக்கிறது.

5. பல்லாண்டுப் பயிர்
தானியப்பயிர், தீவனப்பயிர் மற்றும் பழப்பயிர்களை, பல்லாண்டுகள் சாகுபடி செய்வதாகும். அவ்வாறு செய்யும் போது மண் அரிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

6. மண் ஈரப்பதத்திற்கேற்ப பயிர் சாகுபடி
மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப பயிர் சாகுபடி செய்வது ஓர் மிகச்சிறந்த தொழில்நுட்பமாகும். இம்முறையில் நடவு செய்யும் நேரம் குறைவதோடு பயிர் நன்கு ஊன்றி வளரவும் வழிவகுக்கும். பயிர் நடுவதற்கும், நட்ட பயிர் விரைவில் முளைப்பதற்கும் இடையே உள்ள கால இடைவெளியை குறைக்கவும் உதவுகிறது. மண்ணின் ஈரப்பதத்தால் மேல் பரப்பில் கடினமாகாமல், நட்ட நாற்றுக்கள் காற்றினால் குலைந்துப் போகாமலிருக்க உதவுகிறது.

நடைமுறைப்படுத்த சில ஆலோசனைகள்
மண் அழுத்தம் அதிகமாகாமல் காக்கவேண்டும். இதனால் அதிக உழவு செய்வதைத் தடுக்கலாம். நடவு செய்ய நிலம் தயார் செய்தவுடன் பாசனம் செய்யவேண்டும். நீர்ப் பாசனத்திற்கு பின், மெல்லிய கடினமான புரணி மண்ணின் மேற்பரப்பில் உருவாகும். நாற்று மேடை, நீர்ப்பாசனம் மற்றம் நடவு ஆகியவற்றிற்கிடையே உள்ள நேரத்தை குறைக்கவேண்டும்.

7. துல்லியப் பண்ணையம்
துல்லியப் பண்ணை என்பது ஜி.பி.எஸ் கருவியைக் கொண்டு பண்ணையின் கருவிகள், செயல்பாடுகளைத் துல்லியமாக செய்து அதிக இலாபம் பெறுவதாகும். துல்லியப் பண்ணையில் பயிர் சாகுபடி முறையில் முரண்பாடு வராமல் நிகழும் தட்பவெப்பத்திறனுக்கு ஏற்ப செயல்படுவதாகும்.

8. அறுவடை வேலை குறைப்பு
அறுவடை கருவிகளை நிலத்தில் பயிரை அறுவடை செய்ததை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. அவ்வியந்திரத்தின் உபயோகத்தை குறைக்க போது மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.


9. குறைந்த உழவு முறை
குறைந்த உழவு முறை என்பது, பயிர் சாகுபடிக்கு செய்யப்படும் உழவு எண்ணிக்கையை குறைத்தலாகும். அதிக முறை உழவு செய்தல் மண்ணின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாக்க உழவு முறையில் மாற்றம் தேவை.

ஆலோசனைகள்
குறைந்த உழவு முறை, நிலப்போர்வை உழவு முறை.

10.மண்ணின் ஈரப்பத்திற்கேற்ப உழவு செய்தல்
மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப உழவு செய்தல் என்பது உழவு செய்வதற்கு முன்பு அல்லது செய்யும் போது அல்லது மழை வரும் போது உழவு செய்தலாகும். நீர், மண்ணின் துகள்களை ஒன்றாக இணையச் செய்து, மண்ணின் ஆக்சிஜன் குறைந்து காற்று சென்றடையாமல் தடுக்கிறது. நன்கு காய்ந்த மணல், மேற்பரப்பிலிருந்து காற்றினான் அரித்துச் சென்றுவிடும். தேவையான அளவு ஈரப்பதத்தை காக்க உழவு செய்வதற்கு முன் நீர்ப் பாசனம் செய்தல் அல்லது மழைக்குப் பின் உழவு செய்தல்வேண்டும். உழவுக்குப் பின் பெரிய மணல் கட்டி உருவாகும், இவை மண் அரிப்பை தடுக்கிறது.

சில ஆலோசனைகள்
தேவையான ஆழம் வரை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மழைப்பொழிவும், உழவும் ஒன்றே நேரத்தில் நடைபெற  திட்டமிடவேண்டும்.


11. உழவு முறை செய்யும் காலம்
மண் அரிப்பு ஏற்படும் நேரத்திற்கு முன் உழவு செய்தலே சிறந்த உழவு செய்யும் நேரமாகும். உழவு செய்யும் நேரத்தை சரி செய்யும் போது மண் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.


Saturday, 1 October 2016

வேர் உட்பூசணம் என்னும் பயிர்களின் நண்பன்

பயிர்களின் வேர்கள் நிலத்தில் பதித்து சத்துக்களை கிரகித்து வளர்கின்றன. இந்த வேர்கள் குறிப்பிட்ட அளவு ஆழத்திற்கு மட்டுமே செல்லும். அப்படி செல்லும் இடத்தில் கிடைக்கும் சத்துக்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆனால் வேர் உட்பூசணங்களை பயிர்களுக்கு இடும் போது அவை தாவரங்களுக்கு எளிதில் கிடைக்காத சில நுண்ணிய சத்துக்களை கூட கிரகித்து பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த வேர் பூசணங்கள் என்பது ஒரு வகை நுண்ணுயிர் வகையை சேர்ந்தது. இது பயிர்களின் வேர்களில் வாழ்ந்து கொண்டு பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து தான் சாந்து வாழும் பயிர்களுக்கு அளிக்கின்றன.

நுண்ணுயிரிகள்:

கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரினங்களை நுண்ணுயிரிகள் என்று அழைப்பர். இவற்றில் தாவர வேர்களில் கட்டாய கூட்டு வாழ்க்கை நடத்தும் வேர் உட்பூசணம் முக்கியமானதாகும். இந்த வேர் உட்பூசணம் என்ற நுண்ணுயிர் மண்ணில் ஸ்போர் எனப்படும் குறுகற்றையான பூஞ்சாணமாகவும், இழைத்துண்டுகளாகவும் காணப்படும். இப்படியான நுண்ணுயிரியான வேர் உட்பூசணங்கள் மண்ணில் இருக்கும் பயிரின் வேர்களை சார்ந்து வாழ்கின்றன.

இவை வளர தேவையான ஒத்த பயிர்கள் வளரும் போது வேர்ப்பூசண வித்துக்கள் முளைத்து அந்த பயிரின் வேரை சூழ்கின்றன. பிறகு சிறிதுசிறிதாகதான் சார்ந்த பயிரின் வேரினுள் நுழைகிறது. வேரிலிருந்துகிளம்பும் பூஞ்சண இழைகள் மண்ணில் சென்று சத்து நிரம்பிய நுண்ணூட்டங்களை கிரகிக்கின்றன. இவற்றால் உறிஞ்சப்படும் சத்துக்கள் வேர் இலைகளில் ஊட்டங்களாக சேமிக்கப்படுகின்றன.

வேர் உட்பூசணத்தின் செயல்பாடு:

இந்த பூசண வேர்த்தூவிகள் மண்ணில் வெகு துரத்திற்கு சுலபமாக பரவி விடுகிறது. இப்படி பரவும் திறன் இருப்பதால்,வேர்கள் பரவ முடியாத தூரத்தில் உள்ள சத்தை கூட இந்த பூசணம் உறிஞ்சி செடிகளுக்கு தருகிறது. இது தவிர, வேர் உட்பூசணம் தாவரத்தின் வேர்களுக்குள் நுழைந்து வேர் இழைகளை உண்டாக்கி, வேர்களுக்கு எட்டாத மணிச்சத்தை தனது இழைகளின் மூலம் பயிருக்கு கொண்டுவந்து சேர்க்கின்றன. மணிச்சத்தை பயிர்களுக்கு கொடுப்பதுடன் கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்து போன்ற சத்துக்களையும் மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்து கொடுக்கிறது. இதர நுண்ணுயிர்களைப்போல் வேர் உட்பூசணத்தை சர்க்கரை கரைசல் ஊடகங்களில் வளர்க்கமுடியாது. இது தாவர வேர்களிலேயே வளரக்கூடியது. எனவே வேர் உட்பூசணம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வெர்மி குலைட் அல்லது கிருமி நீக்கப்பட்ட மணல் மண் கலந்த பாத்திகளில் வளர்க்கப்பட்ட சோளம் அல்லது புல் வகைகளின் வேர்களில் வளர்க்கப்படுகிறது. பூசண வேரில் நன்கு வளர்ந்த பின் பயிரில் வளரும் வேரும் பரவிய மண்ணும் எடுக்கப்பட்டு துகள்களாக்கி பாலித்தீன் பைகளில் கொடுக்கப்படுகிறது. இந்த கலவையை வயலில் இட பரிந்துரைக்கப்படுகிறது.

பயன்படுத்தும் முறை:

ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேர் உட்பூசணங்கள் போதுமானது. விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் இடவும். பாலித்தீன் பைகளில் வளரும் நாற்றுகளுக்கு ஒரு பைக்கு 10 கிராம் வேர் உட்பூசணம் போதுமானது. பைகளுக்கு தேவைப்படும் மண் கலவையை தயார் செய்யும்போது, 100 கிலோ மண் கலவைகளில் 10 கிலோ வேர் உட்பூசணங்கள் வளர்ந்து பாலித்தீன் பைகளில் இடவும். வளர்ந்த பயிர்களுக்கு ஒரு பயிர்களுக்கு சுமார் 200 கிராம் வேர் உட்பூசணம் தேவைப்படும்.

பயன்கள்:

குறுகிய கால பயிர்களுக்கான பயறுவகைகள், நிலக்கடலை போன்றவற்றின் மகசூலை அதிகபடுத்தப்படுகின்றன. வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து பயிர்வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வேரைத்தாக்கும் பூஞ்சாண நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மண்ணின் கட்டடமைப்பை அதிகரிக்கிறது. நிலத்தின் களர், உவர் தன்மையை தாங்கி பயிரை நிலை நிறுத்துகிறது.

நன்றி: M S Swaminathan Research FoundationM S Swaminathan Research Foundation

உயிர் உரங்கள்

ஆற்றல்மிக்க ஆய்வு வகை நுண்ணுயிரிகளுடைய செயலுள்ள உயிரை அல்லது செயலற்ற உயரணுவை கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால், விதை அல்லது மண்ணின் வழியாக வேர்த்தண்டின் தொடர்பால் அளிக்கும் போது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துக்களை நுண்ணுயிரி முறைகளால் எளிதில் எடுத்துக் கொள்ள உதவுகிறது.

இயற்கையில் நுண்ணுயிரிகள் ஆற்றல் மிக்கதாக இல்லாமல் இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணில் நுண்ணுயிரிகளின் செயலை அதிகப் படுத்தலாம்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இரசாயன உரங்களுக்கான மாற்றாக நிலையான வேளாண்மையில், இந்த உயிர் உரம் விலை குறைவாகவும், ஊட்டச்சத்துக்களைப் புதுப்பித்தலுக்கான ஆதாரமாக இருக்கிறது. பல நுண்ணுயிரிகள் மற்றும் பயிர்களுடன் உள்ள தொடர்பால் உயிர் உரங்கள் தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கிறது. நுண்ணுயிரிகளின் தன்மை மற்றும் செயலைப் பொறுத்து இது பலவழிகளில் வகைப்படுத்தப்படுகிறது.

வகைகள்உதாரணங்கள்
தழைச்சத்தை நிலைப்படுத்தும் உயிர் உரங்கள்
தன்னிச்சையாக வாழ்தல்அசட்டோபேக்டர், பெய்ஜரிங்க்யா, க்ளாஸ்ட்ரிடியம், க்ளப்சில்லா, அனபீனா, நாஸ்டாக்
இணை வாழ் தன்மைரைசோபியம், ப்ரேங்கியா, அனபீனா, அசோலா
கூடிசேரும் இயல்புடைய இணை வாழ் தன்மைஅசோஸ்பைரில்லம்
மணிச்சத்தை கரைக்கும் உயிர் உரங்கள்
நுண்ணுயிரிபேசில்லஸ் மெகாடிரியம் வகை பாஸ்போடிக்கம், பேசில்லஸ் சப்டிலிஸ், பேசில்லஸ் சர்குலன்ஸ், சூடோமோனாஸ் ஸ்டெய்ரிட்டா
பூஞ்சைபெனிசிலியம் வகைகள், அஸ்பெர்ஜிலல்லஸ் அவாமோரி
மணிச்சத்தை இடம் பெயரச் செய்யும் உயிர் உரங்கள்:
குமிழியுடைய மரம் போன்ற
வேர்சூழ் பூசணம்
குலோமஸ் வகை, கிகாஸ் போரா வகை, அகேலூஸ்போரா வகை, ஸ்கூட்டலோஸ்போரா வகை, ஸ்கிளிரோ ஸிஸ்டிஸ் வகை
வெளி வேர் உட்பூசணம்லேக்கேரியா வகை, பிஸியோலித்திஸ் வகை, போலிடஸ் வகை, அமெனிட்டா வகை
எரிகாய்டு வேர் உட்பூசணம்பெஜிஜில்லா எரிக்கே
ஆர்கிட் வேர் உட்பூசணம்ரைசோக்டோனியா சொலானி
நுண்ணூட்டச் சத்துக்கான உயிர் உரங்கள்:
சிலிக்கேட் மற்றும் துத்தநாக கரைதிறன்கள்பேசில்லஸ் வகை
பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கும் வேர் நுண்ணுயிரி
சூடோமோனாஸ்சூடோமோனாஸ் ஃப்ளோரஸன்ஸ்


நன்றி : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழக இணையதளம்

Friday, 30 September 2016

தமிழ்நாட்டில் உள்ள உயிர் உர உற்பத்தி மையங்களின் பட்டியல்

வேளாண் நுண்ணுயிரியல் துறை, வேளாண் கல்லூரி மற்றும் அறிவியல் நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
முனைவர். எஸ். அந்தோணிராஜ்
மதுரை – 625 104
(0452 – 422956 தொலைப்பிரதி: 422185
மின்னஞ்சல்: s_anthoniraj@yahoo.com
உயிர் உர உற்பத்தி மையம், வேளாண் துறை, 
தமிழ்நாடு அரசு
குண்டு சாலை வழி, சோமண்டலம்,
கடலூர் – 607001 (தமிழ்நாடு)
உயிர் உர உற்பத்தி மையம், வேளாண்துறை, தமிழ்நாடு அரசு
வேளாண் வேதியியலர்,
சாக்கோட்டை,
தஞ்சாவூர் – 612 401 (தமிழ்நாடு)
உயிர் உர உற்பத்தி மையம், வேளாண்துறை,
தமிழ்நாடு அரசு
ஜமால் முகமது கல்லூரி அஞ்சல், காஜாமலை,
திருச்சி – 620 020 (தமிழ்நாடு)
கிரிபிகோ
சிட்கோ கார்மெண்ட் வளாகம், திரு. வி. க. தொழிற்சாலை பகுதி,
கிண்டி, சென்னை – 32
மண்டல ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
பையூர் – 635 112
காவேரிப்பட்டிணம் வழி,
தர்மபுரி மாவட்டம் (04343 – 50043)
மோனார்க் உயிர் உரங்கள் மற்றும் ஆராய்ச்சி மையம்,
12, சிட்கோ தொழிற்சாலை பகுதி, திருமாழிசை,
சென்னை – 602 107 (தமிழ்நாடு)
(6272780)
லட்சுமி உயிர் தொழில் நுட்பம்
திரு. வி. சித்தானந்தம்,
நெல்லிக்குப்பம் சாலை, தொட்டபட்டு,
கடலூர் – 607 109 (தமிழ்நாடு)
(04142 – 210136)
மேரிக்ரீன் அப்போடெக் பிரைவேட் லிமிடெட்
முனைவர். Y. ஜோ
5 / 302, ஸ்ரீ சாய்பாபா தெரு, சந்தோஷ் நகர், கண்டன்சாவடி, பெருங்குடி அஞ்சல்,
சென்னை – 600 096 (தமிழ்நாடு)
4964202, 3735957
மின்னஞ்சல்: marygreen45@hotmail.com
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண் நுண்ணுயிரியல் துறை,
கோயமுத்தூர் – 3 (தமிழ்நாடு)
431222 விரிவு, 294
தொலைப்பிரதி: 0422 – 431672
மின்னஞ்சல்: vctnau@vsnl.com
டி. ஸ்டேன்ஸ் & கம்பெனி லிமிடெட்
முனைவர். எஸ். ராமரத்தினம்
8 / 23 – 24, ரேஸ்கோர்ஸ் சாலை,
கோயமுத்தூர் – 641018 (தமிழ்நாடு)
(0422 – 211514, 213545)
தொலைபிரதி: 217432
மின்னஞ்சல்: tsstanes@vsnl.com 
எஸ்வின் உயர்தர தொழில்நுட்பங்கள் லிமிடெட்,
திரு. டி. எஸ். வெங்கட்ராமன்
“எஸ்வின் இல்லம்” பெருங்குடி,
சென்னை – 600096 (தமிழ்நாடு)
(4961056, 460690, தொலைப்பிரதி: 4961002)
மின்னஞ்சல்: tsv@vsnl.com
சதா்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்டிரிஸ் கார்ப்ரேஷன் லிமிடெட்,
திரு. கே. ராஜீ
ஸ்பிக் லிமிடெட் உயிர் தொழில்நுட்ப பிரிவு, செட்டியார் அகரம் சாலை, காந்தி நகர், போரூர்,
சென்னை – 600 116 (தமிழ்நாடு)
44 – 4768064
தொலைப்பிரதி: 044 – 4767347
மின்னஞ்சல்: biotech.por@spic.co.in
உயிர் உரப்பிரிவு, மணலி, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்,
திரு. பி. மல்லிகார்ஜீனா ரெட்டி,
முதன்மை மேலாளர் உயிர் பொருட்கள்
வர்த்தகக் குழு, மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், மணலி,
சென்னை – 600068 (தமிழ்நாடு)
044 – 5941001 விரிவு, 2750
தொலைப்பிரதி: 5741010
மின்னஞ்சல்: edcomm@mfi.tn.nic.in
உயிர் உர உற்பத்தி மையம்,
திரு. எஸ். முருகன்,
வேளாண் வேதியியலர், உயிர் உர உற்பத்தி பிரிவு, சீலநாயக்கன்பட்டி,
சேலம் – 636 201 (தமிழ்நாடு)
உயிர் உர உற்பத்தி மையம்,
திரு. பி. ராமன்,
வேளாண் வேதியியலர்,
உயிர் உர உற்பத்தி பிரிவு,
குடுமியான் மலை – 622 104
புதுக்கோட்டை மாவட்டம்
முக்கிய உயிர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகம்,
(தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை பேரவையின் பிரிவு)
2ஈ / 1, ராஜேஸ்வரி வேதாச்சலம் தெரு,
செங்கல்பட்டு – 603001 (தமிழ்நாடு)
(04114 – 431393)
சையா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகம்,
முனைவர். எம். ஏ. சண்முகம்,
“சண்முக மன்றம்”, அஞ்சல் பெட்டி எண்: 3871,
ரேஸ்கோர்ஸ்,
கோயமுத்தூர் – 641018 (தமிழ்நாடு)
(0422 – 211391, தொலைப்பிரதி: 0422 – 216798)
 

நன்றி : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழக இணையதளம்

Thursday, 29 September 2016

உயிர் உரம் : அசோலா

அசோலா (ஆங்கிலம் : Azolla) எனபடுப்பவை தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. 

இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அசோலாவைக் கால்நடைகள் ருசித்து உண்ணும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அற்புதச் சக்தி படைத்தது அசோலா. அது மட்டுமல்லாமல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து நிறைந்தது.

அமைப்பு
Image courtesy : The hindu
மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது.மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும்.இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை.பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.

அசோலா வளர்ப்பது எப்படி?


முதலில் 5-க்கு 6 அடி நீளமும், 3-க்கு 4 அடி அகலமும் ஒன்று முதல் 1½ அடி வரை ஆழமும் கொண்ட குழிகளை வெட்டிக்கொள்ள வேண்டும். அதனுள் கெட்டியான பிளாஸ்டிக் பேப்பர், தார்ப்பாயை விரித்துக் கொள்ள வேண்டும். முதலில் அரை அடி உயரத்துக்குச் செம்மண் கலந்த தோட்டத்து மண்ணைப் போட்டு, இரண்டு கைப்பிடி பாறைத் தூள் அல்லது குவாரி மண் அல்லது ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கிடைக்கும் பாறைத் தூளைத் தூவ வேண்டும்.


நாட்டுப் பசுஞ் சாணம் ஒன்று முதல் 2 கிலோவரை, வேப்பம் புண்ணாக்கு 50 முதல் 100 கிராம்வரை போட்டு, சுமார் ½ அடி தண்ணீர் இருக்குமாறு விட வேண்டும். தண்ணீர், மண், புண்ணாக்கு ஆகியவற்றைச் சிறிது நேரம் கிளறிவிட வேண்டும். அதன்பின் சுமார் ½ முதல் 1 கிலோ வரை அசோலா விதைகளைத் தூவ வேண்டும். 10 முதல் 15 தினங்களில் தொட்டி முழுவதும் அசோலா வளர்ந்துவிடும்.


இதிலிருந்து தினமும் ½ கிலோ தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். வாரம் ஒரு முறை ஒரு கிலோ நாட்டுப் பசுஞ் சாணம், ஒரு கைப்பிடி ஆழ்துளைக் கிணறு மண் அல்லது பாறை மண் போட வேண்டும். அத்துடன் மாதத்துக்கு ஒரு முறை அடி மண்ணைக் கொஞ்சம் எடுத்துவிட்டு, புது மண் போட வேண்டும். தண்ணீரின் அளவு 7 முதல் 10 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.


10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரைப் பாதி அளவுக்கு வெளியேற்றிப் புது நீரை மாற்ற வேண்டும். 6 மாதங்களுக்கு இதிலிருந்து தினமும் அசோலா அறுவடை செய்யலாம். அதிவேகமாக வளரும் தன்மை கொண்ட காரணத்தால், தினமும் அசோலாவை எடுத்துக்கொண்டு புதிதாக வளர்வதற்கு இட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எந்த நிலையிலும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போக விட்டுவிடக் கூடாது.


அசோலா உற்பத்தி செய்ய 1 கிலோவுக்கு 50 பைசாவுக்கும் குறைவாகவே செலவாகும். 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு செழித்து வளரும். கடுமையான பகல் நேர வெயில் நேரடியாகப் படும் வகையில், அசோலா வளர்ப்புக் குழிகளை அமைக்கக் கூடாது. பகல் நேர வெயில் படாத வகையில், மேலே பச்சை துணி கட்டி நிழல் படுமாறு அமைக்க வேண்டும். காலை, மாலை நேரச் சூரியனின் இளம் வெயில் அசோலாவுக்கு மிக மிக நல்லது.

நெல் வயலில் அசோலா


நெல் வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது அசோலாவை வயலில் வைத்து மிதித்து விட்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும். அசோலாவை மண்ணில் கலந்து மக்கும் பொழுது சிறந்த உரமாக பயன்படும். மற்ற தாவரங்கள் அனைத்திற்கும் உரமாக பயன்படுத்தலாம். நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. நெல்வயல்களில் இந்த அசோலாவை தூவிவிடுவதன் மூலம் 10 நாட்களில் வயல் முழுவதும் பரவி வளர்ந்துவிடும். நாற்று நடவு செய்த 7ம் நாள் வயலில் அசோலாவை 5 கிலோ தூவ வேண்டும். இதற்கு அளவு கிடையாது. 

பயிர்களுக்கு இடைவெளியில் கிடைக்கும் காற்று, சூரிய ஒளியை பயன்படுத்திக்  கொண்டு அசோலா வேகமாக வளரும். நிலத்தில் பச்சைப் போர்வை போர்த்தியது போல, நிலம் முழுவதும் அசோலா படர்ந்து விடும். 20ம் நாளில் இருந்து ஒரு ஏக்கரில் தினமும் 50 முதல் 100 கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம். நிலம் முழுவதும் படர்ந்து விடுவதால், களை கட்டுப்படுகிறது. சாதாரணமாக 15 தூர்கள் வெடிக்கும் நிலத்தில், 40 தூர்கள் வரை வெடிக்கும். இதன் காரணமாக வழக்கமான மகசூலைவிட 10% முதல் 20% கூடுதல் மகசூல் கிடைக்கும்.


தீவனம்


மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% அளவுக்கு தீவனச்செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்தப் பாசியில் வடை, போண்டா செய்து நாமும் சாப்பிடலாம். ஆகையால், ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் அசோலா வளர்த்தால், வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து பயிர்கள், கால்நடைகள் என அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது. மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை. பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. அசோலாவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரமாக விளங்குகிறது. மேலும் தாது உப்புக்கள் 10% முதல் 15% வரையும் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்), வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களும் இதில் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அசோலாவின் பயன்பாடுகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

உரச்செலவு 30% குறைவு


அசோலாவை நெல் வயலில் வளர்க்கும் போது, நீர் ஆவியாவது குறைகிறது. அசோலா,  காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையைச் செய்வதால், ரசாயன  முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு 30 சதவிகிதத்துக்கும் மேல் உரச் செலவு  குறைகிறது. 

நன்றி

Sunday, 25 September 2016

அசோஸ்பைரிலம்

இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம்.

வளிமண்டலத்தில் மிக அதிகமாக உள்ள (78%) நைட்ரஜன் (N) வாயுவை நிலைப்படுத்தி அதாவது நைட்ரேட்டாக (NO3) மாற்றித் தாவரங்களுக்கு அளிக்கும் வேலையைச் செய்பவையே உயிர் உரங்கள் என்று அழைக்கப்படும். உம். பாசி மற்றும் பூஞ்சை வகைகளைச் சேர்ந்த அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ், பாஸ்போ பாக்டீரியா, அசட்டோ பாக்டர், அனபினா, நாஸ்டாக்  மற்றும் வேர்முடிச்சு (வேர்முண்டுகள்) பாக்டீரியமான ரைசோபியம். அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ் ஆகியவை நெல் போன்ற பயிர்களுக்கு உயிர் உரமாகத் தரப்படுகிறது. ரைசோபியம் அவரை, உளுந்து  குடும்பத் தாவரங்களின் வேர்முடிச்சுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது. 

அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.

Image courtesy : wikipedia
அசோஸ்பைரிலம் நுண்ணுயிர் ஒரு பாக்டீரியா வகையைச் சேர்ந்தது. இது வளர்வதற்கு மிகக்குறைந்த அளவு காற்று போதுமா னது. காற்றில் உள்ள தழைச் சத்தை உட்கிரகித்து பயிர்களுக்கு வழங்குகிறது. நெல் மற்றும் பிற தானியப் பயிர் களின் வேர் மண்டலத்தில் இணைந்து வாழும் நுண்ணு யிர் இதுவாகும்.அசோஸ்பைரிலம் நுண் ணுயிரியை நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, பனி வரகு, தினை, சாமை, குதி ரை வாலி போன்ற தானியப் பயிர்களுக்கும், பருத்தி, சூரியகாந்தி மற்றும் கரும்பு போன்ற இதர பயிர்களுக் கும் பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி செய்ய ஒரு பொட்டலமும் (200 கிராம்) நாற்று விட்டு நடவு செய்யும் பயிர்களுக்கு நாற் றின் வேர்களை நனைக்க இரண்டு பொட்டலமும் (400 கிராம்), நடவு வயல் அல்லது நேரடி விதைப்பு செய்யும் நிலத்திற்கு ஏக்க ருக்கு 4 பொட்டலமும் (800 கிராம்) பயன்படுத்த வேண்டும்.

தாவர வளர்ச்சி ஊக்கிகளை வேர் மண்டலத்தில் உண்டாக்கு வதால் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. பயிர் களின் மகசூல் அதிகரிப்பதுடன் மண்வளம் பாதுகாக் கப்படுகிறது”.





நன்றி : தினகரன்

நன்றி : தீக்கதிர்

courtesy : Google Groups


Friday, 16 September 2016

மார்கழிப் பட்ட கேழ்வரகு!

திருநெல்வேலி: தமிழ்நாடு வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் தானிய வகைப் பயிர்களில் மார்கழிப் பட்டமாக கேழ்வரகு பயிரிட்டு லாபம் பெறலாம்.

ரகம், பருவம்: தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் அனைத்துப் பட்டங்களிலும் பயிரிடலாம்.

மார்கழிப் பட்டம்: டிசம்பர் - ஜனவரி மாதங்களான மார்கழிப் பட்டத்தில் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1 ரகங்களைப் பயிரிடலாம்.

சித்திரைப் பட்டம்: ஏப்ரல் - மே மாதங்களில் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14 ரகங்களைப் பயிரிடலாம்.

மானாவாரியாக ஆடிப் பட்டத்தில் (ஜூன் - ஜூலை) பையூர் 1, கோ 13, கோ.ஆர்.ஏ14, பையூர் 2 ரகங்களைப் பயிரிடலாம்.

புரட்டாசிப் பட்டம்: செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பையூர் 1, கோ13, கோ.ஆர்.ஏ14 ரகங்களைப் பயிரிடலாம்.

நாற்றங்கால் தயாரித்தல் (நாற்றங்கால் பாசனம்): ஒரு ஹெக்டேர் வயலில் நடவுக்குத் தேவைப்படும் நாற்றுகள் வளர்க்க 12.5 சென்ட் (500 மீ) நாற்றங்கால் பரப்பு தேவை. 37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுடன் 500 கிலோ தொழுஉரம் கலந்து நாற்றங்கால் பாத்திகளில் சீராகப் பரப்ப வேண்டும். இறக்கை கலப்பையால் 2 அல்லது 3 முறையோ, நாட்டுக் கலப்பையால் 5 முறையோ உழ வேண்டும்.

மேட்டுப்பாத்தி தயாரித்தல்: 3 மீ-க்கு 1.5 மீட்டர் அளவுள்ள 6 பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் நீர் பாய்ச்ச 30 செ.மீ. இடைவெளி அவசியம். இடைவெளியில் உள்ள மண்ணை 15 செ.மீ. ஆழத்துக்கு தோண்டி வாய்க்கால் அமைக்கவும். தோண்டிய மண்ணை பாத்திகள் மேல் போட்டு சமப்படுத்த வேண்டும்.

காளான் கொல்லி முன்விதை நேர்த்தி: அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் ஒரு ஹெக்டேருக்கு, 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்தல்: விரலால் படுக்கையின் மீது கோடிட வேண்டும். அதன் மீது விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளைத் தூவ வேண்டும். கையால் மண்ணைத் தூவி விதைகளை மூட வேண்டும். 500 கிலோ தொழு உரத்தை பாத்திகளின் மேல் தூவிவிட்டு விதைகளை மூடி மேற்பரப்பை இளக்கமாக்க வேண்டும். ஆழமாக விதைத்தால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

நீர் மேலாண்மை: ஒவ்வொரு நாற்றங்காலுக்கும் ஓர் உள்வாயில் அமைக்க வேண்டும். உள்வாயில் மூலம் தண்ணீர் விட்டு வாய்க்காலைச் சுற்றி தண்ணீர் விடவும். மேட்டுப்பாத்திகள் ஈரமாகும் வரை, வாய்க்காலில் தண்ணீர் விட்டு பின் நிறுத்திவிட வேண்டும். மண்ணின் வகையைப் பொருத்து நீர்ப்பாசன இடைவெளி மாறுபடும். செம்மண்ணுக்கு 3ஆவது நாள் நீர்ப் பாய்ச்சி கடின மேற்பரப்பு லகுவாக்கப்படுகிறது. இதனால் நாற்றுகள் எளிதாக முளைக்கும். முறையாக, சீராக நீர்ப் பாய்ச்சி நாற்றங்கால் பாத்தியில் பிளவு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாற்றுகளைப் பிடுங்கி நடுதல்: விதைத்த 17 அல்லது 20ஆவது நாளில் நாற்றுகளை, நடவுக்காக பிடுங்கலாம்.

நடவு வயலை தயார் செய்தல்: மண் நன்றாக கட்டிகளின்றி உடையும் வரை அச்சுக் கலப்பையால் 2 முறையும், மரக் கலப்பையால் 3 முறையும் உழ வேண்டும்.

உரம் அல்லது தொழுவுரம் இடுதல்: ஹெக்டேருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது மக்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பையால் உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும். உரங்களை வயலில் நன்றாக பரப்பவில்லையென்றால் ஊட்டச்சத்துகள் வீணாகும்.

உரப் பயன்பாடு: மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் மண் பரிசோதனைப் பரிந்துரைப்படி உரங்கள் அளிப்பதால் பயிர் விளைச்சலில் இலக்கை அடையலாம். முடிந்தவரை மண் பரிசோதனைப்படி தழை, மணி, சாம்பல் சத்துகளை மண்ணுக்கு அளிக்க வேண்டும். மண்பரிசோதனை செய்யவில்லையென்றால் தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 30 கிலோ, சாம்பல் சத்து 30 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு இட வேண்டும். நடவுக்கு முன் தழைச்சத்தில் பாதியளவும் சாம்பல்சத்தில் பாதியளவும் மணிச்சத்து முழுவதையும் சேர்த்து அடியுரமாக இட வேண்டும். உரக் கலவையை கடைசி உழவுக்கு முன் மண்ணில் இட்டு நாட்டுக் கலப்பையால் உழுது மண்ணுடன் உரக் கலவையை ஒன்றிணைக்க வேண்டும்.

படுக்கை, வாய்க்கால்: 10 ச.மீ-க்கு 20 ச.மீ என்ற அளவில் படுக்கை அமைத்தல் வேண்டும். மேலும், தேவையான அளவுக்கு பாசன வாய்க்கால் அமைக்க வேண்டும்.

நுண்ணூட்டக் கலவை: தமிழ்நாடு வேளாண் துறை அறிவுறுத்தல்படி 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையுடன் போதுமான மண் கலந்து அதை ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் அளிக்க வேண்டும். நுண்ணூட்டக்கலவையை பாத்திகளின் மீது சமமாக இட வேண்டும். கலவையை மண்ணில் இட்டு கலக்கக் கூடாது.

நாற்று நடுதல்: படுக்கை சமமாக இருந்தால் நீர் போக எளிதாக இருக்கும். ஒரு குத்துக்கு 2 நாற்றுகளாக நட வேண்டும். நாற்றுகளை 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும். 18 முதல் 20 நாள் நாற்றுகளை நட வேண்டும்

30-க்கு 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். நேரடி விதைப்பாக இருந்தால் 22.5-க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். வேர்களை நனைக்க அசோஸ்பைரில்லம் சேற்றுக் குழம்பு தயாரிக்க வேண்டும். நாற்று நடும் முன் இந்தக் குழம்பில் 15 முதல் 30 நிமிடம் நனைக்க வேண்டும்.

களை நிர்வாகம்: விதைத்த 3 நாள்களுக்கு பிறகு களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளிக்கவும். விதைத்த 20 நாள்களுக்கு பிறகு கையால் களையெடுக்க வேண்டும். மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருந்தால் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 10, 20 நாள்களில் இருமுறை கையால் களையெடுக்கவும். வழிகாட்டுதல்படி நீர் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

Image courtesy : Wikipedia
அறுவடை: கேழ்வரகுப் பயிர் ஒரே சீராக முதிர்ச்சியடைவதில்லை. எனவே, இருமுறையாக அறுவடை செய்ய வேண்டும். 50 சதவீத கதிர்கள் பழுப்பு நிறமடைந்தபிறகு அதை அறுவடை செய்யலாம்.

முதல் அறுவடை: முற்றிப் பழுப்பு நிறமடைந்த அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும். தானியத்தைக் காயவைத்து கதிரடித்து தூற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

2ஆம் அறுவடை: முதல் அறுவடைக்குப் பிறகு 7ஆவது நாளில் அனைத்து தானியக் கதிர்களையும் பச்சையாக இருக்கும் கதிரையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கு முன் குவியலாக நிழலில் ஒருநாள் வைப்பதால் வெப்பநிலை அதிகரித்து தானியம் தரமாகும். உலர்ந்த தானியத்தைக் கதிரடித்து புடைத்து, சுத்தப்படுத்தி சாக்குப் பைகளில் சேமிக்க வேண்டும்.

நன்றி : தினமணி

Monday, 12 September 2016

Amudham Solutions

Amudham Solutions
This solution acts right away as a catalyst for growth.  With very little work we can create this solution within twenty four hours.

Ingredients: 1 liter cattle urine, 1 kg dung, 250 grams jiggery in 10 liters water.

Preparation:  Mix the dung thoroughly in water.  Add urine and mix well.  Powder the jiggery, add to the above, and mix well.  Make sure that are no lumps and cover and set aside the mixture for 24 hours.

Usage:  Add one liter of this solution to ten liters water (for a 10% solution) and spray.  You must make sure to dilute the solution or else the leaves will get scorched.
This solution helps growth of leaves directly.  It also repels insects.  Instead of using jiggery, you may use waste fruit in this manner: Tie one kilogram waste fruit into a nylon bag and immerse this in urine solution.  Let it soak for five days.  This helps the fruit ferment well.  Add ten times water to this and spray or add 60-100 liters of in irrigation water for one acre.

Concentrated Amudham Solution

Ingredients:  5 liters cattle urine, 1 kg dung, 1 liter juice of any waste fruit.

Preparation: Mix the dung thoroughly in urine and the juice and mix well.  Set aside the mixture for five days.  

This helps us avoid the usage of jiggery, which is an external input.  

Usage:  This can only be used for irrigation and not for spraying.  Use 20-30 liters per acre of this solution.  This solution gives excellent growth.  

Note:  Earlier we used the (ordinary) Amudham solution in irrigation.  But we need to use 50-100liters per acre.  To reduce the quantity and work we developed this combination.  It is essential that farmers thus develop simple processes.  


Courtesy : TNAU

A Video from youtube

Saturday, 10 September 2016

இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்!

இப்போது மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ரசாயன உரங்களின் பாதிப்பு குறித்தும் பற்றியும் நம் பாரம்பரிய விவசாய முறைகளைக் குறித்தும் மக்கள் ஆர்வம் காட்டாத எண்பதுகளிலேயே மண்புழு வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியவர் பேராசிரியர் ஜி.எஸ்.விஜயலட்சுமி. தென்னிந்தியாவில் மண்புழு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை அடிமட்டம்வரை எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவர். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 49 மண்புழு வளர்ப்பு தொட்டிகளை அமைத்திருக்கிறார். தமிழக அரசின் பசுமைப் படை சார்பாகக் கழிவு மேலாண்மையை முக்கியக் கடமையாக எடுத்துச் செயல்படுத்தி வருகிறார்; திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டிருக்கிறார். கடல்வாழ் உயிரினப் படிப்பில் இந்தியாவில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆஸ்திரேலியாவில் 1981-ல் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் அளித்த ஆய்வுக் கட்டுரைக்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார். 1975-ல் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த அவர் அன்று முதல் இன்றுவரை காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, மரம் நடுதல் எனச் சுற்றுச்சூழல் சார்ந்த பல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

Image & Article courtesy : The Hindu
பணி நிறைவு பெற்றுவிட்ட பிறகும் விஜயலட்சுமி ஓய்வாக அமரவில்லை. இப்போதும் அதே சுறுசுறுப்புடன் செயல்பட்டுவருகிறார். “பராசக்தி கல்லூரியில் கிடைத்த ஊக்கத்தால் கழிவுப் பொருள்கள் உதவியுடன் காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டேன்” என்று சொல்லும் அவர், 1962-லேயே இந்தியாவிலேயே முதன்முறையாகக் கல்லூரி அளவில் பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பு நிறுவப்பட்டிருந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அப்போது அமைத்த சாண எரிவாயு அமைப்பு இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் தெரிவிக்கிறார்.

பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பிலிருந்து கிடைத்த கழிவுப் பொருள்கள் மூலம் மீன் வளர்த்திருக்கிறார். சாதாரண நீரில் மீன் வளர்ப்பதைவிட இந்தக் கழிவுப் பொருள் நீரில் மீன் வளர்ப்பதால் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் மீன் உணவான மிதவை உயிரிகள் மிகவும் விரைவாக உற்பத்தியாகிவிடும் என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மீன் வளர்ப்பில் கிடைத்த உற்சாகத்தால் கழிவு நீரில் காளான் வளர்க்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

“செயற்கையாகக் காளான் வளர்க்கலாம் என்னும் உத்தி இப்போது நன்கு பரவி திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே இந்தக் காளான் வளர்ப்பு பலன் தரத் தொடங்கியிருக்கிறது” என்கிறார் விஜயலட்சுமி. தென்காசி அருகே இருக்கும் வல்லம் கிராமத்தை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

1980-ல் மதுரை விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, அவர் சந்தித்த பல்கலைக்கழக டீன் கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் காளான் வளர்ப்பில் கிடைக்கும் வைக்கோல் கழிவிலிருந்து மண்புழுவை வளர்க்கலாம் என்ற திட்டத்தைச் சொல்லியிருக்கிறார். அதுதான் பேராசிரியர் விஜயலட்சுமிக்கு உந்துதலாக இருந்துள்ளது. ‘மண் புழு மண்ணிலேயே இருக்கிறதே அதை ஏன் செயற்கையாக வளர்க்க வேண்டும்?’ என விஜயலட்சுமி கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி, ‘நீங்கள் நினைப்பது போல் அல்ல, இப்போதெல்லாம் மண்ணைத் தோண்டினால் மண்தான் வரும், மண்புழு வராது’ என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பதில்தான் மண்புழு வளர்ப்பை நோக்கி விஜயலட்சுமியைத் திருப்பியது. மண்புழு வளர்ப்பு தொடர்பாக பெங்களூர் விவசாயக் கல்லூரியில் பணியாற்றிய முனைவர் ராதா அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இயற்கையான எல்லாக் கழிவுகளிலும் மண்புழுவை வளர்க்கலாம் என முனைவர் ராதா தெரிவித்துள்ளார்.

“இந்திய மண்புழு, ஆப்பிரிக்க மண்புழு, சீன மண்புழு ஆகிய மூன்று வகைகளை நான் வளர்த்திருக்கிறேன். சீன மண்புழுவையும், ஆப்பிரிக்க மண்புழுவையும் வளர்க்க மண்ணே தேவையில்லை, வெறும் இலையிலும் கழிவுகளிலுமே அவை வளரும்” என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மேலும், “சீன மண்புழு ஒன்றரை அங்குலம் நீளமே இருக்கும். எனவே அதிக இடம்கூடத் தேவையில்லை. இலை, தழைகளை மட்டுமே அவை சாப்பிடும். தினசரி சாணிப்பால் மட்டும் தெளிக்க வேண்டும். நாற்பத்தி ஐந்து நாட்களில் உரம் தயாராகிவிடும்” என்கிறார் அவர்.

இப்போதும் குற்றாலம் அருகே இருக்கும் தனது வீட்டின் அருகே செயல் விளக்கம் செய்து காட்டுவதற்காக மண்புழு உரக் கூடம் ஒன்றை நடத்திவருகிறார். இவரது செயல் விளக்கப் பயிற்சியின் மூலம் சிறு சிறு தொழிற்சாலைகளில் தங்களுக்குக் கிடைக்கும் கழிவுப் பொருளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கல்லூரி மாணவிகளுக்கு மண்புழு வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிவருகிறார்.

“மண்புழு உரம், மற்ற உரங்களைவிட சிறப்பானது. தீங்கிழைக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மண்புழு உரத்தை நெருங்காது. ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம் போதுமானது. இதனுடன் மேல் உரம், அடி உரம் போட்டால் போதும்” என்று சொல்லும் விஜயலட்சுமி, மண்புழு உரத் தயாரிப்பை லாப நோக்கில் செயல்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்.

நன்றி : தி இந்து

Let us come forward to fulfill the dreams of Gandhi ji

Image courtesy : wikipedia

Today if Gandhi ji would have been alive then he would be the first person to stop the control on our natural resources from the hands of multinationals companies. Bapu ji chose Charkha; the symbol of self-reliance to fight against the East India Company. The large chunk of the hard efforts done by the Indian community was going to Manchester in form of foreign clothing. Hundred years back Gandhi ji was born to protest and fight against the injustice. In South Africa he first protested through Satyagarh against the racism existing there from the Railway Station, where he was thrown out of the first class coach even though carrying the first class ticket with him just because he was a black and the first class coach was supposed to be only for white people to travel. He fought against the racism existing there for 20 years and came to Indian being a victory. Back in India he started movement against the Neel ki Kheti through which the Indian farmers were being exploited. Even while fighting against these social injustices, he was always finding ways to change and to become free from the attitude of dependence. During the search to get freedom he found Charkha to be the simplest way to achieve this.


Bapu identified Charkha as the symbol of revolution just because it signifies against the mechanized and centralized profiteering based economy through decentralization and self-reliant productive process. Charkha was not only symbolizing the ends but also the means in the status of economy at that time. That is why he took Charkha as a tool to fight against the system to create a change through revolution. Charkha was the symbol for society building signifying hardworking, non-violence, and injustice free society. This was a strong tool to defy the domination of dependence from the Britishers. 

Today natural resources such as water, forest and land which are the basis of life, everything is slipping from the hands of the society and the most loot is going through the commercialization and marketeering of the water and in coming five years the ground is being prepared to send the large chunk of the earnings of India to west. Bapu would have reacted sharply, when he would have got the essence of this game plan. He would have immediately started the movement against it. To protest against the injustice he would have not only relied upon the speeches but could have thought of evolving something constructive like Charkha and constructive solution of this crisis have simple answers i.e. dig pond.


In construction of ponds there is no need to have money from any company, the society in itself with their local wisdom and knowledge and most important is with their voluntary contributions they could build ponds. The process of building a pond starts from uniting the community, making them come together in the same platform. Society by belongingness, togetherness among them only makes initiate building ponds. And the water, which is stored in the pond helps in checking soil erosion thereby minimising the ill effects being done against the environment. 

Ponds provide water not only to human beings i.e. poorest of the poor but also to the animals that to free of cost. It also fulfills the emptied earth. Recharges the wells and this whole works makes the society water self-sufficient and a feeling of pride. The way Charkha makes society self-dependent through the hard work and brings prosperity. Ponds keep alive the poorest of the poor without having been paid a single pie. Through ponds only we can stop the marketing of bottled water, which is exploiting common man. When we have a pond in the village filled with fresh water, then on roads automatically there would be water pots, as pond is the source of emergence of water pot. When we will have water pots at every places such as Bus stand and Railway stations, then nobody will buy water. Pond gives water to everybody. It gives life and move ahead without making anything from anybody in return just because of the hard efforts and feelings of the society put behind it.


We can take inspiration for building ponds from Gandhi ji's Charkha. It took so much time and efforts for Gandhi ji to discover Charkha because till then the foreign clothes engulfed Charkha. Now ponds are getting extinct but from Kanyakumari to Kashmir and from Guwahti to Gujarat still few ponds exist. In villages of Chattisgarh, Orissa, Rajasthan and Gujarat the ponds significance is still prevalent. In villages there is no other life saving support except the pond. Most of the villages are alive only due to the presence of pond. The fate of these villages will remain alive just being near the pond even without money. When Gandhi ji choose Charkha at that time, the significance of Charkha was same that of ponds today. But 100 years back there was no threat for water loot on the head of the society. Water was easily available everywhere. Even if you have to go far away to get water, you would get it free.


On April 1st 2003, the day when New Water Policy was declared for the country, if Bapu would have been alive then protect the existence, purity and culture of pond he would have started a satyagrah. Because water is common natural resource the basis of life. How could any Government can ever think of giving the control of all these natural resources to a company or an individual? But Gandhi ji would have initiated a Satyagrah against this big fraud being committed in the country against our society since independence.


Water is not been created by any Government. This is the common natural resource of Society and Nature. It has to be saved through Joint efforts; he would have joined with the community to dig soil from the pond with spade. Pond signifies voluntary efforts, the way Charkha is. There is no difference in the nature of both Charkha and pond. Both inspire the society and maintain the dignity to get for real hard work and earn their breads with their own hands.


Charkha runs by the hard efforts. Pond also can be build by volunteer efforts. The thread prepared by Charkha interlinks several constituents of the society while in the process of making clothes from it. Same way the pond also integrate the different sections of the society during the building process. This is the common activity fulfilling the common needs of the society that to with so less expenditure. It gives message to the society towards self-reliance and to return back to the earth, through our hard efforts what we extract from it. A pond acts as a feeder towards the environment.


Ponds have being the life and blood of our society and culture. Society also use to perform volunteer work on Amavashya (no moon day) and Poornima (full moon day) to build ponds. These two days were kept for doing common activities in a village for fulfillment of common needs of everybody. Today this tradition is on the verge of extinction. Bapu would have mobilised the society to revive this tradition. He was a century's man. For each work he would tell he is not doing anything new but he is just reviving the good traditions and good would present in the society, which we are leaving behind and society should stand up to do it.

Bapu in his own time has prepared a brigade of volunteers to do some constructive work, they would have encouraged saving and conserving of water through building of ponds. Today there is a big challenge among the workers of Gandhi ji to stop the privatisation and commercialisation of water, which is a life truth. By accepting this challenge where ever such work will start there the crisis of communalism and capitalism will stop automatically. Our country will generate feelings to stand upon own its own feet and become self-reliant. This will be the only way to give a true tribute to Gandhi ji and to rejuvenate the Charkha in the 21st Century.


The enthusiasm, which Charkha had during the independence movement, same zeal today ponds will produce right now. So, to have rights of environment and society over water, we should start building ponds. Ponds will fulfill the dreams of Gandhi ji's Swaraj. It will stop dependency on other factors for irrigation and bottled drinking water. Help in establishing the common rights of everybody. So, we all should come forward to fulfill the dream of Gandhi ji's dream of Swaraj by building of ponds.

-By Tarun Bharat Singh

Re-produced from the PDF content available at http://tarunbharatsangh.in